Thursday, October 29, 2009

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-05

சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும்.


மேரி க்யூரி (ஆங்கிலம் Marie Curie போலந்து மொழி:Maria Skłodowska-Curie நவம்பர் 7 1867 – ஜூலை 4 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். ரேடியம் பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். 1914இல் முதலாம் உலகப் போரின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளைப்பொருத்த உதவி செய்தார். 1934 ஜுலை 4 அன்று மேரி கியூரி மரணம் அடைந்தார். கியூரி இறந்து மூன்று மாதங்களின் பின் அவரின் மகளும் மருமகனும் கியூரியின் செயற்கை கதிர் வீச்சு பற்றிய கண்டு பிடிப்பை வெளியிட்டனர்.


மைக்கேல் பரடே (Michael Faraday செப்டெம்பர் 22 1791 – ஆகஸ்டு 25 1867)) பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல் மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். புவி மையக் கோட்பாட்டுக்கு மாறாக இவர் முன்வைத்த சூரிய மையக் கோட்பாடு மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக் கண்டுபிடிப்பே நவீன வானியலின் அடிப்படையாகும்.




பியேர் ஜூல்ஸ் சேசர் ஜான்சென் Pierre Jules César Janssen பெப்ரவரி 22 1824 – டிசம்பர் 23 1907) என்பவர் ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் ஆங்கிலேய அறிவியலாளர் ஜோசப் நோர்மன் லொக்கியர் என்பவருடன் இணைந்து ஹீலியம் வாயுவைக் கண்டுபிடித்தார்.




ரோலண்ட் ஹில் (Rowland Hill டிசம்பர் 3 1795 - ஆகஸ்ட் 27 1879) நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் வோசெஸ்டர்ஷயரிலுள்ள கிடெர்மின்ஸ்டெர் என்னுமிடத்தில் பிறந்தவர்.



தொமஸ் அல்வா எடிசன் (பெப்ரவரி 11 1847 – அக்டோபர் 18 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபரும் ஆவார். இவர் பல முக்கியமான சாதனங்களை உருவாக்கினார். 'மென்லோ பூங்காவின் மந்திரவாதி' பெரும்படித் தயாரிப்புக் கொள்கையைக் கண்டு பிடிப்புக்களின் உருவாக்கத்துக்குப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1920களின் பிற்பகுதிகளில்இ தன்னுடைய மின்விளக்கு கண்டுபிடிப்பு. தனது பெயரில் சாதனை அளவான 1093 உரிமங்களைப் பதிவு செய்த எடிசன் பெரிமளவு கண்டு பிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். எடிசன் ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் Edison Trust எனப் பொதுவாக அறியப்பட்ட ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிமக் கம்பனியை Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.

வீரசிங்கம் துருவசங்கரி (செப்டம்பர் 5 1950 - டிசம்பர் 2 2006) இலங்கையைச் சேர்ந்த ஓர் அறிவியலாளரும் கண்டுபிடிப்பாளரும் மண் ஆராய்ச்சியாளரும் ஆவார். தொலைக்காட்டியாகவும் நுணுக்குக்காட்டியாகவும் பாவிக்கக்கூடிய கருவியொன்றை வடிவமைத்தார். அத்துடன் சூரிய அடுப்பு பனிக்கட்டி பனிமழை போன்றவற்றை அளக்கும் கருவிகளையும் கண்டுபிடித்தார்.


