Wednesday, August 11, 2010

ஆந்தைகளின் இராட்சியம்


ஆந்தைகள் ஒரு காலத்தில் நம் முன்னோர்களை ஆட்டிப்படைத்து தான் இருக்கிறது அதற்கான சான்றுகள் கீழே

இந்தியாவில் பழமையான பஞ்சதந்திரக் கதைகளில் சித்தரிக்கப்பட்ட பல விலங்குக் கதாபாத்திரங்களில் ஆந்தையும் முக்கியமான ஒன்று. எனினும் இந்தியப் பண்பாட்டில் ஆந்தையின் அலறல் பயத்துக்குரியதாகவும் கெட்ட சகுனமாகவுமே கருதப்பட்டது.

ஆந்தைகளின் புத்தி கூர்மைக்கு சான்றாக அத்தீனா தெய்வத்துடனும் சம்பந்தப்படுத்தப்பட்டு வந்தது.

அத்தீனா கிரேக்கக் பழங்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் அறிவு தந்திரம் போர் இவற்றுக்கான கடவுள் ஆவார். இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே ஏதென்ஸ் நகரம் என்று ஒரு கிரேக்க நகரம் பெயரிடப்பட்டது.

பண்டைய எகிப்தியரின் எழுத்து வரிவடிவங்களில் 'ம்' ஒலியைக் குறிக்க ஆந்தை உருவமே பயன்பட்டது. எனினும் ஊனுண்ணியான இது உயிர்பெற்றுத் தாக்குவதைத் தடுக்க அதன் கால்கள் முறிந்த நிலையிலேயே வரைந்து வந்தார்கள். ஜப்பானியப் பண்பாட்டில் ஆந்தை இறப்பின் குறியீடாகக் கருதப்பட்டதுடன் இதனைக் காண்பதும் கெடுதியாகக் கருதப்பட்டது. ஹோபி பண்பாட்டில் இவை அழுக்கானவையாகவும் கஷ்டத்தைக் கொண்டுவருபவையாகவும் கருதப்பட்டன

இனி ஆந்தைகள் பற்றிய சிறு கண்ணோட்டம்

ஆந்தை ஸ்ட்றைஜிபோர்மெஸ் ஐச் சேர்ந்த தனித்த இரவில் திரியும் 174 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும். ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டிகள் பூச்சிகள் மற்றும் ஏனைய பறவைகளை வேட்டையாடும்.

ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும் காதுகளையும் சொண்டையும் மற்றும் facial diskஎன அழைக்கப்படும் தெளிவாகத் தெரியும் கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது.

ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும் அவற்றின் கண்கள் அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது.

ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை அவற்றின் கண்களுக்குச் சில அங்குலங்கள் தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாதவை. எனினும் அவற்றின் பார்வை விசேடமாக மங்கலான வெளிச்சத்தில் மிகவும் சிறப்பானது.
பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியை அவதானித்து வேட்டையாடக் கூடியவை. facial disk கொறிணிகளிடமிருந்து வரும் ஒலியைக் குவித்துக் காதுக்கு அனுப்ப உதவுகின்றன

ஆந்தைகளின் வலுவான நகங்களும் கூரிய சொண்டும் உண்பதற்குமுன் அவற்றின் இரைகளைத் துண்டுதுண்டாகக் கிழிப்பதற்கு உதவுகின்றன. சத்தத்தை அமுக்கும் தன்மையுள்ள அவற்றின் சிறகுகளும் மங்கலான இறகுகளும் அவை சத்தமின்றியும் காணப்படாமலும் பறப்பதற்கு உதவுகின்றன. உணவின் சமிக்கப்படமுடியாத எலும்புகள் செதில்கள் மற்றும் இறகுகள் போன்றவற்றை உருண்டை வடிவில் வெளிவிடும் இதன் நடத்தை இவற்றின் உணவுப் பழக்கம் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றது

எது எவ்வாறு இருப்பினும் ஆந்தைகளுக்கும் அழகு உண்டு. எனக்கு பிடித்த ஆந்தைகளுன் அழகான சில படங்கள்
4 comments:

  1. ஆந்தைகளை வடநாட்டில் லட்சுமியின் வாகனமாக சொல்வார்கள்.அதைக் கொன்றால் அடுத்த பிறவியில் பிச்சைக் காரனாய் பிறப்போம் என்றொரு கதை உண்டு.எனக்கும் பிடித்த பறவை ஆந்தையே.சித்தர்களின் பஞ்ச பட்சி சாத்திரத்தில் ஒரு பட்சி ஆந்தையே.கழுகுக்கு அடுத்து வலுவான பட்சி.

    ReplyDelete
  2. நன்றி உங்கள் தகவலுக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  3. தொடர்ந்து இது போன்ற ப்திவுகள் இடுங்கள்.வாழ்த்துக்கள்

    ReplyDelete