Sunday, November 28, 2010

ம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எது தெரியுமா?

சிலர் நினைக்கின்றனர் வியர்வை என்பது அழுக்கு உடல் நலத்துக்கு கேடு என்று. ஆனால் உண்மையில் வியர்வை என்பது உடல் நலத்தை பேணு வதற்காகவே. வியர்வை என்ற ஒன்று இல்லையானால் மரணம் நிச்சயம். வியர்வை சுரப்பிகள் மிகமுக்கியமாக சிறுநீரகத்தின் வேலைப்பளுவை குறைக்கின்றது.

பொதுவாக ம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எ‌ன்று கே‌ட்டா‌ல் அனைவரு‌ம் உதடு எ‌ன்பா‌ர்க‌ள். ஆனா‌ல் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளிட‌ம் கே‌ட்டா‌ல் அ‌தி‌ல் உ‌ண்மை‌யி‌ல்லை. உட‌லி‌ல் எ‌ங்கெ‌ல்லா‌ம் சரும‌ம் இரு‌க்‌கிறதோ அ‌ங்கெ‌ல்லா‌ம் ‌விய‌ர்வை சுர‌ப்‌பிகளு‌ம் இரு‌‌க்‌கி‌ன்றன எ‌ன்று உறு‌தியாக‌க் கூறு‌கி‌ன்றன‌ர்.

‌விய‌ர்வை சுர‌ப்‌‌பிக‌ள் அ‌திக‌ம் உ‌ள்ள இட‌ங்க‌ளி‌ல் ‌விய‌ர்‌ப்பது த‌ெ‌ரி‌கிறது. குறைவாக உ‌ள்ள இட‌ங்க‌ளி‌ல் தெ‌ரிவ‌தி‌ல்லை.

அதாவது உட‌லி‌ன் சில இட‌ங்க‌ளி‌ல் அ‌திகமான ‌விய‌ர்வை சுர‌ப்‌பிக‌ள் உ‌ள்ளன. உத‌ட்டி‌ல் ‌விய‌ர்வை சுர‌ப்‌பிக‌ள் ‌மிக ‌மிக‌க் குறைவு. அதனா‌ல்தா‌ன் உத‌ட்டி‌ல் ‌விய‌ர்‌ப்பது நம‌க்கு‌த் தெ‌ரிவ‌தி‌ல்லை.

அ‌தி‌லு‌ம் ஒரு ‌சிலரு‌க்கு அ‌திகமான ‌விய‌ர்வை சுர‌ப்‌பிக‌ள் உ‌ள்ள‌‌ங்களை பாத‌ங்க‌ளி‌ல் அமை‌ந்து‌விடுவது‌ம் உ‌ண்டு.
இ‌னி யாரு‌ம் ‌விய‌ர்‌க்காத இட‌ம் உ‌ண்டு அது எது தெ‌ரியுமா எ‌ன்று கே‌ட்டா‌ல் உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எ‌ன்று எது‌வு‌மி‌ல்லை. உத‌ட்டு மேலயு‌ம் வே‌ர்‌க்கு‌‌ம் எ‌ன்பது உன‌க்கு‌த் தெ‌ரியுமா? என ப‌தி‌ல் கே‌ள்‌வி கேளு‌ங்க‌ள்.
  • விய‌ர்வை சுர‌ப்‌பிக‌ள் பல‌வித‌ம்

சரும‌த்‌தி‌ல் நு‌‌ண்‌ணிய துவார‌ங்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன. ஒ‌வ்வொரு துவார‌த்‌தி‌ன் ‌கீழு‌ம் ஒரு ‌விய‌ர்வை சுர‌ப்‌பி இரு‌க்‌‌கிறது. இதை‌‌த் த‌விர அபா‌க்‌ரி‌ன் செபா‌ஷ‌ிய‌ஸ் சுர‌ப்‌பிகளு‌ம் உ‌ள்ளன.

அபா‌க்‌ரி‌ன் சுர‌ப்‌பிக‌ள் அ‌க்கு‌ள்க‌ளிலு‌ம் ரோம‌ம் வளரு‌ம் பகு‌திக‌ளிலு‌ம் உ‌ள்ளன. இவை ஒரு ‌வித ‌திரவ‌ங்களை ரோம‌ங்க‌ள் மூல‌ம் சுர‌க்கு‌ம். இவை கா‌ய்‌ந்தது‌ம் கோ‌ந்து போல ரோம‌ங்க‌ளி‌ல் ஒ‌‌ட்டி‌க் கொ‌ள்ளு‌ம்.

ரோம‌ங்க‌ள் அ‌திகமாக இரு‌க்கு‌ம் அ‌க்கு‌ள் பகு‌தி‌யி‌ல் ‌விய‌ர்வை கா‌ய்‌ந்து போவதா‌ல் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌ற்படு‌கிறது. எனவே ரோம‌ங்களை அக‌ற்‌றி சு‌த்தமாக வை‌த்‌திரு‌ப்பது உட‌ல் நல‌த்து‌க்கு ந‌ல்லது.

செபா‌ஷ‌ிய‌ஸ் சுர‌ப்‌பிக‌ள் உ‌ள்ள‌ங்கை கா‌ல் த‌விர எ‌ல்லா இட‌த்‌திலு‌ம் இரு‌க்‌கிறது.

தலை‌யி‌ல் உ‌ள்ள ‌விய‌ர்வை சுர‌ப்‌பிக‌ள் ‌சிப‌ம் எனு‌ம் எ‌ண்ணெ‌ய் ‌திரவ‌த்தை சுர‌க்‌கி‌ன்றன.

இத‌ற்கு த‌ண்‌ணீரை உ‌ள் நுழைய ‌விடாத த‌‌ன்மை இரு‌க்‌கிறது. இதனா‌ல்தா‌ன் தலை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் காய‌த்தை ‌கிரு‌மிக‌ள் அ‌ண்டாத வகை‌யி‌ல் இ‌ந்த சுர‌ப்‌பிக‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்‌கி‌ன்ற‌ன
  • விய‌ர்வையை வெ‌ளி‌யிடு‌ம் ‌சுர‌ப்‌பிக‌ள்


உட‌லி‌ல் எ‌ங்கெ‌ல்லா‌ம் சரும‌ம் இரு‌க்‌கிறதோ அ‌ங்கெ‌ல்லா‌ம் ‌விய‌ர்வை சுர‌ப்‌பிகளு‌ம் இரு‌ந்தே ‌தீரு‌ம் எ‌ன்று உறு‌தியாக சொ‌ல்‌கி‌ன்றன‌ர் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள்.

ந‌ம் உட‌லி‌ல் வ‌ெ‌ப்ப‌ம் அ‌திகமானா‌ல் அதை க‌ட்டு‌ப்படு‌த்‌தி ஒரே ‌சீராக வ‌ை‌த்து‌க் கொ‌ள்ள ஏ‌ற்படுவதுதா‌ன் ‌விய‌ர்வை. உட‌லி‌ன் வெ‌ப்ப‌த்தை 85 சத‌வீத‌ம் க‌ட்டு‌ப்பா‌ட்ட‌க்கு‌ள் வை‌த்‌திரு‌ப்பது இ‌ந்த ‌விய‌ர்வைதா‌ன்.

‌விய‌‌ர்வை எ‌ன்ற ஒ‌ன்று மட்டு‌ம் இ‌‌ல்லாம‌ல் இரு‌ந்‌திரு‌ந்தா‌ல் ம‌னிதனு‌க்கு வெ‌ப்ப‌ம் தாறுமாறாக க‌ட்டு‌ப்பாடு இ‌ல்லாம‌ல் அ‌திகமா‌கி உட‌ல்‌நிலை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம்.

‌விய‌ர்வை எ‌ன்பது பெரு‌ம்பாலு‌ம் த‌ண்‌ணீ‌ர்தா‌ன். அதனுட‌ன் ‌சில ரசாயன‌ங்களையு‌ம் க‌ழிவு‌ப் பொரு‌ட்களையு‌ம் உட‌ல் வெ‌ளியே த‌ள்ளு‌கிறது.

இ‌ந்த ‌விய‌ர்வை சரும‌த்‌தி‌ல் 20 ல‌ட்ச‌த்‌தி‌ல் இரு‌ந்து 50 ல‌ட்ச‌ம் நு‌ட்பமான துவார‌ங்க‌ள் மூல‌ம் வ‌ழி‌கிறது. இ‌ந்த நு‌‌ண்‌ணிய துவார‌ங்க‌ள் உட‌ல் முழுவது‌ம் பர‌வி‌யு‌ள்ளன.

"வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்."

Saturday, November 27, 2010

வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு

வை-பை (wi-fi) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் சில வேளைகளில் இவை மனிதர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வெகனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர்.

