Monday, June 28, 2010

பறக்காத பறவைகள் பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றியவை

பறக்காத பறவைகள் பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றியவையாகும். ஏறத்தாழ நாற்பது கொன்றுண்ணிகள் அற்ற பிரதேசங்களில் வாழ்ந்தமையாலேயே இப்பறவைகள் தம் பறக்கும் ஆற்றலை இழந்துள்ளன. இதற்கு தீக்கோழி விதிவிலக்காகும்பறக்காத பறவையினங்கள் இப்பொழுது உலகில் உள்ளன.

நியூசிலாந்திலேயே அதிக எண்ணிக்கையான பறக்காத பறவைகள் காணப்படுகின்றன. இதற்கான காரணம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் மனிதன் அங்கு குடியேறாதவரை மூன்று வகையான வௌவால்களைத் தவிர வேறெந்த நிலத்தில் வாழும் பாலூட்டிகளும் காணப்படாமையாகும். பறக்காத பறவைகளின் பிரதான எதிரிகளாக பெரிய பறவைகளே காணப்பட்டன. ஆனால் மனிதக் குடியேற்றத்தின் பின் பெருமளவு பறக்காத பறவையினங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

பறக்காத பறவைகள் பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றியவையாகும் அவற்றுள் சில

பென்குயின்
பென்குயின்கள் குடும்பம் ஸ்பெனிசிடே தென் அரைக் கோளத்தில் வாழ்கின்ற பறக்காத பறவைகளாகும்.பென்குயின் வகைகளில் மிகப் பெரியதுசக்கரவர்த்தி பென்குயின்ஆகும். இது சுமார் 1.1 மீட்டர் உயரம் வரை வளருவதுடன் 35 கிலோகிராம் அல்லது அதிலும் கூடிய எடையையும் கொண்டிருக்கும். சிறிய நீலப் பென்குயின்களே (தேவதைப் பென்குயின் என்றும் அழைக்கப்படுவதுண்டு) மிகச் சிறிய பென்குயின் வகையாகும். இது சாதாரணமாக 35 செ.மீ தொடக்கம் 40 செ.மீ வரையான உயரத்தையும் சுமார் ஒரு கிலோகிராம் எடையையும் கொண்டிருக்கும். பொதுவாகப் பெரிய பென்குயின்கள் சிறப்பாக வெப்பத்தை உள்ளே வைத்துக்கொள்ளக் கூடியவையாக இருப்பதால் அதிக குளிர்ப் பகுதிகளில் வாழக்கூடியவையாக உள்ளன. சிறிய வகைகள் மிதவெப்பக் காலநிலைப் பகுதிகளிலிலோ வெப்பக் காலநிலைப் பகுதிகளிலோ கூடக் காணப்படுகின்றன.


கிவி
கிவி என்பது நியூசிலாந்தில் வாழும்இஅப்டெரிக்ஸ் (அப்டெரிகைடேகுடும்பத்தைச் சேர்ந்த ஒரே இனம்) இனத்தைச் சேந்த சிறிய பறக்காத ஏதாவதொரு வகைப் பறவையைக் குறிக்கும். ஒரு வீட்டுக் கோழியின் அளவைக் கொண்ட கிவிகளே வாழுகின்றறட்டைட் களில் மிகச் சிறியனவாகும்பல கிவி வகைகள் அழியும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளன.கிவிகள் வெட்கம் கொண்ட பிராணிகளாகும். இவை சிறப்பாக வளர்ச்சி பெற்ற முகர்ச்சிப் புலனைக் கொண்டுள்ளதுடன் பறவைகளில் வழமைக்கு மாறாக இவற்றின் மூக்குகள் கூரான சொண்டின் நுனியில் அமைந்துள்ளன.

