Monday, August 30, 2010

கடலில் ஒரு சோக மீன்

குழந்தை கையில் காலில் சிக்கி தோலுடன் பிதுக்கிய வாழைப்பழம் போல கொழ கொழ என்று இருக்கும். எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் சோகமான மூஞ்சியுடன். Sad fish அல்லது Blob fish என்று ஆங்கிலத்தில் பெயர்.

சோக மீன் ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா அருகில் ஆழமான கடலில் வசிக்கிறது. கொஞ்சமே தசைகள், எலும்புகள் கொண்டது. அதனால் மாம்பழ ஜெல்லோவை சேர்த்து செய்தது போல இருக்கும்.


கடல்நீரின் அடர்த்தியை விட இந்த சோக மீனின் உடம்பின் அடர்த்தி கம்மி. நூல்நூலாக இருக்கும் தாத்தா பூச்சி காற்றில் மிதக்கும் இல்லையா. அதுபோல சோக மீன் அடர்த்தி குறைவினால் கடலுக்கடியில் தரையில் படாமல் நீரில் தன்னாலேயே மிதக்கும். நீந்தவே வேண்டாம். மிதக்கையில் ஏதாவது சாப்பிட அகப்பட்டால் வாயை மட்டும் திறந்து லபக்.சோக மூஞ்சி சுக வாழ்க்கை

இன்று நாம் சோக மீனை தொடர்ந்து தூண்டில் வலை போட்டு நிறைய பிடித்துவிடுவதால் இந்த மீன் இனம் வேகமாக அருகி வருகிறதாம்.

சோக மீன் சோக வாழ்க்கை.

Thursday, August 26, 2010

உலகத்தின் உயர்ந்த பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம்

World 's Highest Bridge in France

மில்லோ (Millau Viaduct) என்னும் பாலம் தென் பிரான்சிலே உள்ள வியப்பூட்டும் பொறியியல் சாதனை படைத்த வான் வீதி என அழைக்கும் மிகு உயர் பாலம். இப்பாலம் டார்ன் ஆற்றுப் பள்ளத்தாக்கைக் கடக்க (1.6 மைல்) 2460 மீட்டர் நீளமுடைய பாலம். டிசம்பர் 14 2004ல் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது.

பிரான்சின் இரும்புவடத் தொங்கு பாலம்ஏழு கம்பங்கள் தாங்கி நிற்கும் 1.6 மைல் 2460 மீட்டர் நீளமான வான்வீதிப் பாலம் பிரான்சின் தெற்குப் பகுதியில் மாஸ்ஸிப் மைய மலைப் பிரதேசப் பள்ளத்தாக்கில் (Massif Central Mountains) 886 அடி 270 மீட்டர் உயரத்தில் படுத்திருக்கும் வானவில் போல காட்சி அளிக்கிறது! இந்த வான்வீதியில் மோட்டர் பயணம் செய்வதால் 60 மைல் (100 கி.மீ) பயண தூரம் குறைவதோடு 4 மணிப் பயண நேரமும் சேமிப்பாகிறது! ஏழு தீக்குச்சிக் கம்பங்களில் எல்லாவற்றுக்கும் பெரிய கம்பம் 1125 அடி 343 மீட்டர் உயரத்தில் ஐஃபெல் கோபுரத்தை விட 62 அடி மிகையாகப் பூமியில் ஊன்றப் பட்டுள்ளது ஒரு மகத்தானப் பொறியியல் சாதனையே!

மெலிந்த, எளிதான, மென்மையான மில்லா வான்வீதிப் பாலத்தைப் படைத்தவர், பிரிட்டிஷ் கட்டமைப்புக் கலை நிபுணர் நார்மன் பாஸ்டர்.ரைஸ்ஸ்டாக் [Reichstag] என்னும் ஜெர்மன் பாராளுமன்றத்தைப் பெர்லினில் டிசைன் செய்த கட்டிட நிபுணரும் இவரே.

