Thursday, May 26, 2011

பௌர்ணமி தினத்தில் தேள்களில் எவ்வாறு ஒளி வீசுகின்றது.


இருண்ட சூழ்நிலையில் தேள்களிலிருந்து புற ஊதாக் கதிர்வீச்சுகள் ஒளிர்ந்தால் பார்ப்பவரை திகிலடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. பூரண பௌர்ணமி தினங்களில் இயற்கைக்கு

மாறான வகையில் நியோன் நீல நிற கதிர்கள் தேள்களின் உடற்பாகங்களிலீருந்து ஒளிர்கின்றன. தேள்களின் எலும்புப் பகுதிகளில் புரதப் பொருளின் மீது புற ஊதாக் கதிர்கள் தாக்கமுறுவதனால் இவ்வாறு மனிதக் கண்களுக்கு அவை ஒளி வீசுவதாக் தோன்றுகின்றது. தேள்கள் தொடர்பான ஆய்வாளர்கள் இந்த வினாவிற்கு விடைகாண நீண்ட காலத்தை செலவிட்டனர்.

ஏனைய தேள்களை இனம் காண்பதற்கு இவ்வாறு ஒளிர்வதாக ஒரு சாராரும், பாலைவனங்களில் தேள்களை இனம் காண்பதற்கு இவ்வாறு ஒளிர்வதாக மற்றொரு சாராரும் தெரிவிக்கின்றனர். இரையை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறு ஒளிர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக இந்த ஒளிமாற்றச் செயற்பாடு நிகழ்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. எவ்வாறெனினும், தீவிர ஆய்வுகளின் போது மேற்குறிப்பட்ட எந்தவொரு காரணியையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவிற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

தேள்கள் எவ்வாறு ஒளிர்கின்றன என்பது தொடர்பில் கலிபோர்னிய பல்கலைக்கழக கார்ல் குலுக் தலைமையிலான குழுவினர் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். தேள்கள் இரவு நேரப் பிராணிகளாக வர்ணிக்கப்படுகின்றன. தேள்கள் வெப்பத்தையும், சூரிய ஒளியினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களையும் விரும்புவதில்லை. புற உதாக் கதிர் தாக்கத்தை தேள்கள் தவிர்த்துக் கொள்கின்றன. தேள்களின் மீது புற ஊதாக் கதிர்கள் விழும் அளவிற்கு ஏற்ப அவற்றின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுவதாக அண்மைய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. புற ஊதாக் கதிர் வீச்சு அதிகமாகக் காணப்படும் போது தேள்களின் செயற்பாடுகள் குறைவாகக் காணப்படுகின்றது.

பூரண பௌர்ணமி தினங்களில் புற ஊதாக் கதிர் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட போதிலும் இரை தேடுவதற்காக தேள்கள் வெளியே வருவதாகவும் இதனால் அவை ஒளிர்வதாகவும் கார்ல் குலுக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், பூரண பௌர்ணமி தினங்களில் தேள்கள் வெளியே செல்வதற்கு அதிக நாட்டம் காட்டுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பான விரிவான ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படு;ம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறெனினும், பௌர்ணமி தினங்களில் தேள்கள் எவ்வாறு ஒளிர்கின்றன என்ற கேள்விக்கு பதில் கிடைக்கப் பெற்றுள்ளது. கொடிய விஷமுடைய தேள்கள் இரவு நேரங்களில் ஒளிர்க் கதிர்களை வீசிக் கொண்டு வீடுகளில் நகர்ந்தால் இலகுவில் அவற்றை தாக்க முடியும் என்பது மனிதர்களைப் பொருத்தமட்டில் ஓர் ஆசுவாசமாகவே கருதப்படுகின்றது.

Sunday, May 01, 2011

யானை இனத்தைச் சேர்ந்த விசித்திர விலங்கினம்

இந்து சமுத்திரம் பசிபிக் சமுத்திரம் செங்கடல் உட்பட கிழக்கு ஆபிரிக்கா முதல் அவுஸ்திரேலியா வரையான கரையோர நீர்பரப்பில் டியுகோங்ஸ் விலங்கினங்கள் வாழ்கின்றன.

இவற்றின் தோற்றம் மற்றும் நடத்தைகள் ஒன்றோடொன்று ஒத்தவையாக காணப்பட்ட போதிலும் டியுகோங்கிஸின் வாற் பகுதி திமிங்கிலத்தைப் போன்றது. இவ்விரண்டும் யானை இனத்தைச் சார்ந்தவை. எனினும் இவ்வாறான மிகப்பெரிய மிருகங்கள் தோற்றத்திலும் நடத்தையிலும் ஒத்தவையாக இருப்பதில்லை.

நீருக்கடியிலுள்ள புல்லினத்தை பகலும் இரவுமாக இவை மேய்கின்றன. தமது உடலிலுள் தூரிகைகளால் இவற்றை கிளறிவிடுகின்றன. இவை தமது மென்மையான மூக்கினாலும் கரடுமுரடான உதடுகளினாலும் மென்று சாப்பிடுகின்றன. இந்த முலையூட்டிகள் முன்னர் சுமார் ஆறு நிமிடங்கள் நீருக்கடியில் மூழ்கி இருக்க கூடியவை.

சில நேரங்களில் இவை நின்றவாறு நீருக்கு மேல் தலையை வைத்துக்கொண்டு வால்களினால் மூச்செடுக்கின்றன. இந்த வகையான விலங்கினங்கள் தமது பொழுதுகளை அதிகளவில் தனிமையாக அல்லது ஜோடியுடன் கழிக்கின்றன. இருப்பினும் சில வேளைகளில் நூற்றுக்கணக்கான விலங்கினங்களுடன் மந்தையாகவும் காணப்படுகின்றன.

ஒரு வருட கால பிரசவத்துக்கு பின்னர் பெண் டியுகோங்ஸ்கள் ஒரு கன்றை ஈன்றெடுப்பதோடு தமது கன்றுகளை நடமாட வைப்பது முதற்கொண்டு முதல் தடவையாக மூச்சுவிட பயற்சி வழங்குகின்றன.

சில வேளைகளில் தமது முதுகில் ஏற்றி கன்றுகளை சவாரி செய்வதில் இந்த பெண் டியுகோங்ஸ் ஆர்வமாக இருக்கின்றன. இந்த கன்றுகள் சுமார் 18 மாதங்கள் தமது தாயின் ஆதரவுடன் வாழ்கின்றன.

இவ்வாறான விலங்கினங்கள் கரையோரப்பகுதிகளில் வேட்டையாடுவோரினால் இலகுவாக குறிவைக்கப்படுகின்றன. மாமிசத்திற்காகவும் எண்ணெய்காகவும் வேட்டையாடப்படும் இவ்விலங்குகளின் தோல், எலும்பு மற்றும் பற்கள் என்பனவும் உபயோகிக்கப்படுகின்றன.

டியுகோங்ஸ் விலங்கினங்கள் தற்போது சட்டரீதியாக பாதுகாக்கப்படுகின்றன. பண்டையக்காலத்தில் கடற்சார் கதைகளின் கருப்பொருளுக்கு கடற்கன்னிகளும் மற்றும் சிரென்ஸமே காரணமாக இருக்கலாம் என்பது பலரது நம்பிக்கையாக இருக்கின்றது

.நன்றி:- http://animals.nationalgeographic.com/animals/mammals/dugong/