Tuesday, February 22, 2011

ஆள்நடமாட்டம் இல்லாத பாலைவனத்தில் தானாக நகரும் கற்கள்


அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ பிரதேசம் உலகப் பிரசித்தமானது. இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர். ஏன் தெரியுமா? இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்களோ, மரம் மட்டைகளோ கிடையாது.

பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரதேசத்தில்
வரட்சி காலத்தில் நிலம் வெடிப்பு விழுந்து ஓட்டைகளில் ‘ஐஸ்’ படர்ந்திருக்கும். இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக நகர்ந்து செல்கின்றன. நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவை நகர்ந்து சென்ற அடையாளங்கள் தெளிவாகக் காணப்படுகின்றனவாம்.

இங்குள்ள கற்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முழு பிரதேசத்தையும் சுற்றி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணத்தை ஆரம்பிக்கும். ரயில் பாதை போன்று அவை சமாந்தரமாக அந்த பூமியைச் சுற்றி வருகின்றன.
சில சமயங்களில் அவற்றில் ஒரு கல் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பி தனது பயணத்தை தனியாக தொடர்வதுண்டு. இவை பின்னோக்கி நகர்ந்த சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கிறது.

இந்த பரந்த நிலப்பரப்பிற்கு அருகில் இருக்கும் மலையில் இருந்து கற் துண்டுகள் உடைந்து விழுகின்றன. அவையே இந்தப் பூமியெங்கும் நடமாடுகின்றன. இவை நடந்து திரியும் தூரம் 10 ஆயிரம் அடிகளை விட அதிகமாம். சில கற்கள் ஒரு அடி மட்டுமே நகர்கின்றன.
இந்த மர்ம பிரதேசம் குறித்து முதன் முதலில் 1948 இலே தகவல் வெளியானது. 1972-80 காலப் பகுதியில் பாரியளவிலான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்குள்ள களிமண் தட்டா காரணம்? இவை வேகமான காற்றினால்தான் நகர்கின்றன என்று சிலர் கூறலாம். ஆனால் இப்பகுதியில் கடும் காற்று வீசுவதில்லையாம். எனவே அந்த வாதமும் எடுபடாது.
நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியே கற்கள் நகர்வதற்குக் காரணம் என மெசசுசெட்ஸ் பகுதி ஹெம்சயர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. சிறிய கல்லொன்று வருடம் முழுவதும் இரண்டரை அங்குலம் மட்டுமே நகர்ந்த போதும் 36 கிலோ எடையுள்ள கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் அளவுக்கும் அவை நகர்வதற்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்பதை இது காட்டுகிறது.

இந்தப் பாழடைந்த மர்மமான பிரதேசத்தில் மனித நடமாட்டம் இல்லாவிட்டாலும் கற்களின் நடமாட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவை பற்றிய ஆய்வுகளும்தான்.

அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ பிரதேசம் உலகப் பிரசித்தமானது. இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர். ஏன் தெரியுமா? இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்களோ, மரம் மட்டைகளோ கிடையாது. பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரதேசத்தில் வரட்சி காலத்தில் நிலம் வெடிப்பு விழுந்து ஓட்டைகளில் ‘ஐஸ்’ படர்ந்திருக்கும்.

இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக நகர்ந்து செல்கின்றன. நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவை நகர்ந்து சென்ற அடையாளங்கள் தெளிவாகக் காணப்படுகின்றனவாம். இங்குள்ள கற்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முழு பிரதேசத்தையும் சுற்றி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணத்தை ஆரம்பிக்கும். ரயில் பாதை போன்று அவை சமாந்தரமாக அந்த பூமியைச் சுற்றி வருகின்றன. சில சமயங்களில் அவற்றில் ஒரு கல் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பி தனது பயணத்தை தனியாக தொடர்வதுண்டு.

இவை பின்னோக்கி நகர்ந்த சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கிறது. இந்த பரந்த நிலப்பரப்பிற்கு அருகில் இருக்கும் மலையில் இருந்து கற் துண்டுகள் உடைந்து விழுகின்றன. அவையே இந்தப் பூமியெங்கும் நடமாடுகின்றன. இவை நடந்து திரியும் தூரம் 10 ஆயிரம் அடிகளை விட அதிகமாம். சில கற்கள் ஒரு அடி மட்டுமே நகர்கின்றன. இந்த மர்ம பிரதேசம் குறித்து முதன் முதலில் 1948 இலே தகவல் வெளியானது.

1972-80 காலப் பகுதியில் பாரியளவிலான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்குள்ள களிமண் தட்டா காரணம்? இவை வேகமான காற்றினால்தான் நகர்கின்றன என்று சிலர் கூறலாம். ஆனால் இப்பகுதியில் கடும் காற்று வீசுவதில்லையாம். எனவே அந்த வாதமும் எடுபடாது. நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியே கற்கள் நகர்வதற்குக் காரணம் என மெசசுசெட்ஸ் பகுதி ஹெம்சயர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. சிறிய கல்லொன்று வருடம் முழுவதும் இரண்டரை அங்குலம் மட்டுமே நகர்ந்த போதும் 36 கிலோ எடையுள்ள கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் அளவுக்கும் அவை நகர்வதற்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்பதை இது காட்டுகிறது.

இந்தப் பாழடைந்த மர்மமான பிரதேசத்தில் மனித நடமாட்டம் இல்லாவிட்டாலும் கற்களின் நடமாட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவை பற்றிய ஆய்வுகளும்தான்

நன்றி;- இணையம்

Monday, February 21, 2011

நீண்ட ஆயுளுக்கு நார் சத்துள்ள உணவுப் பொருட்கள் அவசியம்

நார் சத்து நிரம்பிய உணவு பொருட்களை உண்ணுவதால், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்' என, அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், "நார் சத்துள்ள உணவுப் பொருட்களின் பயன்கள்' பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில், நார் சத்து நிரம்பிய உணவுப் பொருட்களை உண்ணுவதால், நாம் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும் என தெரிய வந்துள்ளது.

