Tuesday, September 28, 2010

அதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம்

அம்பர் (amber) என்பது பொன் நிறத்தில் உள்ள ஒரு பொருள். இது காலத்தால் சற்றேறக் குறைய கல்போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். பெரும்பாலான அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டியாய் ஆன மரப்பிசின் ஆகும்.

அம்பர் என்பது தமிழில் ஓர்க்கோலை பொன்னம்பர் பூவம்பர் மீனம்பர் தீயின்வயிரம் செம்மீன் வயிரம் மலக்கனம் கற்பூரமணி என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது. மரப்பிசினில் விழுந்துவிட்ட சிறு பூச்சிகளும் அப்படியே காலத்தால் உறைந்திருப்பது பார்க்க வியப்பூட்டுவதாகும். இப்படி தொல் பழங்காலத்து பயினி மரம் போன்ற மரங்களின் மரப்பிசினில் விழுந்து விட்ட பூச்சிகளில் சில இன்று நிலவுலகில் இல்லாமல் முற்றுமாய் அற்றுப்போய்விட்டவை. இந்த அம்பர் கட்டிகள் பால்ட்டிக் கடற்கரைகளிலும் கடலடியிலும் கிடைக்கின்றன. சில சிறு அம்பர் கட்டிகள் மீனின் வயிற்றில் இருந்தும் எடுத்துள்ளனர்.

திட்டப்படாத அம்பர் கற்கள்
திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் 'அம்பர்' எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுவதால், இது, கிலோ, பல லட்சம் ரூபாய்க்கு விலைபோகிறது. வாசனை பொருட்களில் எத்தனையோ ரகங்கள் உண்டு. இதற்கெல்லாம் மேலாக அம்பர் எனும் விலை உயர்ந்த வாசனை திரவியம் உற்பத்தியாகும் விதம் குறித்து, பலரும் பல விதமாக கூறுகிறார்கள். ஆனால் அம்பர், திமிங்கலம் உமிழும் எச்சத்திலிருந்து உற்பத்தியாகிறது என்பதுதான் உண்மை.


ஆழ்கடலில் வசித்து வரும் திமிங்கலம், அன்றாட உணவாக, கணவாய் மீனையே விரும்பி உட்கொள்கிறது. கூரிய முட்களை உடைய இந்த மீனை, சாப்பிடும்போது இதன் முட்கள் தொண்டையில் குத்தி விடும். இதன் காரணமாக ஜீரண சக்தியை இழக்கும் திமிங்கலம், தொண்டையில் மாட்டிக்கொண்ட முள்ளை வெளியேற்ற, வாந்தி எடுக்கும்போது ஒரு வகை திரவம் வெளியேறுகிறது. இதுவே திமிங்கலத்தின் எச்சம் என்பர். பெருங்கடலில் மிதந்து வரும் அம்பர், கடல் அலைகளால் கரைக்கு அடித்து வரும்போது, படிப்படியாக உருண்டை வடிவம் பெற்று, கடற்கரையில் ஒதுங்குகிறது. இது கருப்பு, வெள்ளை நிறமாக காணப்படும்.

அம்பர், உருண்டை ஒருவருக்கு கிடைத்து விட்டால் அதுவே அவருக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம். இதை ஆங்கிலத்தில் 'அம்பர்கிரிஸ் 'என அழைக்கின்றனர். பார்ப்பதற்கு அருவருப்பாக காணப்படும் இதை, நெருப்பால் சூடாக்கினால் மணம் கமழும் வாசனை வெளிவரும். பொதுவாக மேலைநாடுகளிலுள்ள கடற்கரையில் தான் அம்பர் உருண்டை கண்டெடுக்கப்படுகிறது. இதை எளிதில் அடையாளம் காண முடியாது. பரம்பரையாக கடல் தொழிலில் அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே காணமுடியும்.

