Friday, December 31, 2010

2010 ரசியுங்கள் 2011 சிந்தியுங்கள்

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

வணக்கம் நண்பர்களே புதிய ஆண்டில் புதிய சிந்தனையுடன் புதிய திசையை நோக்கி பயணிக்க புதிய ஆண்டு வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்புடன் புதிய ஆண்டை வரவேற்போம்.
மனிதன் ஒரு நொடிக்குள் ஆக்குவதை விட அழிப்பதையே தற்போதைய உலக அரங்கில் சாதாரண காணமூடிகிறது.

இனி பதிவுக்கு வருவோம்.ஒரு நொடியில் கமராவினால் பெறப்பட்ட அற்புத படங்கள் ரசியுங்கள் சிந்தியுங்கள்









இலங்கையர் அனைவரும் ஒற்றுமையுடன் ஏற்றத்தாழ்வின்றி வாழ்வதற்கு
புதிய ஆண்டு வழிவகுக்கட்டும்.

Friday, December 17, 2010

மரங்கொத்திப்பறவையின் நாக்கு மிகவும் நீளமாக இருப்பது ஏன் தெரியுமா?

என் மனதை
கொத்திவிட்டு
கூடுகட்டி
குடியும் ஏறிவிட்ட
மரங்கொத்தி
பறவை நீ...
என் மனதை
கொத்தி விடு
போகாதே...

அவுஸ்திரேலியா நியூசிலாந்து மடகாஸ்கர் மற்றும் தென் - வட முனைப்பகுதிகளைத் தவிர்த்து உலகெங்கும் காணப்படும் பறவையாகும். பெரும்பாலான சிற்றினங்கள் காடுகளிலும் மரங்கள் உள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. எனினும் சில இனங்கள் மரங்களற்ற பாறைப்பகுதிகளிலும் பாலைநிலங்களிலும் வாழ்கின்றன. மரங்கொத்திகளில் சுமார் 200 சிற்றினங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மரங்களிலும் வாழும் பூச்சிகளே இவற்றின் முக்கிய உணவு.

மரங்கொத்தி பறவைகள் வனம் மற்றும் தோட்டங்களில் உள்ள மரங்களில் கூடு அமைத்து வசித்து வருகின்றன. மரங்கொத்திக்கு சிறந்த செவிப்புலன் உண்டு . அது மரத்தில் தொத்திகொண்டவுடன் காதைவைத்துக் கேட்கும் . உள்ளே பூச்சிகள் நடமாட்டம் காதில் விழுந்தவுடன் உடனே மூக்கால் மரத்தை துளைத்து நீண்ட நாக்கால் பூச்சிகள் லபக்!. மரப் பட்டைகளின் இடுக்குகளில் காணப்படும் புழு வண்டு மற்றும் பூச்சிகளை உண்பதற்காக மரங்களை கொத்துகின்றன; தவிர மரங்களில் ஓட்டை அமைத்து அதில் தங்களுக்கான குடியிருப்புகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.
மரங்கொத்தி தனது அலகு மூலம் மரத்தை கொத்தும் போது அதன் மூளையில் அதிர்வு ஏற்படாமல் இருக்க இயற்கையாகவே அதன் நாக்கு நீளமாக படைக்கப் பட்டுள்ளது. மரங்கொத்தி யின் நீளமான நாக்கு அதன் மூளையைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போல இருக்கும். இதனால் அதிர்வில் இருந்து மூளை பாதுகாக்கப்படுகிறது.
மரங்கொத்தி பறவைகளின் கண்கள் எலும்பு திசுக்களால் அழுத்தமாக சூழப்பட்டுள்ளதால் அவற்றுக்கு எவ்வித அதிர்வுகளோ பாதிப்புகளோ ஏற்படுவதில்லை என வன உயிரின ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் மரங்களை முட்டி மோதும் போது மூளை கலங்கவோ உள் மண்டை ஓட்டுடன் முட்டி மோதும் வாய்ப்புள்ளது. அளவில் மரங்கொத்தி பறவைகளின் மண்டை ஓட்டுடன் மூளை முட்டி மோதும் வாய்ப்பில்லை; இதன் நாக்கு மண்டை ஓட்டை சுற்றியே வளைந்திருக்கும்.பறவை கண் விழிகளின் மேல் ஒரு ஜவ்வு போன்ற படலம் இமையை மூடித்திறக்கும் வகையில் அமைந்திருப்பதால் மரங்களை கொத்தும் போது தெளிக்கும் மரச்சிராய்மரத்துகள்களில் இருந்து கண்கள் பாதுகாக்கப்படுகின்றன. அற்புதமான உடலமைப்பு மற்றும் பாதுகாப்பு கவசங்களை இயற்கை அளித்துள்ளதால் மரங்கொத்தி பறவைகள் எவ்வித வலி வேதனை பாதிப்பு இல்லாமல் மரங்களை கொத்தி தங்கள் உணவுத் தேவையை நிறைவு செய்துக் கொள்கின்றன

