Monday, September 13, 2010

உலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி இடம்

மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை (Three Gorges Dam) யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்ட்ட நீர்மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒர் அணையாகும். இந்த அணை சீனாவின் ஹுபய் மாகாணத்திலுள்ள யில்லிங் மாவட்டத்திலிருக்கும் (Sandouping)சான்டோப்பிங் நகரத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இதுவே உலகின் அதிக அளவு (பெரிய) மின்சாரம் உற்பத்தி செய்யும் இடமாகும்.

அணை கட்டமைப்பு 2006ல் கட்டிமுடிக்கப்பட்டது. அக்டோபர் 30 2008 அன்று கரையில் இருந்த 26வது மின்னியக்கி வணிக நோக்கில் செயல்படதொடங்கிய போது கப்பல் உயர்த்தும் பகுதியை தவிர மூல திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் கட்டி முடிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மின்னியக்கியும் 700 மெகாவாட் திறனுடையது.

நிலத்துக்கடியில் உள்ள ஆறு மின்னியக்கள் 2011ம் ஆண்டுக்கு முன் முழு செயல் பாட்டுக்கு வராது. அணையின் 32முதன்மை மின்னியக்களையும் 50 மெகாவாட் திறனுடைய இரண்டு சிறிய மின்னியக்கிகளையும் சேர்த்தால் அணையின் மின் உற்பத்தி நிலையத்தின் மொத்த திறன் 22.5 ஜிகாவாட் ஆகும்.

அணையின் நீளம் 2335 மீட்டர்
அணையின் உயரம் 185 metres (607 ft)
அணையின் அகலம் (அடியில்) 115 metres (377 ft) மேல்பகுதியில்: 40 metres (131 ft)

சீன அரசாங்கம் இத்திட்டத்தை வரலாற்று சிறப்புமிக்க பொறியியல் சமூக பொருளாதார வெற்றியாக கருதுகிறது . எனினும் அணையினால் பல தொல்பொருள் மற்றும் பண்பாட்டு இடங்கள் நீரில் மூழ்கிவிட்டன. 1.3 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர் மேலும் இதனால் குறிப்பிடத்தக்க வகையில் சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டது மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகின. இந்த அணையானது சர்ச்சைக்குறியதாகவே சீனாவிலும் வெளிநாடுகளிலும் பலரால் பார்க்கப்படுகிறது.

மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணையானது உலகின் பெரிய நீர்மின்சார உற்பத்தி நிலையத்தை உடையதாகும். இதன் மொத்த திறன் 22500 மெகாவாட் ஆகும். இதில் 34 மின்னியக்கிகள் உள்ளன. 700 மெகாவாட் திறனுடையவை 32 ஆகும். இரண்டு 50 மெகாவாட் திறனுடையவை. இந்த 32ல் 14 அணையின் வடபுறமும் 12 தென்புறமும் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆறு தென் பகுதியில் உள்ள மலைக்கடியில் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு ஆண்டுக்கு 100 TWh க்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 2009ல் ஏற்பட்ட வெள்ளம் அணை வழியே சென்றதால் வெள்ளத்தின் கடுமை குறைக்கப்பட்டு வினாடிக்கு 40,000 கன மீட்டர் நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 1, 2009ல் 145.13 மீட்டராக இருந்தது ஆகஸ்ட் 8 2009ல் 152.88 மீட்டராக உயர்ந்தது. 4.27 பில்லியன் கன மீட்டர் வெள்ள நீரானது அணையினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

2003லிருந்து இந்த அணையிலிருந்து வறட்சி காலத்தில் 11 பில்லியன் கன மீட்டர் நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

ஜூலை 2010ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அணைக்கு வினாடிக்கு 70,000 கன மீட்டர் நீர் வரத்து இருந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் ஓரிரவில் 4 மீட்டர் உயர்ந்தது, அணையிலிருந்து 40,000 கன மீட்டர் நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணையின் காரணமாக ஆற்றின் கீழ்பகுதிகள் கடும் வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன.