Saturday, March 24, 2012

உலக காச நோய் நாளும் மார்ச் 24ம் ராபர்ட் கோக்ன் கண்டுபிடிப்பும்

 மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அனைத்துலக காச நோய் நாள் (World Tuberculosis Day)மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

காச நோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது.

மார்ச் 24 1882 ஆம் ஆண்டில் டாக்டர் றொபேர்ட் கொக் (Robert Koch) என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் (TB bacillus) அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். ஆந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.

1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease – IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.
 
 மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனைத்துலக காச நோய் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
 
காச‌ நோயை த‌விர்ப்போம்!

காச நோய் ஆண்டுதோறும் உலகில் 1.7 மில்லியன் மக்களை கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது.

மார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் டாக்டர் றொபேர்ட் கொக் என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.

1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.

காச நோய் சுவாசத் தொகுதியைப் பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும். இது மைக்கோ பக்ரீறியம் ரியூபர்கியூலோசிஸ் என்ற நுண்ணங்கியால் நோய்த் தொற்றுள்ள ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு சுவாசச் சிறுதுணிக்கைகள் மூலம் பரவுகிறது,

காச நோயின் அறிகுறிகள

  • உடற் சோர்வு
  • உணவு விருப்பின்மை
  • நீடித்த காய்ச்சலும் இருமலும் மஞ்சட் சளி
  • நெஞ்சு நோவு
  • அடிக்கடி தடிமன்
சிலரில் இரவுநேர அதிக வியர்வை இருமலுடன் அதிகளவு குருதிசிகிச்சைஆறு மாத காலத்துக்குக் கட்டாய சிகிச்சை அத்தியாவசியம். தவறுமிடத்து எதிர்ப்பு சக்தியுடைய நோய்க்கிருமிகள் உருவாகி நோயைக் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

காசநோய் தவிர்ப்பபிசிஜி தடுப்பூசி குழந்தை பிறந்து நான்கு கிழமைக்குள் கொடுக்கப்பட வேண்டும். இதன்போது தழும்பொன்று உருவாகும். இத்தழும்பு உண்டாகாதவிடத்து ஆறுமாதம் தொடக்கம் ஐந்து வயது காலத்திற்குள் இவ்வூசி மீண்டும் கொடுக்கப்பட வேண்டும்.

மூன்று கிழமைகளுக்கு மேல் இருமல் இருக்குமிடத்து உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்

மக்கள் நெரிசலான இடங்கள், சூரிய வெளிச்சம் உள்வராத வீடுகள் இந்நோய் பரவுவதை ஊக்குவிப்பனவாகும்.

போஷாக்குக் குறைபாடு எளிதாக இந்நோய் தொற்ற வழிவகுக்கும்
பசும்பாலினால் பரவும் காசநோயைத் தவிர்க்க நன்கு கொதிக்க வைத்த பால் அல்லது பதனிட்ட பாலை அருந்தவும்.

காச நோய் மிக கொடுமையானது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் எப்போதும் வரலாம். மருத்துவர்களின் ஆலோசனைப்படி காச நோயாளிகள் தவறாமல் 6 மாதத்திற்கு மாத்திரைகள் சாப்பிட்டால் குணமாகிவிடும்.இந்தியாவில் மட்டும் காச நோயால் தினமும் 1000க்கும் மேற்பட்டவர்கள் இறக்கிறார்கள். காச நோய்க்கான அறிகுறிகளாக, தொடர்ந்து இருமல் இருப்பத, விட்டுவிட்டு காய்ச்சல் வருவது, உடல் மெலிவது, களைப்படைவது போன்றவையாகும். இப்படி ஒருவருக்கு இருந்தால் அவர் உடனடியாக சளி பரிசோதனை செய்ய வேண்டும்.காச நோய் ஒரு தொற்று வியாதி. எளிதில் பரவக்கூடியது. 

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மல், இருமல் வரும்போதும், பேசும்போதும் கைக்குட்டையால் வாயை மூடிக் கொள்ள வேண்டும். அந்த துணியை தனியாக துவைத்து காய வைக்க வேண்டும். கண்ட கண்ட இடங்களில் துப்பக் கூடாது. குடும்பத்தில் ஒருவருக்கு காசநோய் ஏற்பட்டால், அவர் பாதுகாப்புடனும், எச்சரிக்கையாகவும் இருந்தால் மற்றவர்களுக்கு பரவலாமல் பாதுகாக்கலாம்.பெரும்பாலும் குழந்தைகளையே இந்த நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது.

