பலாப்பழம்

பலா பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் மர இனமாகும். மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். தென்னிந்தியாவில்இ மாம்பழம் மற்றும் வாழைப்பழத்துக்கு அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படுவது பலா ஆகும்.
உடல் நல பலன்கள்
பலாச்சுளைகள் பொட்டாசியம்இ கால்சியம்இ பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1இ பி2 ஆகியவை கொண்டுள்ளன.- அதிக அளவில் பலாப்பழம் உண்பது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. பழுக்காத பழச்சுளையை அப்படியே உண்பது நல்லதல்ல. அதே போல சமைக்காத கொட்டைகள் ட்ரிப்சின் என்ற புரதச்சிதைவு நொதியை பாதிப்பதால் செரிமாணத்தை பாதிக்ககூடும். பழுத்த பலாச்சுளைகள் மலமிளக்கியாக செயல்படுகின்றன.
செவ்வாழை

பயன்கள்
- இயற்கையியலாளர்களின் கருத்துப்படி வடிவமும் நிறமும் அதற்குரியப் பயன்களைத் தரும். அக்கருத்துப்படிஇ இது சிவப்பு நிறமாக இருப்பதால் இரத்த மண்டலத்திற்கும் ஆண்மைக்கான ஊட்டச்சத்துகளும் இருப்பதாக கருதப்படுகிறது.
- கண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
- செரிமானக்கோளாறுகள் மலச்சிக்கல் மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.