Tuesday, October 27, 2009

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-04


சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும்.

கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் Christiaan Huygens ஏப்ரல் 14 1629 – ஜூலை 8 1695) ஒரு டச்சு கணிதவியலாளர் வானியலாளர் மற்றும் இயற்பியலாளர் ஆவார். 1655 ஆம் ஆண்டில் சனிக் கோளின் மிகப் பெரிய துணைக்கோளான டைட்டானைக் கண்டுபிடித்தார்.பேராசிரியர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் Christie Jeyaratnam Eliezer 1918 - மார்ச் 10 2001) பிரபல கணிதவியலாளரும் தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948 வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும். எலியேசர் அவர்கள் தனது தொடக்கக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பெற்று பின்னர் லண்டன் கேம்ப்றிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி (Phனு) பட்டம் பெற்றார்.

எட்வர்ட் டெல்லர் (Edward Teller) ) (ஜனவரி 15 1908 – செப்டம்பர் 9 2003) ஹங்கேரியில் பிறந்த யூத இனத்தைச் சேர்ந்த ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவரே ஐதரசன் குண்டின் தந்தை என்று அறியப்படுகிறார்.
ஜோர்ஜ் ஈஸ்ற்மன் (ஜார்ஜ் ஈஸ்ட்மன்) ((George Eastman ஜூலை 12 1854 - மார்ச் 14 1932) ஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) கோடாக் கம்பனியின் ((Eastman Kodak Co நிறுவனரும் ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்தவரும் ஆவார். ஒளிப்படச்சுருளின் கண்டுபிடிப்பே புகைப்படக்கலையை சாதாரண மக்களும் பயன்படுத்த வழிவகை செய்தது. அதுவே அசையும் படங்களின் கண்டுபிடிப்புக்கும் அடிப்படையாக அமைந்தது.கிரிகோர் ஜோஹன் மெண்டல் Gregor Johann Mendel ஜூலை 20 1822 – ஜனவரி 6 1884) மரபியல் குறித்த அடிப்படை ஆராய்ச்சிப் பணிகளுக்காக அறியப்படும் ஆஸ்திரிய பாதிரியாராவார். இவர் மரபியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.ஐசாக் நியூட்டன் (டிசம்பர் 25 1642 - மார்ச் 20 1727) ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும் அறிவியலாளரும் தத்துவஞானியும் ஆவார். வெண்ணிற ஒளி பல நிற ஒளிகளின் சேர்க்கையென முதலில் விளக்கியவரும் இவரே 1687ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய Philosophiae Naturalis Principial Mathematica என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய இயக்க விதிகள் மூலம் (classical mechanics என்னும் துறைக்கு வித்திட்டார்.


ஜோசப் பிரீஸ்ட்லி (Joseph Priestley மார்ச் 13 1733 – பெப்ரவரி 8 1804) ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர். இவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஆக்ஸிஜனைக் (ஒட்சிசன் உயிர்வளி) கண்டுபித்தது மிகவும் புகழ் வாய்ந்தது. கார்பன்-டை-ஆக்சைடு (காபனீரொட்சைட்டு) பற்றிய இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை. ஆக்ஸிஜனை இவருக்கும் முன்னால் கார்ல் வில்ஹெல்ம் ஷீல் என்பார் கண்டுபிடித்தார் என்று தற்கால ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஹிப்போகிரட்டீஸ் கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் ஆவார். கி. மு. 460 முதல் கி. மு. 370 வரை வாழ்ந்த இவர் நோய்கள் பக்டீரியாக்கள் வைரஸ் மூலமே பரவுகிறது என்பதை முதன்முதலில் நிரூபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவத்துறையின் தந்தை என்று போற்றப்படுகிறார்.அமேடியோ அவகாதரோ ((Lorenzo Romano Amedeo Carlo Avogadro di Quaregna e di Cerreto ஆகஸ்ட் 9 1776 - ஜூலை 9 1856) இத்தாலியை சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். வளிமங்களின் மூலக்கூறு மற்றும் அவகாதரோவின் விதியைக் கண்டுபிடித்தமைக்காகவும் இவர் பெரிதும் அறியப்பட்டவர். இவரது நினைவாக ஒரு மூல் பொருளில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளின் எண்ணிக்கை (6.022142 x 1023) அவகாதரோவின் எண் அல்லது அவகாதரோ மாறிலி என அழைக்கப்படுகிறது.லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur டிசம்பர் 27 1822 – செப்டம்பர் 28 1895) ஒரு புகழ்பெற்ற பிரெஞ்சு நுண்ணுயிர் ஆய்வாளரும் வேதியியல் ஆய்வாளரும் ஆவார். இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுவது என்று நிறுவினார். இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார். பாலும் குடிக்கும் கள்ளும் எவ்வாறு கெட்டுப் போகாமல் இருப்பது என்பதற்காக இவர் முன்வைத்த முறை இன்று பாஸ்ச்சரைசேஷன் என்னும் பெயரில் பெருவழக்காக உள்ளது. இம்முறையில் பாலைச் சூடு செய்து நுண்ணுயிரிகளைக் கொல்வதால் பால் கெடாமல் இருக்கின்றது. நுண்ணியிரி இயலை நிறுவிய மூவருள் இவர் ஒருவராகக் கருதப்படுகின்றார். மற்றவர்கள் ஃபெர்டினாண்ட் கோன் (Ferdinand Cohn) அவர்களும் ராபர்ட் கோஃக் (Robert Koch).

No comments:

Post a Comment