Sunday, December 05, 2010

நீல நிறமாக வானம் இருப்பது ஏன்?

ஏன்? எதற்கு ? என்ற கேள்விகள் எழும் போது தான் மனித அறிவும் மூட நம்பிக்கைகள் பலவற்றிலிருந்தும் விடுபடும் .பல அடிப்படை கேள்விகள் மனித மனங்களுக்குள் இருந்து வருவதே இல்லை ..அவற்றில் ஒன்று தான் இது . ஏன் வானம் நீலம் ?

சூரியனில் இருந்தோ அல்லது மின்குமிழில் இருந்தோ வரும் ஒளி வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் பல நிறங்களை உள்ளடக்கியது .இதனை வானவில்லில் அவதானிக்கலா
வாயுமண்டலத்தில் ( ATMOSPHERE ) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென்,21 % ஒக்சிஜென்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு . அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது .

ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை . சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது

கூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் வந்தடைகின்றன . குறுகிய அலைநீளம் உடைய நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது . உறிஞ்சிய துணிக்கைகள் அதை கதிர்க்கின்றன . அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது .
ஒளி காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும் காற்றிலுள்ள அணு மூலக் கூறுகள் நீர்த்துளிகள் பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது.(சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது.)

நாம் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன .அதனாலேயே பகலில் வானம் நீல நிறமாக இருப்பது போல தோன்றுகிறது . வானம் என்பது வெறுமனே வாயுத்துணிக்கைகள்,மாசுக்களால், மேலே கூறப்பட்ட ஒளி ஆல் ஆனதே தவிர அப்படி ஒன்று இல்லை என்பதே உண்மை

பௌதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமா இருந்தா அவை நம்பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும்.
நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் மாட்டிக்கொள்கிறது.

வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது.
காலைமாலை சூரிய உதயம் அஸ்தமனம்போதுமட்டும் அந்தப்பகுதி சிவப்பாக தெரியக்காரணம். சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளின் நீளம் அப்போ மட்டும் குறைவதுதானாம்!
பூமியின் மேலுள்ள காற்று மண்டலம் தான் காரணம்.சூரிய ஒளி அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது.வானவில்லில் அது தன் தோகையை விரித்து ஏழு வர்ணங்களைக் காட்டுகிறதே அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே ஆயினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் அந்த ஒளியின் அலைநீளம் மற்றும் துடிப்பு வானவில்லின் வண்ணங்களில் நீல நிறம் மிக அதிகத் துடிப்புடனும் சிவப்பு மிகக் குறைந்த துடிப்புடனும் இருப்பவை.

நாம் 'பார்ப்பது' என்பது ஒளி நமது கண்ணில் வந்து படும்போது மட்டுமே. பார்க்கும் பொருட்கள் எல்லாமே அதில் பட்டு திரும்பும் ஒளி நமது கண்ணை வந்தடைவதால் தான்
காற்று மண்டலத்தில் பலமாக சிதறடிக்கப்படும் நீல நிறமே மற்ற நிறங்களை விட பெருமளவில் நமது கண்ணில் வந்து விழுகிறது. ஆகவே தான் வானம் நீல நிறம்.

