- பரோமோன்ஸ்கள் என்றால் என்ன?
பரோமோன்ஸ்கள் உண்டாக்கும் விளைவு உள்ளுணர்வால் ஏற்படுவதாகும். இது உயிரினம் கற்றறிந்து உண்டாவதில்லை. மனிதன் உள்ளிட்ட அனைத்து விலங்கினங்களிலும் பரோமோன்ஸ்கள் காணப்பட்டாலும் பூச்சியினங்களிலேயே இது மிகப்பரவலாய்க் காணப்படுகிறது. பரோமோன்ஸ்களைப் பற்றிய அறிவு வாசனைத் திரவியங்கள் தயாரித்தல் பூச்சிகளைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
பாம்பிற்கு பால் ஊற்றுதல் முட்டை வைப்பதன் காரணம் என்ன ?
உண்மையும் விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?
ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்இமனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.
பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.
பரோமோன்ஸ் என்பது பொதுவாக ஒரு உயிரினம் தன் இனத்தைச் சேர்ந்த மற்ற உயிரிகளுடன் தொடர்பு கொள்ளும் பொருட்டு சுற்றுப்புறத்தில் சுரக்கும் மணமுடைய வேதிப்பொருள் ஆகும். ஆனால் ஒரு உயிரினத்தின்
பரோமோன்ஸ் மற்றொரு இன உயிரினத்தில் துலங்கல் உண்டாக்குவதும் அறியப்பட்டுள்ளது.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.
இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
very interesting
ReplyDeleteநீங்கள் சொல்லும் காரணம் அறிவியல் ரீதியாக நிருபீக்கப்பட்டால் பழைய பஞ்சாங்க விசயங்கள் பலவற்றையும் மீள் ஆய்வு செய்யலாம்.
ReplyDeleteஇதுவரை அறியாத அரிய தகவல்
ReplyDeleteபதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி உங்கள் கருத்துக்கு ராஜ நடராஜன்
ReplyDeleteநன்றி உங்கள் கருத்துக்கு Ramani அண்ணா
ReplyDeleteஅரிய தகவலை அறிய வைத்தமைக்கு நன்றி நண்பரே !
ReplyDeleteபயனுள்ள தகவல்...
ReplyDelete