Friday, September 18, 2009

அறிந்ததும் அறியாததும் பல அதில் சில.

அறிந்ததும் அறியாததும் பல அதில் சில.



  1. வைரம் மரகதம் மாணிக்கம் முத்து நீலம் புஷ்பரகம் வைடூரியம் பவளம் கோமேதயம் போன்றன நவரத்தினந்கள் ஆகும்.


  2. உலகிலேயே முதல் முதலில் தோன்றிய இலக்கியம் இராமாயனம்.


  3. வந்தே மாதரம் என்கிற தேசீய கீதத்தினை எழுதியவர் பக்கிம் சத்திர சட்டர்ஐp.
    செவாலியார் விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் சிவாஜி கணேசன் ஆவார்.


  4. குளவி என்கின்ற உயிரினமே உலகில் அதிக அளவில் வாழுகின்ற

  5. உயிரினமாகும்

  6. & என்கிற குறியைக் கண்டுபிடீத்தவர் மோரீஸ் டிரையோ என்கின்ற ரோம் நகரைச் சேர்ந்த ஓவியர் ஆவார்.


  7. லுக்கிமீயா என்பது ரத்தப் புற்று நோயின் மருத்துவ பெயர் ஆகும்.


  8. மனிதனைப் போல குதிரை நாய் பூனை டால்பின் போன்றனவும் குறட்டை விடும்.


  9. உலகில் மிகப் பெரிய புத்தகாலயம் லெனின் ஸ்டேட் வைப்ரரியாகும். இது மாஸ்கோவில் உள்ளது.


  10. காளான் ஏற்றுமதியில் முதவிடம் வகிக்கும் நாடு தைவான் ஆகும்.
    உலகின் மிகச் சிறிய தனி நாடு வாடிகன் நகரம் ஆகும்.


  11. 1893 ம் ஆண்டு பெண்களுக்கு ஒட்டு போடும் உரிமையை அளித்த முதல் நாடு நீயூசிலாத்து ஆகும்.


  12. உலகில் மிகப் பெரிய தேசிய கீதம் உள்ள நாடு கிரேக்கம் ஆகும். இது 128 வரிகளை கொண்டது.


  13. உலகில் மிகப் பெரிய பங்குச்சத்தை அமெரிக்காவில் உள்ளது.


  14. உலகில் அதிக அளவில் கடற்கரை பரப்பு கொண்ட நாடு கனடா ஆகும்.


  15. சூயஸ் கால்வாயின் நீளம் 160 கீலோ மீற்றர் அகலம் 70 மீற்றர் ஆழம் 8 மீற்றர்.

Tuesday, September 15, 2009

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

Sloth எனப்படும் உயிரினம் ஒரு நாளைக்கு சுமார் 15 அடிகள் மட்டுமே நகரும் தன்மையுள்ளது.
black Uakari குரங்குகள் ஒரு நாளைக்கு சுமார் 5 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யும் திறனுடையது.


பசு மாடுகளால் மாடிப்படி ஏறி வரமுடியும் ஆனால் இறங்கிவரமுடியாது




.

Saturday, September 12, 2009

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

  • அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

கேட் பிஷ்களில் ஆண் மீன்களின் வாயினுள் பெண் மீன்கள் முட்டை இட்டுவிட்டு சென்றுவிடும் ஆண் மீன்கள் முட்டைகள் பொரித்து வெளிவரும் வரை அதாவது இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை உணவு உண்ணாமல் இருக்குமாம்

வாத்துகள் எழுப்பும் ஒலிக்கு எதிரொலி வருவதில்லை அதற்கான காரணம் இன்று வரை கண்டுபிடிக்கமுடியவில்லை


கழுதைகளால் அதன் நான்கு கால்களையும் ஒரே நேரத்தில் காணும் திறனுடையது. அதன் கண்கள் அமைந்திருக்கும் முறைதான் காரணம்.

Friday, September 11, 2009

புவி சூடாதல்


  • புவி சூடாதல்

20 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து புவியின் நிலம், கடல் என்பவற்றுக்கு சற்று மேலே காணப்படும்.

வளியின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு புவி வெப்பமடைதல் எனப்படுகிறது.


சென்ற நூண்றான்டில் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை 0.74 ± 0.18 °C (1.33 ± 0.32 °F) கூடியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து தற்போது வரையான வெப்பநிலை கூடுவதற்கு புதைபடிவ எரிமங்களின் எரிப்பு, காடழிப்பு, போன்ற மாந்தச் செயற்பாடுகளே காரணமென தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு (IPCC) முடிவு செய்துள்ளது.


கைத்தொழிற் புரட்சிக்கு முன்னர் தொடக்கம் 1950 வரை ஞாயிற்றுக் கதிர் வீசல் வேறுபாடுகள் எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை நிகழ்வுகள் புவி சூடாதலுக்கு காரணமாயிருந்திருக்கலாம் என்றும் தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு முடிவு செய்துள்ளது. எனினும் இந்நிகழ்வுகள் முடிந்த பின்னர் சிறிய அளவில் புவி குளிமையாதலும் நடைபெற்றுள்ளது.

இந்த அடிப்படையான முடிவுகள், ஜி8 நாடுகளில் அறிவியல் கழகங்கள் உட்பட 70க்கும் கூடுதலான அறிவியல் சமூகங்களாலும் அறிவியல் கழகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஒரு சிறு எண்ணிகையிலான அறிவியலாளர்கள் இந்த முடிவுகளுடன் உடன்படவில்லை.


தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழுவின் அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாதிரிகளின் எதிர்காலா மதிப்பீடுகள் இருபத்தொறாம் நூற்றாண்டில் புவி மேற்பரப்பு வெப்பநிலை மேலும் 1.1 தொடக்கம் 6.4 °C வரை (2.0 - 11.5 °F) கூடலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.


