


Atlantic Road என்று அழைக்கப்படும் குறித்த தெரு நோர்வேயின் மேற்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது.
இந்த வியத்தகு பாலம் பல்வேறு கார் கம்பனிகளினதும் விளம்பரங்களில் இடம்பிடித்து உள்ளது.
ஐந்து மைல் நீளமான குறித்த தெரு 2005 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
தற்போது சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
ஜெர்மனியில் நம்பமுடியாத Magdeburg நீர் பாலம் பற்றி யாரும் அறிந்திருப்பீர்களா?
ஜெர்மனியில் அமைந்திருக்கும் 12 கிலோமீற்றர் தூரம் உள்ள நீர் பாலம் இதுவாகும். இதுவே உலகில் உள்ள மிகவும் நீர் பாலம் என குறிப்பிடப்படுகின்றது.
இது கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை இணைக்கும் நோக்கில் கட்டப்பட்டதாகும்.
பொதுவாக ஆற்றினை அல்லது கடலினை கடக்கவே பாலம் அமைப்பது இயல்பு. ஆனால் ஆற்றின் மேலே ஒரு நீர் பாலம் அமைந்திருப்பதே இதன் சிறப்பாகும்.
1930 ஆண்டு கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இரண்டாம் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இடை நிறுத்தப்பட்ட இதன் வேலைகள் மீண்டும் 1997ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2003ம் ஆண்டில் நிறைவு பெற்றது. அதன் பின்னர் 2003ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ் நீர் பாலத்தில் இரு கப்பல் நாளாந்த சேவையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி இணையம்
1000 கிலோ நிறையுடைய உலகின் மிகப் பெரிய தங்க நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உலகின் பல நாடுகளில் உருவாக்கப்பட்ட நாணயங்களை விட இது பல மடங்கு பெரிதானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவின் பேர்த் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட 99.99 வீதம் தூய தங்கத்தில் இருந்து இந் நாணயம் செய்யப்பட்டது. இதன் பெறுமதி 35மிலியன் பவுண்கள் என மதிக்கப்பட்டுள்ளது.
இது பிரித்தானியா மகாராணியின் அவுஸ்திரேலியா விஜயத்தின் ஞாபகார்த்த சின்னமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு முகப்பில் மகாராணியின் சிரசு உருவமும், மறுபக்கத்தில் அவுஸ்திரேலியாவின் தேசிய மிருகமான கங்காருவின் உருவம் அமையுமாறு பதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தங்க நாணயத்தை உருவாக்குவதற்கு 18 மாதங்கள் எடுத்தாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பெறுமதி அதிகமாக இருந்த போதிலும் சட்டப்படி இதனை கொள்வனவு செய்தவர் 65,000 பவுண்கள் விலை மதித்துள்ளார். இதனை சட்டப்படி தங்கக் குச்சிகளாக்க முடியாது. இதனை ஒரு சின்னமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
நன்றி இணையம்
அனிச்சைச் செயல், உடலின் நிலையைப் பொறுத்தது என்பது தெளிவு. களைத்துப்போன தேகத்தில் அனிச்சைச் செயலின் வேகம் குறையும். பெருமூளையின் சிந்தனைகளும் அனிச்சைச் செயல்களைப் பாதிக்கும். அச்சம், கோபம் போன்ற உள்ளக் கிளர்ச்சிகளும் அனிச்சைச் செயல்களைப் பாதிப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி இணையம்
இருண்ட சூழ்நிலையில் தேள்களிலிருந்து புற ஊதாக் கதிர்வீச்சுகள் ஒளிர்ந்தால் பார்ப்பவரை திகிலடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. பூரண பௌர்ணமி தினங்களில் இயற்கைக்கு
மாறான வகையில் நியோன் நீல நிற கதிர்கள் தேள்களின் உடற்பாகங்களிலீருந்து ஒளிர்கின்றன. தேள்களின் எலும்புப் பகுதிகளில் புரதப் பொருளின் மீது புற ஊதாக் கதிர்கள் தாக்கமுறுவதனால் இவ்வாறு மனிதக் கண்களுக்கு அவை ஒளி வீசுவதாக் தோன்றுகின்றது. தேள்கள் தொடர்பான ஆய்வாளர்கள் இந்த வினாவிற்கு விடைகாண நீண்ட காலத்தை செலவிட்டனர்.
