Tuesday, September 14, 2010

தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் கழுகு கண்

கழுகால் அந்தளவுக்கு கூர்மையாக பார்க்க முடிவது எப்படி? முதலாவதாக கோல்டன் ஈகிளின் இரண்டு பெரிய கொட்டைக் கண்கள் அதன் தலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து விடுகின்றன. பொன் கழுகின் கண்கள் "எந்தளவுக்கு பெரியதாக இருக்க முடியுமோ அந்தளவுக்கு பெரியதாக இருக்கின்றன".

மேலும் நமக்குள்ளதை விட சுமார் ஐந்து மடங்கு அதிகமான ஒளி உணர்வு செல்கள் கழுகின் கண்களில் உள்ளன. நமக்கு ஒரு சதுர மில்லி மீட்டரில் 200,000 கூம்பு செல்களே இருக்கின்றன. கழுகிற்கோ சுமார் 1,000,000 கூம்புசெல்கள் உள்ளன. ஒவ்வொரு உள்வாங்கியும் ஒரு நியுரோனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் கண்களிலிருந்து மூளைக்கும் செய்திகளை சுமந்து செல்லும் கழுகினுடைய பார்வைநரம்பில் மனிதனுக்கு உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமான நார்கள் (Fibers) காணப்படுகின்றன. அந்தப் பறவைகள் நிறங்களை அடையாளங்கண்டு கொள்வதில் பலே கில்லாடிகளாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. இறுதியாக மற்றப் பறவைகளைப் போலவே இரையைக் கொன்று தின்னும் இப்பறவைகளின் கண்களிலும் சக்திவாய்ந்த"லென்ஸ்" உண்டு. இதனால் ஒரு அங்குலம் தூரமுள்ள பொருட்களிலிருந்து வெகு தொலைவிலுள்ள பொருட்கள் வரை எதையும் சட்டென "ஜூம்" (Zoom) செய்து பார்க்ககூடியதாயுள்ளது. இந்த விஷயத்திலும் அவற்றின் கண்கள் நம்முடையதைவிட ரொம்பவே மேலானவை.

(Hawk Eye Technology)கழுகு கண் தொழிற்நுட்பம் என்றால் என்ன?

கழுகு கண் தொழிற்நுட்பம் நான்கு அதி வேக புகைப்பட கருவிகளை வேறு வேறு இடத்தில் வைத்து இயக்கி அதிலிருந்து பெறப்பட்ட படங்களை முக்கோண உருவாக்கம் (Triangulation) முறைப்படி கணக்கிட்டு பயன்படுத்தக்கூடிய தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மென்பொருளின் உதவியுடன் பந்துகள் விழுந்த இடத்திலிருந்து எங்கெல்லாம் செல்ல வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை கணக்கிட்டு படங்களாக வெளியிடுகின்றன. படத்தொகுப்புகள் அதி வேக புகைப்பட கருவிகள் மூலம் எடுக்கப்படுவதால் மிகத்துள்ளியமாக பந்து விழுந்த இடத்தை படம் பிடித்துக் கொடுக்கிறது. டென்னிஸ் ஆட்டத்தில் இந்த கழுகு கண் தொழில்நுட்ப முறை பல நேரங்களில் விளையாட்டு வீரர்களுக்கு பந்து கோட்டை தொட்டு சென்றால் அது அவுட்' டா இல்லையா என்ற சந்தேகத்தில் உதவியுள்ளது.

பந்தின் விட்ட அளவை பொருத்தும் இந்த முக்கோண உருவாக்க முறையில் கணக்கீடு செய்வதால் பூச்சிய புள்ளியிடங்களில் பிழை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதும் இதில் உள்ள ஒரு எதிர்மறையான விஷயம். இருந்தாலுமே அந்த பிழையின் அளவு மிக மிக சிறிய அளவில் இருப்பதால் அதை பெரிது படுத்தாமல் மேலும் பல வழிகளில் இது உதவியாகவும் உடனுக்குடன் தேவையான படத்தொகுப்புகளை நடுவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் கொடுப்பதாலும் இதனை தொடர்ந்து பயன்படுத்துவதில் எந்த எதிர்ப்பும் வரவில்லை எனலாம்.

இதனை சேனல் 4 முதன் முதலில் 2001 ஆம் வருடம் இங்கிலாந்திற்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் உபயோகப்படுத்தியது. கிரிக்கெட் டில் பொதுவாக LBW “OUT” ' கொடுக்கப்படும் இடங்களில் மைதானத்தில் உள்ள நடுவர்களுக்கு சரியான முடிவை அறிவிக்க முடியாதபட்சத்தில் மூன்றாவது நடுவருக்கு அனுப்பட்டு அவரின் முடிவு இறுதியாக அளிக்கப்படும். மூன்றாவது நடுவர் இந்த கழுகு கண் தொழிற்நுட்ப வசதியுடன் பந்து விழுந்து எகிறி மட்டை வீச்சாளரின் (BatsMan) கால்களில் பட்டதா மட்டையில் பட்டதா பந்து பிட்ச் ஆன இடம் அது சென்று ஸ்டெம்பைத் தாக்குமா என்பது வரையில் துள்ளியமாக கவனித்து ஆட்டக்காரர் ஆட்டத்தை இழந்தாரா இல்லையா என்று அறிவிப்பார். நாம் இதனை 'மானிட்டர் பார்த்து' என்று மிக எளிதாக நினைத்துக்கொண்டாலும் இதற்கு பின்னால் கழுகு கண் தொழில்நுட்பமே வேலை செய்கிறது.

பிற்பாடு கிரிக்கெட் டென்னீஸ் இரண்டு விளையாட்டிலுமே இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி பிடிக்கும் படங்கள் தனிப்பட்ட முறையில் வீரர்களின் விளையாட்டு திறனை ஆராய்ந்து கொள்ளவும் அவர்கள் செய்யும் தவறுகளை துள்ளியமாக கவனித்து சரி செய்து க்கொள்ளவும் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இது தவிர்த்து ஸ்னூக்கர் விளையாட்டிலும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Hawk Eye Technology என்பது கணினியில் அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மென் பொருளின் உதவிக்கொண்டு கணக்கிட்டு செய்யக்கூடியது. இதனை Hawk-Eye Innovations Ltd என்ற கம்பெனி ஆரம்பித்து செய்துவருகிறது. இதனை Roke Manor Research Limited சேர்ந்த Romsey,Hampshire என்ற இரண்டு பொறியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். அதற்கான காணொலி செயலி (Video Processor) யை Dr Paul Hawkins and David Sherry என்ற விஞ்ஞானிகள்தயாரித்துள்ளனர்.

2 comments:

  1. தங்களின் அக்கங்கள் எப்படி எல்லோரையும் சென்றடைகிறது என்பதை தங்களுக்கான வாக்குகள் சொல்கிறது சகோதரா... என்னைப் போல் கிறிக்கேட் காதலர்கள் அறியாத விசயம் ஒன்று மிகவும் அருமையாக இருக்கிறது.. என்ன செய்வது ஒரு ஓட்டுத் தானே போட விடகிறாங்கள்...

    ReplyDelete
  2. "ஒரு ஓட்டுத் தானே போட விடகிறாங்கள்.".நன்றி சகோதரம்.

    ReplyDelete