ராபர்ட் கோக் (Robert Koch டிசம்பர் 11 1843 – மே 27 1910) ஜெர்மானிய அறிவியலாளரும் மருத்துவரும் ஆவார். இவர் 1877 இல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் கோலுரு நுண்ணுயிர் 1882 இல் மைக்கோபாக்டீரியம் என்ற காச நோயை உருவாக்கும் நுண்ணுயிர் மற்றும் வைபிரியோ காலரா என்ற கொள்ளை நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றை வேறுபடுத்தியமைக்காகவும் கோக்கின் எடுகோள்களுக்காகவும் அறியப்படுகிறார்.

காச நோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905 இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது


நன்றி இணையம்


Wednesday, March 14, 2012

அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் பை நாளும் மார்ச் 14

பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன \pi \, என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. . அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண் அதாவது 3.14 என்பது அண்ணளவாக  ஐயும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது.(π = 3.1415926).

பை அண்ணளவு நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 இல்  (\pi \, யின் பரவலாக அறிந்த அண்ணளவு \frac{22}{7} ) இது கொண்டாடப்பட்டு வருகின்றது. அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் மார்ச் 14 இல் வருவது குறிப்பிடத்தக்கது.

\pi \,  நாள் முதன்முறையாக 1988இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. அந்நாளில் நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்களினதும் பொதுமக்களினதும் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது. அணிவகுப்பின் முடிவில் பை (Pye) எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது
 

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் Albert Einstein மார்ச் 14 1879 - ஏப்ரல் 18 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன் குவாண்டம் பொறிமுறை புள்ளியியற் பொறிமுறை  (statistical mechanics)  மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும் கோட்பாட்டு இயற்பியலில்  (Theoretical physics)  அவர் செய்த சேவைக்காகவும் 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல் அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல் புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்) 'இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்' என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.
 
நன்றி இணையம்

Saturday, March 10, 2012

கூடு கட்டி முட்டையிடும் அறிய வகை புழு


நிலம் மற்றும் நீரில் வாழக்கூடிய ஒரு அறிய வகை உயிரினத்தை ந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பல ஆண்டுகளில் ஆராய்ச்சிக்கு பிறகு முதல் முறையாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக, இந்த ஆய்வுக் குழுவுக்கு தலமையேற்றிருந்த டில்லி பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் கல்விக்கான மையத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ் டி பிஜு தெரிவித்துள்ளார்.
வாலில்லாத இந்த உயிரினங்களின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றங்கள், செஸிலியன் குடும்பத்தைச் சேர்ந்தவை போன்று தோற்றமளிக்கின்றன. ஒன்பது வகையான கால்களற்ற வேறு நில-நீர் வாழ் உயிரினங்களுடன் ஒப்பிட்டே, இவை முற்றிலும் புதியவை என்று தாங்கள் கண்டறிந்ததாக அந்த ஆய்வுக் குழுவினர் கூறியுள்ளனர். 

மரபணுச் சோதனைகளும் இவை முற்றிலும் புதிய உயிரினங்களே என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த உயிரினங்களை முதல் முறையாக பார்க்கும் போது இவை புழுக்களை போன்றே தோன்றும், அவை காடுகளிலுள்ள ஈரப்பதம் மிக்க மணற்பரப்புகளில் வாழ்பவை. 

செஸிலியன்கள் மிகவும் இரகசியமான ஒரு வாழ்க்கை முறையை கொண்டு ஈரமான மணற்பரப்புக்கு கீழே வாழ்பவை என்பதால் அவற்றை கண்டுபிடிப்பது பெரும் சவாலான ஒரு செயல் என டாக்டர் பிஜு தெரிவித்துள்ளார். 

முதுகெலும்புடன் கூடிய ஒரு புதிய உயிரினக் குடும்பத்தை கண்டுபிடிப்பது என்பது மிகவும் அரியது என்று கூறும் விஞ்ஞானிகள், உலகின் 61 நில நீர் வாழ் உயிரினக் குடும்பங்களில் பெரும்பாலானவை 19 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலேயே கண்டறியப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர். 

