Saturday, December 26, 2009

கனவுகளை தகர்த்த கால்வாய்

அனைவருக்கும் சந்தோசமான புதுவருட வாழ்த்துக்கள்


பனாமா கால்வாய்

பனாமா கால்வாய் பசுபிக் பெருங்கடலையும் அத்திலாந்திக் பெருங்கடலையும் அமெரிக்கக் கண்டங்களிடையே இணைக்கும் செயற்கைக் கால்வாய் ஆகும். இது அமைக்கப்படும் முன்னர் கப்பல்கள் தென்னமெரிக்கக் கண்டத்தைச் சுற்றியே செல்ல வேண்டியிருதது. பதினாறாம் நூற்றாண்டிலேயே இத்தகைய கால்வாய்க்கான எண்ணம் இருந்தது. 1880 இல் பிரான்சு தலைமையில் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. 22000 தொழிலாளர்கள் இறந்த இம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. 1900களில் ஐக்கிய அமெரிக்கா மீண்டும் இப்பணியைத் தொடங்கி 1914 இல் பனாமா கால்வாய் திறக்கப்பட்டது. பிரெஞ்சு ஐக்கிய அமெரிக்க முயற்சிகளில் மொத்தமாக 27500 தொழிலாளர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கால்வாய் 78 கிமீ நீளமானதாகும்

கால்வாய் அளவுகள்
நீளம்: 59 மைல்கள்
ஆழம்: 41 - 45 அடிகள்
அகலம் 500 - 1000 அடிகள்

(கால்வாயின் மிக குறுகிய அடிப்பகுதி அகலம் 300 அடிகள்)இந்த கால்வாயில் மூன்று பெரிய பிரிவுகள் இருக்கிறது எனவே எல்லா இடங்களிலும் ஒரே அகலம் ஆழம் இல்லை.

அமைப்பு

பனாமா கால்வாயில் மூன்று பெரிய நீர் கதவுகள் வைத்து water locks) கால்வாயில் செயற்கையாக நீரினை தேக்கி வைக்கப்படுகிறது

சுயஸ் கால்வாய்

சுயஸ் கால்வாய் எகிப்தில் உள்ள செயற்கைக் கால்வாய் ஆகும். இது மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கிறது. இக்கால்வாய் 1869 இல் திறக்கப்பட்டது. இக் கால்வாய் வெட்டப்பட்டமையால் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான கப்பற்போக்குவரத்து மிக இலகுவானது. அதன்முன்னர் கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது.

கால்வாய் அளவுகள்

நீளம்: 163 கி.மீ
அகலம்: 300 மீ

Monday, November 30, 2009

பலாப்பழம் செவ்வாழை உண்பது சிறப்பு

இது பலாப்பழம் செவ்வாழை பற்றிய சிறு குறிப்பு

பலாப்பழம்பலா பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் மர இனமாகும். மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். தென்னிந்தியாவில்இ மாம்பழம் மற்றும் வாழைப்பழத்துக்கு அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படுவது பலா ஆகும்.
உடல் நல பலன்கள்

 • பலாச்சுளைகள் பொட்டாசியம்இ கால்சியம்இ பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1இ பி2 ஆகியவை கொண்டுள்ளன.

 • அதிக அளவில் பலாப்பழம் உண்பது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. பழுக்காத பழச்சுளையை அப்படியே உண்பது நல்லதல்ல. அதே போல சமைக்காத கொட்டைகள் ட்ரிப்சின் என்ற புரதச்சிதைவு நொதியை பாதிப்பதால் செரிமாணத்தை பாதிக்ககூடும். பழுத்த பலாச்சுளைகள் மலமிளக்கியாக செயல்படுகின்றன.
செவ்வாழை

வாழைப்பழங்களில் செவ்வாழைச் சிறப்பு வாய்ந்தது ஆகும். இதன் தாயகம் தென்மேற்கு ஆசியா எனக் கருதப்படுகிறது. அறிஞர் அண்ணா செவ்வாழை என்ற சிறுகதையை எழுதியுள்ளார்
பயன்கள்
 • இயற்கையியலாளர்களின் கருத்துப்படி வடிவமும் நிறமும் அதற்குரியப் பயன்களைத் தரும். அக்கருத்துப்படிஇ இது சிவப்பு நிறமாக இருப்பதால் இரத்த மண்டலத்திற்கும் ஆண்மைக்கான ஊட்டச்சத்துகளும் இருப்பதாக கருதப்படுகிறது.

 • கண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

 • செரிமானக்கோளாறுகள் மலச்சிக்கல் மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.