ஆய்வு குழு தலைவர் யிக்வுங்க் பார்க் இதுகுறித்து கூறியதாவது:உடல் ஆரோக்கியத்திற்கும், உணவுப் பழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.இதனடிப்படையில், நார் சத்துள்ள உணவுப் பொருட்களை உண்ணும் நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.அப்போது, நார் சத்து நிரம்பிய உணவை உண்பவர்கள், சராசரி நபர்களை விட நீண்ட காலம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதாக தெரிய வந்தது.அதுவும் முழுமையான தானியங்களில் இருந்து கிடைக்கும் நார் சத்து, நம் உடலுக்கு மிகவும் பலனளிக்கிறது. இதன் மூலம், பன்மடங்கு நன்மைகள் ஏற்படுகின்றன.

இரைப்பை மற்றும் உணவுக் குழாய்களில் ஏற்படும் நோய்களுக்கு, நிரந்தர தீர்வு காண, நார் சத்துள்ள உணவுப் பொருட்கள் உதவுகின்றன.நீரிழிவு நோய், இதயம் தொடர்பான நோய்கள்மற்றும் புற்றுநோய் உள்ளிட்டவற்றை அறவே தவிர்க்க முடியும்.நார் சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகளவில் உண்ணும் போது, இதயம் மற்றும் சுவாசம் தொடர்பான நோய்கள், தொற்றுநோய்கள் ஆகியவற்றுக்கான எதிர்ப்பு சக்தி நம் உடலில் உருவாகிறது.இதனால், தேவையற்ற உயரிழப்புகளும் தவிர்க்கப்படுகின்றன.இவ்வாறு யிக்வுங்க் பார்க் கூறினார்.

நன்றி:- இணையம்

Sunday, February 20, 2011

நம்பினால் நம்புங்கள் | சிட்டுக் குருவி வடிவில் உளவு விமானம்

பதினாறு செண்டிமீட்டர் அளவுள்ள சிறு குருவி இயந்திரம் ஒன்றை அமெரிக்க பாதுகாபபுத் துறையின் பெண்டகனுக்கு உருவாக்கப் பட்டுள்ளது.

நாலு மில்லியன் டொலர் செலவழித்து உருவாக்கப்பட்ட இந்தக் குருவி போர் முனையில் எதிரிகளின் கண்ணுக்குப்படாமல் அதில் பொருத்தப்பட்டுள்ள சிறு ஒளிப்பதிவுக் கருவி மூலம் எதிரியின் நிலைகளைப் படம் பிடித்துவிடும். இச்சிறு விமானம் மணிக்கு பதினொரு மைல் வேகத்தில் பறக்க வல்லது. ஏற்கனவே உள்ள சிறு உளவு விமானங்கள் காற்றாடிகளுடன் பறப்பதால் எதிரிகள் அவற்றை அடையாளம் கண்டு விடுகின்றனர்.

இந்தக் குருவி விமானம் சிறகடித்துப் பறக்கும். மேலும் கீழும் பக்கவாட்டிலும் பறக்க வல்லது. இந்தச் சிறு இயந்திரக் குருவி திறந்த சாளரங்களுடாகவும் நுழையக் கூடியது. உண்மையான குருவிகள் போலவே மின்சாரக் கம்பிகளிலும் உட்காரும். சிறு விமானங்கள் உருவாக்கலில் இந்தக் குருவி விமானம் ஓரு புதிய பரிமாணத்தை கொண்டுவந்துள்ளது. இதை தொடர்ந்து வரும் கருவிகள் உளவுத் துறையில் பெரும் பங்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

நன்றி:- இணையம்

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனி

இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை.


முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முதுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும். இது நெல்லிக்கனியில் அதிகம் காணப்படுகிறது.

மேலும் தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் நெல்லிக் கனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால் பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.

தலைமுடி உதிர்வதை தடுத்து அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால் உண்டாகும் வலிகளைப் போக்கி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.


நெல்லிக்கனியின் சிறப்பு

  • ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

  • . ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது.
  • அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.
  • எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது.
  • இருதய அடைப்பை தடுக்கிறது.
  • மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.
  • நெல்லியை இடித்துச் சாறு பிழிந்து தேன் சேர்த்து சிறிதளவு திப்பிலிப் பொடி கலந்து சாப்பிட்டு வர சுவாச காசம் குணமாகும்.

  • உலர் பழத்தைச் சாப்பிட்டு வர கண்பார்வை கூடும். வயிற்றுப்போக்கு நிற்கும்.
  • நெல்லிச்சாற்றை அருந்தி வர நுரையீரல் பெருக்கம் தீரும். புழுக்களை அழிக்கும்.
  • நெல்லியை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி, மூலநோய் நீங்கும்.

  • . நெல்லிச்சாறு உடலிலுள்ள அதிக சர்க்கரையைக் குறைக்கும்.

  • நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி தின்றால் இதயக் கோளாறுகள் நீங்கும். நரம்புத் தளர்ச்சி, இளநரை, தோல் சுருக்கம் போன்றவை குணமாகும்.

  • . பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து சாப்பிட்டுவர கீல்வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாகும்.

  • நெல்லியை உலர்த்திப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்க உடலில் சொறி, தோல் சுருக்கம் நீங்கும்.

  • உலர் நெல்லியை நீரில் போட்டு ஊறவைத்து இந்நீரில் கண்களைக் கழுவி வர கண்நோய்கள் குணமாகும்.

