Saturday, July 24, 2010

85ஆவது வயதில் விமான கறுப்பு பெட்டி'யின் தந்தை மரணம்

விமான விபத்துக்களின் போது அதற்கான காரணத்தைக் கண்டறிய உதவும் கறுப்பு பெட்டியைக் கண்டுபிடித்தவரும் பிரபல அவுஸ்திரேலிய விஞ்ஞானியுமான டேவிட் வொரென் தனது 85ஆவது வயதில் 19/07/2010 காலமானார்.
கறுப்பு பெட்டியைக் கண்டுபிடித்த டேவிட் வாரன் பற்றிய சிறு குறிப்பு

கறுப்பு பெட்டி'யின் தந்தை டேவிட் ரொனால்ட் டி மே வாரன் (David Ronald de Mey Warren) பிறப்பு மார்ச் 20 1925 - இறப்பு ஜூலை 19 2010) என்பவர் விமானத்தின் தகவல் பரிமாற்றத்தினை பதிவு or கறுப்பு பெட்டி செய்யும் விமான தரவு பதிவியைக் கண்டுபிடித்தவரும் ஆஸ்திரேலிய அறிவியலாளரும் ஆவார்.
வாரன் ஆஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தில் குரூட் ஐனட் என்ற தீவில் ஐரோப்பிய வம்சாவழிப் பெற்றோருக்கு முதலாவது பிள்ளையாகப் பிறந்தார். இவரது தந்தை 1934ஆம் ஆண்டில் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். சிட்னிப் பல்கலைக்கழகத்தில் அறிவியல்பட்டதாரியானார்.

தான் கண்டுபிடித்த கருப்புப் பெட்டியுடன் டேவிட் வாரன்

1952 முதல் 1983 வரை மெல்பேர்ணில் உள்ள பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் வானூர்தி ஆய்வாளராகப் பணியாற்றினார். 1953 இல் கொமெட் என்ற உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானத்தின் விபத்துக் குறித்து விசாரணை நடத்த ஆரம்பித்த போது அவர் விமானத் தரவுப் பதிவு செய்யும் கருவியைப் பற்றிய ஆய்வுகளை ஆரம்பித்தார்.

விமான விபத்துகளுக்கான காரணங்களைக் கண்டறிய இது மிகவும் உதவியாக இருக்கும் என அவர் நம்பினார்.. விமானத்தின் முன்பகுதியில் அமர்ந்திருக்கும் விமானிகளின் உரையாடலை ஒலிப்பதிவு செய்வதினூடாக மட்டுமே விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியுமென உணர்ந்த அவர் கறுப்பு பெட்டியை கண்டுபிடித்தார். 1960ஆம் ஆண்டுக்கு பின்னரே இதன் முக்கியத்துவம் உணரப்பட்டு அனைத்து விமானங்களுக்கும் 'கறுப்புப் பெட்டி' பொருத்தப்பட்டது

அவுஸ்திரேலிய அரசாங்கம் 2002 ஆம் ஆண்டு இவருக்கு விருது வழங்கி கெளரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விமான தரவு பதிவி பற்றிய சிறு குறிப்பு

விமான தரவு பதிவி (Flight data recorder(FDR)/Accident Data Recorder(ADR)) என்பது விமானத்தின் செயல்களையும் மற்றும் விமானம் பறக்கும்பொழுது விமானம் மற்றும் அதை சுற்றியுருக்கும் சூழலின் குணாதிசயங்களாகிய வேகம் பறக்கும் உயரம் வெப்பநிலை காற்றழுத்தம் போன்ற 400க்கும் மேற்பட்ட குணாதிசயங்களை கணித்து அதை பதிவு செய்து வைத்துக்கொள்ளும் கருவியாகும்.

விமான தரவு பதிவி. அதில்விமான தரவு பதிவி திறக்கவேண்டாம் என்று எழுதியிருக்கின்றது

இக்கருவி விமானத்தின் கறுப்புப் பெட்டிக்குள் இருக்கும். இரு பகுதிகளைக் கொண்ட கறுப்புப் பெட்டிக்குள் ஒன்றுவிமானியறை குரல் பதிவி மற்றொரு பகுதி விமான தரவு பதிவி ஆகும். கறுப்புப் பெட்டி விமானத்தின் வால் பகுதியில் இது பொறுத்தப்பட்டிருக்கும். விமானம் விபத்துக்குள்ளானால் அதிலிருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சமிக்ஞைகள் வரும் இந்த சமிக்ஞைகளை வைத்து இதன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளமுடியம். இதில் பதிவாகியுள்ள தரவுகளை வைத்து விமான விபத்திற்கான காரணங்களை அறிந்து கொள்ளமுடியும்.

பண்டய காலத்தில் பயன்படுத்திய நாட்காட்டிகள்


கிரெகொரியின் நாட்காட்டி
கிரெகொரியின் நாட்காட்டி என்பது இன்று உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியாகும். இது யூலியின் நாட்காட்டியின் ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரானஅலோசியஸ் லிலியஸ்(Aloysius Lilius)என்பவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய பாப்பரசரான 13வது கிரெகரியின்ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பின்னாளில் இந்நாட்காட்டிக்கு இப்பெயர் வழங்கலாயிற்று. இதன்படி இயேசுபிறந்ததாக கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன மேலும் இக்காலப்பகுதி 'எம் ஆண்டவரின் ஆண்டு' எனவும் பெயரிடப்பட்டது. கிபி 6 வது நூற்றாண்டில் உரோமைபாதிரியார் ஒருவரால் துவக்கப்பட்ட முறையாகும்.