அலெசான்றோ வோல்ட்டா (1745-1827) என்பவர் மின் துறை என்று ஒரு துறை உண்டாவதற்கே வழிகோலிய முன்னோடி அறிவியல் அறிஞர்களில் ஒருவர். இவர் இத்தாலி நாட்டில் லொம்பார்டி என்னும் மாவட்டத்திலே உள்ள கோமோ என்னும் ஊரில் பிப்ரவரி 18 1745ல் பிறந்தார். 110 வோல்ட்டு மின் அழுத்தம் 230 வோல்ட்டு மின் அழுத்தம் என்பதில் உள்ள வோல்ட்டு என்னும் மின் அழுத்த அலகானது இவருடைய பங்களிப்பைப் பெருமை செய்யவும்இ நினைவு கூறவுமே அமைக்கப்பட்டது. இதனாலேயே மின் அழுத்தத்தை அளக்கும் கருவியை வோல்ட்டளவி(Voltmeter)என்று அழைக்கின்றோம். மின்னழுத்தத்தை வோல்ட்டழுத்தம் என்றும் குறிக்கப்பெறும்.


கார்ல் பென்ஸ் (நவம்பர் 25 1844 - ஏப்ரல் 4 1929) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு வாகனப்பொறியாளர் ஆவார். இவர் பெட்ரோலினால் இயங்கும் ஊர்தியைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர். இவர் 1886 இல் மூன்று சக்கர ஊர்தியைக் கண்டுபிடித்தார். இது முதலில் எரிவாயு எஞ்சினிலும் பின்னர் பெட்ரோலிலும் இயங்கியது.



ஜோஹன் குட்டன்பேர்க் (1398 - 1468) அச்சியந்திரத்தைக் கண்டுபிடித்தவராவார். ஜெர்மனியரான குட்டன்பேர்க் 1447 இல் அச்சியந்திரத்தை அறிமுகம் செய்தார். அச்சியந்திரம் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கியமானதொரு கண்டுபிடிப்பாகும்.




சோரென் பீடர் லௌரிட்சு சோரென்சென் (ஜனவரி 9 1868 - பிப்ரவரி 12 1939) டென்மார்க்கில் உள்ள ஆவர்பியர்கு (Havrebjerg) என்னும் இடத்தில் பிறந்த புகழ்பெற்ற வேதியியலாளர். இவர் காடித்தன்மையை அளவிடும் ph (கரைசலின் ஐதரசன் அடர்த்தி) முறையின் கருத்துருவை முன்வைத்தவர். இவை தவிர 1907 இல் இவர் கண்டுபிடித்த சோரென்சென் ஃவோர்மோல் டைட்ரேசன் என்னும் முறைக்காகவும் இவர் புகழ் பெற்றார்.




மார்க்கோனி (ஏப்ரல் 25 1874 - ஜூலை 20 1937) வானொலியைக் கண்டு பிடித்தவர். 'வானொலியின் தந்தை' எனப்படுபவர். 1909 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை முயசட குநசனiயெனெ டீசயரn இடன் இணைந்து பெற்றார். 1937 இல் இவர் காலமான போது உலக வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின.



ருடால்ப் ஹெல் ஒரு ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் 1901 டிசம்பர் 19 - ஆம் நாள் ஜெர்மனியின் பவேரியா நகரத்தில் பிறந்தார். இவர் தொலைநகல் சாதனத்திற்கு முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் என்னும் கருவியைக் கண்டுபிடித்தார்.


லூயிஸ் பிரெய்ல் (1809-1852 பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார்.



வில்லியம் தாம்சன் (26 ஜூன் 1824 - 17 டிசம்பர் 1907) அவர்கள் அயர்லாந்தைச் சேர்ந்த கணிதமுறை இயற்பியல் அறிஞரும் பொறியியல் அறிஞரும் ஆவார். 19 ஆவது நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவருக்கு லார்டு கெல்வின் என பட்டம் சூட்டப்பட்டது. தனிமுழு வெப்பநிலை அளவீட்டு முறையை இவர் நினைவாக கெல்வின் வெப்ப அலகாகப் பயன்படுகின்றது.



ஜெ.ஜெ. தாம்சன் என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 18 1856 - ஆகஸ்ட் 30 1940) எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார்.

Tuesday, October 27, 2009

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-04


சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும்.

கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் Christiaan Huygens ஏப்ரல் 14 1629 – ஜூலை 8 1695) ஒரு டச்சு கணிதவியலாளர் வானியலாளர் மற்றும் இயற்பியலாளர் ஆவார். 1655 ஆம் ஆண்டில் சனிக் கோளின் மிகப் பெரிய துணைக்கோளான டைட்டானைக் கண்டுபிடித்தார்.



பேராசிரியர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் Christie Jeyaratnam Eliezer 1918 - மார்ச் 10 2001) பிரபல கணிதவியலாளரும் தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948 வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும். எலியேசர் அவர்கள் தனது தொடக்கக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பெற்று பின்னர் லண்டன் கேம்ப்றிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி (Phனு) பட்டம் பெற்றார்.

எட்வர்ட் டெல்லர் (Edward Teller) ) (ஜனவரி 15 1908 – செப்டம்பர் 9 2003) ஹங்கேரியில் பிறந்த யூத இனத்தைச் சேர்ந்த ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவரே ஐதரசன் குண்டின் தந்தை என்று அறியப்படுகிறார்.




ஜோர்ஜ் ஈஸ்ற்மன் (ஜார்ஜ் ஈஸ்ட்மன்) ((George Eastman ஜூலை 12 1854 - மார்ச் 14 1932) ஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) கோடாக் கம்பனியின் ((Eastman Kodak Co நிறுவனரும் ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்தவரும் ஆவார். ஒளிப்படச்சுருளின் கண்டுபிடிப்பே புகைப்படக்கலையை சாதாரண மக்களும் பயன்படுத்த வழிவகை செய்தது. அதுவே அசையும் படங்களின் கண்டுபிடிப்புக்கும் அடிப்படையாக அமைந்தது.



கிரிகோர் ஜோஹன் மெண்டல் Gregor Johann Mendel ஜூலை 20 1822 – ஜனவரி 6 1884) மரபியல் குறித்த அடிப்படை ஆராய்ச்சிப் பணிகளுக்காக அறியப்படும் ஆஸ்திரிய பாதிரியாராவார். இவர் மரபியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.



ஐசாக் நியூட்டன் (டிசம்பர் 25 1642 - மார்ச் 20 1727) ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும் அறிவியலாளரும் தத்துவஞானியும் ஆவார். வெண்ணிற ஒளி பல நிற ஒளிகளின் சேர்க்கையென முதலில் விளக்கியவரும் இவரே 1687ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய Philosophiae Naturalis Principial Mathematica என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய இயக்க விதிகள் மூலம் (classical mechanics என்னும் துறைக்கு வித்திட்டார்.


ஜோசப் பிரீஸ்ட்லி (Joseph Priestley மார்ச் 13 1733 – பெப்ரவரி 8 1804) ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர். இவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஆக்ஸிஜனைக் (ஒட்சிசன் உயிர்வளி) கண்டுபித்தது மிகவும் புகழ் வாய்ந்தது. கார்பன்-டை-ஆக்சைடு (காபனீரொட்சைட்டு) பற்றிய இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை. ஆக்ஸிஜனை இவருக்கும் முன்னால் கார்ல் வில்ஹெல்ம் ஷீல் என்பார் கண்டுபிடித்தார் என்று தற்கால ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.




ஹிப்போகிரட்டீஸ் கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் ஆவார். கி. மு. 460 முதல் கி. மு. 370 வரை வாழ்ந்த இவர் நோய்கள் பக்டீரியாக்கள் வைரஸ் மூலமே பரவுகிறது என்பதை முதன்முதலில் நிரூபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவத்துறையின் தந்தை என்று போற்றப்படுகிறார்.



அமேடியோ அவகாதரோ ((Lorenzo Romano Amedeo Carlo Avogadro di Quaregna e di Cerreto ஆகஸ்ட் 9 1776 - ஜூலை 9 1856) இத்தாலியை சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். வளிமங்களின் மூலக்கூறு மற்றும் அவகாதரோவின் விதியைக் கண்டுபிடித்தமைக்காகவும் இவர் பெரிதும் அறியப்பட்டவர். இவரது நினைவாக ஒரு மூல் பொருளில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளின் எண்ணிக்கை (6.022142 x 1023) அவகாதரோவின் எண் அல்லது அவகாதரோ மாறிலி என அழைக்கப்படுகிறது.



லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur டிசம்பர் 27 1822 – செப்டம்பர் 28 1895) ஒரு புகழ்பெற்ற பிரெஞ்சு நுண்ணுயிர் ஆய்வாளரும் வேதியியல் ஆய்வாளரும் ஆவார். இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுவது என்று நிறுவினார். இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார். பாலும் குடிக்கும் கள்ளும் எவ்வாறு கெட்டுப் போகாமல் இருப்பது என்பதற்காக இவர் முன்வைத்த முறை இன்று பாஸ்ச்சரைசேஷன் என்னும் பெயரில் பெருவழக்காக உள்ளது. இம்முறையில் பாலைச் சூடு செய்து நுண்ணுயிரிகளைக் கொல்வதால் பால் கெடாமல் இருக்கின்றது. நுண்ணியிரி இயலை நிறுவிய மூவருள் இவர் ஒருவராகக் கருதப்படுகின்றார். மற்றவர்கள் ஃபெர்டினாண்ட் கோன் (Ferdinand Cohn) அவர்களும் ராபர்ட் கோஃக் (Robert Koch).

Sunday, October 25, 2009

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03



சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனதுமுந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும்.
வில்லியம் சொக்லி (William Bradford Shockley பெப்ரவரி 13 1910 - ஆகஸ்ட் 12
1989) டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஜோன் பார்டீன் வால்ட்டர் பிரட்டன் ஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.





ரைட் சகோதரர்கள் (Wright brothers ஓர்வில் (ஆகஸ்ட் 19 1871 – ஜனவரி 30 1948) வில்பர் (ஏப்ரல் 16 1867 – மே 30 1912) என்ற அமெரிக்கர்கள் முதன்முதலில் டிசம்பர் 17 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்ஃமணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.

அடா யோனத் (Ada Yonath எபிரேயம்: பிறப்பு: 22 சூன் 1939) இசுரேலிய படிகவியலாளர். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான 'ரைபோசோம்' (ribosome) எனப்படும் செல்களின் கட்டமைப்பை ஆய்வு செய்ய குளிர்நிலை உயிரிபடிகவியல் முறைகளைக் குறித்த முன்னோடியான தமது ஆய்வுப்பணிக்காக அறியப்பட்டவர்.
டோல்ஃவ் ஃவிக் (Adolf Eugen Fick பிறப்பு: செப்டம்பர் 3 1829 காசல் யேர்மனி - ஆகஸ்ட் 21 1901 பிலன்கன்பெயார்க் பெல்ஜியம்) தொடுகை வில்லையைக் (contact lense) கண்டுபிடித்தவர்.

அய்மே ஆர்கண்ட் Aimé Argand ஜூலை 5 1750 - அக்டோபர் 14 1803) சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு இயற்பியலாளரும் வேதியியலாளரும் ஆவார். இவர் எண்ணெய் விளக்கின் வடிவமைப்பைப் பெருமளவு மேம்படுத்தினார். புதிதாக வடிவமைத்த எண்ணெய் விளக்கு இவரது பெயரைத் தழுவி ஆர்கண்ட் விளக்கு என அழைக்கப்பட்டது.