வான்வீதிப் பாலத்தின் நீளம்: 8200 அடி (2460 மீடர்). அகலம்: 106 அடி (32 மீடர்). பாலத்தின் தடிப்பு: 14 அடி (4.2 மீட்டர்). இரட்டைப் பாதைகளை இருதிசைகளிலும் அமைக்கப்பட்டுப் பாலம், ஒரே சமயத்தில் இரண்டு வாகனங்கள் இணையாகச் செல்லும் வசதி படைத்தது


மில்லா நீள்பாலம் 120 ஆண்டுகள் நீடிக்கும் தகுதி உடையது என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து வாகனங்கள், தினம் சராசரி 10,000 என்றும், வேனிற் காலச் சுற்றுலாச் சமயங்களில் உச்சம் 25,000 ஆக ஏறும் என்று அனுமானிக்கப் படுகிறது. வாகனங்கள் பாலத்தில் பயணம் செய்யக் 'கடப்புக் கட்டணம் ' (Toll Fee) ஈரோ நாணயம் E 4.9 [6.5 டாலர்] செலுத்த வேண்டும். பளு வாகனங்கள், லாரி ஓட்டுநர் அதைப்போல் 4 மடங்கு தர வேண்டும். கூம்பிய நீள் தூண்கள், பாலத் தட்டுகள், அவற்றுக்குரிய சட்டங்கள் யாவும் சுமார் 36,000 டன் எடை கொண்டவை. கூடியவரை அவ்வுறுப்புகள் அனைத்தும், பாலம் அமைப்பாகும் தளங்களிலே ஒவ்வொன்றாய் இணைக்கப் பட்டன. பூமிக்குமேல் 1.6 மைல் நீளமுள்ள பாதைத் தட்டைப் பல நூறு அடி உயரத்தில் 7 தூண்கள் தூக்கிக் கொண்டு, மணிக்கு 150 மைல் (250 கி.மீ.) வேகத்தில் காற்றின் ஆற்றல் தாக்கினாலும், ஊஞ்சல் போன்று சிறிது ஆட்டம் ஆடிச் சாய்ந்து விடாதபடித் தாங்கிக் கொள்ளும் தகுதி பெற்றது, மில்லா வான்வீதி

2001 அக்டோபர் 17 ஆம் தேதி கட்டத் துவங்கி, 39 மாதங்களில் (3 வருடம் 3 மாதம்) 520 பணியாளிகள் வேலை செய்து கட்டி, பாலம் முடிக்கப் பட்டது ஒரு வியக்கத் தக்க சாதனையே. அதை அமைத்த முக்கிய பொறியியல் கம்பேனி: எஃப்பியாஜ் [Effiage]. அப்பாலத்தில் பயன்பட்டிருக்கும் இரும்புச் சாதனங்களின் எடையில் (36,000 டன்) ஐந்து ஐஃபெல் கோபுரங்களைக் கட்டி விடலாம்! வீதிக்குப் பயன்பட்டுள்ள காங்கிரீடின் கொள்ளளவு: 85,000 கியூபிக் மீடர்.

பிரென்ச் பொறியியல் நிபுணர்கள் 21 ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் மூன்றே ஆண்டில் 1.6 நீளமுள்ள மகத்தான ஒரு புதுவித வான்வீதியைச் சிக்கனமாக 520 மில்லியன் டாலரில் கட்டி முடித்தது மெச்சத் தகுந்த ஒரு மாபெரும் சாதனையே.

வான்வீதிப் பாலத் திட்டம் உருவாகிய வரலாறு

1989 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்ட நான்கு பாதை அமைப்பு முறைகளில் ஒன்றாக வான்வீதிப் பால மாடல் தேர்ந்தெடுக்கப் பட்டது. உயர மாடல் ஒன்றும், மட்டநிலை மாடல் ஒன்றும் அவற்றில் முக்கியமானவை. மட்டநிலை வீதி மாடலில் டார்ன் நதி மீது 667 அடிப் [200 மீடர்] பாலமும், அதை நீட்சி செய்து, 7670 அடி [2300 மீடர்] மலைக்குகைப் பாதையும் தேவைப்பட்டன. குகையைத் தோண்டுவதால் டார்ன் நதியின் நீரோட்டம் குறுக்கீடு ஆவதாலும், அருகில் உள்ள நகரின் அடியே பாதை செல்வதாலும் நிதிச் செலவு அதிகமாகித் தூரமும் மிகையானது. ஆகவே மட்டநிலை மாடல் வீதி அமைப்பு கைவிடப்பட்டு, உயரத்தில் செல்லும் வான்வீதி மாடல் தகுதி பெற்றது.
.
பிரான்சில் பட்டாம்பூச்சி போல் உயர்ந்த உலகத்தின் பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம்

