Tuesday, September 25, 2012

மிக அரிதாகவே ஏற்படும் தீ பிசாசு


ஆஸ்திரேலியா, அலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் (திங்கட்கிழமை 18/09/2012) தோன்றிய fire tornado இது. மிக அரிதாகவே ஏற்படும் இதை தீ பிசாசு (fire devil) என்றும் அழைப்பார்கள். நேற்று இதை நேரில் கண்டவர்கள், “போர் விமானம் ஒன்று எழுப்பும் ஒலி போல கேட்டது. திடீரென வானத்துக்கும் பூமிக்குமான நெருப்பு கீற்று உருவானது” என்கிறார்கள்.
இரண்டு அல்லது மூன்று நிமிடத்துக்கு மேல் fire tornado நீடிக்கவில்லை. அதற்குள் கிளிக் செய்யப்பட்ட போட்டோ இது.

மிகப் பெரிய நெருப்பு சுழல் காற்று வடிவை அடைதல் எரி சுழல் காற்று (Fire whirl அல்லது fire tornado) எனப்படும். இது பொதுவாக காட்டுத்தீகளின் போது உருவாகும். அதிக வெப்பத்தின் காரணமாக காற்று மேலெளும்பலாலேயே இவ்வாறு உருவாகிறது. 1923ல் ஜப்பான் மற்றும் 2012ல் ஹவாய் ஆகிய இடங்களில் எரிசுழல் காற்று உருவாகியுள்ளது.

ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம்

 ஐரோப்பிய நாடான பிரான்ஸூக்கு தனித்துவமான ஒன்றாக இருப்பதோடு, அதற்கு வருமானத்தையுயும் ஈட்டித் தருவதுதான் ஈபெல் கோபுரம். இத்தாலியிலுள்ள ஒரு நிறுவனத்தின் கணிப்பின்படி, ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம் இந்த ஈபிள் கோபுரந்தான் என்று அறிவித்திருக்கின்றார்கள். தமது மண்ணிலுள்ள கொலோசியத்திற்கு மூன்றாவது இடத்தையே கொடுத்திருக்கின்றார்கள்.
ஒவ்வொரு வருடமும் இந்த ஈபெல்  கோபுரத்தை ஆவலுடன் சென்று பார்ப்பவர்கள் தொகை எவ்வளவாக இருக்கலாம் என்று நினைக்கின்றீர்கள்? பாரிஸ் நகரம் நினைத்து நினைத்துக் கர்வம் கொள்ளும் வகையில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஈபெல் கோபுரத்தை நேரில் காண, ஒரு வருடத்தில் 8 மில்லியன் உல்லாசப் பயணிகள் வந்து போகின்றார்கள் என்கின்றது ஒரு கணக்கு! அப்பப்பா ஜனக்கூட்டம் மொய்க்கின்றது என்றே சொல்ல வேண்டும்! பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பலம் சேர்க்கும் இந்தக் கோபுரத்தின் மதிப்பை 334 பில்லியன் என்று இத்தாலிய நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இந்தக்  320 மீற்றர் உயரமான கோபுரத்தோடு போட்டியிடும் ரோமானியரின் காலத்தால் அழியாத அற்புதமான கொலோசியம் இதன் பெறுமதியில், ஐந்து மடங்கால் குறைந்து நிற்கின்றது என்று சொல்லும்போது, ஈபெல் கோபுரம் எந்த அளவுக்கு உயர்ந்து நிற்கின்றது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சரி எதனை மனதில் வைத்துக் கொண்டு இந்த மதிப்புக் கணிப்பீட்டைச் செய்தார்கள்? இந்த நாட்டின் அற்புதமான சின்னங்கள் எந்த அளவுக்கு மற்றையோரைக் கவர்கின்றன, இது எந்த அளவுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றது போன்றவற்றையெல்லாம் மனிதில் வைத்துக் கொண்டுதான் கணிப்பீடு இடம்பெற்றிருக்கின்றது. அப்படிப் பார்க்கும்போது, இந்த அடையாளச் சின்னங்கள் இல்லையென்றால், அந்தந்த நாடுகளுக்குப் பேரிழப்புத்தான்  என்பது தெரிகின்றது.
1889இல்தான்  பிரெஞ் புரட்சியின் ஞாபகார்த்தமாகவே இந்தக் கோபுரம் எழுப்பப்பட்டது. இந்தக் கோபுரத்தை வடிவமைத்தவர் பொறியியலாளர் Gustave Eiffel இன் நிறுவனம் என்பதால் அவர் பெயரால் இக் கோபுரம் அழைக்கப்பட்டு வருகின்றது. 1930இல் நியூ யோர்க் நகரின் Chrysler கட்டடம் எழுப்பப்படும் வரை, ஈபெல் கோபுரமே, உலகின் மிக உயர்ந்த கோபுரமாக இருந்து வந்திருக்கின்றது.
இங்கே ஒரு வேடிக்கையான விடயத்தைச் சொல்லியாக வேண்டும். இந்தக் கோபுரம் 20 வருடங்களுக்கு அழியாது நிலைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் எழுப்பப்பட்டதாம். ஆனால் இதுவே ஏறத்தாழ 120 வருடங்களாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது என்பது நம்ப முடியாதது ஆனால் நிஜமான சங்கதி! உலகிலேயே மிக அதிகமான தொகையினரால் பார்க்கப்படும் உலோகத்தாலான ஒரு நாட்டின் அடையாளச் சின்னமாக உலகில் இந்தக் கோபுரமே நிமிர்ந்து நிற்கின்றது.
300வேறு வேறு உலக நாடுகளின் முத்திரைச் சின்னங்கள், ஒன்றோடு ஒன்று போட்டிபோட்டுள்ளன. இந்தப் பெரிய தொகையில் ஈபெல் கோபுரம் முதலிடத்தைப் பிடித்தது என்பது பெரியெதாரு சாதனைதான். இந்த முடிவை சில இத்தாலிய பத்திரிகைகள் வரவேற்கவில்லை. விமர்சித்திருக்கின்றன என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும. 1944இல் ஹிட்லர் ஆக்ரமிப்பின்போது, இக் கோபரம் அழிக்கப்படாமல்  தப்பியது நமது பெரிய அதிஸ்டந்தான்!. பிரான்சிலுள்ள முக்கிய அடையாளச் சின்னங்களையெல்லாம் அழித்து விடுங்கள் என்று ஹிட்லர் கொடுத்த கட்டளை அதிகாரிகளால் அப்பொழுது நிறைவேற்றப்படாததால்தான், இன்றும் இந்தக் கோபுரம் நம்மிடையே உயர்ந்து நிற்கின்றது. எதிரிகளின் வருகையை கோபுரத்திலிருந்து வசதியாகப் பார்க்க முடியும் என்பதும் அழிவிலிருந்து மீண்டதற்கு இன்னொரு காரணம்!
உல்லாசப் பயணிகள் இந்தக் கோபுரத்தை 7 வருடத்திற்கு ஒரு தடவை பெயின்ட் அடித்து வருகின்றார்கள். இந்த வேலையை முழுமையாக முடிக்க 6 தொன் எடையுள்ள பெயின்ட் தேவைப்படுகின்றது. கோபுரம் துருப்பிடிக்காமல் இருக்கவே இந்த முன் ஏற்பாடு! இந்தக் கோபுரத்தில் ஏறுவதானால் மூன்று நிலைகள் உண்டு. தெற்காக உள்ள தளத்தில் ஆரம்பிக்கும் முதலாவது இரண்டாவது நிலைகளுக்கு படிகள் மூலம் ஏறிச் சென்று விடலாம். மூன்றாவது நிலைக்குச் செல்வதானால் லிப்ட் உபயோகித்தாக வேண்டும். லிப்டில் இருந்து வெளியேறியதும், 15 படிகள் ஏறினால்தான், உச்சியில் நின்று நகரைப் பார்க்கும் நிலையத்தை எட்ட வசதியளிக்கும்.
இன்னொரு சுவையான சம்பவத்தையும் இங்கே முடிவில் சொல்லிவிடலாம். 20 வருடததிற்கான கட்டடம் என்று முடிவெடுக்கப்பட்டு அ10ரம்பத்தில் இதற்கு பாரிஸ் நகர அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டிருந்ததால், 20 வருட முடிவில் இக் கட்டடத்தை அடியோடு அழிப்பதற்கான உத்தரவு அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தொடர்பு வசதிகளுக்கு ஏற்றதாக இக் கோபுரம் இருந்தமையால், அழிக்கக் கொடுக்க உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
1000 வருடங்கள் தொன்மையான இலண்டன் கோபுரந்தான் பிரித்தானியாவின் அதிக மதிப்பு  வாய்ந்த அடையாளச் சின்னமாக இருக்கின்றது. இதன் மதிப்பை56 பில்லியன் பவுண்ட்ஸ் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.
பாரிஸ் நகர அதிகாரிகளிடமும் ஹிட்லரிடமும் இரண்டு தடவைகள் தப்பிப் பிழைத்து ஒரு நூற்றாண்டைக் கடந்து விட்ட இந்த அற்புத கோபுரம், முதலிடத்தைத் தட்டியிருப்பதில் அதிசயமில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
அந்தந்த மதிப்புகளுக்கேற்ப கணித்த,  ஐரோப்பாவின் முதல் 7 அடையாளச் சின்னங்கள் இதோ!
1. Eiffel Tower, Paris: 344 billion pounds
2. The Colloseum, Rome: 72 billion pounds
3. The Sagrade Familia Cathedral, Barcelona: 71 billion pounds
4. The Duomo Cathedral, Milan: 65 billion pounds
5. The Tower of London: 56 billion pounds
6. The Prado Museum, Madrid: 46 billion pounds
7. Stonehenge, UK: 8.3 billion pounds


நன்றி இணையம்