இந்த உயிரினம் நிலத்துக்கு கீழே கூடு கட்டி, அதில் முட்டையிட்டு, அதை தனது உடலால் சுற்று வளைத்து இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் வரை அடை காக்கும். அவை புழுவாக உருபெறாமல் நேரடியாக சிறு குஞ்சுகளாகவே வெளிவருவதும் இவற்றின் சிறப்பு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
இந்தியாவின் வடகிழக்கு காட்டுப்பகுதிகளில் விரைவான மனித குடியேற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இவ்வகையான உயிரினங்களை காப்பாற்ற வேண்டியது பெரிய சவாலாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி இணையம்

Friday, March 09, 2012

பூமியைத் தாக்கவிருக்கும் பாரிய சூரியப் புயல்

சூரியப் புயல் என்றால் என்ன ?

சூரியனில் நிகழும் தொடர்ச்சியான அணுக்கருத்தாக்க விளைவுகளின் போது நிகழக் கூடிய அசாதாரண நிகழ்வுகளால் கக்கப்படும் அதிசக்தி வாய்ந்த சக்தி அலைகளும் துணிக்கைகளும் மின்காந்தப் புயலாக மாறி விண்ணில் பரவி பூமி போன்ற கோள்களை நோக்கி வந்து தாக்குகின்றன. இதுவே சூரியப் புயல் எனப்படுகிறது

இதனால் ஏற்படும் விளைவு?

அந்த துணிக்கைகள் மணிக்கு 6,400,000 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் பூமியை தாக்கும் போது பூமியின் காந்தப் புலம் அவற்றிற்கான தடுப்புச் சுவராக நின்று தாங்கிக் கொள்ளும். இருந்தாலும் அந்தத் துணிக்கைகள் கொண்டுள்ள ஏற்றம் காரணமாக அவை இந்த மோதலின் போது பிறப்பிக்கும் சக்தி அலைகள் மனிதனின் இலத்திரனியல் மற்றும் மின் காந்த அலையில் இயக்கப்படும் தொழில்நுட்பங்களை (தகவல்தொடர்பு, செய்மதித் தொலைகாட்சி சேவைகள் போன்றவை உள்ளடங்க) பாதிக்கச் செய்யும்.

இதனால் செய்மதிகள், விமானப் போக்குவரத்துக்கள், மின்னியல் உபகரணங்கள்,மின்சார நிலைகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.



பூமியை மிக விரைவில்  08-03-2012 முதல் 10-03-2012 பாரிய சூர்யப்புயல் தாக்கவிருப்பதால், மின்கட்டமைப்புக்கள், செய்மதிகள் மற்றும் விமானப் பாதைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது சூரியனில் இருந்து கிளம்பி இருக்கு இந்த மின்காந்தப் புயல் கடந்த 5 ஆண்டுகளில் பெரியது என்பதுடன் வலுவானதாக இருக்கிறதாம்

கிறின் வீச் நேரம் 6 தொடக்கம் 10 மணிக்குள் பூமியை இந்த சூரியப் புயல் தாக்கலாம் என அமெரிக்க காலநிலை விசேட நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த வார ஆரம்பத்தில் சூரியனில் இருந்து வெளியான ஒளிக்கீற்று காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் உள்ளவர்கள் இன்று இரவு இதனை பார்க்கக்கூடிய வாய்ப்புள்ளதாக பிரித்தானிய ஆய்வு நிலையம் கூறியுள்ளதாக பி.பி.சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு பூமத்திய ரேகைப் பகுதிகளில் இதனைத் தெளிவாக அவதானிக்க முடியும் எனவும் இதன் விளைவுகள் துருவப் பிரதேசங்களின் மிகவும் அதிகமான பாதிப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளில் விமான போக்குவரத்தை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறுதியாக கனடாவின் க்யூபெக் மாகாணத்தை இதேபோன்ற பயங்கர சூரியப் புயல் 1989ம் ஆண்டு தாக்கியது. தொடர்ந்து 9 நாட்கள் கனடாவே ஸ்தம்பித்து-விட்டது.

http://www.space.com/12581-stunning-photos-solar-storms-flares-sun-weather.html

Tuesday, March 06, 2012

உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்



Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி (ரஃப்லேசியா அர்னால்டி) இரஃப்லேசியா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்  . இது உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும். இம்மலர் ஒரு மீட்டர் விட்டம் வரையும் 11 கிலோ எடை அளவுக்கும் வளரக்கூடியது. இந்த மலரின் மணம் சிதைவடையும் மீன் நாற்றத்தில் இருக்கும். எனவே இது 'பிண மலர்' (corpse flower) என்று அழைக்கப்படுகிறது. இது பெங்குலு சுமத்ரா தீவு  இந்தோனேசியா  மலேசியா ஆகிய நாடுகளுக்குரிய மிகைச்செறிவினமாகும்.