இது தண்ணீரில் கரையாது. ஆனால் மதுபானங்களில் போட்டால் கரைந்து விடுகிறது. வாசனை திரவியங்களுடன் கலப்பதற்கும் மட்டுமன்றி, விலை உயர்ந்த மதுபானங்களின் வாசனைக்கும், உயிரோட்டம் கொடுக்கும் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. அம்பர் உருண்டை, ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் வரை மதிப்பிடுவார்கள். இதை கொண்டு தயாரிக்கப்படும் வாசனை திரவத்தை , துணியில் தடவினால், எத்தனையோ நாட்களுக்கு அதன் வாசனை நிலை கொண்டிருக்கும்.

இந்த அம்பர் கட்டிகளை துணியில் தேய்த்த பின் சிறு வைக்கோல் துண்டுகளை ஈர்ப்பதை கிரேக்க நாட்டில் உள்ள தாலஸ் என்பவர் கி.மு 600 வாக்கில் கண்டுபிடித்தார். ஏறத்தாழ கி.மு. 300ல் வாழ்ந்த கிரேக்க மெய்யியல் அறிஞர் பிளேட்டோ அவர்கள் அம்பரின் இந்தப் பண்பைப் பற்றி குறித்துள்ளார். இந்த அம்பரை கிரேக்கத்தில் எலெக்ட்ரான் என்கின்றனர் (இதன் அடிப்படையில் இதனை இலத்தீனில் எலெக்ட்ரம் என்பர்).

வியக்க வைக்கும் கறையான்களின் உலகம்


கறையான்கள் ஏறத்தாழ 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னரும் இப்பூமியில் வாழ்ந்து வந்தன. இதற்கான ஆதாரங்களை அதற்குரியத்தொல்லுயிர் எச்சம் மற்றும் அம்பர்உறுதிசெய்கின்றன

கறையான்களை வெள்ளை எறும்புகள் என்றும் அழைக்கின்றனர். இன்றையக் கறையான்களில் பத்து சதவிகிதமே நமக்கு பொருளாதார சீர்கேட்டை உருவாக்கும். மற்றவை தேவையில்லாதகளை உண்டே வாழ்கின்றன. இக்கறையான்களின் வாழிடக் காற்றோட்ட நு
ட்பங்களை நாம் அவசியம் அறிய வேண்டும்

கரையான்களின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன ஒருவித மிதவை உந்து விசைகளை உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று உள்ளீடற்ற குழாய் மூலம் மேலே வருகிறது.

அப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிசன் கரியமில வாயு வெப்பம் நீராவி ஆகியன அடிப்பரப்புக் குழாய் வழியாக புற்றின் வெளிக்காற்றுடன் வேதியியல் பரிமாற்றம் செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று மீண்டும் புற்றுக்குள் உள்ளீடற்ற குழாய் மற்றும் அடிப்பரப்புக் குழாய்கள் வழியாக உள்ளிழுக்கப்படும். இங்ஙனம் வெளிக்காற்று புற்றினுள் சென்று புற்றின் உட்புறத்திற்க்குச் சென்றடைந்து புற்றின் உட்புற வெப்பத்தைத் தணித்து குளுமையாக மாற்றும்.இக்குளுமை எப்பொழுதும் நிலவுவதால் புற்றினுள் வளர்சிதை மாற்றங்கள் சிறப்பாக அமைய உதவுகிறது.

கறையான்கள் கூட்டமாக வாழும் இயல்புடைய ஒரு சமுதாய பூச்சி வகையாகும். இவை தனித்து வாழாமல் கூட்டமாக வாழும் இயல்புடையது. கறையான் கூட்டத்தில் 500 முதல் 500000 வரை கறையான்கள் இருக்கும். ஒரு கறையான் கூட்டத்திலுள்ள கறையான்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை வருமாறு;


பெயர் வேலை குறிப்பு
1.இராணிக்கறையான்கறையான்களை வழிநடத்துதல்குட்டி போடுதல்
2.ஆண்கறையான்இனக்கலவி புரிதல்எந்த வேலையும் செய்யாது
3.வாகைக்கறையான்பாதுகாப்புப் பணிகுருடு; மலடு; ஆண், பெண் உண்டு;

1-2ஆண்டு வாழும்.

