Tuesday, April 13, 2010

கண்ணிரிலும் தண்ணிரிலும் மூழ்கிய டைட்டானிக் 98 வருடம்

கண்ணிரிலும் தண்ணிரிலும் மூழ்கிய டைட்டானிக் 98 வருடம்

ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தின் போது ஏப்ரல் 14 1912 இல் இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் 220 அடியிலிருந்து 240 அடி நீளமான பனிப்பாறை ஒன்றுடன் மோதியது; உத்தேசமாக12 சதுர அடி துளை (வெடிப்பு) மோதல் காரணத்தினால் உண்டாகின்றது மோதி 2 மணி 40 நிமிடங்களில் ஏப்ரல் 15 1912 இல் முற்றாக மூழ்கியது.
டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. இப்படியான ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியது.

மொத்தம் இருந்த 2228 பேருடன் (1343 பயணிகள் 885 மாலுமிகள்)பேரில் 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1517 பேர் உயிரிழந்தனர்.
டைடானிக் மூழ்கும் வேளையில் இரு பெரிய பகுதிகளாக உடைந்து மூழ்கியது உயிர் தப்பிய பயணிகளால் அவதானிக்கப்பட்டது.

மிகவும் சோகம் நிறைந்த டைடானிக் கப்பல் தொடர்பான முக்கிய தகவல்கள்
 • டைட்டானிக் கப்பலின் பெயர் - RMS Titanic (Royal mail Steamer Titanic) .

 • இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது.
  டைடானிக் கப்பல் கட்டுமானம் 1909 மார்ச் 31 ம் திகதி தொடங்கி 1911 மே 31ம் திகதி முடிவுற்றது.
 • 3000 வேலையாட்கள் 3 மில்லியன் தறையாணி (கடாவி) களை பாவித்து கப்பலை கட்டிமுடித்தனர்.
 • டைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமை ஏப்ரல் 10 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது.
  கப்பலின் நீளம் 882 அடி (269.1 மீற்றர்).
 • கப்பலின் உயரம் 175 அடி (53.3 மீற்றர்).
 • கப்பலின் மொத்த எடை 46328 தொன்.
  ஒருநாளைக்கு 825 தொன் நிலக்கரியை டைடானிக் இயந்திரம் இயக்க பயன்படுத்தப்பட்டது.
 • டைடானிக் 11 மாடி உயரமான கட்டிடதிற்கு சமமாக ஒப்பிடப்படுகின்றது இந்த கப்பலை வர்ணமூட்ட பெருமளவில் கறுப்பு மையுடன் வெண் வர்ணமும் பாவிக்கப்பட்டதுமுதலாவது நீச்சல் தடாகம் உள்ள கப்பலாக டைடானிக் வடிவமைக்கப்பட்டது.
74 வருடங்களின் பின்
செப்டம்பர் 1 1985 இல் ரொபேர்ட் பலார்ட் தலைமையிலான ஆய்வாளர் குழு ஒன்று கண்டு பிடித்தது. டைடானிக் கப்பல் இப்போது கடல் மட்டத்கிலிருந்து 12000 அடி ஆழத்தில் இருக்கின்றது.டைடானிக் மூழ்கும் வேளையில் இரு பகுதிகளாக உடைந்த பாகங்கள் சமுத்திர அடியில் 1970 அடி தூரத்தில் இருக்க காணப்பட்டது.

டைட்டானிக் (திரைப்படம்)

டைட்டானிக் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் லியானார்டோ டிகாப்ரியோ கேட் வின்ஸ்லெட் மற்றும் பலரும் நடித்துள்ளனர். சொல்லமுடியாத சோக சம்பவத்தினை 194 நிமிடத்தில் தத்ரூபமாக காண்பித்து11 ஆஸ்கார் விருதுகளை 1997 இல் மிகப்பெரிய சாதனை திரைப்படம் டைடானிக் பெற்றது . 200 மில்லியன் டாலர் செலவில் தயாரான டைடானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை பெற்ற சாதனை மட்டுமல்ல வசூலிலும் 1.85 பில்லியன் (1850 மில்லியன்) டாலர் மேலாக இதுவரை குவித்துள்ளது
No comments:

Post a Comment