Wednesday, August 25, 2010

உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்


டிரிஃப்ட் பாலம் (Trift Bridge) என்பது பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய உயர்வான பகுதியில் இருக்கும் உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம் ஆகும்.
இது சுவிட்சர்லாந்தில் உள்ளது. இதன் மொத்த நீளம் 170 மீட்டர் (560 அடி) உயரம் 100 மீட்டர்கள் (330 அடி) ஆகும்.டிரிஃப்ட் கயிற்றுப் பாலம் சுவிட்சர்லாந்தின் காட்மென் என்ற இடத்தில் டிரிஃப்ட்சீ என்ற ஆற்றிற்குக் குறுக்கே அமைந்துள்ளது.இங்கு ஆண்டு தோறும் 20000 இற்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகள் வருகை தருகின்றனர்.தற்போதைய புதிய பாலம் 2009 ஜூன் 12 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது. ஆறு வாரங்களில் இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டது.

டிரிஃப்ட் பாலத்தை கடத்து செல்லும் போது பிடிக்கப்பட்ட வீடியோ படம்

Tuesday, August 24, 2010

உலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை

அந்தரத்தில் பறந்துகொண்டே ஓரிடத்தில்
உலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை
Bee Hummingbird
சுண்டு ஓசனிச்சிட்டு ஆகும்.ஓசனிச்சிட்டுகள் என்னும் மிகச் சிறிய பறவைகள் சிறகடித்துக் கொண்டே பூவில் இருந்து தேனை உறிஞ்சி உண்டு வாழ்பவை. இவ்வினப் பறவைகள் வட தென் அமெரிக்கக் கண்டங்களில் மட்டுமே காணப்படுகின்றன. இப்பேரினத்தில் 320 வகையான ஓசனிச்சிட்டு வகைகள் உள்ளன.கியூபாவில் வாழும் ஓசனிச்சிட்டுகள் ஆகிய இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் மட்டுமே கொண்டுள்ளது

கியூபாவில் வாழும் சுண்டு ஓசனிச்சிட்டுகள் ஆகிய இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் மட்டுமே கொண்டுள்ளது.
மயில்கழுத்து நிறக் கன்ன ஓசனிச்சிட்டு
இப்பறவைகளின் புகழ்பெற்ற சிறப்பியல்புகளின் ஒன்று இது அந்தரத்தில் பறந்துகொண்டே பூவில் இருந்து தேன் உண்ணுவது. இதன் இறக்கைகள் நொடிக்கு 60-80 தடவை மிகமிக வேகமாக அடிப்பதால் 'உசுஉசு ' என்று எழும் ஒலியால் இதற்கு ஓசனிச்சிட்டு என்று பெயர். ஓசனித்தல் என்றால் பறவைகளின் இறக்கைகள் விரைந்து அடிக்கும் பொழுது எழும் ஒலி என்று பொருள். அந்தரத்தில் ஓரிடத்திலேயே பறந்துகொண்டே நிற்பது மட்டுமல்லாமல் இது பறந்துகொண்டே பின்னோக்கியும் நகரவல்லது; நெட்டாக நேர் செங்குத்தாக மேலெழுந்து பறந்து நகரவும் வல்லது. இப்பறவைகளின் உணவில் பூந்தேனும் சிறு பூச்சிகளும் முக்கியமானவை. உடல் வளர்ச்சிக்குத்தேவையான புரதச் சத்து பூச்சிகளை உண்பதால் பெறுகின்றன.

ஓசினிச்சிட்டின் குஞ்சுகள்
உலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகச் சிறிய கூடு ஓசனிச்சிட்டு பறவையின் கூடாகும். இதனுடைய கூட்டின் ஆழம் மிகக்குடியது 3 செ.மீ விட்டமுடையது. இது மே -யூன் காலப்பகுதியில் குஞ்சு பொரிக்கும் காலமாகும்.

சிறிய பறவைகளாகிய ஓசனிச்சிட்டுகளுக்கு நீளமான மெல்லிய குத்தூசி போன்ற அலகுகள் உள்ளன. நீளமான மெல்லிய அலகுகள் இருப்பது இப்பறவை இனத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று. இப்பறவையின் பிளவுபட்ட இரட்டை நாக்கு அலகுகளுக்கு வெளியேயும் நீண்டு பூவின் அடியே இருந்து பூந்தேன் உண்ண வசதியாக படிவளர்ச்சி அடைந்துள்ளது. நாக்கு குழல்போல் உருண்டு தேனுண்ன ஏதுவாக அமைந்துள்ளது. ஓசனிச்சிட்டுகளின் கீழ் அலகு பூச்சிகளைப் பிடிக்க வசதியாக விரிந்து கொடுக்கக்கூடியது.

