Monday, May 31, 2010

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம்ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன்இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது

தேடி எடுக்கப்பட்ட படங்கள் இங்கே






Wednesday, May 26, 2010

உலகின் முதல் செயற்கை பாக்டீரியா உயிரணு கண்டுபடிப்பு

சனி 22 மே 2010 உலகின் முதல் செயற்கை பாக்டீரியா உயிரணு கண்டுபடிப்பு

உயிரியல் உலகின் உச்சக்கட்ட சாதனையாக செயற்கை உயிரி (செல்) ஒன்றை உருவாக்கி அமெரிக்க அறிவியலாளர்கள் சாதனை படைத்துள்ளன


த சயின்ஸ்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பு அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு மாபெரும் முன்னேற்றம் எனக் கருதப்படுகிறது.


'இந்த பாக்டீரியாவின் மரபணுப் பாரம்பரியம் என்பது ஒரு கணினி தான். ஆகவே செயற்கையாகப் படைக்கப்பட்ட முதல் உயிர் வடிவம் என்றால் அது நிச்சயம் இதுதான்.' என்கிறார் இந்த செயற்கை உயிரியைப் படைத்திருக்கின்ற ஆராய்ச்சிக்தலைவர் டாக்டர் கிரெய்க் வெண்டர்.

கிரெய்க் வெண்டர்.

அதாவது ஒரு பாக்டீரியாவுக்கான மரபணுக் கட்டமைப்பை கணினி மென்பொருள் துணையுடன் வடிவமைத்து செயற்கையாக இரசாயனங்களைக் கலந்து உருவாக்கி அதனை ஒரு உயிரணுக்குள் செலுத்தி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்

ஒரு செல்லின் மொத்த மரபணுவையும் வேறு ஒரு புதிய செல்லுக்கு மாற்றி அதன் வளர்ச்சியை கண்காணித்தனர். இதில் முக்கிய பங்காற்றியவர் மேரிலாண்டை சேர்ந்த கிரெய்க் என்ற விஞ்ஞானி. அவர் தன் குழுவுடன் நடத்திய ஆய்வு வெற்றி பெற்றிருக்கிறது.


செயற்கையாக உருவாக்கப்பட்ட டி.என்.ஏ. புதிய மரபணுவுடன் தாய் செல் போலவே வளர்ச்சி அடைய துவங்கியது. வேறு விதமாக சொன்னால் ஆட்டின் உயிரணு மாட்டின் உயிரணுவாக மாறியது. அப்படியானால் மரபணுவிலுள்ள குரோமசோம்களையே மாற்றி வேறுவிதமாக செய்யும் சாதனை இது. 'செயற்கையாக உருவாக்கப்பட்ட புதிய செல் மருத்துவ உலகில் பல புதிய பரிணாமங்களை தோற்றுவிக்கும்' என இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதை அவர்கள் 'சிந்தடிக் செல்' என்று அழைக்கின்றனர்.


பாரம்பரிய நோய்கள் உட்பட பலவற்றுக்கும் இந்த புதிய கண்டுபிடிப்பு உதவும். உதாரணத்திற்கு அழுக்கு தண்ணீரை மிகவும் சுத்தமான தண்ணீராக்குவது
குறுகிய காலத்தில் தடுப்பூசி மருந்துகளை தயாரிப்பது போன்றவைகளுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே சமயம் 'உயிரி ஆயுதமாக இது பயன்படுத்தப்படலாம்' என்ற அச்சமும் பேசப்படுகிறது. ஆகவே மரபுப்படி பாதுகாக்கும் நடைமுறைகள் குறித்த கமிஷன் தலைவர் அமி குட்மானுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடிதம் எழுதியுள்ளார். இந்த வெற்றியை பாராட்டிய அவர் ' மருத்துவ சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய துறைகளில் இது எந்த அளவு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பச்சை நிறப் புளொரொளிர்வைக் காட்டும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உயிரியற் புடகம்.