டைட்டன் ஆரம்  தாலிபோட் பனை போன்றவை மிகப்பெரிய மலர்களைக் கொண்டிருப்பினும் அவை பல மலர்களின் தொகுப்பாகும். மாறாக இரஃப்லேசியா அர்னால்டி முழுமையான ஒரு தனித்த மலராகும்.

. பூமியின் மீது மிக பெரிய தனிப்பட்ட மலர், மற்றும் அளவிற்கு அழிந்துபோகும் சதை ஒரு வலிமையான வாசனையை உற்பத்தி குறிப்பிடத்தக்கது. அது மட்டும் சுமத்ரா தீவு, இந்தோனேஷியா மழைக்காடுகளில் ஏற்படும் ஒரு காணப்படும் செடி.  

Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி இந்தோனேஷியா மூன்று தேசிய மலர்கள் ஒன்றாகும், மற்ற இரண்டு வெள்ளை மல்லிகை மற்றும் நிலவு ஆர்க்கிட் ] இது அதிகாரப்பூர்வமாக ஒரு தேசிய "அரிதான பூ"

விளக்கம்

Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி ஒரு பூ ஒரு சுற்றி மீட்டர் (3 அடி) மற்றும் 11 கிலோகிராம் (24 எல்பி) வரை எடையுள்ள ஒரு விட்டம் வளர்கிறது.  இது Tetrastigma கொடிக்கு, (சிதைவுறாத) ஒரு ஒட்டுண்ணி போல் வாழ்கிறது. மழைக்காடுகள். Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி எந்த காணக்கூடிய இலைகள், தண்டுகள் அல்லது வேர்கள் இல்லை,   அது இனப்பெருக்கம் செய்ய தயாராக இருக்கும் போது அதை மட்டுமே காண முடியும். அவை அழுகும்  சதை வடிவில்  ஒரு  சிவப்பு-பழுப்பு  நிறத்தை கொண்டும் துர்நாற்றத்துடன் காணப்படும்.
ந்த மலரின் மணம் சிதைவடையும் மீன் நாற்றத்தின் வாசனையினால் ஈக்கள்  போன்ற பூச்சிகள் கவர்கிறது இதனால்  மகரந்த சேர்க்கை இலகுவா  நடைபெற எதுவாக உள்ளது.  

 இனப்பெருக்கம்
Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி கண்டறிவது அரிதான மற்றும் மிகவும் கடினமாக உள்ளது.  இது மொட்டுக்களை உருவாக்க பல மாதங்கள் எடுத்து மலர் ஒரு சில நாட்களுக்கு நீடிக்கும் . காடுகளின் மலர் கண்டறிவது குறிப்பாக கடினம்.  இவை  ஆண் மற்றும் பெண் மலர்கள் அருகாமையில்  வளரும் வெற்றிகரமான  மகரந்த சேர்க்கைக்கை நடப்பதற்கு எதுவாக உள்ளது. 
 Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி   ரூட் அல்லது தண்டு வெளியே ஒரு சிறிய மொட்டு  வடிவங்கள் இனப்பெருக்கம்  செய்ய தயாராககும்.  இவை ஒரு வருடத்தில் ஒரு முறையே  இனப்பெருக்கம் செய்யும்.அழுகும் இறைச்சி ஒரு அழுகிய வாசத்தை ஈக்கள் மற்றும்  மகரந்த சேர்க்கை வண்டுகள்  கவர்கிறது. வெற்றிகரமாக  மகரந்த சேர்க்கை நடைபெற ஈக்கள் மற்றும்  வண்டுகள்  ஆண் மற்றும் பெண் தாவரங்கள் இரண்டிலும் மொய்ப்பதால் நடைபெறுகிறது .



Monday, March 05, 2012

பாம்பிற்கு பால் ஊற்றுவது ஏன்?