இதன்போது வை-பை கதிர்களுக்கு அண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன் மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இதனூடக வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும் சில வேளை இவை மனிதனையும் பாதிக்கும் சாத்தியம் அதிகம் எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்..

இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதெனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை மொபைல் போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றமை நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

பயன்கள்

வை-பை பொருத்தப்பட்ட கருவிகள் கணினிகளை பயன்படுத்தி இணையத்தை பெற்றுக்கொள்ளலாம் . ஆனால் அந்த அணுக்கம் ஒய்-ஃவை எல்லைக் குள்ளே தான் சாத்தியமாகும் . ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட அணுக்கப் புள்ளிகளை துழவு எல்லையை வெம்புள்ளிகள்(hotspot) என்று சொல்லலாம் . இதன் பரப்பளவு ஒரு சிறிய அறையில் இருந்த சில சதுர மைல்கள் வரை இருக்கும் . இந்த துழவு எல்லையின் பரப்பானது எத்தனை அணுக்கப் புள்ளிகளை கொண்டது என்பதைப் பொருத்தும் அவை எவ்வாறு மேற்ப்பொருந்துகிறது என்பதைப் பொருத்தும் பறந்து விரிந்து செயல்படும்

Saturday, November 20, 2010

இரவு விளக்குகளால் பக்க விளைவுகள்

இரவு விளக்குகள் நம் உறக்கத்தை உற்று பார்த்தபடியே இருக்கின்றன. இந்த இரவில் உலகில் எத்தனை ஆயிரமாயிரம் இரவு விளக்குகள் விழித்து கொண்டிருக்கும். அவை என்ன காண்கின்றன. இரவு விளக்குகள் தன் ஒளியை தானே முகத்திரையிட்டு ஒளித்து கொள்கின்றன.
இரவு நேரத்தில் தூங்கும்போது படுக்கை அறைகளில் குறைந்த ஒளியை உமிழும் இரவு நேர விளக்குகளை பயன் படுத்துவது பெரும்பாலானோரின் வழக்கமாக உள்ளது. ஆனால் இத்தகைய விளக்குகளால் பக்க விளைவுகள் ஏற்படும் என அமெரிக்காவில் உள்ள ஓகியோ பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இரவு நேர மங்கலான அளவில் விளக்கு ஒளி இருந்தால் கூட மூளைக்குள் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் மூளையின் கட்டமைப்புகளையும் மாற்றிவிடும் என ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். குறிப்பாக குழந்தைகளின் படுக்கை அறைகளில் இத்தகைய விளக்குகள் தேவையில்லை என்ற அறிவுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக எலிகளை வைத்து சோதனை செய்தபோது 8 வாரங்களில் அவற்றின் மூளையில் மாற்றங்கள் ஏற்பட்டது தெரிய வந்தது.

அது மட்டும் அல்ல

இரவில் விளக் கெரிந்தால் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஓர் ஆய்வில் இரவு நேரங்களில் திடீரென விளக்கைப் போட்டால் அதனால் ஏற்படும் வெளிச்சத்தால் நம் உடலில் உள்ள செல்கள் அதிக அழுத்தத்துக்கு உள்ளாவதாகத் தெரிய வந்தது. இந்த அதிக அழுத்தம் புற்றுநோய்க்கு வழி வகுத்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அடர்த்தி மிகுந்த இரவில் திடீரென ஆனால் குறுகிய நேரத்துக்கு 'பளீர்' என்று விளக்கு எரிந்தால் கூட புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கண்டறிந்துள் ளனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்ற பென்ஷ்லோமோ என்பவர் கூறுகையில்'இரவு நேரத்தில் செயற்கையாக ஏற்படுத்தப்படும் எவ்வித வெளிச்சமும் நமது உடலைப் பாதிக்கும். நேரத்துக்கு ஏற்றாற்போல் செயல்படும் நம் உடலின் கடிகாரம் அதனால் பாதிக்கப்படும்.

உலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை

உலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை பார் ஹீதேத் கூசே Bar Headed Goose ஆகும் . இது ஆச்சரியப்படதக்க் உயரமான 10,175 m (33,382 feet) பறக்க வல்லது.
இதனால் வருடத்துக்கு 3-8 முட்டைகளை இடும்
இந்த பறவையால் உலகின் மிக உயரமான மலையான இலகுவாக எவரெஸ்யை இலகுவாக 8,848 m (29,028 feet) பறக்க முடியும்.