Monday, May 24, 2010

கற்பனையின் கை வண்ணம்

நாளைய உலகில் எது நடக்க இருக்கும் என்பதை இன்றைய சித்திர கலைஞர்களின் கற்பனையில் சில ஒவியங்கள்


எரி மலை உருகுவது போல் நகரத்தின் பாதைகள் உடைத்து உருகுவதையும் சித்திர கலைஞர்களின் கற்பனையில்

பனிக்கட்டிகள் கீழே உடைந்து பள்ளத்தாக்குக்குள் ஒருவர் செல்வது போல்
எரி மலை உருகுவது போல் நகரத்தின் பாதைகள் உடைத்து உருகுவதையும் கட்டடத்தக்கு வெடிப்பு ஏற்படும் நிலையிலும்
பனிக்கட்டிகள் கீழே உடைந்து பள்ளத்தாக்கு போல் காட்சி அளிப்பதை ஒரு பட வரைஞர்
கிறுவதை காணலாம்


பிடித்து இருந்தால் உங்கள் ஒட்டுக்களை அளியுங்கள்

Friday, May 21, 2010

உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை

உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை அவைகளில் சில

கோல்டன்
கேற் பாலம்
கோல்டன் கேற் பாலம் அல்லது கோல்டன் கேட் பாலம் பசிபிக் பெருங்கடலில்உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட்சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்தநீளம் 1.7 மைல்கள் ஆகும். 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின்மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான்பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது

வாகன வகைஃவழிகள் :- 6 வழிப்பாதை நடப்போர் மிதிவண்டிகள்
கடப்பது :- கோல்டன் கேட்
வடிவமைப்பு :- Suspension, truss arch & truss causeways
மொத்த நீளம் :- 8,981 feet (2,737 m)
அகலம் :- 90 feet (27 m)
உயரம் :- 746 feet (227 m)
அதிகூடிய தாவகலம் :- 4,200 feet (1,280 m)
Opening
ட்டே :- 27 மே 1937

புரூக்ளின் பாலம்புரூக்ளின் பாலம் (Brooklyn Bridge) ஐக்கிய அமெரிக்காவில் நியூ யார்க்மாநிலத்தில்உள்ள பழமையான தொங்குபாலங்களில்ஒன்றாகும். 5,989 அடி (1825 மீ) நீளமுள்ள இப்பாலம் கிழக்கு ஆற்றின் மீதுமேன்ஹேட்டனில் இருந்துபுரூக்ளின் வரை கட்டப்பட்டுள்ளது. இது கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவேஉலகின் மிகப்பெரிய தொங்குபாலம் ஆகும்
இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஜனவரி 3 1870-ல் தொடங்கியது. பதின்மூன்றுஆண்டுகளுக்குப் பிறகு மே 24 1883-ல் இது கட்டி முடிக்கப்பட்டது. முதல் நாள்மொத்தம் 1800 ஊர்திகளும்
௧௫150,300 மக்களும் இப்பாலத்தைக் கடந்தனர்கடந்தனர்

வாகன வகைஃவழிகள் :- சிற்றூர்திகள்
பாதசாரிகளை துவிச்சக்கரவண்டிகள்
கடப்பது :- கிழக்கு ஆறு
அதிகூடிய தாவகலம் :- 1,595அடிகள் 6 அங் (486.3மீ)
மொத்த நீளம் ;- 5,989 அடிகள் (1825மீ)
அகளம் :- 85 அடிகள் (26மீ)
கீழ்மட்டம் :- 135 அடிகள் (41மீ


இராஜிவ்காந்தி கடற்பாலம்வாந்திரா-வொர்லி கடற்பாலம் (Bandra-Worli Sea Link, மராட்டி: மும்பையின்புறநகர் பாந்திராவைவொர்லியுடனும் பின்னர்நாரிமன்முனையுடனும்இணைக்கும் மேற்கு தீவு நெடுஞ்சாலை திட்டத்தின் முதற்கட்டமாகும். இது எட்டுவழிகள் கொண்டதாய் முன்தகைவு திண்காறை பாதைப்பாலங்களைக் கொண்டுநடுவில்தொங்கு பாலத்துடன் அமைந்துள்ளது. 30 June 2009 அன்று காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி அவர்கள் இதனை திறந்துவைத்தார்.இந்தகடற்பாலம்இ தற்போது 45-60 நிமிடங்கள் எடுக்கும் பாந்திராமராட்டி:வாந்திரா)-வொர்லி பயண நேரத்தை 07-08 நிமிடங்களாக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது

அதிகாரபூர்வ பெயர் :- இராஜிவ்காந்தி கடற்பாலம்

வாகன வகை வழிகள் :- சிற்றுந்து 8 வழிகள்; பேருந்துகள் 2 வழிகள்

கடப்பது :- மாகிம் விரிகுடா
இடம் :- மும்பை
வடிவமைப்பு :-
கம்பிப் பிணைப்பு தொங்குபாலம்
மொத்த நீளம் :- 5.6 கிமீ

Wednesday, May 19, 2010

ஐக்கிய இராச்சியத்தின் புகழ் மிக்க இளவரசிகள்

இவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் புகழை உலகறியச்செய்தவர்கள்

வேல்ஸ் இளவரசி டயானா
வேல்ஸ் இளவரசி டயானா(Diana, Princess of Wales இயற்பெயர்: பிரான்செஸ் ஸ்பென்சர்ஜூலை 1 1961 - ஆகஸ்ட் 31 1997) வேல்ஸ்இளவரசர் சார்ல்சின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள்வில்லியம் ஹென்றி (ஹரி) ஆகியோர்பிரித்தானியாவுக்கு முறையே இரண்டாவத மூன்றாவது முடிக்குரியவர்கள் ஆவர்.
இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார்.பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 இல் இவர் சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து உலகெங்கும் இவருக்கு பெரும் அனுதாப அலை பெருகத் தொடங்கியது
.

பட்டங்கள்
டயானா வேல்ஸ் இளவரசி
த லேடி டயானா ஸ்பென்சர்

முடிக்குரிய மாளிகை வின்சர் மாளி

அலெக்சாண்ட்ரினா விக்டோரியா
விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா Alexandrina Victoria மே 24 1819 –ஜனவரி 22 1901) பெரிய பிரித்தானியாவும் அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837 ஆம் ஆண்டுஜூன் 20 ஆம் நாள் முதலும் இந்தியாவின்முதல் பேரரசியாக 1876 மே 1 ஆம் நாள் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இது இதுவரை பிரித்தானியாவை ஆண்ட எவரது ஆட்சிக் காலத்தையும் விடக் கூடியது ஆகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதிவிக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது. விக்டோரியா ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலத்திலேயே ஐக்கிய இராச்சியம்அரசியல்சட்ட முடியாட்சி ஆகிவிட்டது. இவரது காலம் தொழிற் புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராச்சியத்தில் சமூகஇபொருளியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயேபிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன் அக்காலத்தின் இவர் தனது காலத்தில் தனது ஒன்பது பிள்ளைகளுக்கும் 42 பேரப் பிள்ளைகளுக்கும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் திருமணம் செய்து வைத்ததன் மூலம் ஐரோப்பாவை ஒன்றிணைத்தார். இது அவருக்கு ' முன்னணி உலக வல்லரசுஆகவும் திகழ்ந்தது.ஐரோப்பாவின் பாட்டி' என்னும் பட்டப் பெயரை ஈட்டிக் கொடுத்தது

பட்டங்கள்
HM The Queen
HRH Princess Alexandrina Victoria of Kent

முதலாம் எலிசபெத்
முதலாம் எலிசபெத் (7 செப்டெம்பர் 1533 – 24 மார்ச் 1603) இங்கிலாந்தின் அரசியாகவும் 1558 நவம்பர் 17 முதல் இறக்கும் வரைஅயர்லாந்தினதும் அரசியாகவும் இருந்தார்.கன்னி அரசி குளோரியானா அல்லது நல்ல அரசி பெஸ் என்றும் அழைக்கப்பட்ட இவர்டியூடர் வம்சத்தின் ஐந்தாவதும் கடைசியுமான ஆட்சியாளர் ஆவார்
அரசியானதும் அவர் செய்த முதல் வேலை ஆங்கிலேயப் புரட்டஸ்தாந்தத் திருச்சபையைநிறுவ ஆதரவு அளித்ததாகும். எலிசபெத்தே அதன் உயர் ஆளுனராகவும் இருந்தார்