  • நெல்லிப் பொடியுடன் தேன் அல்லது நெய் கலந்து இரவில் சிறிதளவு உண்டுவர கண்பார்வை மங்குதல் மாறும்.

  • நெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து, நரை (ஆரம்பக்கட்ட நரை) முடிகள் மேல் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் இளஞ்சூடான நீரில் குளித்து வர நரை மேலும் தோன்றாது.

  • நெல்லியை அரைத்து நெற்றியில் பற்றுப் போட சளியுடன் கூடிய தலைபாரம், தலைவலி நீங்கும்.

  • நெல்லிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட சளி, தும்மல் நீங்கும்.

  • பாலில் நெல்லிப்பொடியைக் கலந்து கொதிக்க வைத்து, சிறிதளவு நெய்விட்டு கலக்கி அருந்திவர கக்குவான் இருமல் குணமாகும்.

  • நெல்லிக்காயைத் தின்று வந்தால் பயோரியா நோய், ஸ்கர்வி நோய் நீங்கும். பல் கிருமிகள் அழியும்.
  • . நெல்லிச்சாறில் சந்தனம் கரைத்து சிறிதளவு உட்கொள்ள குமட்டல், வாந்தி நிற்கும்.

  • நெல்லி விதையை ஊறவைத்து அரைத்து, பாலில் கலந்து சாப்பிட மூலநோய் குணமாகும்.
  • நெல்லி லேகியம் உண்டு வந்தால் இதயம் வலிமை பெறும். இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும்.

  • நெல்லிச் சாறுடன், வாழைப்பட்டை சாறு கலந்து அருந்த பாம்பு, தேள், வண்டு நஞ்சுகள் இறங்கும்.

  • நெல்லிப்பொடி, நெல்லி லேகியம் இவைகள் மதுவால் புண்ணாகிப்போன உள்ளுறுப்புகளைச் சீராக்கும்

Saturday, February 19, 2011

சளி இருமல் இருப்பதை தொலைபேசி வழியாக கண்டறிய

சளி அல்லது வறட்சி ஏற்படுவதை தொலைபேசி மூலம் கண்டறியும் மென்பொருள் கருவியை ஜேர்மனியை சேர்ந்த பிரான்கோபர் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த புதிய கருவி மூலம் ஒரு நபருக்கு ஏற்பட்டுள்ள இருமல் குறித்த விவரங்களை அறியலாம் என கூறப்பட்டாலும், மருத்துவ சமூகத்தினர் இதன் சேவை குறித்து ஐயம் எழுப்பியுள்ளனர்.

ஜேர்மனியின் ஓல்டன்பர்க் நகரில் உள்ள ஆய்வாளர்கள் இக்கருவியை கண்டுபிடித்துள்ளனர். ஜேர்மனியில் முதல் தானியங்கி இருமல் கண்டறியும் சேவையாக இந்த புது கண்டுபிடிப்பு உள்ளது. ஆய்வாளர் கோட்சும், அவரது குழுவினரும் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வை தொடர்ந்து இந்த புதிய மென்பொருள் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக மக்கள் கூட்டம் நிறைந்த ஹம்பர்க் மற்றும் ஓல்டன்பர்க் வீதிகளில் சென்றவர்களின் மாதிரிகளை பதிவு செய்திருந்தார். இந்த புதிய மென்பொருள் கருவி மூலம் 80 சதவீத முடிவுகள் சரியானவையாக உள்ளன என்று கோட்ஸ் தெரிவித்தார். தினமும் 200 அழைப்புகள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி:- இணையம்

நரம்புகளை மின்னச் செய்ய திரவம் கண்டுப்பிடிப்பு

அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்க நோயாளியின் உடல் நரம்புகளை ஒளிரச் செய்யும் திரவம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் சில தவறுகளால் பல பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் புதிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் நோயாளியின் உடலில் உள்ள நரம்புகளை சரியாக அடையாளம் கண்டுபிடிக்க தவறும் போது தான்.

இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் எலக்ட்ரானிக் கருவிகளின் உதவி தேவைப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு மின்காந்த அலைகளில் ஒளிரக்கூடிய திரவம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அறுவை சிகிச்சையின் போது நோயாளி உடலில் இதை செலுத்தினால், அவரது உடல் நரம்புகள் அனைத்தும் ஒளிரும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

முதற்கட்டமாக அமினோ அமிலங்கள் அடங்கிய இந்த புரோட்டின் கலவையை எலிகள் மீது செலுத்தி சோதனை செய்த போது, அவற்றின் உடலில் உள்ள நரம்புகள் ஒளிர்ந்தன. இதன் மூலம் உடலின் பிற பகுதிகளையும், நரம்புகளையும் எளிதாக பிரித்தறிய முடிகிறது. மேலும் அறுவை சிகிச்சைகளில் ஏற்படும் விபத்துகளையும் தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நன்றி :-இணையம்

Thursday, February 17, 2011

பன்றிக்குட்டியை ஈன்ற பசு

இந்த உலகம் எமக்கு எத்தனை நம்பமுடியாத விசித்திரங்களைத்தான் தந்து கொண்டிருக்கிறது. சில விசயங்களை நாம் நம்ப மறுத்தாலும் நம்பமுடியாத நம்பித்தான் ஆக வேண்டிய சில சம்பவங்களும் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு இந்தச்செய்தியும் ஒரு உதாரணம் தான். சிம்பாவேயில் மாடு ஒன்றுக்கு பன்றி பிறந்துள்ளது. நம்பமுடிகிறதா? நம்புங்கள். இந்தச்சம்பவம் தொடர்பாக zimbabwenewsonline.com இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவை பின்வருமாறு

