Monday, June 17, 2013

மனிதன் வரையும் உயிருள்ள மர ஓவியம் பொன்சாய்'

 

பொன்சாய்" என்ற பதம் எமக்கு ஜப்பானை நினைவூட்டினாலும் இதன் பிறப்பிடம் சீனா என்றே வரலாறு கூறுகின்றது. கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன் சீனாவில் 'புன்சாய்" என்ற குட்டை மரங்களை வளர்க்கும் பாரம்பரியம் பௌத்த துறவிகள் மத்தியில் தோன்றியது. கி.மு 7ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் சீனாவின் அரச தூதுவர்கள் இந்தக் கலையை ஜப்பானுக்கு அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து ஜப்பானின் சென் பௌத்த துறவிகள் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தியானமுறையாக பொன்சாய்களை வளர்க்கத் தொடங்கினர். நாளடைவில் ஜப்பானியர்கள் பல்வேறு விதமான நுணுக்கங்களையும் நுட்பங்களையும் அறிமுகப்படுத்தியதால் இன்று பொன்சாய் ஒரு கலையாக உலகம் முழுவதிலும் பிரபல்யம் அடைந்துள்ளது. - See more at: http://btoptions.lk/serendib/tamilshow.php?id=656#sthash.B86JkeLb.dpuf
 பொன்சாய்' என்ற பதம் எமக்கு ஜப்பானை நினைவூட்டினாலும் இதன் பிறப்பிடம் சீனா என்றே வரலாறு கூறுகின்றது. கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன் சீனாவில் 'புன்சாய்' என்ற குட்டை மரங்களை வளர்க்கும் பாரம்பரியம் பௌத்த துறவிகள் மத்தியில் தோன்றியது. கி.மு 7ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் சீனாவின் அரச தூதுவர்கள் இந்தக் கலையை ஜப்பானுக்கு அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து ஜப்பானின் சென் பௌத்த துறவிகள் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தியானமுறையாக பொன்சாய்களை வளர்க்கத் தொடங்கினர். நாளடைவில் ஜப்பானியர்கள் பல்வேறு விதமான நுணுக்கங்களையும் நுட்பங்களையும் அறிமுகப்படுத்தியதால் இன்று பொன்சாய் ஒரு கலையாக உலகம் முழுவதிலும் பிரபல்யம் அடைந்துள்ளது. 

 ஜப்பானிய மொழியில் 'பொன்' என்றால் தட்டையான கொள்கலன் என்றும் 'சாய்' என்றால் மரம் என்றும் பொருள்படுகின்றன. தட்டையான கொள்கலன் ஒன்றில் அதிக உயரமில்லாமல் குட்டையாக மரங்களை வளர்க்கும் ஒரு விசேட கலையே பொன்சாய். பொன்சாய் எனும்பொழுது இயற்கையில் குறை வளர்ச்சியுடைய தாவரங்கள் என்று அர்த்தப்படமாட்டாது. மிகவும் பெரிதாக வளரக்கூடிய மரங்களையும் குட்டையாக வளர்க்கும் நுட்பமே இது.

சிறிய இலைகள் பருமனான தண்டு குறுகலான வடிவம் கொண்ட மரங்களே பென்சாய்களாகத் தெரிவு செய்யப்படுகின்றன. மலைப் பகுதிகளில் அல்லது குன்றுகளில் காணப்படும் பாறை வெடிப்புகள் நடுவே வளரும் குட்டை மரங்கள் மற்றும் சூரிய ஒளி கிடைக்காத காரணத்தால் உயரமாக வளர முடியாத தாவரங்களை இலகுவில் அழகான பொன்சாய்களாக மாற்ற முடியும்.

பொன்சாய்களை வளர்ப்பதற்குப் பொருத்தமான அகன்ற தட்டையான கொள்கலன்கள் தேவை. அதன் ஊடகமாக சிறுகற்களைக் கொண்ட ஆற்று மணல்இ கரிஇ காய்ந்த மாட்டெருஇ செங்கற் துகள்கள் ஆகியவற்றின் கலவை பயன்படுத்தப்படுகின்றது. உரமிடுவதும் பொன்சாய் தாவரங்களுக்கு அவசியமானது.