இரண்டாம் எலிசபெத்
இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு: ஏப்ரல் 21 1926) என்பவர் ஐக்கிய இராச்சியம் உட்பட 16 சுயாட்சி நாடுகளின் அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும் ஐக்கிய இராச்சியத்திலேயேலண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். பெப்ரவரி1952 ஆம் ஆண்டில் இவரது தந்தை ஆறாம் ஜோர்ஜ் இறந்தவுடன் ஏழு நாடுகளுக்கு அரசியாக இவர் முடி சூடினார். ஐக்கிய இராச்சியம் தவிரஇகனடா ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஜெமெய்க்கா பார்படோஸ் பகாமாஸ் கிரெனாடா பப்புவா நியூ கினி சொலமன் தீவுகள் துவாலு சென் லூசியா சென் வின்செண்ட் மற்றும் கிரெனாடின்ஸ் பெலீஸ் அண்டிகுவா பார்புடா சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய நாடுகளுக்கு அரசியாக உள்ளார். இவை அனைத்துக்கும் இவர் தனது சார்பில்பொது ஆளுநர் ஒருவரை நியமித்துள்ளார். இந்நாடுகள் அனைத்தும் பொதுநலவாய நாடுகள்(Commonwealth realm)என அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளில் இவரது அதிகாரம் மிகவும் பரந்து பட்டவை ஆயினும் பொதுவாக இவர் உள்ளூர் அரசியலில் தலையிடுவதில்லை

Friday, May 14, 2010

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்

கிரிஸ்டோபர் கொலம்பஸ்
கிரிஸ்டோபர் கொலம்பஸ் (Christopher Columbus) (1451-1506) ஒரு கடல் பயணி வணிகர். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (ஸ்பெயின் நாட்டுக்கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் ஜெனோவா என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. மேலும்.

வில்லெம் ஜான்சூன்
வில்லெம் ஜான்சூன் (Willem Janszoon 1570 - 1630) டச்சு கடற்பயணியும் குடியேற்ற ஆளுநரும் ஆவார். இவரே ஆஸ்திரேலியாவின் கரையை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். இவர் வில்லெம் ஜான்ஸ் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அனேகமாக நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் பிறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

வாஸ்கோ ட காமா வாஸ்கோ ட காமா (Vasco da Gama 1469 - டிசம்பர் 24 1524) ஒரு போர்த்துகீச நாடுகாண் பயணியாவார். இவரே இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியர். இவர் ஆப்பிரிக்காவின் தென்கோடியிலுள்ள நன்னம்பிக்கை முனை வழியாக இந்தியா வந்தடைந்தார்

லொரன்சோ டி அல்மெய்டா

லோரென்சோ டி அல்மெய்டா இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த முதலாவது போர்த்துக்கேயன். இவன் போர்த்துக்கீச மாலுமியும் நாடுகாண் பயணியுமான பிரான்சிஸ்கோ டி அல்மெய்டாவின் மகன் ஆவார். மாலைதீவுகளுக்கு தனது மூன்று கப்பல்களுடன் புறப்பட்ட லோரன்சோ டி அல்மெய்டா கடல் நீரோட்டத்தின் காரணமாக வடபக்கமாக இழுக்கப்பட்டு 1505 ஆம் ஆண்டு நவம்பர் 15 இல் இலங்கைக்கரையில் தரையிறங்கினார்.

ஜேம்ஸ் குக்
ஜேம்ஸ் குக் James Cook 7 நவம்பர் 1728 - 14 பெப்ரவரி 1779) இங்கிலாந்தைச் சேர்ந்த நாடுகாண் பயணி. நியூசிலாந்து தீவினை முதன்முதலில் உலகப்படத்தில் குறித்ததுடன் பசுபிக் சமுத்திரத்தில் மூன்று பயணங்களை மேற்கொண்டவர். தனது முதற்பயணத்தின் போது 1770 இல் அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையினைக் கண்டார். அப்பிரதேசத்தை நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டு இங்கிலாந்துக்குச் சொந்தமானதென உரிமை கோரினார்.மூன்றாவது பசுபிக் பயணத்தின்போது ஹவாய்த்தீவுவாசிகளுடனான சண்டையில் கொல்லப்பட்டார்

இபின் பட்டுடா
இபின் பட்டுடா ஒரு மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் பயணியும் ஆவார். ரிகிலா எனப்படும் இவரது பயணங்களைப் பற்றிய விபரங்கள் பெயர்பெற்றவை.இவரது பயணங்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்ததுடன் அறியப்பட்ட இசுலாமிய உலகம் முழுவதையும் அதற்கும் அப்பாலுள்ள நாடுகளையும் உள்ளடக்கி இருந்தன.இவர் வடக்கு ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா தெற்கு ஐரோப்பா. கிழக்கு ஐரோப்பா மையக் கிழக்கு இந்தியத் துணைக் கண்டம் நடு ஆசியா தென்கிழக்கு ஆசியா சீனா ஆகிய நான்கு திசைகளிலும் பரந்திருந்த பகுதிகளூடாகப் பயணம் செய்துள்ளார்.