இரவில் நிலவின் ஒளி நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

வானம் நில நிறமாக இருப்பதற்கு ஒளியின் சிதறலில் அதிகமாக பரவும் நீல நிறம் காரணமாகலாம் என்றும் அறிந்திருந்தென் உறுதிப்படுத்தவும்.இது ம.தி.சுதா கேட்ட கேள்வி

Saturday, December 04, 2010

மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது?

புகைப்படத்தில் தெரியும்
கண்கள் கூட கவிதை பேசும்
இயற்கையின் வினோதப் படைப்புகள் அனைத்தும் வியப்பிற்குரியவை. அதில் மானிடப் படைப்பு அதனினும் வியப்புக்குரியது. இதையே சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர்.

கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு(Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரண்மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது

கண் நிறம் ஒரு பல ஜீன (Polygenic) கூறு ஆகும். கண்களின் நிறம் கண்களில் உள்ள கருவிழியில் உள்ள நிறப்பொருட்களில் (Pigments) அளவை வைத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. மனிதர்களிடத்திலும் விலங்குகளிடத்திலும் இது கண் நிற வேறுபாடு காணப்படுகிறது.மனிதர்களில் கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும் மெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் நிற வேற்றுமைகள் ஏற்படுகின்றனர்

மனிதர்களின் கண்ணில் ஒளி புகுந்து செல்லக்கூடிய விழிவெண்படலம் (cornea) முன்னாலும், அதற்குப் பின்னால் கருவிழிப் படலம் (iris) என்ற தசையாலான திரையும் உள்ளன. கருவிழிப் படலம், ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது; மெலனின் என்ற நிறமிப் பொருளுடன் கூடிய உயிரணுக்களால் அமைந்தது. கண்களின் நிறத்திற்குக் காரணமாக அமைவது இந்நிறமிப் பொருளே. கருவிழிப்படலத்தில் மெலனின் என்ற நிறமிப் பொருள் இல்லாமற் போகுமானால் கண் நீல நிறமாகத் தோன்றும். இதற்குக் காரணம் கண்ணின் விழிப்படலத்திற்கும் ஒளி வில்லைக்கும் இடையேயுள்ள கண்முன்நீர் (aqueous humour) என்ற திரவப் பகுதியில் ஒளிக்கதிர் ஊடுருவிச் சென்று நீல நிறத்தை உண்டாக்குதலேயாகும். வானம் நீல நிறமாகக் காட்சியளிப்பதற்கும் இவ்விளைவே காரணம் எனலாம். நிறமிப் பொருள் அடர்த்தியாக இருக்குமானால் கண் பழுப்பு நிறமாயும், மிகவும் அடர்த்தியுடன் இருப்பின் கருமை நிறமாகவும் இருக்கும். இந்நிறமிப் பொருள் கருவிழிப்படலத்தில் இல்லாமல் இருப்பதும் அல்லது குறைந்தோ, கூடவோ இருப்பதும் மரபுவழிப்பட்ட பரம்பரை இயல்பாகும். இன்னும் சிலருக்குக் குழந்தைப் பருவத்தில் நீல நிறக் கண்களும், வளர வளரக் கண்கள் பழுப்பு நிறமாக மாறுவதும் உண்டு; கருவிழிப் படலத்தில் நிறமிப் பொருள் வயது கூடக் கூட, அடர்த்தியாகச் சேருவதே இதற்குக் காரணம்.

கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு(Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை

வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரண்மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது.

உன் இதயம் காண திறந்த கண்கள்
இப்போதும் பார் அப்படியே தானே
நீயும் அப்படியே தானா?

உலகில் மிக மெதுவாக நடக்கும் பாலூட்டி விலங்கு

உலகம் முழுவதும் கடல் ஆமைகள் 225 வகைகள் காணப்பட்டாலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் காணப்படுகின்றன.
இதன் மேலோடு கடுமையான பலம் பொருந்தியதாகவும் இதன் உட்பகுதி மிகவும் பாதுகாப்பாகவும் அமைந்துள்ளது. விலா எலும்புகளும் முதுகு எலும்புகளும் ஒன்றாகி உடல் தசைகள் சுருங்கி காணப்படுகின்றன. இவற்றின் நுரையீரல் மேலோட்டினை ஒட்டியவாறு அமைந்திருக்கிறது.