யூலியின் நாட்காட்டி
லியின் நாட்காட்டி அல்லது சூலியன் நாட்காட்டி என்பது கிமு 46 இல் யூலியஸ் சீசரினால் அறிமுகப்படுத்தப்பட்டு கிமு 45 இல் பயன்பாட்டுக்கு வந்த நாட்காட்டியாகும். இது உரோம் உரோமில் பாவனையில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்தரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட நெட்டாண்டையும் கொண்டிருந்தது. ஆகவே யூலியின் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும்.

இந்து நாட்காட்டி
இந்து நாட்காட்டி என்று குறிப்பிடப்படும் நாட்காட்டி காலவோட்டத்தில் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் மாறுபட்டுள்ள பல நாட்காட்டிகளாகும்.இந்தியத் தேசிய நாட்காட்டிஅவற்றில் ஒன்றாகும்.வானியல் அறிஞர்களானஆரியபட்டா(கிபி 499) மற்றும் வராக மிகிரர் (6ஆம் நாற்றாண்டு) வடிவமைத்த பஞ்சாங்கம் என்ற அடிப்படையில் இவை அமைந்தவை

இசுலாமிய நாட்காட்டி
இசுலாமிய நாட்காட்டி அல்லது முஸ்லிம் நாட்காட்டி அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி, ஓர்சந்திர நாட்காட்டி ஆகும். இது ஆண்டிற்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது. இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியுடன் பல முஸ்லிம் நாடுகளில் நிகழ்வுகளைப் பதிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. தவிர இசுலாமிய சமய புனிதநாட்களையும் பண்டிகைகளையும் கணக்கிட முஸ்லிம்கள் உலகெங்கும் இந்த நாட்காட்டியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நாட்காட்டியின் துவக்கம் ஹிஜிரா அதாவது இசுலாமிய இறைதூதர் மொகமது மெக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த ஆண்டாகும். ஒவ்வொரு ஆண்டும் H -Hijra அல்லது AH என குறிக்கப்படும். ஹிஜிராவிற்கு முந்தைய ஆண்டுகள் before Hijra (BH)என வழங்கப்படும்.

சந்திர நாட்காட்டி
சந்திர நாட்காட்டி (lunar calendar) சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியாகும்.மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் சுத்தமான சந்திர நாட்காட்டிஇசுலாமிய நாட்காட்டி அல்லது ஹிஜிரி நாட்காட்டி ஆகும். இந்த நாட்காட்டி எப்போதுமே 12 சந்திர மாதங்கள் கொண்டது. .சூரிய நாட்காட்டியுடன்ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருங்கிணையும்.இது பெரும்பான்மையும் சமய வழிபாடுகளுக்கு மட்டுமே பாவித்தாலும் சௌதி அரேபியாவில் வணிக பயன்பாட்டிற்கும் பாவிக்கப்படுகிறது. ஓர் சந்திர ஆண்டில் 354.37 நாட்கள் உள்ளன.

சூரியசந்திர நாட்காட்டி
சூரியசந்திர நாட்காட்டிகள் சந்திர நாட்காட்டி போன்று மாதங்கள் சந்திரனின் பிறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் ஓர் கூடுதலான இடைச்செருகல் மாதத்தை கொண்டு சூரிய ஆண்டுடன் ஒருங்கிணைக்கின்றன. சப்பானிய நாட்காட்டி 1873 வரை சூரியசந்திர நாட்காட்டியாக இருந்ததுகிருத்துவ பண்டிகையான உயிர்த்த ஞாயிறு நாளை சூரியசந்திர நாட்காட்டியை ஒட்டியே தீர்மானிக்கிறார்கள்.

சீன நாட்காட்டி
சீன நாட்காட்டி ஓர் சூரியசந்திர நாட்காட்டியாகும்.இது சீனா தவிர பல கிழக்கு ஆசிய பண்பாடுகளில் பின்பற்றப்படுகிறது. இது சீனர்களால் கி.மு 500 ஆண்டில் சீரமைக்கப்பட்டதுசீன நாட்காட்டி பரம்பரை விடுமுறை தினங்கள் சீன புத்தாண்டு (அல்லது வசந்த திருவிழா டுயான் வு பண்டிகை மற்றும் நடு மழைக்கால பண்டிகை போன்றவற்றை குறிக்கவும் திருமண நாள் புதுமனை புகுவிழா போன்றவற்றிற்கு சோதிடப்படி நல்லநாள் தெரிந்தெடுக்கவும் பயனாகிறது.

சூரிய நாட்காட்டி
சூரிய நாட்காட்டி (solar calendar) சூரியனை வலம் வரும் புவியின் நிகழிடத்தைப் பொறுத்து நாட்களை அமைத்த நாட்காட்டி யாகும்.மாறாக வான்வெளியில் நகர்வதாக உணரப்படும் சூரியனின் நிகழிடத்தை கொண்டு அமைக்கப்பட்ட நாட்காட்டி என்றும் கூறலாம்.
சூரிய வலப்பாதையில் புவியின் நிகழிடம் சம இரவு நாள் கொண்டு கணிக்கப்படுமானால் அந்த நாட்காட்டியால் காலங்களை துல்லியமாக காட்ட வியலும். அத்தகைய நாட்காட்டி காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டி என அறியப்படுகிறது.