இதனால் ஒக்சிசன் மிக குறைந்த இடத்திலும் சுவாசிக்கவும் அதனுடைய உடல் வெப்பநிலையை இழக்காமல் கட்டுபடுத்தவும் முடியும்

இதனால் ஒரு நாளைக்கு 1000 மைல் தூரத்தை ஜெற் வேகத்தில் பறக்க முடியும்
இதனுடைய நீளம் 71–76 cm (28-30 in) உம் நிறை 1.87-3.2 kgஆகும்

Wednesday, November 17, 2010

உலகத்தில் நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியது சிவிங்கிப்புலி

உலகத்தில் நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியது சிவிங்கிப்புலி (cheetah) ஆகும் .இதனால் மணிக்கு 105 கிமீ (65 மைல்) வேகத்துக்கு மேல் ஓட முடியும். ஓடும் போது வெறும் மூன்று நொடிகளில் 110 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கும்.

சிவிங்கிப்புலி மரத்தில் ஏறக்கூடிய திறமை உடையது. இது தான் வேட்டையாடிய உணவை தேவையான போது உண்பதற்காக மரத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கும். இவை பெரும்பாலும் மரத்திலும் புதர் மறைவிலும் தான் வசிக்கின்றன . சிவிங்கிப்புலி பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்காகும்

சிவிங்கிப்புலி இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சிவிங்கிப்புலியின் தலை சிறியதாகவும் உடல் நீளமாகவும் கால்கள் உயரமாகவும் வால் நீளமாகவும் இருக்கும். இதன் உடல் முழுவதும் 2 முதல் 3 செமீ அளவுள்ள வட்டவடிவ கருப்புப் புள்ளிகள் காணப்படும். அதன் கீழ்வயிற்றுப்பகுதியில் புள்ளிகள் எதுவும் காணப்படாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும். வயதுவந்த ஒரு சிவிங்கிப்புலி 40 முதல் 65 கிகி எடையும் 112 முதல் 135 செமீ நீளமான உடலும் 84 செமீ நீளமுடைய வாலும் கொண்டிருக்கும். ஆண் சிவிங்கிப்புலிகள் பெண் சிவிங்கிப்புலிகளை விட சற்றுப் பெரிய தலையை உடையதாய் இருக்கும். ஆனால் ஒரு சிவிங்கிப்புலியைத் தனியாகப் பார்க்கும் போது அது ஆணா பெண்ணா என இனம் பிரித்துக் காண்பது கடினமே

.பெண் சிவிங்கிப்புலிகள் 20 முதல் 22 மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை எட்டுகின்றன. ஆண் சிவிங்கிப்புலிகள் 12 மாதங்களிலேயே இப்பருவத்தை எட்டி விடுகின்றன. பெண்சிவிங்கிப்புலியின் கர்ப்பகாலம் 98 நாட்கள் ஆகும். சிவிங்கிப்புலி குட்டிகள் பிறக்கும் போது வெறும் 150 முதல் 300 கிராம் எடையுள்ளனவாகவே உள்ளன. இந்த சிறுத்தைக்குட்டிகள் கழுகுகள் ஓநாய்கள் மற்றும் சிங்கங்களால் உயிரிழப்புக்கு உள்ளாகின்றன.
சிவிங்கிப்புலிகள் ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிவிங்கிப்புலி இப்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அற்றுப்போய்விட்டது. மேலும் ஆப்பிரிக்க கண்டத்தில் அழிந்துவரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

Sunday, November 14, 2010

உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை

வல்லூறு (Shaheen Falcon) என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு இனம்.வல்லூறு கழுகு இனம் ஆனால் கழுகை விட மிக விரைவாகப் பறக்கும் ஆற்றல் மிக்கது. உலகிலேயே மிக அதிகமான வேகத்தில் பறப்பது இந்த வல்லூறு தான். காற்றின் ஏற்ற இறக்கங்கள் இந்த வல்லூறுவின் கண்களுக்கு மட்டும் தெரியுமாம். வல்லூறுவின் உடல் நீளத்தை விட அதன் இறக்கையின் நீளம் இருமடங்கு.
Kingdom:Animalia
Phylum:Chordata
Class:Aves
Order:Falconiformes
Family:Falconidae
Genus:Falco
Species:F. peregrinus
கீழே பாய்ந்து இரையைக் கொல்லும் பொழுது மணிக்கு 290 கி.மீ விரைவிலே பறக்க வல்லது. விலங்கு உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை இந்த வல்லூறுதான். வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக்காட்டிலும் உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லது. மிக விரைவாக உயரப் பறந்து செல்லும் வாத்து புறாவினங்களை இது மிக எளிதாகத் தாக்கிக் கொல்லும். வல்லூறு சுமார் 46 செ.மீ நீளம் கொண்டது. இதன் இறக்கைகளின் நீளம் 106 செ.மீ.