அழகிய கவர்ச்சியான பொன்சாய்கள் சிறந்த வடிவமைப்பைக்கொண்டவை. ஒரு பொன்சாயை விதையிலிருந்தும்இ சிறிய மரத்திலிருந்தும் அல்லது தண்டிலிருந்தும் ஆரம்பிக்கலாம். சிறிய மரத்தை பொன்சாயாக மாற்றுவதற்கே இன்று பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர். -

இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களைத் திறமையான கத்தரிப்பு மூலமும் அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும் உரிய அளவுக்கு வளரவிடாது. முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும் பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி சட்டிகளில் வளர்க்கும் முறை பொன்சாய் எனப்படும். ஜப்பானிய மொழியில் இது 'தட்டத் தோட்டம்' (盆栽) எனப் பொருள்படும். சீனக் கலையான 'பென்ஜிங்' என்பதும் இது போன்றதே. இதிலிருந்தே பொன்சாய்க் கலை வளர்ந்ததாகக் கூறப்படுகின்றது.

 http://huntingtonblogs.org/wp-content/uploads/2012/03/Bonsai2012.jpg
அழகுக்காக வளர்ப்பது போல் காணப்படும்இ சட்டிகளில் வளர்க்கப்பட்ட மரங்களின் உருவப் படங்கள்இ 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்தியச் சமாதிகளில் காணப்படுகின்றன. இதைத் தொடர்ந்து நாடோடிகளின் வண்டிகள் விதவிதமான பாத்திரங்களில் மரங்களை ஆசியா முழுதும் காவிச் சென்றதாக அறியப்படுகின்றது. இந்த மரங்கள் மருத்துவத் தேவைகளுக்கு வேண்டிய மூலப்பொருட்களை வழங்கியதாகத் தெரிகிறது.

http://upload.wikimedia.org/wikipedia/commons/c/cf/Bonsai1.jpg

  உரிய முறையில் பராமரிக்கப்படும் பொன்சாய்கள் முழு அளவுக்கு வளரும் அவற்றைப் போன்ற தாவரங்களையொத்த ஆயுட்காலத்தைக் கொண்டிருக்க முடியும். எனினும் பொன்சாய்களுக்கு மிகுந்த பராமரிப்புத் தேவை. நன்றாகப் பராமரிக்கப்படாத பொன்சாய்கள் நீண்டகாலம் உயிர்வாழ மாட்டா.http://4.bp.blogspot.com/_JFgeAzqTovI/TOAq_3NX0HI/AAAAAAAAAlg/4k1P1Fe_jAk/s1600/bonsai.jpg

இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வை வாழ்வது
மனத்திலும் உடலிலும் சமநிலையை ஏற்படுத்தும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது பொன்சாய் கலை - See more at: http://btoptions.lk/serendib/tamilshow.php?id=656#sthash.B86JkeLb.dpuf
இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வை வாழ்வது
மனத்திலும் உடலிலும் சமநிலையை ஏற்படுத்தும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது பொன்சாய் கலை

நன்றி இணையம்

Saturday, June 15, 2013

காற்று இல்லையென்றால் எந்த உயிரும் வாழ முடியாது? சர்வ தேச காற்று தினம் – ஜுன் 15

 
 
நம் முன்னோர்கள் இயற்கையையே தெய்வமாக எண்ணி வணங்கினர். பஞ்ச பூதங்களான காற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு இவற்றின் தொகுப்புதான் உலகமாகும். மனித நாகரீகம் வளர வளர இயற்கையும் சீர்கேடு அடைய ஆரம்பித்துள்ளது.இயற்கையை சீரழித்தது, உயிரினங்களில் மனிதன் மட்டும்தான். மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அழித்தான். மரங்களை வெட்டி காடுகளை அழித்து மனைநிலங்களாக மாற்றினான். நிலத்தைத் தோண்டி நிலக்கரி பெட்ரோல் எடுத்து இயற்கையை நாசப்படுத்தினான். நிலத்தடி நீரை உறிஞ்சி நீர் இல்லாமல் வறண்ட பிரதேசமாக மாற்றினான்.
 
 மனிதன் ஐம்பூதங்களையும் பாழாக்கியதன் விளைவுதான் பூமி வெப்பம், பூகம்பம், சுனாமி, வறட்சி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள். இந்த பஞ்ச பூதங்களின் பாதிப்பு தான் மனிதனை பல நோய்களுக்கு ஆளாக்கியுள்ளது. இயற்கையை நாம் எந்தளவுக்கு மாசு படுத்தியுள்ளோம் என்பதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் கொஞ்சமாவது அறிந்து கொள்வோமா? 
 
உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்றுதான். காற்று எங்கும் நிறைந்த பொருள். இதனை கண்ணினால் பார்க்க முடியாவிடினும், இதன் செயலால் இதனை உணர்ந்து கொள்கிறோம். ஆறு அறிவுடைய மனிதன் முதல் ஓரறிவுடைய தாவரம் வரை உள்ள ஒவ்வோர் உயிருக்கும் காற்று இன்றியமையாததாகும். இக்காற்று இல்லையென்றால் எந்த உயிரும் வாழ முடியாது.
 