சிம்பாவேயை சேர்ந்த ஒரு விவசாயி தனது மாடு பன்றி வடிவில் குட்டி போட்டதைக்கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக Mr Tinos Mberi என்கின்ற அந்த விவசாயி தெரிவிக்கையில் என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. இது எப்படி சாத்தியப்பட்டது என்பது தொடர்பாக என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அச்சு அசல் அப்படியே பன்றியின் தோற்றத்துடன் காணப்படுகிறது. மூக்கு மற்றும் வாய் முழுக்க முழுக்க பன்றியே. என்னமோ மாஐிக் வித்தை போலவே எனக்கு இது தென்படுகிறது என்று தெரிவித்தார்

Wednesday, February 16, 2011

சுறா மீன் தோல் தீய பாக்டீரியாக்களை அழிக்கும்

அதிக கேடுகளை ஏற்படுத்தும் பக்டீரியா கிருமிகளை சுறா தோல் விரட்டுவது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கிருமிகள் அதிகம் சேரும் மருத்துவமனைகளில் ஆபரேஷன் தியேட்டர் கருவி உறைகளில் சுறா தோலை பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கடலில் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் கப்பல்கள், படகுகளின் அடிப்பகுதியில் சிப்பிகள், கடல்வாழ் உயிரினங்கள் அடிக்கடி ஒட்டிக்கொள்ளும்.

சில நேரங்களில் இவை பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். இவற்றை சாப்பிட வரும் உயிரினங்களால் ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதை தடுப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறு உயிரினங்கள் கூட அதில் ஒட்டாது என்பதால் சுறா தோலையே உறை போல போடலாம் என்று அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தின் பயோ மெடிக்கல் துறை பேராசிரியர் டோனி பிரெனன் கண்டுபிடித்தார்.

பிளாஸ்டிக் ஷீட் போல சுறா தோலை பயன்படுத்தி ஷார்க்லெட் என்ற ஷீட்களையும் அவர் உருவாக்கினார். உயிரினங்களை மட்டுமல்லாமல் பக்டீரியாவையும் விரட்டும் சக்தி, சுறா தோலுக்கு இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்ததுள்ளது. இதுதொடர்பாக மேலும் ஆராய்ச்சி செய்ய ஷ்ரவந்தி ரெட்டி என்ற இந்திய பேராசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆய்வில் கிடைத்த தகவல் பற்றி ஷ்ரவந்தி கூறியதாவது:

99 சதவீத பக்டீரியாக்களை அழித்துவிட முடியும் என்றாலும் மீதம் ஒரு சதவீத பக்டீரியா மிகப்பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடியது. கம்ப்யூட்டர் கீபோர்டு, பஸ், கூடைகளின் கைப்பிடிகளில் பக்டீரியா கிருமிகள் மறைந்திருக்கும். சுறா தோலில் இவை ஒட்டுவதில்லை. சிப்பிகள், கடல்வாழ் உயிரினங்கள் போல பக்டீரியா கிருமிகள், ஆல்கா ஆகியவற்றையும் ஷார்க்லெட் ஒட்டவிடுவதில்லை.

சாதாரண பிளாஸ்டிக், ஷார்க்லெட் ஆகியவற்றின் மீது தனித்தனியே பாக்டீரியா கிருமிகளை 24 மணி நேரம் வளரச் செய்து ஆய்வு செய்யப்பட்டது. பிளாஸ்டிக்கை ஒரு உறை போல பக்டீரியா கிருமிகள் மூடியிருந்தன. ஷார்க்லெட்டில் சிறிது கூட பக்டீரியா இல்லை. மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மேசை, அறுவை சிகிச்சை கருவிகளின் கைப்பிடி போன்றவற்றை ஷார்க்லெட் உறையால் மூடினால் பக்டீரியா பாதிப்பை தடுக்கலாம்
.

நன்றி :-இணையம்

கண்ணுக்குத் தெரியாத பூஞ்சைக் காளான் ப்ரெட்டில்

அவசரத்திற்கு சட்டென நமக்கு கை கொடுப்பது ப்ரெட் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ப்ரெட் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சி நம்மை திடுக்கிட வைக்கிறது.

ப்ரெட் தயாரித்த தினமே சாப்பிட்டால் ஆபத்து ஏதும் இல்லை தான். ஆனால் ஃப்ரிட்ஜில் பல நாள் வைத்து பாதுகாத்து பின்பு அதை உபயோகிக்கும் போது ப்ரெட்டின் மீது நம் கண்ணுக்குத் தெரியாத பூஞ்சைக் காளான் படிகிறது என்றும் அது சில விஷத்தன்மை கொண்டது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

இதனை அப்லாடாக்ஸின்..பி.. என்கின்றனர். இது சில பாக்டீரியாக்களுடன் ரசாயன மாற்றம் ஏற்பட்டு நைட்ரேட் பொருளை வெளிப்படுத்தும். இவை மிகுந்த அபாயகரமான புற்று நோய் உண்டாக்கும் ஊக்குவிப்பான்கள்.

எனவே ‌பிர‌ட்டை‌ப் பய‌ன்படு‌த்து‌‌ம் போது ‌‌மிகு‌ந்த எ‌ச்ச‌‌ரி‌க்கை‌த் தேவை.தயாரிக்கப்பட்ட ஓரிரு நாட்களில் சாப்பிட்டுவிடுவது நல்லது.

நன்றி :-இணையம்

Tuesday, February 15, 2011

அபாயகரமான காளான்கள்

ஒட்டுண்ணிகள், சாறுண்ணிகள் தவிர, அசைவம் உண்ணும் காளான்களும் உள்ளன. இவை பூஞ்சனம் வகையைச் சேர்ந்தவை. இவற்றின் உடல் அமைப்பு இழை களால் ஆனதாக உள்ளது.

இந்த வகைக் காளான்களில் ஒன்று, கோதுமைப் பயிரைத் தாக்கும் நூற்புழுவை உண்டு உயிர் வாழ்கிறது. அசைவம் உண்ணும் காளான் களில் சிலவகை, ஒரு குறிப்பிட்ட இனப் பிராணிகளை மட்டும் உண்பதற்கு ஏற்ற உடல் அமைப்பைப் பெற்றிருக்கின்றன.