4.பணிக்கறையான்உணவு கொடுத்தல், புற்றுக்கட்டுதல்குருடு; மலடு; ஆண், பெண் உண்டு; 1-2ஆண்டு வாழும்

மழைக்காலத்தில் வயது முதிர்ந்த கறையான்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பது இயற்கை நியதி. எனவே அவை இறக்கை முளைத்து ஈசல்களாக வெளியில் வந்து கொஞ்ச நேரத்திலேயே இறக்கையை இழந்து ஒரே நாளில் உயிரை விட்டுவிடும். அதனால் கறையான்களின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப்படுகிறது.

இராணிக்கறையான்

ஆண்கறையானுடன் கலவியை முடித்தபின்பு இராணிக்கரையானின் அடிவயிறு வளரத் தொடங்கிவிடும். அடிவயிறு சுமார் 15 செ.மீ வரை வளரும். புற்றின் ஆரம்ப காலத்தில் இராணி இடத்தை தேர்ந்தெடுத்து சிறுகுழிப் பறித்து முட்டைகள் இடும். இராணிக்கரையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது ஒவ்வொரு 15 நொடிக்கும் ஒரு முட்டை வைக்கும். இராணிக்கரையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும்.
ஒரு கறையான் கூட்டத்தில் ஒன்றிற்க்கும் மேற்பட்ட இராணிகள் இருக்கும். அவைகளும் முட்டைகள் இடும்.முதன்மை இராணி இறந்தால், மற்ற இராணிகள் அதன் பணிகளைத் தொடர்ந்து செய்யும்

ஆண்கறையான்கள்
சில சிற்றினங்களில் மட்டுமே ஆண் கறையான் இறந்தாலும் மற்றொரு ஆண் கறையான் இராணிக்கறையானுடன் கலவி புரிந்து இனப்பெருக்கம்செய்யும். இராணிக்கறையானின் முட்டைகளிலிருந்து பொரிந்து வரும் குஞ்சுகளை ஆண் கறையான் பாதுகாக்கும். பின்பு கறையான்கள் பெருகியவுடன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் பணியினை பணிக்கறையான்கள் செய்கிறது. ஆண் கறையான்கள் பெரும்பாலும் சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பதில்லை. அங்ஙனம் இருந்தால் அவை இறந்து விடும்.

1976ஆம் ஆண்டு இடான்சானியா நாட்டின் 5 மீட்டர்களுள்ள கறையான் புற்றின் நிழற்படம்

வாகைக்கறையான்களும், பணிக்கறையான்களும் மலட்டுத் தன்மை கொண்டவை. ஆனால் இவை பிறவியிலேயே மலடுகள் அல்ல. இராணிக்கரையான் தன் உடலிலிருந்து சுரக்கும், ஒருவித சுரப்பி்னை உண்பதால், இம்மலட்டுத்தன்மை அவைகளிலே ஏற்படுகிறது.

வாகைக்கறையான்
பருத்தத் தலையுடன், அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும்.இவை பகைவர்களைத் தாக்குதல் நடத்தி விரட்டி விடும்.
துப்பிக்கறையான் - இவை பகைவர்களின் மீது, துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டி விடும்.

பணிக்கரையான்கள்
தங்கள் உமிழ்நீரையும் மண்ணையும் கலந்து புற்றினைக் கட்ட ஆரம்பிக்கும். அனைவருக்கும் உணவு கொடுக்கும். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் இறந்து விடும்

கறையான்களின் உணவில் பெரும்பாலும் செல்லுலோசு உள்ளது.தாவரங்களிலுள்ள செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதி கரையான்களுக்கு இல்லை. கரையான்கள் தங்கள் குடலில் புரோட்டோசோவாக்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும். இதற்குக் கைம்மாறாக Protozoa க்கள் கரையான்களுக்கு செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும்

Saturday, September 25, 2010

தேனீக்களின் பல அதிசயத் தக்க விஷயங்கள்

உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி (Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


இவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன், பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயத் தக்க விஷயங்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன.


தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன.
இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில் ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை

தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.

1. இராணித் தேனீ (Queen-Productive Female)

2. ண் தேனீக்கள் (Drone)

3. வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee-Non Productive Female)


ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும்.
இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது. மேலும் இவற்றைக் கொண்டு கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி செய்யப்படுகின்றன.