ஆர்க்கிமிடீஸ் (கிமு 287 - கிமு 212) ஒரு கிரேக்கக் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் பொறியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் வானியலாளரும் ஆவார். நீர்நிலையியல் நிலையியல் ஆகிய துறைகளுக்கான அடிப்படைகளை அமைத்ததும் நெம்புகோல் தத்துவத்தை விளக்கியதும் திருகு பம்பி உட்படப் பல இயந்திரங்களை இவர் உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein மார்ச் 14 1879 - ஏப்ரல் 18 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன் குவாண்டம் பொறிமுறை புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics)மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும் கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical hysics) அவர் செய்த சேவைக்காகவும் 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் ( Alexander Graham Bell ) மார்ச் 3 1847 - ஆகஸ்ட் 2 1922) ஓர் ஆசிரியராகவும் அறிவியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது.

ஆன்டன் வான் லீவன்ஹூக் ( Anton van Leeuwenhoek 1632-1723)இ டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இயற்கை வரலாற்று ஆய்வாளரும் நுண் நோக்கும் கருவிகளை உருவாக்கியவரும் ஆவார். பாக்டீரியாக்கள் ப்ரோடோசோவாக்கள் ஸ்பெர்மடோசோவாக்கள் மற்றும் striped muscle பற்றிய முதல் முழு விவரிப்பைத் தந்தவரும் இவரே.

சார்ல்ஸ் பாபேஜ் அல்லது சார்லஸ் பாபேஜ் (Charles Babbage டிசம்பர் 26 1791 - அக்டோபர் 18 1871) பிரித்தானிய கணிதவியலாளர் கண்டுபிடிப்பாளர். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திர கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.

Friday, October 23, 2009

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-02

சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும்.




பேர்டினண்ட் ஃபிறீஹெர் வொன் ரிச்தோஃபென் (Ferdinand Freiherr von Richthofen 1833 - 1905) ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு புவியியலாளரும் பயண ஆர்வலரும் அறிவியலாளரும் ஆவார். ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவில் தங்க வயல்களைக் கண்டு பிடிக்கும் பணியில் நிலவியலாளராகப் பணி புரிந்தார்.






லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci ஏப்ரல் 15 1452 - மே 2 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும் கண்டுபிடிப்பாளரும் பொறியியலாளரும் சிற்பியும் ஓவியரும் ஆவார். 'கடைசி விருந்து' 'மோனா லிசா'போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இடதுகையால் எழுதுபவர் வாழ்நாள் முழுதும் கண்ணாடி விம்ப எழுத்துக்களையே பயன்படுத்திவந்தார்.




ரேனால்டு 'பி. ஜான்சன் (Reynold B. Johnson) (1906-1998) என்னும் அமெரிக்கர் கணினி துறையில் பல புது கண்டுபிடிப்புகளும் புத்தாக்கங்கள் செய்தவர். குறிப்பாக கணினிகளில் தரவுகளையும் கோப்புகளையும் சேமித்து வைக்கும் வன்தட்டு நினைவகம் (hard disk) எனப்படும் நிலைசேமிப்பகத்தை இவர் உருவாகினார். இவரை வன்தட்டு இயக்கியின் தந்தை எனப் போற்றுவர். ஐக்கிய அமெரிக்கத் முதல்வர் (பிரெசிடெண்ட்) ரோனால்டு ரேகன் அவர்கள் 1986ல் நாட்டின் தொழிநுட்பப் பதக்கம் என்னும் தலையாய பரிசை அளித்து பெருமை செய்தார்.



ராபர்ட் ஹூக் (Robert Hooke) (1635 - 1703) இங்கிலாந்து நாட்டு இயற்பிலாளரும் கணித அறிஞரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஹூக் தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு குறித்த அவருடைய விவரணைகளுக்காக புகழ் பெற்றவர். செல் (Cell) ) என்ற சொல்லை முதலில் உருவாக்கியவரும் இவரே.




ராபர்ட் கோக் (Robert Koch டிசம்பர் 11 1843 – மே 27 1910) ஜெர்மானிய அறிவியலாளரும்இ மருத்துவரும் ஆவார். இவர் 1877 இல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் கோலுரு நுண்ணுயிர் 1882 இல் மைக்கோபாக்டீரியம் என்ற காச நோயை உருவாக்கும் நுண்ணுயிர் மற்றும் வைபிரியோ காலரா என்ற கொள்ளை நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றை வேறுபடுத்தியமைக்காகவும் கோக்கின் எடுகோள்களுக்காகவும் அறியப்படுகிறார்.