வேறு சில காளான்களோ, புழுக்களைப் பிடிப்பதற்கு ஏற்ற தகுந்த பொறிகளைப் போன்ற வசதிகளைப் பெற்றிருக்கின்றன.

அசைவம் உண்ணும் காளான்களில் `டிரைக்கோ தீசியம் சிஸ்டோபோரியம்’ என்ற வகைக் காளான் மிகவும் மெல்லிய இழையைப் பெற்றுள்ளது. இரையைப் பிடிக்க எந்த ஒரு தனி அமைப்பும் இதில் அமைந்திருக்கவில்லை. ஆனால் இந்த இழைகளில் இருந்து கசியும் ஒருவிதப் பிசுபிசுப்பான திரவம், இதன் அருகே வரும் புழுக்களைப் பிடித்துக்கொள்கிறது.

அப்போது, காளான் வேறு சில மெல்லிய இழைகளைப் புழுவின் உடலினுள் செலுத்தி, அதன் உள்ளே உள்ள அனைத்தையும் உறிஞ்சி ஜீரணித்துக்கொள்கிறது.

சில காளான்கள், விதைகள் போன்ற பிசுபிசுப்பான, உயிருள்ள பொருட்களைப் பெருமளவில் உற்பத்தி செய்கின்றன. ஏதாவது சிறு பிராணிகள் அவற்றை உண்டால், அந்த விதைகள் அந்தப் பிராணிகளின் உடலில் முளைக்கத் தொடங்குகின்றன.

அந்தச் செடி போன்ற அமைப்பு பல இழைகளைத் தோற்றுவித்து, பிராணியின் உடலைக் கிழித்து உண்டு விடுகிறது.

இவ்வாறு இந்தக் காளான்கள் பயங்கர இயல்பு கொண்டவையாக இருந்தாலும், சில நன்மைகளும் விளைகின்றன. இவற்றில் சில, பயிர்களைத் தாக்கும் பூச்சியினங்களை அழிக்கும் இயல்பைக் கொண்டிருப்பதால் விவசாயிகளுக்கு நன்மை புரிகின்றன.

Sunday, February 13, 2011

ஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா?

'அப்போஃபிஸ்' என்ற சிறிய கோளானது பூமிக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் இக் கோளானது எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பூமியுடன் மோதலாம் எனவும் ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சென் பீட்டர்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை எதிர்வு கூறியுள்ளார்கள்.

இக் கோளானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி சுமார் 37, 000 முதல் 38, 000 கிலோ மீற்றர் தொலைவில் பூமியை நெருங்கும் எனவும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியை மோதும் எனவும் பேராசிரியர் லியொனிட் சொலோகொவ் தெரிவிக்கின்றார்.

சிலவேளை மத்திய கிழக்கு,தென் அமெரிக்கா அல்லது ஆபிரிக்காவின் மேற்கு கரையோரப்பகுதியில் மோதலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது பூமியோடு மோதினால் இதன் சக்தி வெளிப்பாடு சுமார் 100 அணுகுண்டுகளுக்குச் சமனாகவிருக்குமென நாசா தெரிவித்துள்ளது.

எனினும் இது 2036 ஆம் ஆண்டு மோதுவதற்கான வாய்ப்பு 45,000 இற்கு 1 என்ற நிகழ்தகவு எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் நாம் எத்தகையதொரு சந்தர்ப்பத்திற்கும் முகங்கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அக் கோள் பூமியுடன் மோதுவதனை தவிர்ப்பதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி:- இணையம்

Saturday, February 12, 2011

எவ்வாறு இசையை கேட்கும் போது சந்தோஷமளிக்கிறது?.

அனேகமாக எல்லோருக்குமே இசை பிடிக்கும். இசை கேட்பது, சந்தோஷமளிப்பதற்குக் காரணம் என்ன? அந்த நேரத்தில், மூளையில் ஒரு வேதிப்பொருள் சுரக்கப்படுகிறது. அதுதான் இசை ரசிகரின் மனதுக்குள் மகிழ்ச்சியைப் பரப்புகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

மேற்கண்ட வேதிப்பொருளானது, குறிப்பிட்ட `த்ரில்’லான இசைக் கணத்தை எதிர்பார்க்கிறது, அப்போது ஏற்படும் துடிப்பை உணர்கிறது.

இதுதொடர்பான `டோபமைன்’ என்ற வேதிப்பொருளின் பங்கு பற்றி ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளை செல்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ள இது உதவுகிறது. புதிய கண்டுபிடிப்பானது, இசை கேட்கும்போது இந்த வேதிப்பொருள் நேரடியாக வெளிப்படுவதைக் காட்டுகிறது. ஒருவர் இசை கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவரது மூளையை `ஸ்கேன்’ செய்ததன் மூலம் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட மான்ட்ரியால் மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் ஸட்டோர், வலோரி சலிம்பூர் ஆகியோர், ஏன் எல்லா இன மக்களிடமும் இசை பிரபலமாக இருக்கிறது என்றும் கண்டுபிடித்திருக்கின்றனர்.

அதாவது குரல் தேவையில்லை, இசைக் கருவிகளில் இருந்து எழும் இசையே `டோபமைனை’ சுரக்கச் செய்துவிடுகிறது என்று இவர்கள் கூறுகின்றனர். இசை கேட்கும் சந்தோஷத்தில் குரலின் பங்கு என்ன என்று மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இசை ரசிகர் ஒருவர் ஏதாவது ஒரு இசையைக் கேட்பதை விட, தனக்குப் பிடித்த இசையைக் கேட்கும்போது அதிக `டோபமைன்’ வெளிப்படுவதும் ஸ்கேனில் தெளிவாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த `டோபமைன்’ வேதிப்பொருளானது, பொதுவாக `உறவின்’போது அல்லது சாப்பிடும்போது சந்தோஷத்தை உணர வைக்கிறது. போதைப்பொருட்களைப் பயன்படுத்தும்போது `மிதக்க’ வைப்பதும் இதுதான். இசையும் ஒரு போதைதானோ?