Saturday, November 28, 2009

தந்தத்தினாலான அரியனை எனக்கே எனக்கு மட்டும்?


உருசியாவை ஆண்ட இவானின் தந்தத்தினாலான அரியனை இது.

இப்ப இதை யாரும் கேட்டாலும் கொடுக்க மாட்டாங்கல்லோ.
இது எப்படி இருக்கு சும்மா உசுப்புதில்லோ?.
இது இன்றைய இலங்கையின் 1000 வோல்டேச் கேள்வி.

யாரும் தலைப்பை பற்றி கவலை படாம இங்க பாருங்க.
இது யானைகள் பற்றிய தொகுப்பு

யானைக்கும் அடி சறுக்கும்.
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே


நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும். யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை (மனிதனைத்தவிர). பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

யானைகள் உணவும் வாழிடமும்


யானைகள் மரம் செடிகொடிகளை உண்ணும் இலையுண்ணி அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும் இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன.

யானைகள் உடலமைப்பு

ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் மிகவும் தடிப்பானவை. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும்.


யானைகள் தும்பிக்கை
யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை ஆகும். இது யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகின்றது. தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது.

யானைகள் தந்தங்கள்

யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம்.
ஆப்பிரிக்க யானைகள் நோயுற்றாலோ அல்லது காயம் பட்டாலோ தவிர பெரும்பாலும் அமர்வதில்லை. ஆனால் ஆசிய யானைகள் அடிக்கடி இளைப்பாறுகின்றன.

யானைகள் காதுகள்

யானையின் உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. யானையின் காதுகள் இரத்த நாளங்கள் நிரம்பியனவாய் உள்ளன. வெப்பம் மிகுந்த இரத்தம் காதுகளில் பாயும் போது சுற்றுப்புறக் காற்று பட்டு குளிர்கிறது. பின் இது உடலுக்குள் சென்று வெப்பநிலையைக் குறைக்கிறது. இரத்தச் சுழற்சியின் காரணமாக இச்செயல் தொடர்ந்து நிகழ்ந்து வெப்பநிலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இதனாலேயே யானைகள் எப்போதும் காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பதைக் காணலாம்.

யானையின் மூளை

தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகவும் பெரியதாகும். இது ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கன. விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன.
யானையின் இனப்பெருக்கம்

யானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 - 115 கிலோகிராம் எடை வரை இருக்கும்.


உலக பதிவுலகில் முதன் முறையாக....
படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

Saturday, November 21, 2009

சில பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

இது பழங்கள் பற்றிய சில சுவையான தகவலாகும்.
 • பப்பாளி


பப்பாளி (Carica papaya) ஒரு பழந் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. இதன் விளைச்சல் காலம் பெப்ரவரி மார்ச் மாதங்களும் மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் எனக் கணிக்கப் பட்டுள்ளது.

அடங்கியுள்ள சத்துக்கள்


 • பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ் மீதி ஃபிரக்டோஸ்(பழச்சர்க்கரை.

 • விற்றமின் ஏ அதிகமாக உள்ளது.

 • கனியக் கனிய விற்றமின் சி கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும் சற்றே கனிந்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும் பாதிக்கு மேல் கனிந்தததில் 53 முதல் 95 மில்லி கிராமும் நன்கு கனிந்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும் விற்றமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

 • மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் விற்றமின் சி யும் மிக அதிகமாக இருக்கும். பப்பாளியில் சிறிதளவு விற்றமின் பி1இ விற்றமின் பி2 மற்றும் நியாசின் என்பனவும் உள்ளன.

 • பச்சைக் காயிலுள்ள பாலில் செரிமானத்திற்கு உதவும் நொதியப் பொருட்கள்(என்சைம்) உள்ளன. இதற்கு பப்பாயின் என்று பெயர். இது புரோட்டீனை செரிக்க வைக்க மிகவும் உதவும். நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்
மருத்துவப் பண்புகள்


 • நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு செரிமானமின்மை அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.

 • பித்தத்தைப் போக்கும்.

 • உடலுக்குத் தெண்பூட்டும்.

 • இதயத்திற்கு நல்லது.

 • மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.

 • கல்லீரலுக்கும் ஏற்றது.

 • கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

 • சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்

 • கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்

 • முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.

 • இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.

 • மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.

 • பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால் குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும் பப்பாளியிலுள்ள 'பப்பாயின்' என்சைம்களில் 'ஆர்ஜினைன்' என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் 'கார்பின்' இருதயத்திற்கும் ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் தவுகின்றது.

 • பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.

 • இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்.

 • உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.

 • இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் 'பட்டினிச் சிகிச்சை' மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும் வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.

 • 'ஆண்டிபயாடிக்' மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர் பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல்தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.

 • நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள் குடல் புழுக்களை வெளியேற்ற உதவும்.

 • கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.

 • பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும் நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது


உலக பதிவுலகில் முதன்
முறையாக....

படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு
போங்களே!!

Friday, November 20, 2009

சில பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்


இது பழங்கள் பற்றிய சில சுவையான தகவலாகும்.
மாம்பழம்சுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இம்மரத்தின் அறிவியல் பெயர் Mangifera spp. . மாம்பழம் உலகெங்கும்இ குறிப்பாக ஆசியாவில்இ கோடை காலங்களில் அதிகம் சுவைக்கப்படுகிறது. பழமாகவும் பழரசமாகவும் மட்டுமல்லாது காயாகவும் பல வித உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.


உடல் நல பலன்கள்

மாம்பழச்சதையில் 15% சர்க்கரை 1% புரதம் பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ பி சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும் சில சற்றே புளிப்பாக இருக்கும். இரகத்தைப் பொருத்து பழச்சதை மிருதுவாகவோ கூழாகவோ உறுதியாகவோ இருக்கும்.மாங்காயின் பால் சிலருக்கு தோலில் எரிச்சலும் கொப்புளங்களும் உண்டாக்கலாம். மாம்பாலில் இருக்கும் அமிலப்பொருட்களே இதற்கு காரணமாகும். இந்திய மக்கள் மாம்பழம் உண்பதால் வயிற்றுத் தொல்லைகள் சரியாகும் இரத்த இழப்பு நிற்கும் இதய நலம் உண்டாகும் என நம்புகின்றனர்.இந்திய துணி வகைகளில் மாம்பழ வடிவம் அழகுக்காகப் பயன் படுத்தப்படுகிறது.மாதுளம் பழம்


மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.மருத்துவ குணம் மாதுளம் பழம்உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுப்பதில் மாதுளம் பழம் முக்கியப் பங்காற்றுகிறது என்பதை பல்வேறு நாளிதழ்களும்இ மருத்துவ இதழ்களும் வெளியிட்டு மாதுளம் பழத்தின் புகழை மேலும் பிரபலப்படுத்தி விட்டன. முன்கூட்டியே வயோதிகம் ஏற்படுவதையும் மாதுளம் பழம் தடுக்கிறது. உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும் இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து இதய நோய்களைத் தடுப்பதிலும் இதன் மருத்துவ குணம் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றுகிறது.அன்றாடம் மாதுளம் பழ ஜூஸ் அருந்தி வர ஆண்களுக்கான ஆக்ஸிஜனேற்றத்தை அது சீராக்கும் என்றும் பெண்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்று நோயை உருவாக்கும் செல்களை மாதுளம் பழம் அழிக்கும் தன்மை கொண்டது என்றும் தெரிய வந்துள்ளது.மேலும் சிறுநீர்ப் பையை சுற்றியுள்ள ப்ரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை மாதுளம் பழத்திற்கு உண்டு என கண்டறியப்பட்டுள்ளது.தவிர குழந்தைப்பருவத்தில் நாம் நண்பர்களுடன் விளையாடிய நாட்களை நினைவுகூரும் தன்மையும் இந்த பழத்திற்கு உண்டு என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

உலக பதிவுலகில் முதன் முறையாக....படிக்க

வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!


Friday, November 13, 2009

சில பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

இது பழங்கள் பற்றிய சில சுவையான தகவலாகும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும்.

ஆப்பிள்

அமெரிக்காவில் ஐரோப்பியர்களின் வருகைக்குபின் ஆப்பிள் பிரபலமடைந்தது.ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp. ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும் சிடர் என்ற பானமும் தயாரிக்கப்படுகின்றன. ஆப்பிள் மரம் சிறிய இலையுதிர் மரமாகும். சுமார் 5 - 12 மீ உயரம் வரை வளரக்கூடியதுடன். ஆப்பிள் என்ற சொல் பழைய ஆங்கில சொல்லான aeppel (பொருள்: உருண்டை) என்ற சொல்லிலிருந்து வந்தது. பயிரிடப்படும் ஆப்பிள்களில் சுமார் 7500 இரகங்கள் உள்ளன. அறுவடைமுற்றிய மரங்களில் ஆண்டுக்கு சுமார் 100 - 200 கிலோகிராம் ஆப்பிள்கள் விளையும்.