தொடரும்.........

Sunday, October 18, 2009

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01

விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவாகள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும்.


அல்பிரட் நோபல் Alfred Bernhard Nobel (பிறப்பு:(சிட்டாக்கோம் சுவீடன் 21 அக்டோபர் 1833 – Sanremo இத்தாலி 10 December 1896)) நோபல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். இவரின் நினைவாக நோபலியம் என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.



பெஞ்சமின் பிராங்கிளின் ((Benjamin Franklin (ஜனவரி 17 1706 – ஏப்ரல் 17 1790) என்பவர் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும் கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார்.


சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12 1809 - ஏப்ரல் 19 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை. மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தவன் உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது 'தக்கன பிழைக்கும்' அதாவது survival of the fittest போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்.




திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் (Dimitri Mendeleev ரஷ்ய மொழி (பெப்ரவரி 8 ஜனவரி 27 1834 – பெப்ரவரி 2 1907 ரஷ்ய வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் வேதியியல் தனிமங்களின் முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார். அவரது காலத்தில் கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை மென்டெலீவ் வரையறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
continue............

Thursday, October 15, 2009

உலகின் உலகின் சிறப்பு நாட்கள்


உலகின் உலகின் சிறப்பு நாட்கள்

இது எனது முத்தைய பதிவின் தொடர்ச்சியாகும்......

இந்த சிறப்பு நாட்களின் தொகுப்பில் எதாவது பிழை இருப்பின் அல்லது எதேனும் விடுபட்டிருப்பின் அறியத்தரவும் நன்றி.

பன்னாட்டு குழந்தைகள் நாள் -ஜூன் 1

• உலக சூழல் நாள் - ஜூன் 5

• உலகக் கடல் நாள் - ஜூன் 8
• உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள் - ஜூன் 12

• உலக இரத்த வழங்கல் நாள் - ஜூன் 14

• உலக வலைப்பதிவர் நாள் - ஜூன் 14
• உலக அகதிகள் நாள் – ஜூன்-20
World Humanist Day – ஜூன்-21
• சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் - ஜூன்-26
• அமைதி நாள் - ஜூலை10

• உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11
• அனைத்துலக சதுரங்க நாள் – ஜூலை 20

• π அண்ணளவு நாள் - ஜூலை22
உலக சாரணர் நாள் - ஆகஸ்டு 1

• அனைத்துலக இளையோர் நாள் - ஆகஸ்டு 12

• அனைத்துலக இடக்கையாளர் நாள் - ஆகஸ்டு 13

• புனித பார்த்தெலோமேயு நாள் – ஆகஸ்டு 24
• அனைத்துலக காணாமற்போனோர் நாள் – ஆகஸ்டு 30
• உலக எழுத்தறிவு நாள் - செப்டம்பர் 8

• அனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை நாள் – செப்டம்பர் 14

• அனைத்துலக மக்களாட்சி நாள் – செப்டம்பர் 15
• உலக ஓசோன் பாதுகாப்பு நாள் – செப்டம்பர் 16
• உலக அமைதி நாள் - செப்டம்பர் 21
• தானுந்து அற்ற நாள் - செப்டம்பர் 22
• உலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27
• உலக முதியோர் நாள் - அக்டோபர் 1
• அனைத்துலக வன்முறையற்ற நாள் – அக்டோபர் 2
• உலக வன விலங்குகள் நாள் – அக்டோபர் 4