தேனீயுடன் அளவை ஒப்பிடுமாறு நிற்கும் ஓசனிச்சிட்டு
பெரும்பாலான ஓசனிச்சிட்டுகள் கண்ணைக் கவரும் பளபளப்பாக ஒளிரும் நிறங்கள் கொண்ட தோற்றம் கொண்டவை. ஆண்-பெண் பறவைகளின் தோற்றங்கள் வெகுவாக மாறுதலாக இருக்கும் ஈருருப் பண்பு கொண்டவை. பெரும்பாலும் ஆண் பறவைகள் அழகான நிறம் கொண்டிருக்கும். பெண்பறவைகள் அப்படி இருக்காது ஆனால் இருபால் பறவைகளுக்கும் ஒளிரும் நிறங்கள் காணப்படும்.

ஓசனிச்சிட்டுகள் இனிப்புப் பொருள் மிகுந்துள்ள பூக்களையே அதிகம் விரும்புகின்றன. பூக்களில் இனியம் (சர்க்கரைப் பொருள்) 12% க்கு குறைவாக இருந்தால் அதிகம் நாடுவதில்லை. இனியம் 25% இருக்கும் பூக்களை அதிகம் நாடுகின்றன. பூந்தேனில் இனியம் இருந்த பொழுதும் பறவைகளுக்குத் தேவையான புரதச் சத்து அமினோக் காடிகள் உயிர்ச்சத்துகள் (வைட்டமின்கள்) கனிமப் பொருட் சத்துகள் கிடைப்பதில்லை. இதற்காகத் தேனுண்னும் பொழுது அதில் இருக்கும் பூச்சிகளையும் சிலந்திகளையும் உண்கின்றன. பறந்துகொண்டே பூச்சிகளைப் பிடித்தும் உண்ணும் திறன் கொண்டது இப்பறவை. ஓசனிச்சிட்டுகள் பூவுக்குப் பூ தாவி பூந்தேன் உண்ணும் பொழுது செடிகளுக்குத் தேவையான பூந்தூள் சேர்க்கை (மகரந்த சேர்க்கை) நிகழ்கின்றது

Saturday, August 21, 2010

உலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள்

1 வது நெதர்லாந்து Netherlands
1 வது நெதர்லாந்து Netherlands
உலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் நாடு நெதர்லாந்து ஆகும். சராசரியான உயரம் 6'0"ஆகும். இதனால் டச்சு அரசாங்கம் கட்டிட தினைக்களுங்களுக்கு புதிய அறிக்கையில் கதவுகளுக்கான உயரம் கட்டாயம் 6 அடிக்கு மேல் இருத்தல் வேண்டும் என்று கட்டாய நிபந்தனை போடப்பட்டுள்ளது.
2 வது சுவிடன் Sweden2 வது சுவிடன் Sweden
சராசரியான உயரம் 5'11."'.ஆகும்

3 வது டென்மார்க் Denmark

3 வது டென்மார்க் Denmark
சராசரியான உயரம் 5'11.1" ஆகும்4 வது Norway நோர்வே


4 வது Norway நோர்வே
சராசரியான உயரம் 5'10.7"ஆகும்.


5 வது Estonia எஸ்ரேனியா

5 வது Estonia எஸ்ரேனியா
சராசரியான உயரம் 5'10.5"ஆகும்6 வது Finland பின்லாந்து

6 வது Finland பின்லாந்து
சராசரியான உயரம் 5'10.2"ஆகும்.7 வது Germany ஜேர்மன்

7 வது Germany ஜேர்மன்
சராசரியான உயரம் 5'10.1"ஆகும்.8 வது Greece கிரேக்கம்

8 வது Greece கிரேக்கம்
சராசரியான உயரம் 5'10.1". ஆகும்.9 வது USA அமெரிக்கா

9 வது USA அமெரிக்கா
அண்மையில் எடுக்கப்பட்ட தரவுகளின் படி சகல இனத்தவர்களின் வயது அடிப்படையில் 20-29 வரை சராசரியான உயரம் 5'9.9"ஆகும்.