  • பிப்ரவரி 2003-ல் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகம்மதின் வல்லூறு தன் எடையைக் காட்டிலும் பல மடங்கு அதிக எடையுள்ள ஒரு மானை வேட்டையாடியுள்ளது. பல முறை மானைத் தூக்கியதாகவும் பதிவாகியுள்ளது. இப்படி ஒரு வல்லூறு மானைத் தூக்குவது இதுதான் முதல்முறையென்ற சரித்திர சாதனையும் படைத்துள்ளது.
  • வல்லூறு பாக்கிஸ்ரான் நாட்டின் ஷஹீன் மாகாணத்தின் பறவையாகவும் (Pakistan Air force - A Symbol of strength) ராணுவ விரர்களை குறிக்கும் அடையாளச் சின்னம் ஆகவும் உள்ளது.
  • அங்கோலா நாட்டின் தேசிய பறவை வல்லூறு (Peregrine Falcon) வல்லூறு ஆகும்

Saturday, November 13, 2010

உலகில் மிக வேகமாக நீந்தும் நீர் வாழ் உயிரினம்


கடல்நீரின் மேல்பகுதி​​ நடுப்பகுதி மற்றும் தரைப்பகுதிகளிலும் அலைபடும் இடங்களில் இருந்து ஆழ்கடல் பகுதிகள் வரை சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பல உயிரினங்கள் வாழ்ந்தாலும் ஆழ்கடலில் மிகமிக வேகமாக செல்லும் ஓர் அரிய ஜீவன்களில் ஒன்றே மயில் மீன் Sailfish (Istiophorus platypterus) .

பறவைகளில் மயிலுக்கு தோகைகள் இருப்பதைப் போல இவ்வகை மீன்களுக்கும் தோகைகள் போன்று இறக்கைகள் இருப்பதால் இதனை மயில்மீன் என்கிறார்கள்.​ இவ்வகை மீன்களின் மேல்புறத்தில் இரு இறக்கைகளும் இவால் பகுதியில் ஒரு இறக்கையும் இருக்கும்.​ இந்த மீனின் மேல்தாடை கீழ் தாடையை விட இரு மடங்கு பெரிதாக இருக்கிறது.​ மீனின் உடல்பகுதியில் இருபுறமும் 20க்கும் மேற்பட்ட வெள்ளைநிற வரிக்கோடுகள் காணப்படுகின்றன.

பறவைகளுக்கு அலகு இருப்பது போல இதன் அலகும் சுமார் 10அடி வரை நீளம் உடையதாகவும்​​ மிகவும் கூர்மையானதாகவும் இருக்கிறது.​ இந்த அலகின் மூலம் படகுகளைக் கூட கொத்தி உடைத்து விடும் சக்தி உடையது.​ மீனின் மேல்பகுதி கரு ஊதா நிறத்திலும் ​ அடிப்பகுதி வெள்ளை நிறம் கலந்த பிரவுன் கலரிலும் காணப்படுகிறது.​ ஒரு வருடத்தில் 1.2மீ முதல் 1.5 மீ வரை வளரக் கூடியது.

சுமார் 100கிலோ வரை எடையுடைய இம்மீன்கள் 16 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறதாம்.​ ஒரு மீன் மட்டுமே குறைந்தது 2 லட்சம் மைல்களுக்கு மேல் கடலில் பிரயாணம் செய்வதுடன் வெவ்வேறு கடல் பகுதிகளுக்கும் மாறி​​ மாறிச் சென்று கொண்டேயிருக்கும்.