தீக்கோழி
உலகின் மிகப்பெரிய பறக்காத பறவை தீக்கோழி ஆகும். அதுவே உயிர்வாழும் பறவைகளுள்ளும் பெரியது ஆகும். இது 2.5 மீட்டர் (8 அடி) வரை உயரமாக வளரக்கூடியது. பறக்காத பறவை.தீக்கோழிகள் நீண்ட கழுத்தையும் கால்களையும் கொண்டவை. 65 கிமீஃமணி (40 மைல்ஃமணி) வேகத்தில் ஓடக்கூடியவைதீக்கோழிகளின் இறகுகள் பெண்களின் தொப்பிகளைஅலங்கரிப்பதற்காக உபயோகப்பட்டு வந்தன. ஆபத்தை உணரும்போது தீக்கோழி தனது தலையை மணலில் புதைத்துக் கொள்ளும் என்ற கதை மிகவும் பிரபலமானது. இத்தகைய நடைமுறையைக் காட்டும் அவதானிப்புப் பதிவுகள் எதுவும் இல்லையெனினும் எதிரி விலங்குகள் அண்மையிலுள்ளபோது தான் தெளிவாகக் காணப்படாமலிருப்பதற்காகத் தீக்கோழி தனது கழுத்தையும் தலையையும் நிலத்தில் படுக்கை நிலையில் வைத்துக்கொண்டிருப்பது அறியப்பட்டுள்ளது. பெண் தீக்கோழிகள் தங்கள் முட்டைகளை ஒரே கூட்டில் இடுகின்றன. இம் முட்டைகள் பகலில் பெண் தீக்கோழிகளாலும் இரவில் ஆண்களாலும் அடைகாக்கப் படுகின்றன. தீக்கோழிகளின் முட்டைகளே உலகில் பெரிய முட்டைகளாகும்

ஈமியூ
ஈமியூ அல்லது ஈம்யூ ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பறவையாகும். உயிர்வாழும் பறவையினங்களில் தீக்கோழிக்குஅடுத்ததாகப் பெரிய பறக்காத பறவை இதுவாகும். இது ஏறத்தாழ இரண்டு மீட்டர் உயரமும் சுமார் 45கிலோகிராம் எடையும் கொண்ட பறவையாக வளரக் கூடியது. உடல் சாம்பல் நிறமானது. ஆஸ்திரேலியாவில் பரவலாகக் காணப்படுகிறது. வேகமாக செல்லக் கூடியது. மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் இதனால் ஓட் முடியும். பல்வகையான தாவரங்களையும் பூச்சிகளையும் உண்ணும் ஈமியூ உணவுக்காக நீண்ட தொலைவு செல்லக் கூடியது

Tuesday, June 22, 2010

தமிழ் மொழியும் உலகச் செம்மொழியாம்

உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர்

உலகில் உள்ள பல கண்டங்களில் ஒரே நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட செம்மொழிகள் இருக்கும் பெருமை இந்தியாவை மட்டுமே சாரும். அந்த வகையில் தமிழ் சமஸ்கிருதம் இரண்டும் தங்கள் தொன்மையால் உலக மொழிகளுக்கு முன்னோடியாய் விளங்குகின்ற்ன

ஒரு மொழியை செம்மொழியாக தகுதி உயர்த்த மொழியியல் அடிப்படையில் விதிகள் வகுத்துள்ளனர். அந்த விதிகள் அனைத்தும் தமிழுக்குப் பொருந்தி வருவதால் செம்மொழி எனும் நிலைக்கு தமிழ் உயர்ந்து விட்டது. உலக இயற்கை மொழிகளிலேயே மிக மிக மூத்த மொழியாக தமிழ் இருப்பினும் அதற்கு உரிய காலத்தில் செம்மொழி எனும் மதிப்பு காலம் தாழ்த்தி வழங்கியுள்ளமை சற்றே நெருடலானது

செம்மொழிக்கான தகுதிகள் பதினோரு விதிகளாக வழங்குகின்றனர். அவை :
1. தொன்மை
2. தனித்தன்மை
3. பொதுமைப் பண்பு
4. நடுவு நிலைமை
5. தாய்மைப் பண்பு
6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு
7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை
8. இலக்கிய வளம்
9. உயர் சிந்தனை
10. கலை இலக்கியத் தனித்தன்மை
11. மொழிக் கோட்பாடு