10 வது Australia அவுஸ்ரேலியா
10 வது Australia அவுஸ்ரேலியா
ஆரசாங்கத்தினால் அண்மையில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அவுஸ்ரேலிய ஆண்களின் உயரம் கூடிக்கொண்டு செல்வதாகவும் ஆனால் சராசரியான அவுஸ்ரேலியர் களின் உயரம் 5'9.8" ஆகும்

Friday, August 20, 2010

பச்சோந்தி நிறம் மாறும் விதம்

நிறங்கள் என்றால் இயற்கையும் கூட வரும்
நேசம் என்றால் செயற்கையும் கூட வருமா
நிறம் மாறுவதால் அது நேசமா?
மாறாதிருக்க அது போடுவது வேஷமா?


பச்சோந்தி ஊர்வன பிரிவைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். பச்சோந்திகள் அவற்றின் மனநிலை வெப்பம்இ ஒளி ஆகியவற்றைப் பொறுத்து தங்களின் தோலின் நிறத்தை மாற்றவல்லவை.

பச்சோந்தி தான் இருக்கும் இடத்திற்க்கு ஏற்றாற்போல் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் படைத்தது. இதற்கு காரணம் அதன் தோலில் உள்ள நிற செல்களுக்கும் அதன் மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்துகொண்டேயிருக்கிறது. பச்சோந்திக்கு காக்கை கழுகுகளால் ஆபத்து அதிகம். அதுமட்டுமல்லாமல் ஒரு பயந்த பிராணி. அதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும். பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. பச்சோந்தி தன் ஒரு கண்ணால் ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது.

நேரத்திற்கு ஏற்றாற்போல் உன்னை மாற்றும் மானிடா
பச்சோந்தி- நிறம் மாறும் தன் பார்வைக்கேற்ப
உன்னைப்போல் உருமாறுவதில்லை உன் வேட்கை தணிக்க
நிறம் கொண்டு மனம் மாறும் நீ
மனித இனத்தின் அவமானம்.
உன்னதம் அது உன் இனம்
சகித்து இருப்பின் சுகித்திருப்பாய்
சன்மானம் நீ .
படித்ததில் பிடித்தது

Wednesday, August 18, 2010

பண்டைய கிரேக்கக் கடவுளான பன்னிரு ஒலிம்பியர்கள்

பண்டைய கிரேக்கக் கடவுளான பன்னிரு ஒலிம்பியர்களை பற்றிய பதிவு ஆகும்

ஆர்ட்டெமிஸ்
ஆர்ட்டெமிஸ் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஒரு முதன்மையான பெண் கடவுள் ஆவார். இவர் ஜூஸ் மற்றும் லீட்டோ ஆகியோரின் மகள். மேலும் இவரும் அப்போலோவும் இரட்டையர்கள். பிறப்பு அறுவடை இயற்கை ஆகியவற்றின் கடவுள ஆவார். இளம்பெண்களைக் காப்பவராகவும் இவர் விளங்குகிறார். இவர் கைகளில் வில்- அம்பு ஏந்திக் காணப்படுவார். இவருக்கு இணையான ரோமக்கடவுள் டயானா.
ஹெஸ்டியா

ஹெஸ்டியா பண்டைய கிரேக்கத் தொல்கதைகளில் வரும் பெண் கடவுள் ஆவார். இவர் ஹார்த் என்று அழைக்கப்படும் செங்கல் அல்லது கல்லால் ஆன அடுப்பிற்கு கடவுள் ஆவார். ஒவ்வோர் வீட்டிலும் உள்ள ஹார்த் இவரது உறைவிடமாகும். மேலும் நகர்மண்டபத்திலும் ஓர் அடுப்பு இருக்கும். அதுவும் இவரது உறைவிடம் ஆகும். பொதுவாக பண்டைய கிரேக்கர்கள் புதிய குடியேற்றங்களை அமைக்கும் போது இங்கிருந்து நெருப்பை எடுத்துச் சென்று புது இடத்தில் வைப்பர்.சூசு
சூசு கிரேக்கத் தொல்கதைகளின் படி கடவுள்களின் அரசன் ஆவார். இவர் ஒலிம்ப்பஸ் மலையை ஆள்பவர். வானம் மற்றும் இடி ஆகியவற்றின் கடவுள். இவருடைய சின்னங்கள் இடி கழுகு காளை மற்றும் ஓக் மரம் ஆகியனவாகும். இவர் குரோனஸ் மற்றும் ரியா ஆகியோரின் கடைசி மகன். இவருக்கு இணையான உரோமக் கடவுள் ஜூப்பிடர்.
இவருடைய மனைவி ஹீரா. அப்போலோ ஆர்ட்டெமிஸ் அத்தீனா ஆகியோர் இவரது மக்கள்.ஹெப்பஸ்தஸ்