ஆப்பிள்மருத்துவ குணங்கள்

தினம் ஓர் ஆப்பி மருத்துவரைத் தூர வைக்கும் (An apple a day keeps the doctor away) என்ற ஆங்கிலப் பழமொழியின் கூற்றுப்படி நெடுங்காலமாக ஆப்பிள்கள் உடல்நலத்திற்கு மிக நல்லதாகக் கருதப்பட்டன. தற்போது ஆப்பிள்களுக்குப் பலவிதமான புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள் எடைக்குறைவு கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது.ஆப்பிளில் காணப்படும் சில வேதிப்பொருட்கள் அல்செய்மர்ஸ் (Alzheimer's) பார்கின்சன் (Parkinson's) நோய்களிலிருந்து மூளையை பாதுகாக்கின்றன. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகைப் பொருட்கள் (phenolics) இயற்கையாகவே ஆக்சிஜனேற்றத் தடுப்புச்சக்தி உடையவை என்பதால் மூளையை நரம்புப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன என கார்னெல் பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

திராட்சைதிராட்சை இலையுதிர்க்கும் பல்லாண்டுக் கொடி வகையின் பழம் ஆகும். இதிலிருந்து வினாகிரி வைன் திராட்சை விதைப் பிழிவு திராட்சை விதை எண்ணெய் என்பனவும் ய்யப்படுகின்றன.திராட்சையில்பலவகைகள்இருப்பினும்பொதுவாகத் திராட்சையில் பெருமளவு நீரும் மாவுப் பொருளும் உப்புநீர் மற்றும் கொழுப்புச் சத்துகளும் உண்டு.
உணவு வேளாண்மை அமைப்பின் தகவலின்படி உலகில் 75866 சதுர கிலோமீட்டர்களில் திராட்சைச் செய்கை நடைபெறுகிறது. உலகின் மொத்த திராட்சை உற்பத்தியில் 71% வைன் தயாரிப்புக்காகப் பயன்படுகிறது 27% நேரடியாகப் பழமாக உட்கொள்ளப்படுகிறது

திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம்

. தவிர கார்போஹைடிரேட் டெக்ஸ்ட்ரோஸ் ப்ரக்டோஸ் பெக்டின் முதலானவையும் பார்டாரிக் அமிலம் மாலிக் அமிலம் சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும் புரதம் சுண்ணாம்பு தாமிரம் இரும்பு பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.

திராட்சை மருத்துவ குணங்கள்

மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர தோலின் நிறத்தைப் பாதுகாப்புக்குரியதாக்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ரசம் தினம் மூன்று அவுன்ஸ் என இருவேளை அருந்தி வர குணம் பெறலாம். திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் மட்டும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரிப்படும். வயிற்றுப்புண் வாய்ப்புண் ஆறிவிடும். உடலில் பலம் ஏறும். ஆனால் கொஞ்சம் சீதளத்தைத் தரும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிடுவது நல்லதல்ல. பகல் உணவுக்கு பின் தினசரி 15 பச்சை திராட்சை சாப்பிட்டு வர தலைவலியே வராது.வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும்பொழுது தினசரி அரை மப எடை வரை உலர்ந்த திராட்சை பழத்தை இரவு ஆகாரத்திற்குப் பின் சாப்பிட்டு வந்தால் வயோதிக வயதில் தளர்வு ஏற்படாது. எலும்புகள் பற்கள் கெட்டிப்படும். இருதயம் பலத்துடனிருக்கும். இருதயத்துடிப்பு இயற்கை அளவிலேயே இருக்கும்.

நெல்லி
நெல்லி இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்குஇ அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சிஹ உள்ளதாகக் கருதப்படுகின்றது

அடங்கியுள்ள சத்துக்கள்

புரதம் - 0.4 கிராம் கொழுப்பு - 0.5 கி மாச்சத்து - 14 கி கல்சியம் - 15 மி.கி பொஸ்பரஸ் - 21 மி.கி இரும்பு - 1 மி.கி நியாசின் - 0இ4 மி.கி வைட்டமின் ´பி1ஹ - 28 மி.கி வைட்டமின் ´சிஹ - 720 மி.கி கரிச்சத்து சுண்ணாம்பு தாதுப் பொருட்கள் கலோரிகள் -


மருத்துவப் பண்புகள்


இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற்புண்இ இரத்தப்பெருக்கு நீரிழிவு கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். அதன் காரணமாக கல்ப உருவிலும் வற்றல் உருவிலும் பாகு வடிவத்திலும் களிம்பு வடிவத்திலும் இதைப் பயன்படுத்துவர். இது தவிர நெல்லிக்காய் தைலம் உச்சந்தலையைக் குளிரச் செய்யும் மற்றும் கருமையான தலைமயிரைத் தரும்.