  • பரோமோன்ஸ்கள் என்றால் என்ன?
பரோமோன்ஸ்கள் உண்டாக்கும் விளைவு உள்ளுணர்வால் ஏற்படுவதாகும். இது உயிரினம் கற்றறிந்து உண்டாவதில்லை. மனிதன் உள்ளிட்ட அனைத்து விலங்கினங்களிலும்  பரோமோன்ஸ்கள் காணப்பட்டாலும் பூச்சியினங்களிலேயே இது மிகப்பரவலாய்க் காணப்படுகிறது.  பரோமோன்ஸ்களைப்  பற்றிய அறிவு வாசனைத் திரவியங்கள் தயாரித்தல் பூச்சிகளைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.


பாம்பிற்கு பால் ஊற்றுதல் முட்டை வைப்பதன் காரணம் என்ன ? 

உண்மையும் விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்இமனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.

பரோமோன்ஸ் என்பது பொதுவாக ஒரு உயிரினம் தன் இனத்தைச் சேர்ந்த மற்ற உயிரிகளுடன் தொடர்பு கொள்ளும் பொருட்டு சுற்றுப்புறத்தில் சுரக்கும் மணமுடைய வேதிப்பொருள் ஆகும். ஆனால் ஒரு உயிரினத்தின்  பரோமோன்ஸ்   மற்றொரு இன உயிரினத்தில் துலங்கல் உண்டாக்குவதும் அறியப்பட்டுள்ளது.


பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.


Saturday, March 03, 2012

எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி

எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி
இந்தப் பறவைக்கு உள்ளது!

இது தன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும்!
இது ஏன் சாம்பலாகிறது?

பீனிக்ஸ் பறவை ஒரு லட்சியவாதி!
இதற்கு சூரியன் தான் லட்சியம்!
சூரியனைத் தொடவேண்டும் என்பதே
இந்தப்பறவையின் வாழ்க்கை லட்சியம்!

பீனிக்ஸ் பறவை தன் சிறகுகளை அகல விரித்துப் பறக்கும்!
சூரியனை நோக்கி உயரும்.

ஒரு குறிப்பிட்ட எல்லையில், சூரியனின் அதீத வெப்பத்தால் உடல் கருகி மண்ணில் விழும்!
மீண்டும் உயிர்க்கும்!
மீண்டும் சூரியனை நோக்கிக் கம்பீரமாய்ப் பறக்கும்!

வெற்றி பெற்ற எந்த ஒருவரின் வாழ்க்கையிலும் ஒரு பீனிக்ஸ் பறவை இருக்கிறது!!

அந்த போர்ப் பறவையின் ஆயுள் ரேகையில்
தங்க மயிலின் தன்னம்பிக்கையின் ரேகையும் கூடுகட்டிப் பெருமைப்படுத்துகிறது!!

  • பீனிக்ஸ் பறவை பற்றிய இன்னொரு கருத்து
பீனிக்ஸ் பறவை சாம்பல் ஆவதற்கும் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர் பெறுவதற்கு இன்னுமொரு வியப்பான காரணம் சொல்லப்படுகின்றது.

பீனிக்ஸ் பறவை ஒரு இலட்சிய வாதிப் பறவை எனவும் இதற்கு சூரியனைத் தொட வேண்டும் என்பதே வாழ்க்கை இலட்சியம் எனவும்இஅது சூரியனை நோக்கி பறக்கும் போது குறிப்பிட்ட தூரம் வரை சென்ற பின் சூரியனின் அதீத வெப்பம் தாங்க முடியாமல் உடல் கருகி மண்ணில் விழுந்து மீண்டும் உயிர்த்து தொடர்ந்து தனது பயணத்தை தொடருமாம்.பீனிக்ஸ் பறவை தானாகவே தன்னை வேறு துணை இன்றி உருவாக்கும். இவை பழங்களிலோ பூக்களின் தேனிலோ தங்கி வாழ்வதில்லை. மாறாக மரங்களில் இருந்து வழியும் பாலிலேயே தங்கி வாழ்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