ஒரு மீன் மட்டும் 45லட்சம் முட்டைகள் வரை சங்கிலித் தொடர் போல இடுகிறதாம்.​ இடப்பட்ட முட்டைகள் தட்ப வெட்ப சூழ்நிலைகளைத் தாங்கி அதற்கேற்றவாறு மீன்குஞ்சுகளாக மாறிக் கொள்கின்றன.​ மத்தி​​ வஞ்சிரம்​​ கணவாய் மற்றும் தவளைகள் போன்றவையே இவற்றின் விருப்ப உணவு.​ இந்த மீனும் பெரும்பாலும் மனிதர்கள் சமைத்து சாப்பிடத்தான் பயன்படுகிறது என்றாலும் இவற்றைப் பிடிப்பது மிகவும் அரிதாகவே உள்ளது.

கடல் விட்டு கடல் மாறிச் சென்று கொண்டே இருப்பதால் இவற்றின் இருப்பிடங்களைச் சரியாக அறிந்து கொண்டு அவற்றைப் பிடிக்க முடிவதில்லை.​ கடலுக்கு அடியில் ஆழமான பகுதியில் ராக்கெட் வேகத்தில் அதாவது ஒரு மணி நேரத்திற்கு 109 கி.மீ வேகத்தில் செல்கிறது . (
68 miles per hour or109 km per hour)
இந்த ஃபாஸ்ட் சுவிம்மிங் ஜீவன்.

மேலதிக தகவல்:-

Wednesday, November 10, 2010

பறக்கும்போதே உறங்குகின்ற அல்பட்ரோஸ் பறவைகள்

அல்பட்ரோஸ் (ஆல்பட்ரோஸ்) பறவைகள் மிகத் திறனுடன் காற்றோட்ட வேறுபாடுகளைப் பயன்படுத்தி அதிக அலுப்பின்றி வெகு தொலைவு பறக்க வல்லவை. இவை நீரில் வாழும் கணவாய் (squid) மீன குறில் (krill) முதலியவற்றை உணவாக உட்கொள்ளுகின்றன. ஆல்பட்ரோஸ் பறவைகள் கடலிடையே உள்ள சிறு தீவுகளில் பெருங்கூட்டமாக வாழ்கின்றன. ஆல்பட்ரோஸ் பறவைகள இணையாக வாள்ணாள் முழுவதும் ஒன்றாகவே (இணை பிரியாமல்) வாழ்கின்றன. இனப்பெருக்கக் காலங்களில் ஒரு முறைக்கு ஒரு முட்டைதான் இடுகின்றன.அல்பட்ரோஸ் (ஆல்பட்ரோஸ்) தென்முனைப் பெருங்கடலிலும் வட பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற் பறவையினமாகும். இவை பெரும்பாலும் வெண்ணிறக் கழுத்தும் பெரிய அலகும் மிகப்பெரிய இறக்கை விரிப்பளவும் கொண்டவை.



சதை இணைப்புள்ள கால் அடிகள் (கொய்யடிகள்) கொண்டவை. இப் பறவையினம் இன்று உயிர் வாழும் பறவையினங்களிலேயே மிகப் பெரியவைகளின் ஒன்றாகும். இவ்வினத்தின் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் டியோமெடைடிடே (Diomedeidae)என்பதாகும். இவ்வினத்தில் 21 வகையான உள்ளினங்கள் உள்ளன ஆனால் அவற்றுள் 19 இனங்கள் மிக அருகிய உயிரினப்பட்டியலில் உள்ளன. பெரும் வெண் ஆல்பட்ரோஸ் என்னும் பறவையின் இறக்கை விரிப்பளவு இன்றுள்ள பறவைகள் யாவற்றினும் மிக நீளமானது.



இவை கடல் பறவைகள். பூமியின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் பகுதிகளில்தான் ஆல்பட்ரோஸ்கள் வசிக்கின்றன. முட்டையைவிட்டு வெளிவந்து பறக்கத் தொடங்கிவிட்டால் பிறகு, இந்தக் கடற் பறவைகள் கரையில் இறங்குவதில்லை. கீழே இறங்காமல் ஏறத்தாழ ஐந்து வருடங்கள் தொடர்ந்து பறப்பதற்கு இவற்றால் முடியும். பறப்பதற்கிடையில்தான் இவை உண்கின்றன, உறங்குகின்றன.