ஹெப்பஸ்தஸ் ஒரு கிரேக்கக் கடவுள் ஆவார். இவர் பன்னிரு ஒலிம்ப்பியர்களுள் ஒருவர். இவர் நுட்பம் நெருப்பு மாழைகள் மாழையியல் ஆகியவற்றுக்கும் கருமான் கைவினைஞர் சிற்பிகள் ஆகியோருக்கும் கடவுள் ஆவார். இவரே எரிமலைகளின் கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார். ஹீரா இவரது தாய். ஏரிஸ் இவரது உடன்பிறந்தவர்.அப்ரடைட்டி

அப்ரடைட்டி பண்டைய கிரேக்கத் தொல்கதைகளில் வரும் பெண் கடவுள் ஆவார். இவர் காதல் அழகு lust இவற்றுக்கான கடவுள் ஆவார். இவருக்கு இணையான ரோமக்கடவுள் வீனஸ். புறா குருவி அன்னம் ஆகியன இவருக்கு புனிதமானவை ஆகும்.

போசீடான்

போசீடான் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஒரு கடவுள் ஆவார். இவர் கடல் நிலநடுக்கம் மற்றும் குதிரை ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார். இவருக்கு இணையான ரோமக் கடவுள் நெப்டியூன் ஆவார். இவர் ஜூஸ் கடவுளின் உடன் பிறந்தவர். இவருக்கு நிறைய பிள்ளைகள் இருந்தனர்

ஹெர்மிஸ்

ஹெர்மிஸ் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஓர் ஒலிம்பியக் கடவுள் ஆவார். இவர் பயணிகள் ஓடுகள வீரர்கள் புத்தாக்கம் எல்லை இடையர்கள் கவிஞர்கள் வணிகம் இவற்றுக்கான கடவுளாகத் திகழ்கிறார். மேலும் வஞ்சகத் திருடர்கள் மற்றும் பொய்யர்களின் கடவுளாகவும் இவர் விளங்குகிறார்.ஆமை சேவல் இரண்டு பாம்புகள் சுற்றிய கோல் ஆகியவை இக்கடவுளின் சின்னங்கள். ரோம கடவுளான மெர்க்குரி இக்கடவுளுக்கு சமமானவர்


டெமெட்டர்


டெமெட்டர் கிரேக்கத் தொல்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் டைட்டன்களாகிய குரோனஸ் மற்றும் ரியா ஆகியோரின் மகள். இவர் தானியம் மற்றும் அறுவடை இவற்றுக்கான கடவுள். இவருக்கு இணையான ரோமக்கடவுள் சீரஸ் ஆவார். பூவியின் பசுமை பாதுகாப்பவளாகவும் திருமண பந்தத்தை காப்பவளாகவும் புதிய காலநிலைகளை அளிப்பவளாகவும் நோக்கப்பட்டாள். கிரேக்க பழங்கதைகளின் படி டெமெட்டர் அளித்த பெருங்கொடை தானியங்களேயாகும். அவற்றின் முலமே மனிதன் விலங்குகளிடம் இருந்து வேறுபட்டு வேளாண்மையில் ஈடுபட்டான்.
ஏரிஸ்

ஏரிஸ் கிரேக்கத் தொல்கதைகளில் வரும் கடவுளர்களான ஜூஸ் மற்றும் ஹீரா ஆகியோரின் மகன் ஆவார். இவர் போருக்கான கடவுள். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மார்ஸ் ஆவார். போர்க்கலையில் சிறந்தவராக பொதுவாக அறியப்பட்டாலும் ஹோமர் எழுதிய இலியட் காப்பியத்தில் ஏரிஸ் சற்று கோழையாகவே சித்தரிக்கப்படுகிறார். இவரது தமக்கையான ஏதினா திட்டம் வகுத்து போரிடுவதால் போர்க்கலையில் சிறந்தவளாகவும் ஏரிஸ் சற்றும் திட்டம் வகுக்காமல் வன்முறையில் இறங்குபவராகவும் வர்ணிக்கப்படுகிறார்கள்


