Wednesday, December 25, 2013

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

சோவியத் ஒன்றியப் படையணியின் முக்கிய துப்பாக்கியாக இருந்த ஏகே 47, பின்னாளில் உலகின் பல பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டது. இன்றும் பயன்படுத்தப்படுகிறது.

 ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் காலமானார்

ரஷ்யாவைச் சேர்ந்த கலாஷ்னிக்கோவ் துப்பாக்கியை கண்டுபிடித்தவரான மிகெயில் கலாஷ்னிக்கோவ் தனது 94 ஆவது வயதில் மரணமடைந்துள்ளதாக பி.பி.சி. அறிவித்துள்ளது. 

இவர் மிகவும் வறிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பதில் 17 பேர்களில் ஒருவராக ரஷ்யாவின் அல்டாய் மலைப் பகுதியில் 1919 ஆம் ஆண்டு கலாஷ்னிக்கோவ் பிறந்தார்.

இவர் படைத்த துப்பாக்கி முன்னாள் சோவியத் யூனியனில் மட்டுமல்லாமல், வோர்சோ உடன்படிக்கை நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகியவற்றில் மிக முக்கியமான ஆயுதமாகத் திகழ்ந்துள்ளது.

கலாஷ்னிக்கோவின் வடிவமைப்பை ஒட்டி தயாரிக்கப்பட்ட, பல லட்சக் கணக்கான துப்பாக்கிகள் உலகம் முழுவதும் தயாரித்து விற்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

கிடைத்த சன்மானம்

 கலாஷ்னிக்கோவ் இரு முறை சோசலிச தொழிலாளர்களின் மாவீரன் (Hero of the Socialist Labours) என்றப் பட்டத்தைப் பெற்றுள்ளார். தொழில்நுட்ப அறிவியலில் உயர்தர முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 10 கோடித் துப்பாக்கிகளுக்கு மேல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அதற்காக எந்தப் பயனும் அடைந்ததில்லை. அவர் சன்மானமாகப் பெற்றுக் கொண்டிருந்தது மாநில ஒய்வூதியம் மட்டுமே. வணிகச் சின்னமாக ஜெர்மன் நிறுவனம் இவர் துப்பாக்கிகளுக்கு குடையும், கத்திகளும் பொறித்து வெளியிடுகின்றன. அதில் ஒன்று ஏ கே 74.

  20 ஆம் நூற்றாண்டில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட மிக முக்கியமான ஆயுதங்களில் ஒன்றான ஏகே 47 துப்பாக்கியை இராணுவ வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தத் துப்பாக்கியை இயக்குவது எளிதானது என்பதால் தேசிய இராணுவங்களும், கிளர்ச்சிப்படைகளும் அதனை விரும்பிப் பயன்படுத்தினர்.
இந்தத் துப்பாக்கியை வடிவமைத்த மிக்ஹையில் கலாஷ்னிக்கோவ், இரண்டாம் உலகப் போரின்போது சோவியத்தின் டாங்கிப் படைகளில் மெக்கானிக்காக பணியாற்றியவர்.

போரில் காயப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சமயம், சோவியத் படைகளின் தாக்குதல் திறன் குறித்து கவலைப்பட்ட அவர் புதிய துப்பாக்கியை உருவாக்கினார். 1947 இல் அந்த துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்ததால் அது ஏகே 47 என்று அழைக்கப்படுகிறது.
இதன் சிறப்பம்சம் குறித்து பிபிசியிடம் பேசிய பிரிட்டனின் இராணுவ தளவாட நிறுவனத்தில் துப்பாக்கி நிபுணராக இருக்கும் ஜானாத்தன் பெர்குசன், "இந்தத் துப்பாக்கி மற்ற துப்பாக்கிகளைவிட சிறப்பாக இருந்தது. போல்ட் ஆக்ஷன் துப்பாக்கியை போல இது சக்திவாய்ந்தது கிடையாது என்றாலும், இது பயன்படுத்த எளிதானது" என்றார்.

 நன்றி இணையம்

உலகை ஆட்டுவித்த ஏ.கே.47 ஐ வடிவமைத்த கலாஷ்னிக்கோவ் மரணம் - See more at: http://www.thoothuonline.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%87-47-%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF/#sthash.UB8mfO6J.dpuf

உலகை ஆட்டுவித்த ஏ.கே.47 ஐ வடிவமைத்த கலாஷ்னிக்கோவ் மரணம் - See more at: http://www.thoothuonline.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%87-47-%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF/#sthash.UB8mfO6J.dpuf vb