காற்றோட்டமில்லாத இடத்திலும், மக்கள் நிறைந்த இடத்திலும் நச்சுக்காற்றுமிகுந்திருக்கும் ஆதலால் அங்கு அதிக நேரம் தங்குவதற்கு சிரமமாக இருக்கும்.ஒருவேளை தங்க நேரிட்டால் தூய காற்றை சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறும் -
 
உயிர்கள் வாழ்வதற்கு உணவு, நீர், காற்று ஆகிய மூன்றும் அவசியம்வேண்டியவைதான். ஆனாலும் உணவின்றி சில நாட்களும், நீரின்றி சிலமணிநேரங்களும் உயிர்வாழ நம்மால் முடியும். ஆனால் தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. எனவே உயிர் வாழ்க்கைக்கு தூய காற்று இன்றியமையாதது
 
உயிரினங்கள் தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடுமிகவும் முக்கியமாகும். தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்-டை-ஆக்ஸைடு என்றகரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது.உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன
 
பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற் சாலையாக இருந்த காடுகளை அழித்ததன்விளைவுதான் காற்றில் கரியமில வாயுவின் ஆதிக்கம் அதிகரித்தது. மேலும் எண்ணற்ற தொழிற் சாலைகளின் புகை, வாகன புகை என பல வகைகளில் காற்றுமாசடைந்து வருவதால் இயற்கை சீர்கெட்டு, மனித இனமும் ஆரோக்கியமின்றி அலைந்து கொண்டிருக்கிறது -
 
நெருங்கிய வீடுகள், பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தல், செங்கல் சூளைகள்,சுண்ணாம்புக் காளவாய்கள், இரசாயன தொழிற்சாலைகள், புகையை ஏற்படுத்தும் காட்டுத்தீ போன்றவற்றால் வரும் புகையால் காற்று மண்டலம் மாசடைந்துள்ளது.
 
 அதிகளவு வாயுக்களும், துகள்களும் (ஏரோசால்) மனிதர்களால் காற்றில் அதிகம் கலக்கப்படுகின்றன. உதாரணமாக காற்றை மாசுபடுத்தும் வாயுக்களைப் பற்றி பார்ப்போம்.
 
கார்பன் மோனாக்ஸைடு பெட்ரோலியம், இரும்பு, பிளாஸ்டிக், காகித தொழிற்சாலைகளாலும் வாகனபுகைகளாலும் கார்பன் மோனாக்ஸைடு காற்றில் அதிகம் கலக்கிறது. இதனால் மனிதனுக்கு சரும பாதிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. இந்த கார்பன் மோனாக்ஸைடால் மனிதனுக்கு மட்டுமின்றி நினைவுச் சின்னமான பளிங்கு மாளிகை தாஜ்மஹாலுக்கும் இந்த அசுத்த புகை பாதிப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
 
 
கந்தக ஆக்ஸைடு
 
 நிலக்கரியை எரிப்பதால் கந்தக ஆக்ஸைடு உருவாகிறது. மேலும் தொழிற்சாலைகள்,அனல் மின் நிலையங்கள், வாகனங்கள் ஆகிவற்றால் ஏற்படும் புகைகளில் உள்ளகந்தக ஆக்ஸைடு காற்றில் கலக்கிறது. இதனால் மரங்கள் பட்டுப் போகின்றன.மூச்சுக் குழல் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகின்றன. கண்களில் எரிச்சல், வாந்தி, மயக்கம், அடிவயிறு வலி, தொண்டைப்புண், இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அடித்தளமாகி அமைகிறது.
 
நைட்ரஜன் ஆக்ஸைடு
 
 நிலக்கரி, எண்ணெய், பூமிக்கடியில் உள்ள இயற்கை எரிவாயு போன்றவற்றைஎரிப்பதால் இந்த வாயு அதிகம் காற்றில் கலக்கிறது. இந்த நைட்ரஜன் புகையை சுவாசித்தால் மூச்சு திணறல் உண்டாகி சில சமயங்களில் உயிரைக்கூட காவு வாங்கிவிடும்.
 