செம்மொழி என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும் அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்

செம்மொழித் தகுதி ஒரு மொழிக்கு செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான இரண்டு சிறப்புகள் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படுகிறது.
1. இலக்கியப் படைப்புகள்
2. கலைப் படைப்புகள் இலக்கியப் படைப்புகள்

ஒரு மொழியின் சிறப்பிற்கும் செம்மொழிக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள்தான். இந்த இலக்கியங்களில் இருக்கும் பழமையுடன் அதில் கருத்துச் செறிவுகளும் இருக்க வேண்டும்

கலைப் படைப்புகள்

ஒரு மொழியின் பழமைக்கு இலக்கியம் சான்றாக இருந்தது என்பதுடன் அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் அந்த மொழியின் பழமையை உணர்த்தும் அடுத்த சான்றாக இருக்க வேண்டும். கலைப் படைப்புகள் என்பது கட்டிடக்கலை சிற்பக் கலை போன்ற பழமை வாய்ந்த கலைச் சான்றுகளாக இருக்க வேண்டும்

உலகச் செம்மொழிகள் ன்று உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகள் 8 ஆக இருக்கின்றன.
  • கிரேக்க மொழி
  • சமஸ்கிருதம்
  • இலத்தீன்
  • பாரசீக மொழி
  • அரபு மொழி
  • எபிரேயம்
  • தமிழ்
  • சீன மொழி
கிரேக்கம்
கிரேக்க மொழி மிகப் பழமையான பாரம்பரியம் வாய்ந்த ஒரு மொழியாகும். கி.மு 500 ஆம் ஆண்டு முதல் கி.மு.310 ஆம் ஆண்டு காலத்தில் பல இலக்கியங்கள் இம்மொழியில் படைக்கப்பட்டுள்ளன. ஹிரொடோட்டஸ் என்பவரின் வரலாற்றுப் பதிவுகள் டுமாஸ் தனிசின் சொற்பொழிவுகள் பிளேட்டோ அரிஸ்டாட்டில் போன்றவர்களின் தத்துவநூல்கள் போன்றவை இன்றும் கிரேக்க மொழியின் இலக்கிய வளத்திற்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது. மேலும் அந்நாட்டில் உள்ள 4500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டபிரமிடுகள் இன்னும் அந்நாட்டின் கட்டிடக் கலைக்குச் சான்றாக விளங்குவதும் குறிப்பிடத் தக்கது

இலத்தீன்

ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலத்தீன் மொழியில் வர்ஜில் என்பவர் படைத்த இனீட் எனும் காவியம் சிறப்புடையது. கி.மு.70 முதல் கி.பி. 18 வரையிலான காலப் பகுதிகளில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. 1900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் இத்தாலிய நாட்டு கோலோசியம் எனும் மாபெரும் திறந்தவெளி அரங்கம் பழம் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது.

அரபு மொழி

அரேபிய மொழியில் எழுத்து வடிவம் கி.மு.328 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தினரின் இறுதிச் சடங்கில் பொறிக்கப்பட்டது என்கிறார்கள். அரேபிய மொழியில் குர் ஆன் சிறந்த இலக்கியமாகி விட்டது. முகலாயர்களின் பண்டையக் கட்டிடக் கலையின் சிறப்புத் தன்மைகள் உலகமே வியக்கக் கூடியதாய் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது

சீனம்
சீன இலக்கியம் மிகப் பழமை வாய்ந்த ஒன்றாகும். சீன இலக்கிய வரலாற்றில் கி.மு. 600 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் வாழ்ந்த கன்ஃபூசியஸ் இ லாவுட்ஸ் என்பவர்கள்தான்லாவுட்ஸ் 'தாவ்' எனும் நெறியை வழங்கியிருக்கிறார். இவர்கள் வழங்கிய இலக்கியம் இன்னும் உலகம் முழுவதும் எடுத்துக்காட்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் கட்டிடக் கலைக்கு அங்குள்ள 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் ஒன்றே போதுமானது.