அப்போலோ

அப்போலோ கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்பட்டிருக்கும் ஒரு கடவுள் ஆவார்.இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். அப்போலோ கிரேக்கக் கடவுளர்களான ஜூஸ் மற்றும் லீட்டோ ஆகியோரது மகன்.ஆர்ட்டெமிஸ் இவருடைய சகோதரி ஆவார். இவர்கள் இருவரும் இரட்டையர்கள். இவர் வேளாண்மை கால்நடைகள் ஒளி உண்மை ஆகியவற்றுக்கான கடவுள் ஆவார். மேலும் இவரே மனிதர்களுக்கு நோய்களை குணப்படுத்தும் வித்தையைக் கற்றுக்கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது


அத்தீனா

அத்தீனா கிரேக்கக் பழங்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் அறிவு தந்திரம் போர் இவற்றுக்கான கடவுள் ஆவார். இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே ஏதென்ஸ் நகரம் என்று ஒரு கிரேக்க நகரம் பெயரிடப்பட்டது
ஹீரா
ஹீரா கிரேக்கத் தொல்கதைகளில் வரும் ஜீயஸின் அக்காளும் மனைவியும் ஆவார். இவள் திருமணத்தின் கடவுள். இவரே கிரேக்கக் கடவுளரின் அரசி. இவருக்கு இணையான ரோமக் கடவுள் ஜூனோ. போர்க்கடவுளான ஏரிஸ் இவரது மகன் ஆவார். வீறுடையவளாகவும் மன அமைதியுடையவளுமாகவும் சித்தரிக்கப்படும் ஹீரா வட்ட வடிவிலான மணிமுடியை தலையில் அணிந்திருப்பாள். தனது கையில் பண்டைய கிரேக்கத்தில் உதிரத்தின் அடையாளமாகவும் இறப்பின் அடையாளமாகவும் கருதப்பட்ட மாதுளம் பழத்தை கொண்டிருப்பாள்.
ஹீரா தனது பொறாமை குணத்திற்கும் பழியுணர்வுக்கும் பெயர் பெற்ற கிரேக்க கடவுள்.


Tuesday, August 17, 2010

உலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம்

அரளி என்னும் ஒலியாண்டர் Nerium oleander என்னும் தாவரம் உலகத்திலேயே மிகக்கொடுமையான நச்சுத் தாவரமாக கருதப்படுகிறது.தாவரத்தின் எல்லா பாகங்களும் நஞ்சுதான். பலவகையான நஞ்சுகளும் இந்த தாவரத்தில் காணப்படுகின்றன. இதில் காணப்படும் oleandrin மற்றும் neriine நச்சுக்கள் இதயத்தை பாதிக்கக்கூடியவை. தேனீக்களால் ஒலியாண்டர் பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தேனை நக்கிய மாத்திரத்திலேயே மரணம் சம்பவிக்கும். ஒலியாண்டர் தாவரத்தின் பூக்கள் அழகானவை. ஆனால் அழகைப்பார்த்து ஏமாந்து போய்விடாதீர்கள். அத்தனையும் நஞ்சு.

கொடுமையான நச்சுத்தன்மை இருந்தாலும்கூட அழகிற்காக இந்தத் தாவரம் வளர்க்கப்படுகிறது. தூரக்கிழக்கு நாடுகளில் இருந்தும் மத்தியதரைக்கடல் நாடுகளில் இருந்தும் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்ட இந்த தாவரம் உலர்ந்த வெப்ப நிலைகளிலும் வளம்குறைந்த மண்ணிலும் வளரக்கூடியது. அடர்த்தியான புதர்வடிவில் ஆறுமுதல் பதினெட்டு அடி உயரத்திற்கு ஒலியாண்டர் தாவரம் வளரும். இலைகள் அடர் பச்சை நிறத்திலும் தடிமனாகவும் இருக்கும். கொத்தாகப் பூக்கும் பூக்கள் மஞ்சள் சிகப்பு இளஞ்சிவப்பு வெள்ளை ஆகிய நிறங்களில் காணப்படும்.

வறண்ட நிலத்தில் கூட ஒலியாண்டர் அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு இரைச்சல் இவற்றையெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் ஒலியாண்டர் தாவரம் வளர்க்கப்படுகிறது.