நுண் துகள்கள்
 
 காட்டுத்தீ, நிலக்கரி, குப்பைக் கழிவு , பயன்பாடு இல்லாத எலக்ட்ரானிக்கருவிகள், போன்றவற்றை எரிக்கும்போது காற்றில் நுண் துகள்கள் கலக்கின்றன.இதனால் காற்றில் மிதந்து வரும் இலேசான துகள்களான கல்நார் (ஆஸ்பெஸ்டாஸ்)மற்றும் நச்சுத் தன்மையுள்ள வேதிப் பொருட்கள் நுரையீரல் தந்துகிகளில் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி அடைப்பை உண்டாக்கி, நுரையீரலை பாதிக்கின்றன.
 
மேலும் 1984-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அமைந்துள்ள யூனியன்கார்பைடு தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் (மித்தைல்ஐசோசையனைட்) 20,000 பேர் இறந்து போனார்கள். 50,000 பேர் அதிகம் பாதிப்படைந்தனர். 1,50,000 பேர் பாதிக்கப் பட்டனர். இந்த கசிவானது தொழிற்சாலையை சுற்றி 100 கி.மீ. சுற்றளவுக்கு மண் பரப்பு முழுவதும் அடர்த்தியானதுகள்களால் மூடப்பட்டது. இதனால் 10 ஆண்டுகளாக எந்தவித விவசாய உற்பத்தியும் செய்ய முடியாமல் போய்விட்டது.
 
இன்றும் அங்குள்ள மக்கள் பலவகையான நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அங்கு குறையுள்ள குழந்தைகளே பிறக்கின்றன. 1942ம் ஆண்டு ஜப்பானில் உள்ள ஹிரோசிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்காவீசிய அணுகுண்டுக்கு அடுத்து மாபெரும் பேரழிவை ஏற்படுத்திய சம்பவம் இந்தபோபால் விஷவாயுக் கசிவுதான். இதுபோல் 1952ம் ஆண்டு இலண்டன் நகரில்ஏற்பட்ட புகை மண்டலம் காரணமாக 6 நாட்களில் 4000 முதல் 8000 பேர் வரைஇறந்துள்ளனர். பழைய சோவியத் யூனியனில் 1979ம் ஆண்டு உயிர் வேதியல் சோதனைக் கூடத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் பல நூறு மக்கள் இறந்தனர்.
 
 ஓசோன் மண்டலம்
 
ஓசோன் என்பது பூமிப் பரப்பளவிற்கு மேல் 30 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள காற்று மண்டலமாகும். சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை தடுக்கும்திரையாகவும் இருந்து வருகிறது. இந்த புற ஊதாக் கதிர்கள் மனிதன் மேல்பட்டால் சருமம் பாதிப்படையும்.
 
ஓசோன் மண்டலத்தின் மூலம் புற ஊதாக்கதிர்கள் தடுக்கப் படுவதால் மனிதனுக்கு இதன் பாதிப்பு இல்லை. தற்போது மனிதன் வெளிப்படுத்துகின்ற குளோரின் சேர்மங்கள் குறிப்பாககுளிர் சாதன பெட்டியில் இருந்து வெளிவரும் குளோரோ ஃபுளோரோ கார்பன்கள்தான் ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகின்றன. மேலும் பிளாஸ்டிக் குப்பைகளின் புகையும் ஓசோன் மண்டலத்தை பாதிப்படையச் செய்கிறது.
 
ஓசோன் படலத்தில் ஏற்படும் மாற்றங்கள் மனித குலத்திற்கு மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. · சூரியனிடமிருந்து வருகின்ற புற ஊதாக் கதிர்கள் ஓசோன் ஓட்டைகள் வழியாகபூமியைத் தாக்கி சூரிய வெப்பத்தின் தாக்கம், கண் புரையோடுதல், தோல்வறட்சியடைதல் சுருங்குதல் மற்றும் தோல் நோய்கள் போன்ற நோய்களைஏற்படுத்தும். ·
 
நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப் படுத்துகிறது. இதனால் தொற்றுநோய்களான தட்டம்மை, சின்னம்மை போன்ற வைரஸ் நோய்களையும் மலேரியா நோயையும், தோல் மூலம் பரவுகின்ற ஒட்டுண்ணி நோய்களையும் தடுக்கின்றநோய் தடுப்பாற்றலை நம் உடல் இழக்க நேரிடுகிறது.
 
பூமி வெப்பமுறுதலின் விளைவு ·
 
 பூமி வெப்பமடைவதால் துருவங்களில் பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயர்தல், மற்றும் அனைத்து நாடுகளின் கடற்கரைப் பகுதி வெள்ளத்தால் சூழ்தல்ஆகியவை ஏற்படக்கூடும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர். · விவசாய விளைபொருளின் உற்பத்தியைக் குறைக்கும். · வறட்சி, இயற்கையான தாவரங்கள், பூச்சிகள், உயிரினங்கள், கால்நடைகள் மற்றும் விவசாய பயிர் வகைகளில் மாற்றம் ஏற்படுத்துகிறது.
 
