Sunday, April 15, 2012

உலகின் முதலாவது எந்திர மீன்

ரோபாட் என்று அழைக்கப்படுகிற எந்திர மனிதனைப் பார்த்து நம்மில் பலரும் இன்னும் வியந்து கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் உலகின் முதலாவது எந்திர மீனை விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள்.


இத்தாலியை சேர்ந்த தேசிய ஆராய்ச்சிக் கழகம் மற்றும் நிïயார்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தான் இந்த ரோபாட் மீனை உருவாக்கி உள்ளனர். இந்த எந்திர மீனைக் கொண்டு மீன்களின் நடத்தை பற்றி ஆராய வழி பிறந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


எந்திர மீனை தண்ணீரில் விட்டபோதுஇ அதன் வால் பகுதி உண்மையான மீனை விட வேகமாக அசைவதைக் கண்ட மீன்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துள்ளன. சரக்கு கப்பல் விபத்துக்களால் கடலில் எண்ணெய் படலம் ஏற்படுகிறபோது கடல் வாழ் மீன்களுக்கு ஆபத்து நேரிடுகிறது. அத்தகைய தருணத்தில் கடல் வாழ் மீன்களை ஆபத்திலிருந்து விலகிச் செல்ல வழி நடத்துவதில் இந்த எந்திர மீன் உதவியாக இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நன்றி இணையம் 

இதன் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Friday, April 13, 2012

நிலநடுக்கம் பூகம்பம் அல்லது பூமி அதிர்ச்சி ரிச்டர் அளவுகோலில் ஏன் அளக்கப்படுகிறது?

அமெரிக்க நிலஅதிர்வுவியலாளர் ‘சார்லஸ் ரிச்டர்’ 1935ம் ஆண்டில் முதன்முதலாக நில அதிர்வுகளுக்கு நில அளவுகளை வரையறுத்தார். இது தரையில் ஏற்படும் நில அதிர்வின் அலை உயரத்தைக் கணிக்கும். இதன் ஒரு யூனிட் அதற்கு முந்தைய யூனிட் அளவை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.

நில அதிர்வுகள் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவிலிருந்து பல மீட்டர்கள் வரை மிக அதிக மாறுபாடுகளைக் கொண்டதாக இருப்பதால், அவர் அளவுகளை இவ்வாறு வரையருக்க வேண்டியிருந்தது. ஆகவே ரிச்டர் ஸ்கேலில் 5 என்ற அளவு நான்கை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். மூன்றை விட 10×10 அல்லது 100 மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.

ரிச்டர் அளவில் 2.0க்கு குறைவானவற்றை சாதாரண மனிதர்களால் அறிய முடியாது. இவைகள் மைக்ரோ பூகம்பம் எனப்படும். இவை சர்வசாதாரணமாக தொடர்ந்து நடைபெறும். 6.0க்கு மேல் பதிவாகும் பூகம்பங்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ரிச்டர் அளவை உருவான பிறகு அதிகபட்சமாக 8.9 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆனால் பூகம்பம் நிகழும் இடத்தைப் பொறுத்து ஒரே ரிச்டர் அளவைக்கு மாறுபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மக்கள் நெருக்கியடித்து வாழும் நகரின் மையத்தில் நிகழும் பூகம்பம் அளவிட முடியாத நாசத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் அதே அளவு பூகம்பம் ஒரு தட்டையான வனப்பிரதேசத்தில் ஏற்பட்டால் அங்குள்ள வனவிலங்குகளைச் சற்று சிதறி ஓடுவதைத் தவிர வேறு பாதிப்புகளை உண்டாக்காமலும் இருக்க முடியும்.