ஏனைய தேள்களை இனம் காண்பதற்கு இவ்வாறு ஒளிர்வதாக ஒரு சாராரும், பாலைவனங்களில் தேள்களை இனம் காண்பதற்கு இவ்வாறு ஒளிர்வதாக மற்றொரு சாராரும் தெரிவிக்கின்றனர். இரையை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறு ஒளிர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக இந்த ஒளிமாற்றச் செயற்பாடு நிகழ்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. எவ்வாறெனினும், தீவிர ஆய்வுகளின் போது மேற்குறிப்பட்ட எந்தவொரு காரணியையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவிற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
தேள்கள் எவ்வாறு ஒளிர்கின்றன என்பது தொடர்பில் கலிபோர்னிய பல்கலைக்கழக கார்ல் குலுக் தலைமையிலான குழுவினர் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். தேள்கள் இரவு நேரப் பிராணிகளாக வர்ணிக்கப்படுகின்றன. தேள்கள் வெப்பத்தையும், சூரிய ஒளியினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களையும் விரும்புவதில்லை. புற உதாக் கதிர் தாக்கத்தை தேள்கள் தவிர்த்துக் கொள்கின்றன. தேள்களின் மீது புற ஊதாக் கதிர்கள் விழும் அளவிற்கு ஏற்ப அவற்றின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுவதாக அண்மைய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. புற ஊதாக் கதிர் வீச்சு அதிகமாகக் காணப்படும் போது தேள்களின் செயற்பாடுகள் குறைவாகக் காணப்படுகின்றது.
பூரண பௌர்ணமி தினங்களில் புற ஊதாக் கதிர் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட போதிலும் இரை தேடுவதற்காக தேள்கள் வெளியே வருவதாகவும் இதனால் அவை ஒளிர்வதாகவும் கார்ல் குலுக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், பூரண பௌர்ணமி தினங்களில் தேள்கள் வெளியே செல்வதற்கு அதிக நாட்டம் காட்டுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பான விரிவான ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படு;ம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறெனினும், பௌர்ணமி தினங்களில் தேள்கள் எவ்வாறு ஒளிர்கின்றன என்ற கேள்விக்கு பதில் கிடைக்கப் பெற்றுள்ளது. கொடிய விஷமுடைய தேள்கள் இரவு நேரங்களில் ஒளிர்க் கதிர்களை வீசிக் கொண்டு வீடுகளில் நகர்ந்தால் இலகுவில் அவற்றை தாக்க முடியும் என்பது மனிதர்களைப் பொருத்தமட்டில் ஓர் ஆசுவாசமாகவே கருதப்படுகின்றது.
இவற்றின் தோற்றம் மற்றும் நடத்தைகள் ஒன்றோடொன்று ஒத்தவையாக காணப்பட்ட போதிலும் டியுகோங்கிஸின் வாற் பகுதி திமிங்கிலத்தைப் போன்றது. இவ்விரண்டும் யானை இனத்தைச் சார்ந்தவை. எனினும் இவ்வாறான மிகப்பெரிய மிருகங்கள் தோற்றத்திலும் நடத்தையிலும் ஒத்தவையாக இருப்பதில்லை.
நீருக்கடியிலுள்ள புல்லினத்தை பகலும் இரவுமாக இவை மேய்கின்றன. தமது உடலிலுள் தூரிகைகளால் இவற்றை கிளறிவிடுகின்றன. இவை தமது மென்மையான மூக்கினாலும் கரடுமுரடான உதடுகளினாலும் மென்று சாப்பிடுகின்றன. இந்த முலையூட்டிகள் முன்னர் சுமார் ஆறு நிமிடங்கள் நீருக்கடியில் மூழ்கி இருக்க கூடியவை.