முத்துகள் உருவாகுவது எப்படி?

முத்து என்பது ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒருவகைப் பொருளாகும். இது இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றது. மிகப் பழங் காலத்திலிருந்தே முத்து விரும்பி வாங்கப்படும் ஒன்றாக இருந்து வந்துள்ளது
உயர் தர முத்துகள் எப்படி உருவாகின்றன என்றால், கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன.
அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. இது போல் இயற்கையாக உருவாகும் முத்துக்கள் தான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.

செயற்கை முத்து எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்றுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிப்பியினுள் ஏதேனும் சிரியப் பொருள் சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை சுரந்து அதன் மீது மூடிவிடும். அதைத் தெரிந்துகொண்ட சீனர்கள் சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள் ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.

ஜப்பானியர்கள் சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள். அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு நல்ல விலைக்கு விற்பனையாகிறது.

1896 இல் ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ என்பவர் செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை விருத்தி செய்து அதற்காக உரிமம் ஒன்றையும் பெற்றுக்கொண்டார். இம்முறையில் முசெல் வகை உயிரினத்தின் ஓட்டிலிருந்து செய்யப்பட்டுப் பளபளப்பாக்கப்பட்ட நுண்துகள் இன்னொரு முத்துச்சிப்பியின் திசுவினால் சுற்றப்பட்டு முத்துச்சிப்பியின் உடலுக்குள் செலுத்தப்படும். இச்சிப்பிகள் ஒரு கூட்டினுள் இடப்பட்டு நீருக்குள் இறக்கப்படும். இவை முத்துக்களை உருவாக்கச் சுமார் மூன்று தொடக்கம் ஆறு ஆண்டுகள் வரை எடுக்கும்.

முதன் முறையாக புதனில் இறங்கும் அமெரிக்க விண்கலம்


கடந்த 2004&ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஏவிய ‘மெசஞ்சர்’ விண்கலம் 6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தில் அடுத்த மாதம் தரையிறங்க உள்ளது.

சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன். இது பற்றி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ புதன் கோள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது.

புதன் கோள் பற்றிய ஆராய்ச்சிக்காக ‘மெரைனர்10’ என்ற விண்கலத்தை நாசா கடந்த 1973&ம் ஆண்டு அனுப்பியது. அதன் பிறகு, பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த 2004&ம் ஆண்டு ஆகஸ்ட் 3&ம் தேதி ‘மெசஞ்சர்’ என்ற விண்கலத்தை புதனுக்கு அனுப்பியது நாசா.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கேப் கேனவராலில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து மெசஞ்சர் விண்கலத்தை சுமந்துகொண்டு டெல்டா&2 ராக்கெட் போகிறது.. போகிறது.. போய்க்கொண்டே இருக்கிறது.

பூமியில் இருந்து புறப்பட்டு வெள்ளி கிரகத்தை தாண்டி தற்போது புதனை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

வினாடிக்கு 640 கி.மீ. என்ற வேகத்தில்
பாயும் அந்த ராக்கெட் 6 ஆண்டு 7 மாதத்தில் சுமார் 790 கோடி கி.மீ. தூர பயணத்துக்கு பிறகு தற்போது புதன் கிரகத்தை நெருங்கியிருக்கிறது. சூரியனுக்கு ரொம்ப நெருக்கமான கிரகம் என்பதால் வெயில் அதிகமாம்.

பூமியில் இருக்கும் சூரிய வெப்பத்தைவிட 11 மடங்கு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. அதிக வெப்பத்தையும் தாங்கும் விதத்தில் வெளிப்புற பகுதிகள் மிகவும் பாதுகாப்பாக உருவாக்கப்பட்டிருப்பதாக மெசஞ்சர் திட்ட விஞ்ஞானி லூயிஸ் பிராக்டர் தெரிவித்தார்.

புதனின் மண்தன்மை, வெப்பம், சுற்றுப்பகுதி, வானிலை உள்பட சகல அம்சங்களையும் ஆராய்வதற்கு ஏற்ப அதிநவீன சென்சார்கள், தொலைதொடர்பு சாதனங்கள், வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவிகள், நவீன கம்ப்யூட்டர்கள், கேமராக்கள் ஆகியவை மெசஞ்சர் விண்கலத்தில் இருக்கின்றன.

6 ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் வகையில் புதனின் வட்டப்பாதைக்குள் மெசஞ்சர் அடுத்த மாதம் 17&ம் நுழைய உள்ளது. இதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

நன்றி:- இணையம்

Tuesday, February 08, 2011

நீரால் அமைக்கப்பட்ட பாலம்: நம்பினால் நம்புங்கள்

நீருக்கு மேல் நீரால் பாலாமா?? நம்ப மறுக்கிறது இதயம். நம்பித்தான் ஆகவேண்டும். இது தான் தொழில் நுட்ப புரட்சி என்பார்களோ தெரியாது. நீர்பாலம் என்றழைக்கப்படும் இப்பாலமானது Germanyல் அமைந்துள்ளது.