• உலக விண்வெளி வாரம் ஆரம்பம் - அக்டோபர் 4

• அனைத்துலக ஆசிரியர் நாள் - அக்டோபர் 5
• உலக அஞ்சல் நாள் – அக்டோபர் 9

• உலகத் தர நிர்ணய நாள் - அக்டோபர் 14

• உலக உணவு நாள் - அக்டோபர் 16
• உலக வறுமை ஒழிப்பு நாள் - அக்டோபர் 17
• ஆப்பிள் நாள் - அக்டோபர் 21

• இயற்பியல் - மூல் நாள் - அக்டோபர் 23
• ஐக்கிய நாடுகள் நாள் (1945) - அக்டோபர் 24

• பொதுநலவாய நாடுகள் - நினைவுறுத்தும் நாள்- நவம்பர் 11
• உலக நீரிழிவு நோய் நாள் - நவம்பர் 14

• உலக சகிப்புத் தன்மை நாள் - நவம்பர் 16
• அனைத்துலக மாணவர் நாள் - நவம்பர் 17

• உலகத் தொலைக்காட்சி நாள் - நவம்பர் 21
• படிவளர்ச்சி நாள் - நவம்பர் 24
• பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள் - நவம்பர் 25

• உலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1

• ஐக்கிய நாடுகள் - அடிமைத்தனத்தை அழிக்கும் சர்வதேச நாள் - டிசம்பர் 2
• அனைத்துலக ஊனமுற்றோர் நாள் - டிசம்பர் 3

• மனித உரிமைகள் நாள் - டிசம்பர் 10
• நோபல் பரிசு அளிக்கும் வைபவம் - டிசம்பர் 10
• பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள் - டிசம்பர் 17
• சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள் - டிசம்பர் 29

Sunday, October 11, 2009

உலகில் உள்ள சிறப்பு நாட்களின் தொகுப்பு-01


  • உலகில் உள்ள சிறப்பு நாட்களின் தொகுப்பு

இது எனது 25 ஆவது பதிப்பாகும்.

இத்த வகையில் எனக்கு பின்னுட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள் அதில் சிலர்........

Loganatha,கனககோபி,கலையரசன், ஜெஸ்வந்தி,தங்க முகுந்தன்

• உலக சுங்கத்துறை தினம் -ஜனவரி 26

• உலக தொழுநோய் ஒழிப்பு நாள்-ஜனவரி 30
• உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2 • அனைத்துலக தாய்மொழி நாள் - யுனெஸ்கோ-பெப்ரவரி 21

• ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்-மார்ச் 8

• உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள் -மார்ச் 13
• உலக நுகர்வோர் நாள்-மார்ச் 15
• உலக வன நாள்-மார்ச் 21
• உலக செய்யுள் நாள் - யுனெஸ்கோ-மார்ச் 21

• உலக நீர் நாள்-மார்ச் 22

• அனைத்துலக காச நோய் நாள் -மார்ச் 24-
• ஏப்ரல் முட்டாள்கள் நாள்-ஏப்ரல் 1:

• உலக சிறுவர் நூல் நாள் – ஏப்ரல் 2:

• நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்- ஏப்ரல் 4
• உலக சுகாதார நாள் – ஏப்ரல்-7

• நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்- ஏப்ரல் 18
• பூமி நாள் – ஏப்ரல் 22

• உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் – ஏப்ரல் 23
• அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்- ஏப்ரல் 26

• மே நாள் - உலகத் தொழிலாளர் நாள் - மே 1

• உலக பத்திரிகை சுதந்திர நாள்- மே 3

• அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்- மே 4

• சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள்- மே 5

• உலக செஞ்சிலுவை நாள்- மே 8
• உலக செவிலியர் நாள்- மே 12
• உலகக் குடும்ப நாள்- மே 15
• உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்- மே 17

• அனைத்துலக அருங்காட்சியக நாள் – மே 18

• பயங்கரவாதத்திற்கு எதிரான நாள் – மே-19

World Biodiversity Day – மே 22
World Turtle Day – மே 23

• புகையிலை எதிர்ப்பு நாள் – மே 31

தொடரும்.......