இந்தப் பறவைகள் பெரிய இறக்கைகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு பகுதி இறக்கை, ஏறத்தாழ மூன்று மீட்டர் நீளமுடையதாயிருக்கும். இந்த இறக்கைகளை இருபுறமும் விரித்தால், மணிக்கணக்காகவோ அல்லது நாட்கணக்காகவோ இவற்றால் ஆகாயத்தில் அப்படியே பறக்க முடியும். கடலில் உள்ள மீன்களும், சிறிய பிராணிகளும்தான் இவற்றின் உணவு. நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 640 கிலோ மீட்டர் தூரம் இவை பறப்பதுண்டு. மிக விரைவாகப் பறக்கும் திறமை உள்ள "ஸ்விப்ட்' எனும் கடற் பறவையும் பறக்கும்போதுதான் உறங்கும்.

எனது மருமகன் துலக்சனனின் பிறந்த நாள் வாழ்த்து

இன்று 10/11/2010 அருள்வண்ணன் துலக்சனன் தனது 3 வது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ என பெற்றோர்களான அருள்வண்ணன் ஜெயதர்சினி, அம்மம்மா அன்னலெட்ச்சுமி, அம்மப்பா பரநிருபசிங்கம் ,அன்ரி கோகுலதர்சினி, அக்கா விவிதா ,அண்ணா டிலுக்சனன் லோட்சனன் ,மாமா சிவதர்சன் ,பெரியப்பா ,பெரியம்மா சார்பில் துலக்சனனை வாழ்த்துகின்றோம்.

Sunday, November 07, 2010

உலகத்தை அழிக்கக்கூடிய சக்திகளில் ஒன்றான ஆபத்தான மெத்தேன் வாயுவை வெளியிடும் கங்காருகள்

உலகத்தை அழிக்கக்கூடிய பல்வேறு சக்திகளில் ஒன்றான, ஆபத்தான மெத்தேன் வாயுவை கங்காருகள் வெளியிடுகிறதாம். வெளியாகும் அளவு குறைவு என்றாலும் ஆஸ்திரேலியாவில் நிறைய கங்காருகள் இருப்பதால் வாயுவின் வெளிப்பாடும் மொத்தமாகப் பார்த்தால் அதிகமாக இருக்கிறதாம்.

இப்போதைய நிலவரப்படி அங்குள்ள கங்காருகளின் எண்ணிக்கை சுமார் 34 மில்லியன். 2020ல் இது 240 மில்லியனாக மாறும் என ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர். இந்த கங்காருகள் யாருக்கும் அடங்குவதில்லையாம். செடி, கொடிகளைப் பழாக்குதல், நீர் ஆதாரங்களை அழித்தல், சுற்றுச்சூழலை மாசுப்படுத்துதல் போன்ற எதிர்மறை செயல்களை செய்கின்றனவாம்.

கங்காரு எங்கள் நாட்டுச் சின்னம் தான். அதற்காக சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வாயுவை அவை வெளிப்படுத்துவது ஆரோக்கியமானதல்லவே! எனவே, சென்டிமென்டுக்கு இடம் தராதீர்கள். ஆரோக்கியதிற்கு முன்னுரிமை தாருங்கள்; கங்காருவைச் சாப்பிடுங்கள்! என்கின்றனர் ஆஸ்திரேலியர்கள்.

உலகத்தில் பல விலங்குகள் உள்ளன . ஆனால் அதில் மிகவும் வினோதமாக ஒரு விலங்கு என்று பார்த்தால் கங்காரு பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் காணப்படுகின்றன. இவை நான்கு கால்களைக் கொண்டிருப்பினும் தன் பின்னங்கால்களால் தத்திச்செல்கின்றன. சமநிலை பேணுவதற்குத் தனது வாலைப் பயன்படுத்துகிறது. இவ்விலங்கின் மடியில் ஒரு பை காணப்படுகிறது. இப் பையில் இவை தங்கள் குட்டியைக் தாங்கிக் கொண்டிருக்கின்றன.

பெரிய கங்காரு 90 கிலோ வரை எடையிருக்கும் இவாலிலிருந்து மூக்கு வரை 10 அடி நீளமிருக்கும் .ஆபத்து காலத்தில் மணிக்கு 48 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். இரண்டு மீட்டர் உயரமும்​​ 6 மீட்டர் நீளமும் ஒரே மூச்சில் தாண்டவல்லது. பிறக்கும் போது கங்காரு குட்டியின் நீளம் ஓர் அங்குலமே இருக்கும் என்றால் பார்த்திதுக்கொள்ளுங்கள்