இராணித் தேனீ
இராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16 நாட்களுக்குப் பிறகு முழு வளர்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்தவுடன் ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் பறந்து வெளியில் செல்கின்றது. தரை மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்திற்கு மேல் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் உறவு கொள்கின்றது.
அதன் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களை பெற்றுக் கொள்கின்றது. அதன் பின்னர் அவை இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை. அவை ஆண் ஈக்களிடமிருந்து பெற்ற அந்த உயிரணுக்களைக் கொண்டே அது இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும்.

இவை இடைவிடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என்பதே இல்லை என்று சொல்லுமளவிற்கு பணியில் ஈடுபடுகினறது. இராணித் தேனீயின் உணவுத் தேவையை கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன. 20 முட்டை வரை இட்டதன் பின்னர், முட்டை இட்ட களைப்புத் தீர ஒரு முறை இவற்றிற்கு ஆகாரம் அளிக்கப்படுகின்றது.

ண் தேனீக்கள் (Drone)

ஆண் தேனீ பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை.

நான் ஆண் என்று வீரவசனம் பேச இவற்றிற்கு கூட்டிற்குள் எந்தத் தகுதியும் இல்லை என்பதை இவை உணர்ந்து சமர்த்தாக நடந்து கொள்கின்றன. இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து வாழ்கின்றன

இவை செய்யக் கூடிய உருப்படியான காரியம் என்னவென்றால் புதிதாகப் பொரித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதுதான். இந்த ஒரு இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக் கொள்ளப்படுகின்றன.

வேலைக்காரத் தேனீக்கள்

மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, லார்வாக்கள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப் படுகின்றது. இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் இரசாயண மாற்றம் செய்யப்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது.

தேனின் மருத்துவக் குணங்கள்

பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக தேன் விளங்குகிறது
  • உடல் பருமனாக குளிர்ந்த நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை கூட்டலாம்
  • உடல் பருமனைக் குறைக்க மிதமான வெந்நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை குறைக்கலாம்.
  • வெற்றிலைச்சாற்றுடன் தேனை கலக்கி குடிக்க சளிஇ இருமல் போன்றவை நீங்கும்.
தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.இவை வா‌ழ்நா‌ளி‌ல் பற‌க்கு‌ம் மொ‌த்த தூர‌ம், பூ‌மியை 4 முறை வல‌ம் வ‌ந்தத‌ற்கு சமமானதாகு‌ம்.

Friday, September 24, 2010

எங்களுக்கென்று ஒரு தனி Tamil Bamini keybord Layout

Tamil Bamini keybord Layout for windows by Prasath (karaitivu.org)

இவ் மென்பொருளை karaitivu.org File Cabinet ல் இருந்து (http://www.karaitivu.org/Home/file-cabinet) தரவிறக்கம் செய்யவும். இம்மென்பொருளானது Beta நிலையில் உள்ளது. மென்பொருளை பாவிக்கும் போது பிழைகள் (Bugs) ஏற்படின் info@karaitivu.org க்கு அறியத்தரவும்.

BamiSATH மென் பொருளானது இலவசமாக, எந்தவொரு உத்தரவாதமும் இன்றியே வழங்கப்படுகிறது.




















*Note:

BamiSATH மென்பெருளை தரவிறக்கம் வழங்கும் அனுமதி karaitivu.org க்கு மட்டுமே உள்ளது. உங்கள் இணையத்தளத்திலும் வளங்க விரும்பின் http://www.karaitivu.org/Home/file-cabinet எனும் இணைய முகவரியை உங்கள் இணையத்தளத்தில் கொடுக்கவும்.

இது பற்றிய உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலதிக தகவலுக்கு Prasath Mendis Appu
sathpra@gmail.com

Thursday, September 23, 2010

ஓரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள்

மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து சொன்னார்கள்.

