Friday, May 14, 2010

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்

கிரிஸ்டோபர் கொலம்பஸ்
கிரிஸ்டோபர் கொலம்பஸ் (Christopher Columbus) (1451-1506) ஒரு கடல் பயணி வணிகர். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (ஸ்பெயின் நாட்டுக்கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் ஜெனோவா என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. மேலும்.

வில்லெம் ஜான்சூன்
வில்லெம் ஜான்சூன் (Willem Janszoon 1570 - 1630) டச்சு கடற்பயணியும் குடியேற்ற ஆளுநரும் ஆவார். இவரே ஆஸ்திரேலியாவின் கரையை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். இவர் வில்லெம் ஜான்ஸ் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அனேகமாக நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் பிறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

வாஸ்கோ ட காமா வாஸ்கோ ட காமா (Vasco da Gama 1469 - டிசம்பர் 24 1524) ஒரு போர்த்துகீச நாடுகாண் பயணியாவார். இவரே இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியர். இவர் ஆப்பிரிக்காவின் தென்கோடியிலுள்ள நன்னம்பிக்கை முனை வழியாக இந்தியா வந்தடைந்தார்

லொரன்சோ டி அல்மெய்டா

லோரென்சோ டி அல்மெய்டா இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த முதலாவது போர்த்துக்கேயன். இவன் போர்த்துக்கீச மாலுமியும் நாடுகாண் பயணியுமான பிரான்சிஸ்கோ டி அல்மெய்டாவின் மகன் ஆவார். மாலைதீவுகளுக்கு தனது மூன்று கப்பல்களுடன் புறப்பட்ட லோரன்சோ டி அல்மெய்டா கடல் நீரோட்டத்தின் காரணமாக வடபக்கமாக இழுக்கப்பட்டு 1505 ஆம் ஆண்டு நவம்பர் 15 இல் இலங்கைக்கரையில் தரையிறங்கினார்.

ஜேம்ஸ் குக்
ஜேம்ஸ் குக் James Cook 7 நவம்பர் 1728 - 14 பெப்ரவரி 1779) இங்கிலாந்தைச் சேர்ந்த நாடுகாண் பயணி. நியூசிலாந்து தீவினை முதன்முதலில் உலகப்படத்தில் குறித்ததுடன் பசுபிக் சமுத்திரத்தில் மூன்று பயணங்களை மேற்கொண்டவர். தனது முதற்பயணத்தின் போது 1770 இல் அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையினைக் கண்டார். அப்பிரதேசத்தை நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டு இங்கிலாந்துக்குச் சொந்தமானதென உரிமை கோரினார்.மூன்றாவது பசுபிக் பயணத்தின்போது ஹவாய்த்தீவுவாசிகளுடனான சண்டையில் கொல்லப்பட்டார்

இபின் பட்டுடா
இபின் பட்டுடா ஒரு மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் பயணியும் ஆவார். ரிகிலா எனப்படும் இவரது பயணங்களைப் பற்றிய விபரங்கள் பெயர்பெற்றவை.இவரது பயணங்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்ததுடன் அறியப்பட்ட இசுலாமிய உலகம் முழுவதையும் அதற்கும் அப்பாலுள்ள நாடுகளையும் உள்ளடக்கி இருந்தன.இவர் வடக்கு ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா தெற்கு ஐரோப்பா. கிழக்கு ஐரோப்பா மையக் கிழக்கு இந்தியத் துணைக் கண்டம் நடு ஆசியா தென்கிழக்கு ஆசியா சீனா ஆகிய நான்கு திசைகளிலும் பரந்திருந்த பகுதிகளூடாகப் பயணம் செய்துள்ளார்.

பெர்டினென்ட் மகலன்

பெர்டினென்ட் மகலன் அல்லது பெர்டினண்டு மகாலன் (போர்த்துகீசு(1480 - ஏப்ரல் 27 1521) போர்த்துக்கேய மாலுமி. உலகைச் சுற்றிவந்த முதல் மனிதராக அறியப்படுகிறார். 1519 இல் உலகைக் கப்பல் மூலம் சுற்றிவந்து நிறைவு செய்தார். பசுபிக் கடலுக்கு அப்பெயரை இவர் இட்டார்.

எர்னான் கோட்டெஸ்
எர்னான் கோட்டெஸ் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் எர்னான் கோட்டெஸ் டெ மொன்ரோய் பிசாரோ1485–டிசம்பர் 2 1547. ஒரு நாடுபிடிப்பாளர் ஆவார். இவர் நடத்திய படையெடுப்பு அஸ்டெக் பேரரசின் வீழ்ச்சிக்கு வழிகோலியதுடன் 16 ஆம் நூற்றாண்டுத் தொசக்கத்தில் மெக்சிக்கோ தலைநிலத்தின் பெரும் பகுதியை கஸ்டீல் அரசரின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது. கோட்டெஸ் அமெரிக்காவில் முதல் கட்ட ஸ்பானியக் குடியேற்றத்தைத் தொடங்கிய குடியேற்றக்காரர்களின் தலைமுறையைச் சேர்ந்தவர்

ஏபெல் டாஸ்மான்
ஏபெல் டாஸ்மான் 1603 - அக்டோபர் 10 1659) என்பவர் டச்சு கடல் ஆராய்ச்சியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார். இவர் தனது 1642 மற்றும் 1644 ஆம் ஆண்டுகளுக்கான டச்சு கிழக்கிந்தியக் கம்பனிக்கான பிரபல்யமான கடற்பயணங்களுக்காக அறியப்படுகிறார். இவரே முதன் முதலாக வான் டியெமன் நிலம் (தற்போதைய தாஸ்மானியா) என்ற தீவுகளுக்கும் நியூசிலாந்து மற்றும் பிஜித் தீவுகள் போன்றவற்றையும் கண்ட முதல் ஐரோப்பியர் ஆவார்.


ருவால் அமுன்சென்

ருவால் அமுன்சென் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ருவால் எங்கெல்பிரெட் கிரேவிங் அமுன்சென்ஜூலை 16 1872 – ஜூன் 18 1928) நோர்வே நாட்டைச் சேர்ந்தவரும் துருவப் பகுதிகளில் பயணங்களை மேற்கொண்டவருமான தேடலாய்வாளர் (explorer) ஆவார். இவர் தென் துருவத்தை அடைந்த தனது முதலாவது அத்திலாந்திக் பயணத்தை 1910 ஆம் ஆண்டுக்கும் 1912 ஆம் ஆண்டுக்கும் இடையில் மேற்கொண்டார். வட துருவம் தென் துருவம் இரண்டுக்கும் சென்ற முதல் மனிதர் இவராவர். வடமேற்குப் பாதையைக் கடந்த முதல் மனிதரும் இவரே. ஜூன் 1928 ஆம் ஆண்டில் மீட்புப் பணியொன்றில் ஈடுபட்டிருந்த போது இவர் காணாமல் போனார்.