எந்த பறவைக்கும் இல்லாத சக்தி பீனிக்ஸ் பறவைக்கு இருப்பதாக நம்பப்படுவதனாலும் இனிமையான ரசிக்கக்கூடிய இசையை ஒத்த ஒலியில் ஒலி எழுப்பும் வல்லமை உடையதனாலும் முடிவிலி அற்ற பறவை என்பதற்காகவும் குறிப்பாக அனைவராலும் அறியப்பட்ட பறவை பீனிக்ஸ் ஆகும்.
  • ஆபிரிக்கர்களின் நம்பிக்கை
ஆபிரிக்காவில் பீனிக்ஸ் பறவை வாழ்ந்ததாகவும் அவை கற்பனை ஆனவை அல்ல எனவும் நம்பப்படுகிறது. பீனிக்ஸ் பறவைகள் தமது முட்டைகளை நெருப்பில் இருந்து வரும் சாம்பலில் அல்லது காட்டுத் தீயின் பின் அவற்றின் சாம்பலில் இடும் இயல்பை கொண்டதாம்.இதனை கண்ட அன்றைய மக்கள் இப்பறவைகள் நெருப்பில் இருந்து பிறப்பதாக தவறாக புரிந்து கொண்டமையால் அவை பற்றி பல்வேறு கட்டுக் கதைகள் உருவாகியது எனவும் ஒரு கருத்து நிலவுகின்றது.

எவ்வாறு இருப்பினும் இவை உயிர் வாழ்ந்தமைக்கான எவ்வித தடையங்களும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. எனினும் புரானக் கதைகளிலும் பண்டைய புகழ் பெற்ற ஓவியங்களிலும் இவை முக்கியமான இடத்தை பெற்றுள்ளன.

  • புராணக்கதைகளில் பீனிக்ஸ்
பீனிக்ஸ் பறவை என்பது பாரசீக கிரேக்க உரோம எகிப்திய சீன மற்றும் பினோனிக்கன்களின்(Phoencians ) புராதன கதைகளில் இடம்பெற்ற கற்பனையான ஒரு பறவை(நெருப்பு பறவை)ஆகும்.

புராதன கதைகளின் படி கற்பனை பறவை ஆகிய இதன் தோற்றம் கடும் சிவப்பு நிற உடலையும் தங்க நிறத்திலான வால்ப்பகுதியையும் கொண்டு காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் பீனிக்ஸ் பறவையின் நிறம் குறித்து ஒவ்வொரு புரானக்கதைகளிலும் ஒவ்வொரு விதமாக கூறப்பட்டுள்ளது. பீனிக்ஸ் பறவையானது 500 தொடக்கம் 1000 வருடங்கள் வரையிலான வாழ்க்கை சுழற்ச்சியை கொண்டதாக நம்பப்படுகிறது.

இப் பறவையானது தனது ஆயுள் முடிவதாக உணரும் தறுவாயில் தானாகவே தனக்கென்று ஓர் மரத்தின் சிறு கிளைகளைக் கொண்டு கூடு ஒன்றை அமைத்து அதில் தனக்கு தானே தீ வைத்துக்கொள்ளுமாம்.தீ வைத்துக் கொண்ட பீனிக்ஸ் பறவையும் அதன் கூடும் முற்றாக எரிந்து தீர்ந்ததும் அதில் எஞ்சிய சாம்பலில் இருந்து புதிய பீனிக்ஸ் பறவை அல்லது புதிய பீனிக்ஸ் பறவையின் முட்டை தோன்றுவதாக நம்பப்படுகிறது.

இவ்வாறாக மீண்டும் பிறக்கும் பீனிக்ஸ் பறவை சுயமாகவே தான் வாழும் காலத்தை நிர்ணயித்து புதிய ஒரு வாழ்க்கை சுழற்ச்சியில் வாழுமாம்.

மேலும் சில புராணக் கதைகளின் படி புதிய பீனிக்ஸ் பறவை தனக்கு உயிர் கொடுத்த பீனிக்ஸ் பறவையின் உடலின் சாம்பலை வாசனை உள்ள பொருட்களைக் கொண்டு முட்டை ஒன்றை அமைத்து அதில் சேமித்து எகிப்தில் உள்ள ஹெலியோபோலிஸ் என அழைக்கப்படும் சூரிய கடவுளுக்கு என அமைக்கப்பட்ட கோயிலில் பாதுகாத்து வைக்குமாம்.

இது இவ்வாறு இருக்க இறந்த பறவையின் சாம்பலை அது அதன் சரணாலயமாக கருதும் சூரியனில் புதைக்க தனது இருப்பிடத்தில் இருந்து சூரியனை நோக்கிச் செல்லுவதாகவும் நம்பப்படுகிறது

நன்றி இணையம்