பொதுவாக மனிதர்களைத் தாக்கும் 4448 நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும் கூறினார்கள். மேலும் நோய்கள் வரும் முன் காக்க இந்த மூலிகைகளின் பயன்களையும் கண்டறிந்தனர். உணவின் மூலம் நோய்கள் தாக்காமல் இருக்கவும் வழி வகை செய்தனர். இதனால் நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றோ குழந்தைப் பருவத்திலிருந்தே இனம்புரியாத பல்வேறு நோய்களின் பிடியில் மனித இனம் சிக்கித் தவிக்கின்றது.


Sanskrit : Charati

Tamil : Oridhazh thamarai

English : Hybanthus

Telugu : Nilakobari

Malayalam : Orilai thamarai

Hindi : Ratna purush

Bot. Name : Hybanthus enneaspermus

இடைப்பட்ட காலத்தில் மூலிகைகள் மீது நாம் காட்டிவந்த அலட்சியமே இதற்குக் காரணம்.
நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை களை என்று எண்ணி அழித்த நாம் இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது அவை நம் கண்ணில் அகப்படுவதில்லை.
இந்த கட்டுரையில் ஓரிதழ் தாமரையின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
தாமரை என்றவுடன் நீரில் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இது நிலத்தில் வளரும் சிறு செடி வகையாகு

இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது.


இதற்கு இரத்தின புருஷ் என்ற பெயரும் உண்டு


சிலர் உடல் நலம் பேணாமல் இரவு பகல் பாராமல் பொருள் தேடி அலைகின்றனர். அதிக தூக்கமின்மை, நேரத்திற்கு சரியாக உணவு அருந்தாமை போன்ற காரணங்களால் பலரின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மேலும் சில தீய பழக்கங்கள் குடிகொண்டு உடல் என்னும் கோவிலை நாசப்படுத்திவிடுகின்றன.


இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட ஓரிதழ் தாமரை மிகவும் பயனுள்ள மருந்தாகும். ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும்.


மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ் தாமரை சமூலம், பச்சை கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் மேகவெட்டை தீரும்.


உடலில் உள்ள புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.


சுரக்காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கசாயம் செய்து அருந்தி வந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும்.

உடல் எடை குறைய ஓரிதழ்தாமரை கசாயம் சிறந்தது.

இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம்.


ஆண்கள் சிலருக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளால் உடல் உறவில் நாட்டம் இன்றி இருப்பார்கள். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை (இலை, தண்டு, வேர், பூ, காய்) நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்த வேண்டும். இவ்வாறு ஒருமண்டலம் தொடர்ந்து செய்துவந்தால் மேற்கண்ட பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம். இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.


ஆதரவா மேனிக் கழகுதருஞ் - சீதம்போம்

சீரிதழ்த் தாமரைவாழ் செய்ய மடவனமே?

ஓரிதழ்த் தாமரையை யுண்

- அகத்தியர் குணபாடம்

நன்றி:-திரு.அ.சுகுமாரன்

Tuesday, September 21, 2010

நீ குடித்த தேனில் எல்லாம் 600 விதமான பாக்டீரியாக்கள்

மன்னிக்கவும் என்னடா தலைப்பில நீ குடித்த தேனில் எல்லாம் 600 விதமான பாக்டீரியாக்கள் என்று எண்ணக்கூடும் தேன் பற்றியது அல்ல வாயில் வாழும் பாக்டீரியாக்கள் பற்றியது
“தேன் குடித்த உன் உதட்டில் தேன் குடித்தேன்..நான்
நீ குடித்த தேனில் வெறும் இனிமை...
நான் நீ குடித்த தேனில் எல்லாம் புதுமை....”

இது எனது முகப்புத்தகத்தில் நான் தேடி எடுத்து போட்ட கவிதை இதற்கு வந்த comments ல் ஒன்று
Other than Water, Electrolytes, Mucus, Antibacterial compounds, Various enzymes, & Opiorphin (a newly researched pain-killing substance found in human saliva) human saliva contains possibly as much as 8 million human and 500 million bacterial cells per mL. The presence of bacterial products causes saliva to sometimes exhibit foul odor.
அதெப்படி இந்த mixture உங்களுக்கு தேனாகியது?