சில நேரங்களில் இவை நின்றவாறு நீருக்கு மேல் தலையை வைத்துக்கொண்டு வால்களினால் மூச்செடுக்கின்றன. இந்த வகையான விலங்கினங்கள் தமது பொழுதுகளை அதிகளவில் தனிமையாக அல்லது ஜோடியுடன் கழிக்கின்றன. இருப்பினும் சில வேளைகளில் நூற்றுக்கணக்கான விலங்கினங்களுடன் மந்தையாகவும் காணப்படுகின்றன.
ஒரு வருட கால பிரசவத்துக்கு பின்னர் பெண் டியுகோங்ஸ்கள் ஒரு கன்றை ஈன்றெடுப்பதோடு தமது கன்றுகளை நடமாட வைப்பது முதற்கொண்டு முதல் தடவையாக மூச்சுவிட பயற்சி வழங்குகின்றன.
சில வேளைகளில் தமது முதுகில் ஏற்றி கன்றுகளை சவாரி செய்வதில் இந்த பெண் டியுகோங்ஸ் ஆர்வமாக இருக்கின்றன. இந்த கன்றுகள் சுமார் 18 மாதங்கள் தமது தாயின் ஆதரவுடன் வாழ்கின்றன.
இவ்வாறான விலங்கினங்கள் கரையோரப்பகுதிகளில் வேட்டையாடுவோரினால் இலகுவாக குறிவைக்கப்படுகின்றன. மாமிசத்திற்காகவும் எண்ணெய்காகவும் வேட்டையாடப்படும் இவ்விலங்குகளின் தோல், எலும்பு மற்றும் பற்கள் என்பனவும் உபயோகிக்கப்படுகின்றன.
டியுகோங்ஸ் விலங்கினங்கள் தற்போது சட்டரீதியாக பாதுகாக்கப்படுகின்றன. பண்டையக்காலத்தில் கடற்சார் கதைகளின் கருப்பொருளுக்கு கடற்கன்னிகளும் மற்றும் சிரென்ஸமே காரணமாக இருக்கலாம் என்பது பலரது நம்பிக்கையாக இருக்கின்றது
.நன்றி:- http://animals.nationalgeographic.com/animals/mammals/dugong/
நன்றி இணையம்
சில உணவுப்பொருட்களைப் பார்த்தவுடன் சாப்பிடத் தோன்றும். அதற்குக் காரணம் அவற்றின் மணமும், நிறமும்தான். நிறத்தைக் கொடுக்கும் பொருளை இயற்கையாகவும், செயற்கையாகவும் தயாரிக்கலாம்.
அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் உள்ள பாலைவனங்களிலும், ஆஸ்திரேலியாவிலும் நிறத்தைக் கொடுக் கும் வண்டு, குளவி போன்ற பூச்சியினங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் வாழும் மக்கள் அந்தப் பூச்சிகளைப் பிடித்து நசுக்கிக் காயவைத்துப் பொடியாக்குவார்கள். அந்தப் பொடியோடு குறிப்பிட்ட அளவு தண்ணீரைக் கலந்து சிவப்பு நிறச் சாயத்தைத் தயாரிப்பார்கள். அந்தச் சாயத்தைத்தான் கேக் மற்றும் சில இனிப்பு வகை களில் சேர்த்து அவற்றுக்கு நிறம் கொடுக்கிறார்கள்.
ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பூச்சிகளில் இருந்து ஒரு கிலோ சாயம் எடுக்கலாம்.
