Saturday, February 12, 2011

எவ்வாறு இசையை கேட்கும் போது சந்தோஷமளிக்கிறது?.

அனேகமாக எல்லோருக்குமே இசை பிடிக்கும். இசை கேட்பது, சந்தோஷமளிப்பதற்குக் காரணம் என்ன? அந்த நேரத்தில், மூளையில் ஒரு வேதிப்பொருள் சுரக்கப்படுகிறது. அதுதான் இசை ரசிகரின் மனதுக்குள் மகிழ்ச்சியைப் பரப்புகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

மேற்கண்ட வேதிப்பொருளானது, குறிப்பிட்ட `த்ரில்’லான இசைக் கணத்தை எதிர்பார்க்கிறது, அப்போது ஏற்படும் துடிப்பை உணர்கிறது.

இதுதொடர்பான `டோபமைன்’ என்ற வேதிப்பொருளின் பங்கு பற்றி ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளை செல்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ள இது உதவுகிறது. புதிய கண்டுபிடிப்பானது, இசை கேட்கும்போது இந்த வேதிப்பொருள் நேரடியாக வெளிப்படுவதைக் காட்டுகிறது. ஒருவர் இசை கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவரது மூளையை `ஸ்கேன்’ செய்ததன் மூலம் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட மான்ட்ரியால் மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் ஸட்டோர், வலோரி சலிம்பூர் ஆகியோர், ஏன் எல்லா இன மக்களிடமும் இசை பிரபலமாக இருக்கிறது என்றும் கண்டுபிடித்திருக்கின்றனர்.

அதாவது குரல் தேவையில்லை, இசைக் கருவிகளில் இருந்து எழும் இசையே `டோபமைனை’ சுரக்கச் செய்துவிடுகிறது என்று இவர்கள் கூறுகின்றனர். இசை கேட்கும் சந்தோஷத்தில் குரலின் பங்கு என்ன என்று மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இசை ரசிகர் ஒருவர் ஏதாவது ஒரு இசையைக் கேட்பதை விட, தனக்குப் பிடித்த இசையைக் கேட்கும்போது அதிக `டோபமைன்’ வெளிப்படுவதும் ஸ்கேனில் தெளிவாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த `டோபமைன்’ வேதிப்பொருளானது, பொதுவாக `உறவின்’போது அல்லது சாப்பிடும்போது சந்தோஷத்தை உணர வைக்கிறது. போதைப்பொருட்களைப் பயன்படுத்தும்போது `மிதக்க’ வைப்பதும் இதுதான். இசையும் ஒரு போதைதானோ?

முத்துகள் உருவாகுவது எப்படி?

முத்து என்பது ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒருவகைப் பொருளாகும். இது இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றது. மிகப் பழங் காலத்திலிருந்தே முத்து விரும்பி வாங்கப்படும் ஒன்றாக இருந்து வந்துள்ளது
உயர் தர முத்துகள் எப்படி உருவாகின்றன என்றால், கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன.
அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. இது போல் இயற்கையாக உருவாகும் முத்துக்கள் தான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.

செயற்கை முத்து எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்றுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிப்பியினுள் ஏதேனும் சிரியப் பொருள் சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை சுரந்து அதன் மீது மூடிவிடும். அதைத் தெரிந்துகொண்ட சீனர்கள் சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள் ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.

ஜப்பானியர்கள் சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள். அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு நல்ல விலைக்கு விற்பனையாகிறது.

1896 இல் ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ என்பவர் செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை விருத்தி செய்து அதற்காக உரிமம் ஒன்றையும் பெற்றுக்கொண்டார். இம்முறையில் முசெல் வகை உயிரினத்தின் ஓட்டிலிருந்து செய்யப்பட்டுப் பளபளப்பாக்கப்பட்ட நுண்துகள் இன்னொரு முத்துச்சிப்பியின் திசுவினால் சுற்றப்பட்டு முத்துச்சிப்பியின் உடலுக்குள் செலுத்தப்படும். இச்சிப்பிகள் ஒரு கூட்டினுள் இடப்பட்டு நீருக்குள் இறக்கப்படும். இவை முத்துக்களை உருவாக்கச் சுமார் மூன்று தொடக்கம் ஆறு ஆண்டுகள் வரை எடுக்கும்.

முதன் முறையாக புதனில் இறங்கும் அமெரிக்க விண்கலம்


கடந்த 2004&ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஏவிய ‘மெசஞ்சர்’ விண்கலம் 6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தில் அடுத்த மாதம் தரையிறங்க உள்ளது.

சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன். இது பற்றி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ புதன் கோள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது.

புதன் கோள் பற்றிய ஆராய்ச்சிக்காக ‘மெரைனர்10’ என்ற விண்கலத்தை நாசா கடந்த 1973&ம் ஆண்டு அனுப்பியது. அதன் பிறகு, பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த 2004&ம் ஆண்டு ஆகஸ்ட் 3&ம் தேதி ‘மெசஞ்சர்’ என்ற விண்கலத்தை புதனுக்கு அனுப்பியது நாசா.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கேப் கேனவராலில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து மெசஞ்சர் விண்கலத்தை சுமந்துகொண்டு டெல்டா&2 ராக்கெட் போகிறது.. போகிறது.. போய்க்கொண்டே இருக்கிறது.

பூமியில் இருந்து புறப்பட்டு வெள்ளி கிரகத்தை தாண்டி தற்போது புதனை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

வினாடிக்கு 640 கி.மீ. என்ற வேகத்தில்
பாயும் அந்த ராக்கெட் 6 ஆண்டு 7 மாதத்தில் சுமார் 790 கோடி கி.மீ. தூர பயணத்துக்கு பிறகு தற்போது புதன் கிரகத்தை நெருங்கியிருக்கிறது. சூரியனுக்கு ரொம்ப நெருக்கமான கிரகம் என்பதால் வெயில் அதிகமாம்.

பூமியில் இருக்கும் சூரிய வெப்பத்தைவிட 11 மடங்கு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. அதிக வெப்பத்தையும் தாங்கும் விதத்தில் வெளிப்புற பகுதிகள் மிகவும் பாதுகாப்பாக உருவாக்கப்பட்டிருப்பதாக மெசஞ்சர் திட்ட விஞ்ஞானி லூயிஸ் பிராக்டர் தெரிவித்தார்.

புதனின் மண்தன்மை, வெப்பம், சுற்றுப்பகுதி, வானிலை உள்பட சகல அம்சங்களையும் ஆராய்வதற்கு ஏற்ப அதிநவீன சென்சார்கள், தொலைதொடர்பு சாதனங்கள், வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவிகள், நவீன கம்ப்யூட்டர்கள், கேமராக்கள் ஆகியவை மெசஞ்சர் விண்கலத்தில் இருக்கின்றன.

6 ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் வகையில் புதனின் வட்டப்பாதைக்குள் மெசஞ்சர் அடுத்த மாதம் 17&ம் நுழைய உள்ளது. இதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

நன்றி:- இணையம்