ஆறு வருட உழைப்பு 500மில்லியல் யுரோக்கள் செலவில் இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 918 மீற்றர் நீளமாக காணப்படும் இந்தப் பாலமானது மேற்கு Germanyல் Berlin நகருக்கு அருகாமையில் Magdeburg என்ற நகரத்தில் அமைந்துள்ளது.
நன்றி:- இணையம்

வரலாற்றில் முதன் முறையாக சூரியனின் முழுப் முப்பரிமாண தோற்றம்

மனித வரலாற்றில் முதன் முறையாக சூரியனின் 360 பாகை அதாவது முழுப் முப்பரிமாண தோற்றத்தின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
நாசாவினால் கடந்த 2006 ஆம் ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட ஸ்டீரியோ எனப்படும் இரட்டை விண்வெளி ஓடங்கள் சூரியனுக்கு நேர் எதிராகப் பயணித்து இம் முப்பரிமாண படங்களை பதிவு செய்துள்ளன.

இம் முப்பரிமாண தோற்றமானது விஞ்ஞானிகளுக்கு சூரியனைப் பற்றிய மேலதிக தகவல்களை தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது
நன்றி:- இணையம்

Monday, February 07, 2011

நண்பர்களை மரபணு தான் தேர்வு செய்யும்

தனக்கு உரிய நண்பர் யாராக இருக்க வேண்டும் என்பதை ஒருவரது மரபணு தான் தீர்மானிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிந்துள்ளது. மனிதர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணநலன்கள், தனிப்பட்ட பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர்.

அவர்களின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த இயல்புகளை அவனது மரபணு தீர்மானிப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதே போன்று ஒருவர் தனக்கு ஏற்ற நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை அவரது மரபணு தான் தீர்மானிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மரபியல் பண்பு அல்லது மரபணு வகைகளின்படி குறிப்பிட்ட ஆறு மரபணுக்கள் தங்களுக்கு ஏற்ற நண்பன் யார் என்பதை தீர்மானிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இளம் வயதில் எதிர் பாலினத்தவரிடம் ஏற்படும் ஆர்வம் அல்லது இனக்கவர்ச்சியைப் போன்றும், இனம் இனத்தோடு சேரும் என்பது போன்றும், இந்த மரபணுக்கள் தங்களுக்கு ஏற்ற நண்பர்கள் இவர் தான் என்று அடையாளம் காணுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Saturday, February 05, 2011

மனிதன் இதுவரை உள் சென்றதே இல்லாத பிரமிப்பூட்டும் மிகப்பெரும் குகை

பல காலங்களாக வியட்நாமை மனம் கொள்ளை கொள்ளும் வனப்புடன் கூடிய குகைகளின் நாடாகத்தான் புவியியல் ஆய்வாளர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். அவற்றில் பல குகைகளுக்குள் மனிதன் இதுவரை உள் சென்றதே இல்லை. தற்போது அங்கே உலகின் மிகப்பெரும் குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஹேங் சன் தூங் எனப்படும் அக்குகை, ஒப்பீட்டளவில் மொத்த நியூயார்க் நகர மக்கள் தொகையினையும் கொள்ளளவாக கொள்ளகூடியது ஆகும்.

அன்னாமைட் மலைகளில் உள்ள அந்த பிரம்மாண்ட குகையினுள் பெரிய காடும் அதனூடே ஒரு ஆறும் ஓடுகிறது. இதற்கென அங்கேயே சுற்றி சுழலும் சிறு மேகக்கூட்டங்களும் உள்ளன. இந்தக் குகையின் முடிவு இன்னும் அறியப்படவில்லை. இதற்கு மலைநதி குகை என்று தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரம்மாண்ட குகை வியட்நாமின் மத்தியில் லாவோஸ் எல்லையினையும் சேர்ந்த நில அமைப்பில் உள்ள சுமார் 150 குகைகளின் பெரும் தொடரின் ஒரு அங்கம் என்று கருதப்படுகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஹோவர்ட் மற்றும் லிம்பர்ட் ஆகியோர் இந்த ஹேங் சன் தூங் குகைக்கு வந்த போது அதனுடைய மிகப்பெரும் பக்கசுவர் அவர்களால் தாண்ட இயலாததாக இருக்கவே, மீண்டும் இந்தக் குகையின் எல்லைகளை அளந்து கண்டுபிடிக்க தற்போது இதற்கு திரும்பி வந்துள்ளனர்.

பரந்து விரிந்து கிடக்கும் இந்த அற்புத பூமியில் இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் மனித தேடலுக்குக் காத்து கொண்டுள்ளதோ.

நன்றி :-இணையம்

ஆறு கோள்களைக் கொண்ட புறக்கோள் தொகுதி கண்டுபிடிப்பு

கெப்லர்-11 என்ற சூரியனைச் சுற்றி ஆறு கோள்கள் வலம் வருகின்றன. படம்: நாசா

பூமியில் இருந்து ஏறத்தாழ 2000 ஒளியாண்டுகள் தூரத்தில் கெப்லர்-11 என்ற சூரியனை ஒத்த விண்மீன் ஒன்றைச் சுற்றி வரும் ஆறு புறக்கோள்களை நாசாவின் கெப்லர் திட்ட வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆறு கோள்களும் பூமியை விட இரண்டு முதல் நாலரை மடங்கு ஆரையையும் இரண்டு முதல் 13 மடங்கு வரை திணிவையும் கொண்டுள்ளன. இவற்றில் ஐந்து கோள்கள் எமது சூரியனை புதன் கோள் சுற்றி வருவதைவிட குறைந்தளவு தூரத்தில் தமது சூரியனைச் சுற்றி வருகின்றன.

கெப்லர்-11 தொகுதியுடன் எமது சூரியத் தொகுதி ஒப்பீடு, படம்: நாசா

இந்தக் கண்டுபிடிப்புகள் பற்றிய விவரங்கள் செவ்வாய்க்கிழமை நேச்சர் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 'கெப்லர்-11 என்பது ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பான கோளமைப்பு ஆகும். இதன் அமைப்பு மூலம் இது தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்' கெப்லர் திட்ட ஆய்வாளர் ஜாக் லிசாவர் தெரிவித்தார். 'இந்த ஆறு புறக்கோள்களும் பாறைகளையும் வாயுக்களையும் கொண்ட ஒரு கலவைகள். நீரையும் இவை கொண்டிருக்கலாம்' என அவர் தெரிவித்தார்.