அதற்காக தேடி எடுத்து போடப்பட்ட பதிவே இது

நமது அனுமதி இல்லாமலேயே நம்முடைய வாயில் 600 விதமான பாக்டீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை உடல் செல்களின் எண்ணிக்கையைப்போல் பத்துமடங்கு அதிகம்.

உங்களுடைய வாயில் உள்ள பாக்டீரியா குடும்பமும் உலகின் வேறொருபகுதியில் வாழும் இன்னொருவரின் வாயில் வாழும் பாக்டீரியா குடும்பமும் ஒன்றுபோல் இருப்பது என்பது அதைவிட வியப்பானது. உலகம் முழுவதிலுமிருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபிறகு இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

மனிதனின் சிறுகுடலிலும், தோலிலும் குடியிருக்கும் பாக்டீரியாக்கள் பற்றியே இதுவரை ஆய்வுகள்
நிகழ்த்தப்பட்டு வந்தன. இப்போது மனிதனின் வாயில் வாழும் பாக்டீரியாக்களைப்பற்றி ஆய்வாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. நோய்களின் நுழைவுப்பாதை வாய் என்பதால் இந்த ஆய்வு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.

உமிழ்நீரை ஆராய்தல் என்பது முகம் சுளிக்கவைக்கும் செயல் என்றாலும், நம்முடைய வாயில் யார் குடியிருக்கிறார்கள் என்பதும் அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன என்பதையும் நாம் தெரிந்துகொள்வது முக்கியமில்லையா? நம்முடைய பிள்ளைகள் கைசுத்தமாகவும், வாய்சுத்தமாகவும் வாழவேண்டியது அதைவிட முக்கியம்.

Sunday, September 19, 2010

அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை

காட்டுப்பூக்களைப் போலவே அழகிய வண்ணத்தில் இருப்பதால் கடல் தாமரைகள் என அழைக்கப்படும் இந்த உயிரினத்தை ஆங்கிலத்தில் 'சீ அனிமோன்' என்கிறார்கள்.

''ஆக்டினாய்டியா என்பது இதன் விலங்கியல் பெயர். அரை செ.மீ முதல் 6 அடி வரை அழகிய ஆரங்கள் கொண்ட வட்ட வடிவத்தில் அழகான தோற்றம் உடையவை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் இருந்தாலும் இந்த உயிரினம் தனது வாழ்நாள் முழுவதும் கடலுக்குள் ஒரே இடத்திலேயே பட்டா போட்டுக் கொண்டு உயிர் வாழ்கின்றன. கால்களே இல்லாத இந்த உயிரினங்கள் ஆபத்து என்று தெரிந்தால் மட்டுமே ஒரு மிதவையைப் போல் மிதந்து வேறு இடத்திற்கு நகர்ந்து சென்று அமர்ந்து கொள்கின்றன

சுருக்கங்களுடன் கூடிய வட்ட இதழ்களை அற்புதமாக விரித்து கடலின் அடிப்பகுதியில் மணல் பரப்பிலோ அல்லது பாறைகளிலோ ஒட்டிக் கொண்டு உயிர் வாழ்கின்றன. இதன் வயிறு ஒரு குழாய் மூலம் இதழ்களோடு இணைந்திருப்பதுடன் உடலின் நடுவில் வயிறே வாய் போன்றும் செயல்பட்டு மற்ற மீன் இனங்களை விழுங்குகின்றன. இவற்றின் வகைகளில் சில மட்டும் தனது அழகிய இதழ்கள் மூலமாக மற்ற மீன்களை கவர்ந்து இழுத்து அருகில் வந்தவுடன் விஷ திரவத்தைப் பீய்ச்சிக் கொன்று பின்னர் வாய் போன்று இருக்கும் வயிற்றுக்குள் தள்ளி மூடி விடுகின்றன.

ஆணின் உறுப்புக்களும் பெண்ணின் உறுப்புக்களும் ஒரே தாமரையில் அமைந்தவாறு சில வகைகள் மட்டும் இருபால் உயிரியாகவும் செயல்படுகிறது. இருபால் உயிரினங்களாக இருப்பவற்றில் தாய் தாமரை பல துண்டுகளாகி சிதறிய பின்னர் அவற்றில் ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரியாக மாறி வளரத் தொடங்குகின்றன.