ஹீப்ரூ

ஹீப்ரு மொழிக்கு கி.மு. 12 ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.ஜீடா-ஹா-நசி என்பவரால் யூதர்களின் நீதிநெறிகள் சட்டங்கள் ஆகியவை கி.பி. 200 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டது. மிஷ்னா மற்றும் கெமாரா ஆகிய இரண்டின் தொகுப்புதான் யூதர்களின் முக்கிய நூலாக இருக்கும் டாலமுட் எனப்படுகிறது
அரசர் எரோது என்பவர் 3000 ஆண்டுகளுக்கு முன்புஜெருசலேம் பகுதியில் எழுப்பிய சாலமன் ஆலயம் இம்மொழியின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது.

பாரசீகம்

ஈரான் நாட்டின் ஆட்சி மொழியான பாரசீகம் அரேபிய வரி வடிவத்தில்தான் எழுதப்படுகிறது. இன்றைய உலக நாகரீகங்கள் அறிவியல் முதலியவற்றை உலகிற்கு வழங்கியது முந்தைய பாரசீகம்தான். இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும்எண்கள் பாரசீகம் வழங்கியதுதான். உமர் கய்யாம் எனும் கவிஞரின் கவிதைகள் உலகம் போற்றக் கூடிய ஒன்றாகும். பாரசீகத்தின் பழமையை 2500 பழமை வாய்ந்த கட்டிடக் கலையான பெரிசிபோலிசு என்பதும் குறிப்பிடத்தக்கது

சமஸ்கிருதம்

இந்தியாவில் வடமொழி என்று அழைக்கப்பட்ட சமஸ்கிருதம் கி.மு1500 முதல் கி.மு 200 வரை வேதகால இலக்கியமாகவும் அதற்கடுத்து கி.மு. 500 முதல் கி.பி. 1000 ஆண்டுகளில் இராமாயணம் மகாபாரதம் போன்ற காப்பியங்கள் செம்மொழிக்கான நிலையைப் பெற்றது.
ஐரோப்பியர்களுக்கு வேதம் உபநிடதம் இதிகாசங்கள் காப்பியங்கள் நாடகங்கள் இதத்துவ நூல்கள் நீதி நூல்கள் போன்றவை வடமொழி இலக்கியத்தை செம்மொழியாகக் கருதச் செய்தது

தமிழ்

இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப் போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்கு திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 2500 ஆண்டுகள் இலக்கியப் பழமை வாய்ந்தது. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ள கிரேக்கம் இலத்தீன் மொழிகள் போல் இந்திய வரலாற்றை அறிய சமஸ்கிருதம் தமிழ் மொழிகள் தேவையாக உள்ளது. தமிழின் செம்மொழித் தகுதிக்கு சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தொல்காப்பியம் சிலப்பதிகாரம் மணிமேகலை முத்தொள்ளாயிரம் இறையனார் களவியல் போன்றவை உள்ளன.

கிரேக்கம் இலத்தீன் சீனம் ஹீப்ரூ பாரசீகம் அரேபியா ஆகியவற்றைக் காட்டிலும் தமிழ் இலக்கியம் கருத்துகள் அதிகமுடையது. இருப்பினும் பிற செம்மொழிகளான கிரேக்கம் இலத்தீன் பாரசீகம் ஹீப்ரூ அரேபியா மொழிகளுக்கான கலைப் படைப்புகளுக்குச் சிறப்பு வாய்ந்த கட்டிடக்கலைகள் சான்றாக இருக்கின்றன. இந்தியாவில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தரையில் புதையுண்டு போனமொஹஞ்சாதரா ஹராப்பா கட்டிடக்கலைகள் இருக்கின்றன. இது திராவிடர் கட்டிடக் கலையா? அல்லது ஆரியர் கட்டிடக் கலையா? என்கிற கருத்து வேறுபாடு இன்னும் இருந்து வருகிறது. இதனால் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியின் பழமை அறிவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்

இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக ஏற்றுக்கொண்டு 12.10.2004 இல் அறிவிக்கை
வெளியிட்டுள்ளது

நன்றி இணையம்.

