Friday, November 13, 2009

சில பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

இது பழங்கள் பற்றிய சில சுவையான தகவலாகும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும்.

ஆப்பிள்

அமெரிக்காவில் ஐரோப்பியர்களின் வருகைக்குபின் ஆப்பிள் பிரபலமடைந்தது.ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp. ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும் சிடர் என்ற பானமும் தயாரிக்கப்படுகின்றன. ஆப்பிள் மரம் சிறிய இலையுதிர் மரமாகும். சுமார் 5 - 12 மீ உயரம் வரை வளரக்கூடியதுடன். ஆப்பிள் என்ற சொல் பழைய ஆங்கில சொல்லான aeppel (பொருள்: உருண்டை) என்ற சொல்லிலிருந்து வந்தது. பயிரிடப்படும் ஆப்பிள்களில் சுமார் 7500 இரகங்கள் உள்ளன. அறுவடைமுற்றிய மரங்களில் ஆண்டுக்கு சுமார் 100 - 200 கிலோகிராம் ஆப்பிள்கள் விளையும்.


ஆப்பிள்மருத்துவ குணங்கள்

தினம் ஓர் ஆப்பி மருத்துவரைத் தூர வைக்கும் (An apple a day keeps the doctor away) என்ற ஆங்கிலப் பழமொழியின் கூற்றுப்படி நெடுங்காலமாக ஆப்பிள்கள் உடல்நலத்திற்கு மிக நல்லதாகக் கருதப்பட்டன. தற்போது ஆப்பிள்களுக்குப் பலவிதமான புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள் எடைக்குறைவு கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது.ஆப்பிளில் காணப்படும் சில வேதிப்பொருட்கள் அல்செய்மர்ஸ் (Alzheimer's) பார்கின்சன் (Parkinson's) நோய்களிலிருந்து மூளையை பாதுகாக்கின்றன. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகைப் பொருட்கள் (phenolics) இயற்கையாகவே ஆக்சிஜனேற்றத் தடுப்புச்சக்தி உடையவை என்பதால் மூளையை நரம்புப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன என கார்னெல் பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

திராட்சைதிராட்சை இலையுதிர்க்கும் பல்லாண்டுக் கொடி வகையின் பழம் ஆகும். இதிலிருந்து வினாகிரி வைன் திராட்சை விதைப் பிழிவு திராட்சை விதை எண்ணெய் என்பனவும் ய்யப்படுகின்றன.திராட்சையில்பலவகைகள்இருப்பினும்பொதுவாகத் திராட்சையில் பெருமளவு நீரும் மாவுப் பொருளும் உப்புநீர் மற்றும் கொழுப்புச் சத்துகளும் உண்டு.
உணவு வேளாண்மை அமைப்பின் தகவலின்படி உலகில் 75866 சதுர கிலோமீட்டர்களில் திராட்சைச் செய்கை நடைபெறுகிறது. உலகின் மொத்த திராட்சை உற்பத்தியில் 71% வைன் தயாரிப்புக்காகப் பயன்படுகிறது 27% நேரடியாகப் பழமாக உட்கொள்ளப்படுகிறது

திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம்

. தவிர கார்போஹைடிரேட் டெக்ஸ்ட்ரோஸ் ப்ரக்டோஸ் பெக்டின் முதலானவையும் பார்டாரிக் அமிலம் மாலிக் அமிலம் சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும் புரதம் சுண்ணாம்பு தாமிரம் இரும்பு பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.

திராட்சை மருத்துவ குணங்கள்

மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர தோலின் நிறத்தைப் பாதுகாப்புக்குரியதாக்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ரசம் தினம் மூன்று அவுன்ஸ் என இருவேளை அருந்தி வர குணம் பெறலாம். திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் மட்டும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரிப்படும். வயிற்றுப்புண் வாய்ப்புண் ஆறிவிடும். உடலில் பலம் ஏறும். ஆனால் கொஞ்சம் சீதளத்தைத் தரும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிடுவது நல்லதல்ல. பகல் உணவுக்கு பின் தினசரி 15 பச்சை திராட்சை சாப்பிட்டு வர தலைவலியே வராது.வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும்பொழுது தினசரி அரை மப எடை வரை உலர்ந்த திராட்சை பழத்தை இரவு ஆகாரத்திற்குப் பின் சாப்பிட்டு வந்தால் வயோதிக வயதில் தளர்வு ஏற்படாது. எலும்புகள் பற்கள் கெட்டிப்படும். இருதயம் பலத்துடனிருக்கும். இருதயத்துடிப்பு இயற்கை அளவிலேயே இருக்கும்.

நெல்லி
நெல்லி இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்குஇ அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சிஹ உள்ளதாகக் கருதப்படுகின்றது

அடங்கியுள்ள சத்துக்கள்

புரதம் - 0.4 கிராம் கொழுப்பு - 0.5 கி மாச்சத்து - 14 கி கல்சியம் - 15 மி.கி பொஸ்பரஸ் - 21 மி.கி இரும்பு - 1 மி.கி நியாசின் - 0இ4 மி.கி வைட்டமின் ´பி1ஹ - 28 மி.கி வைட்டமின் ´சிஹ - 720 மி.கி கரிச்சத்து சுண்ணாம்பு தாதுப் பொருட்கள் கலோரிகள் -


மருத்துவப் பண்புகள்


இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற்புண்இ இரத்தப்பெருக்கு நீரிழிவு கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். அதன் காரணமாக கல்ப உருவிலும் வற்றல் உருவிலும் பாகு வடிவத்திலும் களிம்பு வடிவத்திலும் இதைப் பயன்படுத்துவர். இது தவிர நெல்லிக்காய் தைலம் உச்சந்தலையைக் குளிரச் செய்யும் மற்றும் கருமையான தலைமயிரைத் தரும்.

உலக பதிவுலகில் முதன் முறையாக....படிக்க வந்த

நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

No comments:

Post a Comment