ஒவ்வொரு தட்பவெப்பநிலை மாதிரியும் வெவ்வேறான அளவு வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் வெப்பநிலை கூட்டும் திறனையும் எதிகால உற்பத்தி அளவுகளையும் பயன்படுத்துவதால் தட்பவெப்பநிலை மாதிரிகளின் மதிப்பீடுகள் மாறுபடுகின்றன. புவி சூடாதல் புவியின் எல்லா இடங்களிலும் ஒரே அளவில் இருக்காது என்பது உட்பட பல நிச்சயமற்ற தன்மைகளும் இந்த தட்பவெப்பநிலை மாதிரிகளின் மதிப்பீடுகளில் காணப்படுகிறன.
கூடுதலான ஆய்வுகள் 2100 ஆம் ஆண்டு வரை கருதியே செய்யப்பட்டுள்ளன எனினும், வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வு முற்றாக நிறுத்தப்பட்டாலும் பெருங்கடல்களின் பாரிய வெப்பக்கொள்ளளவு, வளிமண்டலத்தில் கரியமில வளிமத்தின் நீண்ட ஆயுட்காலம் என்பவற்றைக் கருதும் போது 2100 ஆம் ஆண்ட்டுக்கு அப்பாலும் புவி சூடாதல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புவி வெப்பநிலை கடல் மட்டத்தை உயரச் செய்து வீழ்படிவு கோலத்தை மாற்றிவிடும், மேலதிகமாக இதில் மிதவெப்ப மண்டல பாலைவனப் பகுதிகள் விரிவடைவதும் அடங்கலாம்.


பனியாறுகள், நிலை உறை மண், கடல்ப் பனி என்பவை துருவங்களை நோக்கிப் தொடந்ந்து பின்வாங்கும் என் எதிர்வுக்க்கூறப்படுகிறது. சூடாதல் விளைவு ஆர்க்டிக் பகுதியில் கூடுதலாக காணப்படும். சீரற்ற தட்பவெப்பநிலை நிகழ்வுகளின் கடுமை கூடுதல், உயிரின அழிவு வேகம் கூடுதல், வேளாண்மை விளைச்சளின் மாற்றங்கள் என்பவை எதிர்பார்க்கப்படும் சில விளைவுகளாகும்.
புவி சூடாதலினைக் குறித்தும் அதைத் தடுப்பதற்கான நடைமுறைகள் குறித்தும் (சிலர் ஒன்றும் தேவையில்லை எனவும் கருதுகின்றனர்) கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன.

புவி சூடாதல் விளைவுகளை தடுப்பதற்கு இப்போதைக்குள்ள முறைகளாக வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வைக் குறைத்தல், சூடாதல் காரணமாக ஏற்படும் விளைவுகளிற்கு ஏற்வாறு மாறிக்கொள்ளல் என்பன முக்கியமானவையாகும். வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வைக் குறைக்கும் நோக்குடைய கியோத்தோ நெறிமுறையில் பல நாடுகள் கைச்சாத்திட்டு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.

Wednesday, September 09, 2009

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்


  • அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்


அனகோண்டா பாம்பு இனத்தில் ஆண்களைவிட பெண் அனகோண்டாகள் இரண்டு முதல் மூன்று மடங்கு பெரியதாக இருக்கும்.



துருவ கரடிகள் அனைத்தும் இடது கை பழக்கம் உடையது அது போல அதன் கல்லீரல் மிகவும் கொடிய விசத்தன்மை உடையது எனென்றால் அதில் அதிக அளவு விட்டமின்-சி இருப்பதாலேயே.

Monday, September 07, 2009

கொஞ்சம் சிரிப்பு

கொஞ்சம் சிரிப்பு

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா,நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும், ரயிலேறனும்னா,ப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!அதேமாதிரி,என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா?யோசிக்கனும்....!!

இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.ஆனாபிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!(என்ன கொடுமை சார் இது!?!)

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,அதுக்காக,மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும்.

கொலுசு போட்டா சத்தம் வரும்.ஆனா,சத்தம் போட்ட கொலுசு வருமா?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.இதுதான்

உலகம்வு யேபயச போனா டீ வாங்கலாம்.ஆனால்விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

என்னதான் பெரியவீரனா இருந்தாலும்,வெயில் அடிச்சா,திருப்பி அடிக்கமுடியாது.

உங்கள் உடம்பில்கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,ஒரு செல்லில் கூடஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

ஓடுற எலி வாலை புடிச்சாநீ 'கிங்'குஆனா...தூங்குற புலி வாலை மிதிச்சாஉனக்கு சங்கு.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்ஆனாஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.ஆனால்...டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

Thursday, September 03, 2009

கணனியின் வேகத்தை அதிகரிக்க 10 முறைகள்


கணனியின் வேகத்தை அதிகரிக்க 10 முறைகள்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எனது கணினியைத் துவக்குவதற்கு 10 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. பின் சில நெறிமுறைகளைப் பின்பற்றிய பிறகு ஒரே நிமிடத்துக்குள்ளாகவே Start ஆகிவிடுகிறது.

1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.

2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.

4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/ ) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

5. கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.

6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.

7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள்.My Computerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate Windows When minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.

8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.

9. கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசு எதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பு :

ஒரு முறை இயங்குதளத்தையும், தேவையான பயன்பாடுகளையும் நிறுவியபிறகு வேறு ஏதேனும் வெளியுலகத் தொடர்பே ஏற்படாத வகையில் தனித்திருக்கும் கணினிகளுக்கு மட்டுமே இதைப் பரிந்துரைக்கலாம்