ஐரோப்பிய நாடுகள் இந்தச் சாயங்களை இறக்குமதி செய்து தங்கள் நாட்டுக் கொடிகளுக்கும், ராணுவத்தின் ஆடைக்கும் நிறம் கொடுக்கின்றன
உடல் வெப்பத்தைக் கண்டறிய முதன்முதலில் தெர்மாமீட்டரைப் பயன்படுத்தியவர் சாங்டோரியஸ் என்பவர். அவரது தெர்மாமீட்டர், நீண்ட நெளிவுள்ள குழாயாக இருந்தது. அதன் மேல் முனையில் முட்டை வடிவமுள்ள ஒரு குமிழ் அமைந்திருந்தது. மறுமுனை திறந்திருக்கும். நோயாளி அந்தக் குமிழை வாயில் வைத்துக்கொள்ள, அதன் மறுமுனை தண்ணீரில் வைக்கப்பட்டிருக்கும். குழாயில் உள்ள காற்று வெப்பமாகி விரிவடைந்து தண்ணீரின் வழியாக வெளியேறுகிறது. காற்று வெளியாகாத நிலை வந்தவுடன் அந்தக் குமிழை வாயிலிருந்து எடுத்துக் குளிர வைத்தால் அதில் உள்ள காற்று சுருங்குகிறது. அந்த இடத்தில் தண்ணீர் ஏறுகிறது. எவ்வளவு உயரம் தண்ணீர் ஏறுகிறதோ, அதுவே நோயாளியின் உடல் வெப்ப அளவு.
தெர்மாமீட்டரில் பயன்படுத்தப்படும் ஆவியோ, திரவமோ, வெளிவெப்பநிலைக்கு ஏற்ப அது சுருங்கி விரியும் தன்மையை அடிப்படையாகக் கொண்டே வேலை செய்கிறது.
ஆல்கஹால் தெர்மாமீட்டர் இன்னும் சில நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரெனி டிருயுமர் என்ற பிரெஞ்சுக்காரர் 1731-ம் ஆண்டு இதை உருவாக்கினார். இதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு சுவீடனைச் சேர்ந்த ஆண்டர்ஸ் செல்சியஸ் என்ற வானியலாளர் இதில் முதல்முறையாக `சென்டிகிரேட்’ முறையை அறிமுகப்படுத்தினார். இம்முறையில், உறைநிலை 0 டிகிரி. கொதிநிலை 100 டிகிரி சென்டி கிரேட்.
தெர்மாமீட்டரில் பாதரசத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். அதன்பின் சில ஆண்டுகள் கழித்துத்தான் 1714-ம் ஆண்டில் ஜெர்மன் விஞ்ஞானி கேப்ரியல் டேலியல் பாரன்ஹீட்டர் கண்டுபிடித்த தெர்மாமீட்டர் புழக்கத்துக்கு வந்தது. இவரது தெர்மாமீட்டரின் அளவைக்கு இவரது பெயரான பாரன்ஹீட் அளவு என்று பெயர். இதன்படி தண்ணீரின் உறைநிலை 32 டிகிரி பாரன்ஹீட். கொதிநிலை 212 டிகிரி பாரன்ஹீட்.
பாதரசத்துக்கு மிக அதிகக் கொதிநிலையும், தாழ்வான உறைநிலையும் இருப்பதால் தெர்மாமீட்டரில் பெருமளவு இதையே உபயோகப்படுத்துகிறார்கள்.
லீh ட்டுக்கு நாடு மனிதர்களின் கண்களின் நிறம் மாற்றமாகக் காணப்படும். மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது?
கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும், பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது.
கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன. அவை பழுப்பு, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாசார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாகுகிறது. உதாரணமாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது.
கண்களின் நிறம் கண்களில் உள்ள கருவிழியில் உள்ள நிறப்பொருட்களில் அளவை வைத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. மனிதர்களிடத்திலும் விலங்குகளிடத்திலும் இது கண் நிற வேறுபாடு காணப்படுகிறது.
மனிதர்களில் கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுக்களால் உற்பத்தி செய்யப்படும் மெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் நிற வேற்றுமைகள் ஏற்படுகின்றனர்.