பெர்டினென்ட் மகலன்

பெர்டினென்ட் மகலன் அல்லது பெர்டினண்டு மகாலன் (போர்த்துகீசு(1480 - ஏப்ரல் 27 1521) போர்த்துக்கேய மாலுமி. உலகைச் சுற்றிவந்த முதல் மனிதராக அறியப்படுகிறார். 1519 இல் உலகைக் கப்பல் மூலம் சுற்றிவந்து நிறைவு செய்தார். பசுபிக் கடலுக்கு அப்பெயரை இவர் இட்டார்.

எர்னான் கோட்டெஸ்
எர்னான் கோட்டெஸ் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் எர்னான் கோட்டெஸ் டெ மொன்ரோய் பிசாரோ1485–டிசம்பர் 2 1547. ஒரு நாடுபிடிப்பாளர் ஆவார். இவர் நடத்திய படையெடுப்பு அஸ்டெக் பேரரசின் வீழ்ச்சிக்கு வழிகோலியதுடன் 16 ஆம் நூற்றாண்டுத் தொசக்கத்தில் மெக்சிக்கோ தலைநிலத்தின் பெரும் பகுதியை கஸ்டீல் அரசரின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது. கோட்டெஸ் அமெரிக்காவில் முதல் கட்ட ஸ்பானியக் குடியேற்றத்தைத் தொடங்கிய குடியேற்றக்காரர்களின் தலைமுறையைச் சேர்ந்தவர்

ஏபெல் டாஸ்மான்
ஏபெல் டாஸ்மான் 1603 - அக்டோபர் 10 1659) என்பவர் டச்சு கடல் ஆராய்ச்சியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார். இவர் தனது 1642 மற்றும் 1644 ஆம் ஆண்டுகளுக்கான டச்சு கிழக்கிந்தியக் கம்பனிக்கான பிரபல்யமான கடற்பயணங்களுக்காக அறியப்படுகிறார். இவரே முதன் முதலாக வான் டியெமன் நிலம் (தற்போதைய தாஸ்மானியா) என்ற தீவுகளுக்கும் நியூசிலாந்து மற்றும் பிஜித் தீவுகள் போன்றவற்றையும் கண்ட முதல் ஐரோப்பியர் ஆவார்.


ருவால் அமுன்சென்

ருவால் அமுன்சென் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ருவால் எங்கெல்பிரெட் கிரேவிங் அமுன்சென்ஜூலை 16 1872 – ஜூன் 18 1928) நோர்வே நாட்டைச் சேர்ந்தவரும் துருவப் பகுதிகளில் பயணங்களை மேற்கொண்டவருமான தேடலாய்வாளர் (explorer) ஆவார். இவர் தென் துருவத்தை அடைந்த தனது முதலாவது அத்திலாந்திக் பயணத்தை 1910 ஆம் ஆண்டுக்கும் 1912 ஆம் ஆண்டுக்கும் இடையில் மேற்கொண்டார். வட துருவம் தென் துருவம் இரண்டுக்கும் சென்ற முதல் மனிதர் இவராவர். வடமேற்குப் பாதையைக் கடந்த முதல் மனிதரும் இவரே. ஜூன் 1928 ஆம் ஆண்டில் மீட்புப் பணியொன்றில் ஈடுபட்டிருந்த போது இவர் காணாமல் போனார்.

Saturday, May 08, 2010

கொலம்பஸ் - ஓர் இணையற்ற நாயகன்

கிரிஸ்டோபர் கொலம்பஸ் (Christopher Columbus) (1451-1506) ஒரு கடல் பயணி வணிகர். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (ஸ்பெயின் நாட்டுக்கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் ஜெனோவா என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.

கொலம்பஸின் வரலாற்று முக்கியத்துவம்

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்கா பற்றி ஐரோப்பா தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும்.

உண்மையாக கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் அல்லர் ஏனென்றால் அங்கே ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார்.முதல் ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் வைக்கிங்கள் வட ஐரோப்பாவிலிருந்து 11ஆம் நூற்றாண்டிலேயே வட ஐரோப்பாவிற்குச் சென்றுள்ளனர். இருந்தாலும் கொலம்பஸின் பயணமே ஐரோப்பியர்களின் அமெரிக்கக்குடியேற்றத்திற்கு அடிப்படையாகும். அதுவே உரேசியா மற்றும் ஆப்பிரிக்காவை அமெரிக்காவுடன் இணைத்ததற்கு முக்கிய காரணமாகும்.