பற்களுக்குப் பதிலாக கொம்புகளால் ஆன அசையாத அலகு போன்ற அமைப்பு இரு தாடைகளிலும் இருக்கிறது. இதன் கை, கால்கள் நீர் மற்றும் நிலத்தில் வாழ ஏற்றதாகவும் உள்ளது. முன்கால்கள் துடுப்புகளைப் போன்று இருப்பதால் மிகவேகமாக கடலில் நீந்திச் செல்கின்றது. இது தரையில் 0.17 miles/ hours (273 meters/hours)நடந்து செல்லக் கூடியது

பின்னங்கால்களில் உள்ள விரல்கள் சவ்வு போன்ற அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. கண்கள் சிறியதாக இருப்பினும் அனைத்து வண்ணங்களையும் காணமுடியும்.

கடல் ஆமைகளின் வாயிலும் கழிவுகளை வெளியேற்றும் பகுதியிலும் சிறப்பு ரத்த நாளங்கள் உள்ளன. இவை நீரில் மூழ்கி இருக்கும் போது பிராணவாயுவை நீரிலிருந்து பிரித்தெடுத்து சுவாசிக்க உதவுகிறது. ஆண் ஆமையின் வயிற்றுப்பகுதி குழியாகவும் பெண்ணின் வயிற்றுப்பகுதி பெருத்தும் குவிந்தும் காணப்படும்.

நிலத்தில் வாழும் ஆமை தன்னுடைய தலை கால்களை ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். ஆனால் கடல் ஆமைகளால் இப்படிச் செய்ய முடியாது
சில ஆமைகள் கடற்பாசிகளையும் கடற்பஞ்சுகளையும் உண்கின்றன. பெருந்தலை ஆமைகளின் முக்கியமான உணவு நத்தைகள் ஜெலி மீன் சிப்பி போன்றவை. இவை நத்தை போன்ற உறுதியான ஓடுகளையுடைய உயிரினங்களை உட்கொள்ளத் தகுந்தாற் போன்ற வாயமைப்புடன் இருக்கும். கடல் ஆமைகளுக்கு பற்கள் கிடையாது. தாடைகளை வைத்தே மென்று தின்ன முடியும். மிகக் குறைந்த தூரத்துக்கு மட்டுமே பார்க்க முடியும். நுகரும் திறன் இவற்றுக்கு மிகவும் அதிகம்.

கடலிலிருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பெண் ஆமைகள் முட்டையிட நிலத்துக்கு வரும். இதற்காக சில வேளைகளில் ஆயிரக்கணக்கான மைல்கள்கூட நீந்தி வரும்.கடலின் விளிம்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அது மணலில் பெரிய பள்ளம் தோண்டும். பின்னர் அதில் முட்டையிடும். ஆண் ஆமைகள் ஒரு முறை கடலுக்கு சென்றுவிட்டால் வாழ்க்கை முழுவதும் அங்கேதான். ஒரு ஆமை 50 இலிருந்து 200 முட்டைகள் வரை இட்டாலும் சில மட்டுமே பொரியும். முட்டைகள் கோல்ப் பந்தின் வடிவத்தில் இருக்கும். முட்டையிட்ட பின்னர் குழியை மூடிவிட்டு கடலுக்குள் இறங்கிச் சென்றுவிடும். கடலாமைகள் அருகிவரும் ஓர் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளதனால் கடலாமை முட்டைகளை எடுப்பதோ விற்பனை செய்வதோ குற்றமாகக் கருதப்படுகிறது. முட்டைகளின் மீது படிந்திருக்கும் மணற்படுகை சூரிய வெப்பத்தினால் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடையும். குறித்த காலத்தில் ஆமைக்குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியேறி மணலைத் துளைத்துக்கொண்டு அவை வெளிவரும்.

முட்டை பொரிந்த பின் (60-85 நாட்கள்) ஆமைக்குட்டிகள் இரவில் கடலுக்குள் சென்றுவிடும். எல்லா ஆபத்துகளிலிருந்தும் தப்பித்து முழு வாழ்நாளையும் கடல் ஆமையால் வாழ முடிந்தால் 120 ஆண்டுகளுக்கு மேலும் வாழும்.