கெப்லர் திட்டம் கண்டுபிடித்த மேலும் 1235 புதிய கோள்களாகக் கணிக்கப்படக்கூடிய வான் பொருட்களைப் பற்றிய தகவல்களும் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இக்கண்டுபிடிப்புகள் அனைத்தும் 2009 ஆம் ஆண்டு மே 12 முதல் செப்டம்பர் 17 வரை கெப்லர் திட்டத்தால் அவதானிக்கப்பட்ட 156000 விண்மீன்கள் பற்றிய தகவல்கள் மூலம் உய்த்தறியப்பட்டுள்ளது.

கெப்லர் திட்டத்தின் மூலம் ஏற்கனவே கெப்லர்-9 என்ற முன்று கோள்களைக் கொண்ட தொகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனை விட கடந்த மாதத்தில் கெப்லர்-10பி என்ற பாறைகளைக் கொண்ட புறக்கோள் ஒன்றைக் கண்டுபிடித்திருந்தது.


Friday, February 04, 2011

கண்ணீர் வடிக்கும் அன்னை மரியாள்



அமெரிக்காவின் Ohio மாநிலத்தில் எழுந்தருளி இருக்கும் புனித அன்னை மரியாள் சிலை ஒன்றில் இருந்து கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கண்ணீர் வடிகின்றது. ஏராளமானவர்கள் நேரில் வந்து இந்த அதிசயத்தை பார்த்துச் செல்கின்றனர். அதிசயத்தை காண வருபவர்களில் சிலர் மரியாள் மீது நம்பிக்கை உடையவர்கள். சிலர் நம்பிக்கை இல்லாதவர்கள்.
ஆயினும் மரியாள் சிலையில் இருந்து கண்ணீர் ஒழுகுகின்றமையைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போய் ஆச்சரியத்தில் ஆழ்ந்து உள்ளார்கள். ஒரு கண்ணீர்த் துளி அன்னையின் கன்னத்தில் துல்லியமாகத் தெரிகிறது. இன்னொரு கண்ணீர்த் துளி அன்னையின் தாடையில் துலங்குகிறது. அற்புதம் என்று ஆராதிக்கின்றனர் பக்தர்கள். ஆனால் இது ஒரு எண்ணெய் கசிவு என்று சிலர் கூறுகின்றனர்.

நன்றி :-இணையம்

குடல் புற்று நோயை கண்டுபிடிக்கும் லெபரேடர் நாய்

மனிதர்களுக்கு குடல் புற்று நோய் ஏற்பட்டு உள்ளதா? இல்லையா? என்பதை 90 சதவீதம் துல்லியமாக கண்டு அறியும் சக்தி நாய்களுக்கு உண்டு என்று மருத்துவ உலகம் கண்டுபிடித்து உள்ளது.

இதுவரை காலமும் நாய்களின் மோப்பசக்தியானது போதைப்பொருட்கள் , வெடிபொருட்கள் என்பனவற்றைக் கண்டுபிடிப்பதற்கே உதவி வந்தன.

எனினும் அண்மைக்காலமாக நாய்களின் மோப்ப சக்தியின் மூலம் நோய்களைக் கண்டறிய முடியும் என்பது தொடர்பில் அதிகளவான ஆராய்ச்சிகள் இடம் பெற்றுவருகின்றன.


நாய்களின் மோப்ப சக்தி மூலம் குடல்புற்று நோயை கண்டறியலாம் என ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாய்களின் உணர் திறன் மனிதர்களின் உணர் திறனை விட 1000 மடங்கு அதிகம்.

ஜப்பானிய விஞ்ஞானிகள் லெபரேடர் வகையைச் சார்ந்த நாய்களை வைத்து குடல் புற்று நோயைக்கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த ஆராய்ச்சிக்கு பின் இந்த நாய் மனிதர்களுக்கு வரும் குடல் புற்று நோயினை சரியாக கண்டுபிடிப்பதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். நாய் கண்டுபிடிப்பவற்றில் ஏறத்தாழ 98 சதவிகிதம் சரியாக இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். புற்றுநோய்க்கு ஆளானவர்களின் மூச்சு மற்றும் அவர்களின் மலம் ஆகியவற்றிலிருந்து குடல்புற்று நோயை இந்த நாய்கள் கண்டறிகின்றன.

சுவாசத்தினை வைத்து 36 பேர்களில் 33 பேர்களுக்கு குடல் புற்று நோய் இருப்பதை இந்த வகை நாய்கள் சரியாக அடையாளம் காட்டியுள்ளன. அதுபோல் மலத்தின் மாதிரிகளில் இருந்து 38 பேரில் 37 பேருக்கு இந்த நோய் இருப்பதை நாய் கண்டறிந்துள்ளது.

இதன் துல்லியமான கண்டுபிடிப்பிற்காக விஞ்ஞானிகள் இறப்பர் பந்தொன்றினை அந்நாய்க்குப் பரிசளித்துள்ளனர்

எனவே மோப்ப சக்தியால் நாய் குடல் புற்று நோயை அடையாளம் கண்டு விடுகின்றது. நாய்களை கொண்டு இந்நோயை ஆரம்பத்திலேயே அடையாளம் காண முடியும். இதனால் நோயை குணப்படுத்துவது மிகவும் இலகுவாக இருக்கும்.

வேறு உயிர்கொல்லி நோய்களை அடையாளம் காண கூடிய சக்தி நாய்களுக்கு உண்டா? என்பது குறித்து தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நன்றி :-இணையம்