மனிதர்களின் கண்ணில் ஒளி புகுந்து செல்லக்கூடிய விழி வெண்படலம் முன்னாலும், அதற்குப் பின்னால் கருவிழிப் படலம் என்ற தசையாலான திரையும் உள்ளன. கருவிழிப் படலம், ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது; மெலனின் என்ற நிறமிப் பொருட்களும் கூடிய உயிரணுக்களால் அமைந்தது. கண்களின் நிறத்திற்குக் காரணமாக அமைவது இந்நிறமிப் பொருளே. கருவிழிப்படலத்தில் மெலனின் என்ற நிறமிப் பொருள் இல்லாமற் போகுமானால் கண் நீல நிறமாகத் தோன்றும். இதற்குக் காரணம்
கண்ணின் விழிப்படலத்திற்கும் ஒளி வில்லைக்கும் இடையேயுள்ள கண்முன்நீர் என்ற திரவப் பகுதியில் ஒளிக்கதிர் ஊடுருவிச் சென்று நீல நிறத்தை உண்டா க்குதலேயாகும்.
வானம் நீல நிறமாகக் காட்சியளிப்பதற்கும் இவ்விளைவே காரணம் எனலாம். நிறமிப் பொருள் அடர்த்தியாக இருக்குமானால் கண் பழுப்பு நிறமாயும், மிகவும் அடர்த்தியுடள் இருப்பின் கருமை நிறமாகவும் இருக்கும், இந்நிறமிப் பொருள் கருவிழிப்படலத்தில் இல்லாமல் இருப்பதும் அல்லது குறைந்தோ, கூடவோ இருப்பதும் மரபுவழிப்பட்ட பரம்பரை இயல்பாகும். இன்னும் சிலருக்குக் குழந்தைப் பருவத்தில் நீல நிறக் கண்களும், வளர வளரக் கண்கள் பழுப்பு நிறமாக மாறுவதும் உண்டு; கருவிழிப் படலத்தில் நிறமிப் பொருள் வயது கூடக் கூட, அடர்த்தியாகச் சேருவதே இதற்குக் காரணம்.
சுமத்ரா தீவு காடுகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள புதுவகை மிருகம் ஒன்று, ஆராய்ச்சியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. புலி போன்றும், சிறுத்தை போன்றும் காணப்படும் அந்த மிருகத்திற்கு என்ன பெயர் வைப்பது என, இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
மிருகங்களிலேயே மிகவும் ஆக்ரோஷமானதாக கருதப்படு பவை சிறுத்தை மற்றும் புலி. உடல் முழுவதும் புள்ளிகள், கோடுகளுடன் காணப்படும் இந்த வகை மிருகங்கள் ஆசிய காடுகளில் அதிகம் காணப் படுகின்றன.
இந்த இரண்டு மிருகங்களின் கலவை போல் காணப்படும் மிருகம் சமீபத்தில் சுமத்ரா, பொர்னியோ காடுகளில் காணப்பட்டன. புலியைப் போன்ற முகத்துடனும், சிறுத்தை போன்ற உடல் அமைப்புடனும் உள்ள இந்த வகை மிருகம் எப்படி உருவானது என ஆராய்ச்சி யாளர்களை குழப்பியுள்ளது. இந்தோ னேசியா நாட்டில் சுமத்ரா காடுகளில் மிருக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சி யாளர்களின் கேமராவில் இந்த மிருகத்தின் நடமாட்டம் பதிவானது. ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரில் உள்ள லிப்னிஸ் காட்டு மிருக ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆன்ட்ரஸ் வில்டிங் தலைமையிலான குழு, இந்த மிருகம் குறித்த தீவிர ஆராய்ச்சியில் இப்போது ஈடுபட்டுள்ளது.
“நகரங்கள் பெருகி வருவதால், காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகளில் வெவ்வேறு இடங்களில் தனித்தனி குழுக் களாக வசித்த மிருகங்கள், இப்போது ஒரே இடத்தில் அருகருகே வசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படு கிறது. இதன் காரணமாக, இவ் வாறு புதுப்புது கலப் பின மிருகங்கள் தோன்றுகின்றன…’ என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். “வெளி உலகத்திற்கு தெரியாமலேயே பல வித மிருகங்கள் காடுகளில் வசிக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இது…’ என, வேறு சிலர் வாதிடுகின்றனர். உண்மை என்ன என்பது தீவிர ஆராய்ச்சிக்குப் பின் தான் தெரிய வரும்.