இதன் குட்டிகள் முழுமையாக வளர்ச்சியடைவதற்கு முன்பே பிறந்துவிடுகின்றன. பாக்கி வளர்ச்சியெல்லாம் கங்காருவின் வயிற்றுப் பையில்தான் நடக்கும். குட்டி, பிறந்த உடனே வயிறு வழியாக ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். பிரசவ நேரத்தில் கங்காரு, குட்டி வெளியே வருகிற துளை முதல் வயிற்றின் மேல் பகுதிவரையான பாகத்தை நக்கும். இப்படி நக்கி நக்கி தன் உடல் ரோமத்தின் வழியே ஒரு பாதையை ஏற்படுத்தும். குட்டி இந்தப் பாதை வழியே ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். அம்மாவின் பாலைத்தவிர மற்ற உணவை, செரிக்கக்கூடிய திறன் வரும்போதுதான் உட்கொள்ளும். இத்திறன் வரும் வரை குட்டி, அம்மாவின் பைக்குள்ளேயேதான் இருக்கும். குட்டியின் உடற்பகுதிகளெல்லாம் முழுமையாக வளர்ச்சியடைந்த பிறகுதான் கங்காரு, தன் குட்டியை கீழே இறக்கிவிடும். பிறகு எப்போதாவது நரியோ, கழுகோ, மற்ற விலங்குகளோ பிடிக்க வரும்போது குட்டி ஓடி வந்து தன் தாயின் பைக்குள் ஏறி ஒளிந்துகொள்ளும்

மருமகளின் பிறந்த நாள் வாழ்த்து

இன்று 07/11/2010 பரமேஸ்வரன் விவிதா தனது 4 வது பிறந்த தினத்தை காரைதீவில் வெகு விமர்சையாக தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ என பெற்றோர்களான பரமேஸ்வரன் நிதர்சினி ,அம்மம்மா அன்னலெட்ச்சுமி, அம்மப்பா பரநிருபசிங்கம், அன்ரிமார்களான ஜெயதர்சினி கோகுலதர்சினி ,சித்தப்பா அருள்வண்ணன்,தம்பி துலக்சனன் ,மாமா சிவதர்சன் , சார்பில் விவிதாவை வாழ்த்துகின்றோம்





Saturday, November 06, 2010

ஆண் இனங்களிலேயே பிரசவிக்கும் திறன்படைத்த ஒரே உயிரினம் கடல்குதிரைகள் தான்

கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை அரசு தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடலமைப்பை பொருத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல் போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறது. உடலில் பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 6 செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையும் இருக்கிறது.

பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும்.

உலகில் மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளான கடற்புற்கள் பவளப்பாறைகள் நிரம்பிய இடங்களில் வாழ்கின்றன இவற்றின் முக்கிய உணவு இறால்களாகும். கடல் குதிரைகள் தங்களின் வாலைப் புல்களில் கட்டிக்கொண்டு நிற்க முடியும். இதன் உடல் கடினமான எலும்பு போன்ற பொருள்களினால் ஆன போதிலும் நண்டு பெங்குவின் முதலியன இவற்றை வேட்டையாடி உண்கின்றன. பெரும்பாலான மீன்கள் கடல் குதிரையைக் கண்டுகொள்வதில்லை.கடல் குதிரைக்குக் கடலில் உள்ள விரோதிகளைக் காட்டிலும் நிலத்தில் உள்ள விரோதியான மனிதன் தான் மிகுந்த தொல்லை கொடுக்கிறான்.

மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம்தான் கடல்குதிரை. பார்ப்பதற்கு முதலைக் குட்டியைப் போலிருக்கும். ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற அமைப்பு இருக்கும். ஆண் கடல் குதிரைகளின் இந்தப் பையில்தான் பெண் கடல் குதிரைகள் முட்டையிடுகின்றன. முட்டைகள் பொரிவதும் வெளிவரும் குஞ்சுகள் சிறிது காலம் வளர்வதும் இந்தப் பையில்தான். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் அப்பா கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது
அது நீருக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும். உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும்.

இதில் பிரச்சனை என்னவென்றால் கடல்குதிரையின் இனப்பெருக்க வேகம் மிகவும் குறைவு. மனிதர்களுக்கு வேகத்தைத் தரும் கடல் குதிரைகளுக்குத் தான் வேகம் வருவதில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில் கடல் குதிரைகள் என்கிற இனம் என்ன ஆகுமென்று யாருக்கும் தெரியாது.

"உலகத்திலேயே கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று கொள்ள முடியும்"