Saturday, March 24, 2012

உலக காச நோய் நாளும் மார்ச் 24ம் ராபர்ட் கோக்ன் கண்டுபிடிப்பும்

 மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அனைத்துலக காச நோய் நாள் (World Tuberculosis Day)மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

காச நோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது.

மார்ச் 24 1882 ஆம் ஆண்டில் டாக்டர் றொபேர்ட் கொக் (Robert Koch) என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் (TB bacillus) அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். ஆந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.

1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease – IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.
 
 மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனைத்துலக காச நோய் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
 
காச‌ நோயை த‌விர்ப்போம்!

காச நோய் ஆண்டுதோறும் உலகில் 1.7 மில்லியன் மக்களை கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது.

மார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் டாக்டர் றொபேர்ட் கொக் என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.

1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.

காச நோய் சுவாசத் தொகுதியைப் பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும். இது மைக்கோ பக்ரீறியம் ரியூபர்கியூலோசிஸ் என்ற நுண்ணங்கியால் நோய்த் தொற்றுள்ள ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு சுவாசச் சிறுதுணிக்கைகள் மூலம் பரவுகிறது,

காச நோயின் அறிகுறிகள

  • உடற் சோர்வு
  • உணவு விருப்பின்மை
  • நீடித்த காய்ச்சலும் இருமலும் மஞ்சட் சளி
  • நெஞ்சு நோவு
  • அடிக்கடி தடிமன்
சிலரில் இரவுநேர அதிக வியர்வை இருமலுடன் அதிகளவு குருதிசிகிச்சைஆறு மாத காலத்துக்குக் கட்டாய சிகிச்சை அத்தியாவசியம். தவறுமிடத்து எதிர்ப்பு சக்தியுடைய நோய்க்கிருமிகள் உருவாகி நோயைக் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

காசநோய் தவிர்ப்பபிசிஜி தடுப்பூசி குழந்தை பிறந்து நான்கு கிழமைக்குள் கொடுக்கப்பட வேண்டும். இதன்போது தழும்பொன்று உருவாகும். இத்தழும்பு உண்டாகாதவிடத்து ஆறுமாதம் தொடக்கம் ஐந்து வயது காலத்திற்குள் இவ்வூசி மீண்டும் கொடுக்கப்பட வேண்டும்.

மூன்று கிழமைகளுக்கு மேல் இருமல் இருக்குமிடத்து உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்

மக்கள் நெரிசலான இடங்கள், சூரிய வெளிச்சம் உள்வராத வீடுகள் இந்நோய் பரவுவதை ஊக்குவிப்பனவாகும்.

போஷாக்குக் குறைபாடு எளிதாக இந்நோய் தொற்ற வழிவகுக்கும்
பசும்பாலினால் பரவும் காசநோயைத் தவிர்க்க நன்கு கொதிக்க வைத்த பால் அல்லது பதனிட்ட பாலை அருந்தவும்.

காச நோய் மிக கொடுமையானது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் எப்போதும் வரலாம். மருத்துவர்களின் ஆலோசனைப்படி காச நோயாளிகள் தவறாமல் 6 மாதத்திற்கு மாத்திரைகள் சாப்பிட்டால் குணமாகிவிடும்.இந்தியாவில் மட்டும் காச நோயால் தினமும் 1000க்கும் மேற்பட்டவர்கள் இறக்கிறார்கள். காச நோய்க்கான அறிகுறிகளாக, தொடர்ந்து இருமல் இருப்பத, விட்டுவிட்டு காய்ச்சல் வருவது, உடல் மெலிவது, களைப்படைவது போன்றவையாகும். இப்படி ஒருவருக்கு இருந்தால் அவர் உடனடியாக சளி பரிசோதனை செய்ய வேண்டும்.காச நோய் ஒரு தொற்று வியாதி. எளிதில் பரவக்கூடியது. 

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மல், இருமல் வரும்போதும், பேசும்போதும் கைக்குட்டையால் வாயை மூடிக் கொள்ள வேண்டும். அந்த துணியை தனியாக துவைத்து காய வைக்க வேண்டும். கண்ட கண்ட இடங்களில் துப்பக் கூடாது. குடும்பத்தில் ஒருவருக்கு காசநோய் ஏற்பட்டால், அவர் பாதுகாப்புடனும், எச்சரிக்கையாகவும் இருந்தால் மற்றவர்களுக்கு பரவலாமல் பாதுகாக்கலாம்.பெரும்பாலும் குழந்தைகளையே இந்த நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது.

ராபர்ட் கோக் (Robert Koch டிசம்பர் 11 1843 – மே 27 1910) ஜெர்மானிய அறிவியலாளரும் மருத்துவரும் ஆவார். இவர் 1877 இல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் கோலுரு நுண்ணுயிர் 1882 இல் மைக்கோபாக்டீரியம் என்ற காச நோயை உருவாக்கும் நுண்ணுயிர் மற்றும் வைபிரியோ காலரா என்ற கொள்ளை நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றை வேறுபடுத்தியமைக்காகவும் கோக்கின் எடுகோள்களுக்காகவும் அறியப்படுகிறார்.

காச நோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905 இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது


நன்றி இணையம்