பெண் இனம் முட்டைகளை வாயாக இருக்கும் வயிற்றின் மூலமே வெளியேற்றுகிறது. முட்டைகள் கடலின் அடிப்பகுதியில் சுத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் ஒட்டிக்கொண்டு சில நாட்களுக்குப் புழுவாகவே வாழ்ந்து பின்னர் உருமாறி தாமரையாக மலர்கின்றன

வளர்ச்சியடையும்போது நுண்ணிய பச்சைப் பாசிகளையும் சேர்த்துக் கொண்டு அதன் இதழ்களுக்கு அழகிய நிறத்தையும் தாவரங்கள் போன்ற தோற்றத்தையும் தருகின்றன. மேலும் இவை சேர்த்துக் கொண்ட பச்சைப்பாசிகள் ஓரினச் சேர்க்கை நடத்திக் கொண்டு தனது தேவை போக மீத உணவை தாமரைகளுக்கு தானாகவே கொடுத்து விடுகின்றன.

கோமாளி மீன்கள் எனப்படும் ஒரு வகை மீன் இனம் மட்டுமே கடல் தாமரைகளுக்குள் உயிர் வாழக்கூடியது. இம்மீன்கள் பிடித்துக் கொண்டு வரும் இரைகளையும் தாமரைக்கு கொடுக்கின்றன. பொதுவாக மற்ற மீன்களை லாகவமாகப் பிடித்து விழுங்கும் கடல் தாமரைகள் கோமாளி மீன்களை மட்டும் விட்டு விடுகின்றன. துறவி நண்டுகள் எனப்படும் ஒரு வகை நண்டுகள் கடல் தாமரைகளில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்து சாப்பிடுகின்றன. வயதாகிவிட்ட கடல் தாமரைகளை டாக்டர் இறால்கள் எனப்படும் மீன்கள் சுத்தம் செய்கின்றன. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பச்சைக் கம்பள கடல் தாமரைகளே அதிகமாக காணப்படுகின்றன.

Saturday, September 18, 2010

அதிக ஓட்டளிப்புப் பட்டைகளை இணைப்பது எப்படி?


பல நாட்களாக என்னிடம் வலைப்பதிவு நண்பர்கள் பலர் கேட்ட கேள்விக்கான விளக்கத்தினை இன்று எனது 100 வது பதிவின் மூலம்பகிரவுள்ளேன்.....









அந்த கேள்வி என்னவென்றால் எவ்வாறு நீங்கள் அதிக ஓட்டளிப்புப் பட்டைகளை இணைத்துள்ளுர்கள்

அதற்கான விளக்கம் கீழே....

முதலாவதாக உங்கள் வலைப்பூவிற்கு நுழையுங்கள்

உங்கள் டாஷ்போர்டில் "Design" என்பதை கிளிக் செய்து அடுத்து "Edit HTML" என்பதை கிளிக் செய்யவும்

இரண்டாவதாக -layout — > html இற்குச் செல்லுங்கள் Expand Widget Template ஐ கிளிக் செய்யுங்கள்.

பின்னர் > யை தேடவும்.(easy way contrl button +f key press ,top of the blog u see one box come that box u copy the <data:post.body/> code and enter, now u can easy to find it)

அதற்கு பின்னர் அந்த code க்கு பின்னால் கீழே பாக்ஸில் உள்ள Code-ஐ காப்பி பேஸ்ட் செய்து save செய்யுங்கள்.

இங்கு பல ஓட்டளிப்புப் பட்டைகளை ஓன்றன் பின் ஒன்றாக உள்ளது.

அந்த அந்த லிங்கினை சொடுக்கி எவ்வாறு அங்குள்ள code ஜcopy and past செய்யவும்

stdbutton


Bogy



தமிழ்பெஸ்ட். காம்

best links in tamil



பின்பு Save Template கிளிக் செய்யவும்.

இனி உங்களது ஒவ்வொரு பதிவுகளிலும் ஓட்டளிப்பு பட்டை தெரியும்.

அந்த அந்த லிங்கினை சொடுக்கி எவ்வாறு அங்குள்ள code ஜcopy and past செய்யவும்