 அமில மழை
 
மனித செயல்பாடுகளினாலும், தொழிற் சாலைகளினாலும் சில வாயுக்கள் சேர்ந்துமழை நீரில் தேவைக்கு அதிகமாக அமிலம் சேர்வதையே அமில மழை என்கிறோம். நைட்ரஜன் ஆக்ø–ஸடு மற்றும் கந்தக ஆக்ஸைடு வளி மண்டலத்தில் நீராவியுடன்கலக்கின்றன. நீராவி குளிரும் போது ஆக்ஸைடுகள் முறையே நைட்ரிக் அமிலம் மற்றும் கந்தக அமிலமாக மாறி மழை துளிகளுடன் கீழே விழுகின்றன. இதுவே அமில மழை எனப்படுகிறது.
 
அமில மழை ஏற்படக் காரணங்கள் ·
 
  •  தொல்லுயிர் எரிபொருட்களான நிலக்கரி, போன்றவை எரிதல்.
  •  · ஊர்திகளினின்று வெளிப்படும் கழிவுப்புகை. ·
  • காடுகள் மற்றும் புல்வெளிகள் எரிக்கப் படுவதால் ஏற்படும் புகை. ·
  •  வேதி தொழிற்சாலைகளிலிருந்து வெளி யேறும் வாயுக்கள்.     
  •  
  •               பாதிப்பு ·
  •  
  •  மண்ணின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. தாவரங்கள் உயிர்வாழ முடிவதில்லை.
  •  · மனிதர்களையும், நீர் வாழினங்களையும் அச்சுறுத்துகின்றது. காடுகள், பயிர்களை அழிக்கிறது.
  • · விவசாய உற்பத்தித் திறன் குறைகிறது.
  • · கட்டிடங்கள், நினைவு சின்னங்கள், சிலைகள், மேம்பாலங்கள், வேலிகள் மற்றும் இரயில் தண்டவாளங்கள் அரிக்கப்படுகின்றன.
  •  இந்த மாசுக் காற்றால் வருடத்திற்கு 2.4 மில்லியன் மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம்தெரிவித்துள்ளது.
  • இதில் 1.5 மில்லியன் மக்கள் தூசுகளால் இறந்துள்ளனர். இது உலகில் வாகன விபத்திற்கு அடுத்த இடத்தில் உள்ளது.
  •  
  • இத்தகைய பாதிப்புகள் இன்னும் தொடராமல் இருக்க நாம் செய்யவேண்டியது என்ன…. · மலைகளையும், காடு களையும் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்.
  • · நிலத்தையும், காற்றையும் நீரையும் மாசுபடுத்தும் வேலிக்கருவை, யூகாலிப்டஸ் போன்றவற்றை வளர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும். · நன்கு பசுமையான அடர்ந்து வளரும் மரங்களை நட வேண்டும். மரங்களை வெட்டக் கூடாது. ·
  •  தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் விஷ வாயுக்களான மித்தைல்ஐசோசயனைட், கார்பன் மோனாக்ஸைடு, கந்தக ஆக்ஸைடு, நுண் துகள்கள் போன்றவை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு இப்பகுதியில் அதிக மரங்களை நட வேண்டும். ·
  • ஈயமில்லாத பெட்ரோலை வாகனங்களுக்கு பயன்படுத்த வேண்டும். · மரபுசாரா எரிசக்தி அதாவது காற்று, சூரிய ஒளியின் மூலம் தயாரிக்கும் மின்சாரத் தொழிற்சாலைகளை அதிகம் அமைக்க வேண்டும்.
  •  · பிளாஸ்டிக் பயன்பாடுகளை மறு சுழற்சி செய்யும் முறையை ஊக்குவிக்க வேண்டும். ·
  •  அரசு கடுமையான சட்டங்களை நடைமுறைப் படுத்தினால் தான் காற்று மாசுபாட்டைக் குறைக்க முடியும். · காற்றின் அவசியம் பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு வேண்டும். எதிர்கால சந்ததியினர் இன்று கேன்களில் தூய்மையான தண்ணீர் (மினரல் வாட்டர்)வாங்கி அருந்துவது போல் பிராண வாயுவையும் பைகளில் விலைக்கு வாங்கி சுவாசிக்கும் நிலைக்கு தள்ள வேண்டுமா ..?
 
 சற்று சிந்தியுங்கள்.
 
நன்றி இணையம்