60 முதல் 90 நாட்களில் முட்டைகள் குஞ்சுகளாகி கடலை நோக்கி ஊர்ந்து சென்று பின்னர் நீரில் நீந்தி ஆழ்கடலை அடைகின்றன. 1000 ஆமைகளில் ஒன்றுதான் பல்வேறு தடைகளைத் தாண்டி முதிர்ந்த பருவத்தை அடைகிறதாம்.

அலுங்கு ஆமை சில காலங்களில் நச்சுத்தன்மை உள்ள கடல் பஞ்சு போன்ற மிருதுவான தாவர வகையை உண்ணும். இதனால் உடலெங்கும் நஞ்சு பரவியிருக்கும். இவற்றை மனிதர்கள் உண்டால் உயிருக்கே ஆபத்து.

1975ம் ஆண்டு முதல் செல்லப்பிராணியாக இவற்றை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. கடலாமைகள் செல்மொனல்லா எனும் பக்டீரியாவைக்கொண்டது. இதனால் மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் என்பதாலே இது தடை செய்யப்பட்டது. நோய்களைக் கட்டுபடுத்த மற்றும் தடுக்கும் மத்திய நிலையத்தின் கணிப்பீட்டின்படி வருடா வருடம் 74000 பேர் சல்மொனல்லா பக்டீரியாவால் பீடிக்கப்பட்டுவருவதுடன், இதில் 6 சதவீதம் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது. இந்நோயால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களும் வயோதிபர்களும் ஆவர்.

மே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினம்
இந்த அரியவகை கடல்வாழ் உயிரினம் அழிந்து கொண்டே வருவதால் இவற்றைப் பாதுகாப்போம்

Friday, December 03, 2010

சீனிக்குள் அடங்கி இருக்கும் விஞ்ஞானத்தகவல்

சீனி சிறிய கட்டிகளால் ஆன திண்மப் பொருள்ளாகும். சீனியானது கரும்பு மற்றும் பீட்றூட் இல் இருந்து தயாரிக்கப் படுகின்றது. இது இந்தியா பாக்கிஸ்தான் சீனா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் கரும்பில் இருந்தே பெறப்படுகின்றது
  • கோபத்தை குறைக்க ஒரு கரண்டி சீனி

சிலருக்கு திடீரென கோபம் கொந்தளித்து என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தயங்குவார்கள் அல்லது சிலருக்கு அள்வுக்கு அதிகமான மன அழுத்தம் இருக்கலாம் அவர்கள் ஒரு கரண்டி சீனியை வாயில் போட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று மருத்துவ ஆய்வு சொல்கிறது.

இதே போல மன அழுத்தம் இருந்தாலும் சிறிய சீனி யை அல்லது ஏதேனும் ஒரு சாக்லேட் சாப்பிட்டால் சரியாகி விடும் என்றும் கூறி இருக்கின்றனர். அதிலும் எலுமிச்சை சாற்றில் சீனி கலந்து சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


  • காபியுடன் சேர்க்கும் சீனி ஞாபக சக்தியை அதிகரிக்கும் - ஆய்வறிக்கை

பொதுவாக காபியுடன் சீனி சேர்க்க கூடாது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் என கூறுவது உண்டுஇ ஆனால் காபியுடன் சர்க்கரை சேர்க்க வேண்டும். இதன்மூலம் ஞாபகசக்தி அதிகரிக்கும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

அதில்இ காபியில் உள்ள காபைன் என்ற பொருளுடன் சீனி சேர்க்கப் படும்போது மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது. இதன்மூலம் ஞாபகசக்தி கூடுதலாகிறது என்று கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு 40 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. முதலில் அவர்களுக்கு காபி மட்டும் கொடுக்கப்பட்டது. பின்னர் காபியுடன் சீனியும் சேர்த்து வழங்கப்பட்டது. இவை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் காபியுடன் சீனி சேர்க்கப்படும் பட்சத்தில் ஞாபகசக்தி அதிகரிப்பது தெரியவந்துள்ளது.