முதல் பயணம்
சாண்டா மரியா கப்பல் replica

  • ஆகஸ்ட் 3 கொலம்பஸ் பாலோஸ்-இலிருந்து மூன்று கப்பல்களில் சாண்டா மரியா நின்யா பின்டா புறப்பட்டார். முதலில் அவர் கேனரித்தீவுகளை அடைந்தார்.
  • இன்றைக்கும் அவர் முதலில் அடைந்த தீவு எது என்பதில் சர்ச்சை இருந்தாலும் அவர் பகாமாஸ்-இல் ஒரு தீவையே அடைந்திருக்க வேண்டும் என்பது உறுதி.
  • கொலம்பஸ் அவருடைய முதல் பயணத்தில் கியூபாவிலும் ஸ்பானியோலா விலும் பயணத்திருந்தார்.
  • அங்கே அவர் தான் கொண்டு வந்த தங்கம் மற்றும் கொண்டு வந்த அமெரிக்கப்பழங்குடிகள் ஆகியவற்றை அரசவையில் ஒப்படைத்தார். அங்கே அதுவரை அறியப்படாதிருந்த புகையிலை அன்னாசி மற்றும் ஹன்னாக் ஆகியவைகளைப்பற்றி அங்கே விளக்கினார்.அங்கே அவர் ஒரு மாவீரராக வரவேற்கப்பட்டார். அவருடைய கண்டுபிடிப்பு பற்றிய செய்தி உலகெங்கும் பரவியது.

இரண்டாம் பயணம்

  • இரண்டாம் பயணத்தை (1493-1496)-இல் செப்டெம்பர் 24 1493-இல் துவக்கினார். டையனோ ஆதிவாசிகளை வசப்படுத்தவும்இ அத்தீவுகளைக்குடியேற்ற நாடுகளாக்கவும் 17 கப்பல்களில் 1200 பேருடன் வேண்டிய கருவிகளுடன் கிளம்பினார்.
  • முதலில் டொமினிக்கா-வையும் பின்னர் வடக்காகக் கிளம்பி குவாடெலோப் மோன்ட்செர்ராட் ஆன்டிகுவா மற்றும் நேவிஸ் ஆகிய சிறிய ஆன்டில்லெஸ்-இல் உள்ள தீவுகளைக் கண்டறிந்து அவற்றிற்கு அப்பெயர்களைச் சூட்டினார்.
  • ஜமைக்காவைக் கண்டுபிடித்தார்.

மூன்றாம் பயணம்

1498-இல் கொலம்பஸ் மூன்றாம் முறையாக புதிய உலகிற்கு இளம் பார்த்தலோமி டி லாஸ் காஸாஸ்(இவர் பின்னர் கொலம்பஸின் குறிப்புக்களை தந்தவர்) உடன் கிளம்பினார். இந்த முறை அவர் ட்ரினிடாட் தீவுகளை ஜுலை 31இல் கண்டுபிடித்தார்.

கடைசிப்பயணமும் வாழ்வின் கடைசிக்கட்டமும்

  • கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தை 1502-1504-இல்(ஸ்பெயினைவிட்டு மே 9 1502) மேற்கொண்டார்.
  • 1506-இல் கொலம்பஸ் இறந்தார். அப்போது கூட தான் கண்டுபிடித்ததுஇ ஆசியாவின் கிழக்குக்கரை என்று உறுதியாக நம்பினார். அவருடைய இறப்பின் பின்கூட அவரது பயணம் தொடர்ந்தது.
ஜெனோவாவில் உள்ள கொலம்பஸ் நினைவுச்சின்னம்

கொலம்பஸின் நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளையும் தாண்டி அவர் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்; ஒரு சின்னமாகவும் சகாப்தமாகவும் மாறியுள்ளார்.அவரைப் பற்றிய யூகங்கள் ஒரு கோணத்தில் அவரை ஒரு வரலாற்று நாயகனாகவும் மற்றொரு கோணத்தில் அவரை ஒரு மனித குல எதிரியாகவும் சித்தரிக்கின்றன