Saturday, November 20, 2010

இரவு விளக்குகளால் பக்க விளைவுகள்

இரவு விளக்குகள் நம் உறக்கத்தை உற்று பார்த்தபடியே இருக்கின்றன. இந்த இரவில் உலகில் எத்தனை ஆயிரமாயிரம் இரவு விளக்குகள் விழித்து கொண்டிருக்கும். அவை என்ன காண்கின்றன. இரவு விளக்குகள் தன் ஒளியை தானே முகத்திரையிட்டு ஒளித்து கொள்கின்றன.
இரவு நேரத்தில் தூங்கும்போது படுக்கை அறைகளில் குறைந்த ஒளியை உமிழும் இரவு நேர விளக்குகளை பயன் படுத்துவது பெரும்பாலானோரின் வழக்கமாக உள்ளது. ஆனால் இத்தகைய விளக்குகளால் பக்க விளைவுகள் ஏற்படும் என அமெரிக்காவில் உள்ள ஓகியோ பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இரவு நேர மங்கலான அளவில் விளக்கு ஒளி இருந்தால் கூட மூளைக்குள் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் மூளையின் கட்டமைப்புகளையும் மாற்றிவிடும் என ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். குறிப்பாக குழந்தைகளின் படுக்கை அறைகளில் இத்தகைய விளக்குகள் தேவையில்லை என்ற அறிவுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக எலிகளை வைத்து சோதனை செய்தபோது 8 வாரங்களில் அவற்றின் மூளையில் மாற்றங்கள் ஏற்பட்டது தெரிய வந்தது.

அது மட்டும் அல்ல

இரவில் விளக் கெரிந்தால் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஓர் ஆய்வில் இரவு நேரங்களில் திடீரென விளக்கைப் போட்டால் அதனால் ஏற்படும் வெளிச்சத்தால் நம் உடலில் உள்ள செல்கள் அதிக அழுத்தத்துக்கு உள்ளாவதாகத் தெரிய வந்தது. இந்த அதிக அழுத்தம் புற்றுநோய்க்கு வழி வகுத்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அடர்த்தி மிகுந்த இரவில் திடீரென ஆனால் குறுகிய நேரத்துக்கு 'பளீர்' என்று விளக்கு எரிந்தால் கூட புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கண்டறிந்துள் ளனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்ற பென்ஷ்லோமோ என்பவர் கூறுகையில்'இரவு நேரத்தில் செயற்கையாக ஏற்படுத்தப்படும் எவ்வித வெளிச்சமும் நமது உடலைப் பாதிக்கும். நேரத்துக்கு ஏற்றாற்போல் செயல்படும் நம் உடலின் கடிகாரம் அதனால் பாதிக்கப்படும்.

உலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை

உலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை பார் ஹீதேத் கூசே Bar Headed Goose ஆகும் . இது ஆச்சரியப்படதக்க் உயரமான 10,175 m (33,382 feet) பறக்க வல்லது.
இதனால் வருடத்துக்கு 3-8 முட்டைகளை இடும்
இந்த பறவையால் உலகின் மிக உயரமான மலையான இலகுவாக எவரெஸ்யை இலகுவாக 8,848 m (29,028 feet) பறக்க முடியும்.

இதனால் ஒக்சிசன் மிக குறைந்த இடத்திலும் சுவாசிக்கவும் அதனுடைய உடல் வெப்பநிலையை இழக்காமல் கட்டுபடுத்தவும் முடியும்

இதனால் ஒரு நாளைக்கு 1000 மைல் தூரத்தை ஜெற் வேகத்தில் பறக்க முடியும்
இதனுடைய நீளம் 71–76 cm (28-30 in) உம் நிறை 1.87-3.2 kgஆகும்