Thursday, June 17, 2010

சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம்

சூரிய நடுக்கத்தினால் சீற்றத்துடன் பாய்ந்து வீசும் பிழம்பு

2012 என்ற படம் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது யாவரும் அறிந்தது.ஆனால் அதில் காட்டப்பட்ட விஞ்ஞான கருத்துக்கள் ஒவ்வொன்றும் தற்காலத்தில் உண்மையாகலாம் என்ற ஊகிக்கப்படுகிறது காரணம் விஞ்ஞானிகள் அறிவியலாளர்கள் எச்சரிக்கை ஆகும் அதில் ஒன்று சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது.


வாசிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 8 ஆம் நாளன்று விண்வெளி காலநிலை பற்றிய அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் திட்டமிடல் அதிகாரிகள் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 21ம் நூற்றாண்டில் தொழிநுட்ப உபகரணங்களை சூரியனிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள்.


'நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும்' என நாசாவின் ஈலியோஇயற்பியல் துறைத் தலைவர் ரிச்சார்ட் ஃபிஷர் கருத்துத் தெரிவித்துள்ளார்.


சூரிய நடுக்கத்தால் கிளம்பும் தீச்சுடர்களின் செறிவு மாறுபடக்கூடியவை. அது பூமியின் காந்தப்புலத்தில் தாக்கத்தை எற்படுத்தும். இவை பெரும் கதிரியக்கத் தன்மையுடையவை. மனித இனம் இக்கதிரியக்கத்தில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டிருந்தாலும் தொழிநுட்பம் இதனால் பெரும் பாதிப்படையும். தீச்சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யலாம். அத்துடன் ஊடுகதிர் அலைகள் வானொலித் தொடர்புகளைப் பாதிக்கும்.

இருந்தாலும் 'பெரும் ஒளிவட்ட வெளித்தள்ளுதல்' மனித இனத்தைப் பாதிக்கும் எனக்கூறப்படுகிறது. இது 2012 ஆம் ஆண்டில் நிகழலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


ஒளிவட்ட வெளித்தள்ளுதலின் போது சூரியனின் ஒளிவட்டத்தில் இருந்து அல்லது அதன் வெளி வளிமண்டலத்தில் இருந்து வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. பெருமளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டிருக்கும் இவ்வாயுக்கள் பூமியை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அடையக்கூடும்.

அதிதொழிநுட்பத்தைக் கொண்டுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை எற்ற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்


Sunday, June 13, 2010

ஜூன் 14 உலக வலைப்பதிவர் நாள் கொண்டாடுவோம்

உலக வலைப்பதிவர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
கணிப்பொறி மற்றும் இணையத்தைப் பயன்படுத்துவோர் ஒவ்வொருவரும் தனித்தனியாகவோ குழுவாகவோ பல வலைப்பதிவுகளை உருவாக்கிப் பயன்படுத்தப் போகும் காலம் வெகுவிரைவில் வந்துவிடும். வலைப்பதிவுகள் இலவசச் சேவையாக வழங்கப்படுவது மட்டுமே அதன் பரவலுக்கும் பயன்பாட்டுக்கும் காரணம் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்திருக்கும் படைப்பாக்கத் தாகமும் எழுதிய பதிவுகள் உடனே உலகெங்கும் பரவும் வேகமும் வலைப்பதிவுகளின் பரவலாக்கத்திற்கு அடிப்படைக் காரணங்களாகின்றன. உலக வலைப்பதிவுகளின் வரலாறு 1999 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் வலைப்பதிவுகள் பெற்றிருக்கும் வெற்றி நம்மை மலைக்க வைக்கிறது. வரும் காலங்களில் வலைப்பதிவுகள் எட்டிப்பிடிக்கப் போகும் சிகரங்கள் எத்தனையோ