ஒலியாண்டர் தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு வாந்தி கடுமையான வயிற்றுவலி நினைவிழப்பு மயக்கம் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். ஒலியாண்டர் நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.

ஒலியாண்டர் நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும் வயிற்றை காலிசெய்வதும் செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.

Monday, August 16, 2010

இரவில் பூனைக்கு அழகாக கண் தெரிவது என்?

இரவில் வாழும் உயிரினங்களுக்கு இருட்டில் பார்க்கும் கண்கள் உள்ளன. இவற்றின் விழித்திரையில் உள்ள உருளை செல்கள் வித்தியாசமாக இருப்பதாக போரிஃப் ஜோஃபே (லட்விக் மேக்ஸ்மில்லன் பல்கலை) கூறுகிறார். முதலில் இவர் சொன்னதை எல்லாரும் கேலி செய்தார்களாம். இவர் கண்டுபிடித்த உண்மை நம்பக் கூடியதாக முதலில் இல்லாமல் இருந்ததே காரணம்.

இருட்டு உயிரினங்களின் விழித்திரை உருளை செல்களில் உள்ள உட்கரு (நியூக்ளியஸ்) வெளிச்சத்தில் வாழும் உயிரினங்களிலிருந்து மாறுபட்டு இருந்தது. வழக்கமாக உட்கருவில் உள்ள டி என் ஏ மூலக்கூறின் கெட்டியாகச் சுற்றப்பட்ட பகுதி கருவின் புறப்பகுதியிலும்இ தொள தொளவென்று இருக்கும் டி என் ஏ பகுதி நடுப்பகுதியிலும் இருக்கும். இப்பகுதிகளை முறையே ஹெட்டிரோ குரோமேட்டின் மற்றும் யூக்குரோமேட்டின் என்றும் அழைப்பார்கள். இருட்டு உயிரிகளின் உருளைச்செல்களின் உட்கருவில் இந்த அமைப்பு தலைக்கீழாக இருந்தது.

கருவின் அமைப்பு அதன் திறமையான செயலுக்கு உறுதுணையாக இருப்பதால் பகல் உயிரிகளில் வெளியே கெட்டியும் உள்ளே கொள கொள வென்றும் இருக்கும்படி அமைந்திருக்கிறது. இருட்டு உயிரிகளில் இது மாறி அமைந்திருப்பது வேறு ஒரு முக்கிய பணிக்காக இருக்கக்கூடும் என்பது சொல்லாமலே விளங்குகிறது.

இருட்டு உயிரிகளின் உட்கரு சிறிய லென்ஸர் மாதிரி செயல்பட்டு இருட்டில் கிடைக்கும் சொற்ப வெளிச்சத்தையும் விழித்திரையில் சிதறாமல் சேகரித்து வழங்குகிறது. பகல் உயிரிகளில் உட்கருவானது வெளிச்சத்தை சிதறடித்துவிடுகிறது. பகலில் போதிய வெளிச்சம் இருப்பதால் இது பெரிய குறையாகத் தெரிவதில்லை.

செல்லின் உட்கருவிற்கு இப்படி ஒரு பூதக்கண்ணாடி போல் செயல்படக்கூடிய பணி இருக்கும் என்பது உயிரியலில் புத்தம் புதிய செய்தி. அதனால்தான் இந்த கண்டுபிடிப்பு முதலில் கேலி செய்யப்பட்டது.

பூனை பற்றிய தகவல்
பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இவை பொதுவாக 2.5 லிருந்து 7 கிலோகிராம் வரை (5.5–16 இறாத்தல்) எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்குக் (4.0 இறாத்தல்) குறைவாகக் காணப்படும்.
பூனைகளுக்கு 30 முள்ளந்தண்டு எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33).
நுண்ணிய கேள்விப்புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகிறது.
பூனைகளின் அதிகூடிய சத்த அதிர்வுகள் 64 கிலோஹேர்ட்ஸ்.
நுகரும் புலன் மனிதனை விட 14 மடங்கு அதிகம்.
நாளாந்தம் 12-16 மணி நேரம் உறங்கும். சாதாரணமாக உடல் வெப்பநிலை 38 - 39 °C (101 - 102.2 °F)
வரை காணப்படும்.
பூனைகள் இரவில் நன்றாகப் பார்க்கும் திறன் கொண்டவை