.உலகக் கணிப்பொறிகளை இணைத்துத் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள உதவும் இணையம் உலகை ஒரு மேசையளவிற்குச் சுருக்கிவிட்டது. கொட்டிக் கிடக்கும் அளப்பரிய தகவல்கள் இருமுனை மற்றும் பல்முனைத் தொடர்பு பல்ஊடகத் தொழில்நுட்பம் வேகம் உலக மொழிகளைக் கையாளும் யுனிகோட் குறிமுறை முதலான பல்வேறு சாத்தியக் கூறுகள் இணையத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அடிப்படைகள். இணையம் வழங்கும் மின் அஞ்சல் இணைய அரட்டைஇணைய வணிகம் கோப்புகள் பரிமாற்றம் (F.T.P.) முதலான பல்வேறு சேவைகளில் அதிக கவனத்தைப் பெற்றது உலகளாவிய வலைத்தளச் சேவை றறற என்றழைக்கப்படும் World Wide Web சேவையாகும். வலைத்தளச் சேவையின் ஒரு பிரிவாகத் தோற்றம் பெற்று இன்றைக்குத் தனித்ததொரு இணையச் சேவையாகப் புகழ் பெற்றிருப்பதுதான் வலைப்பதிவுகள் என்றழைக்கப்படும் Blogs ஆகும்.
வலைப்பதிவு என்பது தனிநபர்கள் அல்லது ஒரு குழுஇ தினமும் தங்கள் கருத்துக்களைப் பதிந்து வைக்கும் இடம் என்று தொடக்கத்தில் கருதப்பட்டது. கருத்துக்களை அல்லது படைப்புகளைப் பதித்தல் என்ற நிலை வளர்ச்சி பெற்று இணையப் பயனாளர்களின் பார்வைக்கு வைத்தல் என்ற மாற்றம் பெற்றது. பின்னர் அந்தப் பதிவுகளே இதழ் போன்ற ஒரு வகை ஊடகமாகப் பரிமாணம் பெற்றுப் பலரின் பார்வைக்கும் அவர்களின் பின்னூட்டத்திற்கும் தொடர்ந்த விவாதங்களுக்கும் இடமளித்து வலைப்பதிவுகள் என முழுமை பெற்றன.

தினமும் ஆயிரக் கணக்கானோர் தங்கள் கருத்துக்களை / படைப்புகளைத் தங்கள் தாய்மொழியிலேயே வலைப்பதிவுகளில் எழுதுகிறார்கள். பல்வேறு புகழ்பெற்ற இணைய தளங்கள் வலைப்பதிவுச் சேவைகளை இலவசமாக வழங்குகின்றன. கணினி பற்றிய தொழில் நுட்பம் தெரியாதவர்கள் கூட உருவாக்கிக் கொள்ளும் வகையில் வலைப்பதிவுகள் எளிமையானவை. ஒருவர் வலைப்பதிவுகள் குறித்த முழுமையான அறிமுகத்தைப் பெற வலைப்பதிவுகளின் அமைப்பைத் தெரிந்து கொள்ளுதல் நலம் பயக்கும்.

வலைப்பதிவின் அமைப்பு:
ஒவ்வொரு வலைப்பதிவும் சில அடிப்படை உறுப்புகள் அல்லது பகுதிகளைப் பெற்றிருக்கும். அவை பின்வருமாறு:
1.வலைப்பதிவுத் தலைப்பு.
2.வலைப்பதிவு முகப்பு.
3.பதிவின் தலைப்பு.
4.பதிவின் உடல்பகுதி.
5.பதித்த நாள்இ நேரம்இ பதித்தவர் பெயர் முத்திரைகள்.
6.பின்னூட்டங்கள்.
7.சேமிப்பகம்.
8.இணைப்புகள்.
9.வலைப்பதிவுகளில் பக்கக் கூறுகள்

-மேலே குறிப்பிடப்பட்ட ஒன்பது பகுதிகளையும் வலைப்பதிவின் அடிப்படைப் பகுதிகள் அல்லது வலைப்பதிவின் உறுப்புகள் என்று குறிப்பிடலாம். இவை தவிர்ந்த வேறு சில இணைப்புகளும் பகுதிகளும் அரிதாகப் பதிவுகளில் இடம் பெறுவதுண்டு
நன்றி முத்தக்கமலம்