உலக பதிவுலகில் முதன் முறையாக....படிக்க வந்த

நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

Monday, November 09, 2009

உலக தொழிலதிபர்கள் அதில் சிலர்

உலக தொழிலதிபர்கள் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும்.

கிறிஸ் ஆண்டெர்சன் (டேட்.காம்)கிறிஸ் ஆண்டர்சன் பிரபல வருடாந்திர கூட்டமைப்பான டேட் ( "டெக்னாலஜி, என்டேர்டைன்மேன்ட், டிசைன்) என்பதன் ஆங்கில முதலெழுத்து சுருக்கம் ) TED (Technology, Entertainment, Design )அமைப்பின் நிறுவனர். 1957ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பிறந்த இவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர். 1985 ஆம் ஆண்டு தனது சொந்த சேமிப்பிலான வெறும் 10,000 பவுண்டுகளை கொண்டு கணினி ஆர்வலர்களுக்கான ஒரு பொழுதுபோக்கு பத்திரிக்கை நிறுவனத்தை உருவாக்கினார். 'ஃபியூச்சர் பப்ளிஷிங்' என்று தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்பு கணிப்பொறி தவிர சைக்ளிங் இசை திரைப்படம் விளையாட்டு எண்ணவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் வெளியிடத் தொடங்கியது. இச்சமயத்தில் 1500 பேர் பணிபுரியும் 130க்கும் மேற்பட்ட இதழ்களை வெளியிடும் நிறுவனமாக வளர்ந்தது. 1999இல் இந்நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகத்திற்காக சேர்த்துக்கொள்ளப்பட்டது.

சாம் வோல்ற்றன்


சாம் வோல்ற்றன் (தமிழக வழக்கு: சாம் வால்ட்டன் Samuel Moore Walton மார்ச் 29இ 1918 - ஏப்ரல் 6இ 1992) அமெரிக்க விற்பனை நிறுவனங்களான வோல் மார்ட் மற்றும் சாம்ஸ் கிளப் ஆகியவற்றின் நிறுவனர். வோல்ற்றன் குடும்பமே உலகின் மிகவும் பணக்காரக் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. வோல் மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் 1962 இல் ஆரம்பிக்கப்பட்டது. படிப்படியாக பரந்து உலகின் மிகப்பெரிய விற்பனை நிலையமாக உருவானது. வோல் மார்ட் அமெரிக்காவில் மட்டுமல்லாது மெக்சிகோ கனடா அர்ஜென்டினா பிரேசில் தென் கொரியா சீனா ஜெர்மனி இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பரந்துள்ளது.

பில் கேட்ஸ்
வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) ) (English: William Henry Gates or Bill Gates (பி. அக்டோபர் 28 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA) பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினை பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்ப சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.

மைக்கேல் டெல்மைக்கேல் டெல் (Michael Saul Dell, பி. பெப்ரவரி 23 1965) டெல் நிறுவனத்தின் (Dell, Inc.) நிறுவனர். டெக்சாசில் பிறந்தவரான டெல் ஒரு செல்வந்த யூத குடும்பத்தவர். தனது பதினைந்தாவது வயதில் தன்னால் முடியுமா என்பதைப் பார்ப்பதற்காகவே ஒரு புதிய அப்பிள் ஐஐ கணினியை முழுவதுமாகக் கழற்றிப் பூட்டினார். பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் பி.சி'ஸ் லிமிட்டெட் ((PC's Limited) நிறுவனத்தைத் தனது அறையில் ஆரம்பித்தார். தனது பத்தொன்பதாவது வயதில் கல்வியை நிறுத்தி முழு நேரமாக நிறுவனத்தில் உழைக்கத் தொடங்கினார். 1987 இல் நிறுவனத்தின் பெயரை டெல் கம்ப்யூட்டர் கார்ப்பொரேசன் (Dell Computer Corporation) என மாற்றினார்.

ராமதுரை
சுப்ரமணியம் ராமதுரை டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ் லிமிடெட் (TCS) நிறுவனத்தின் தற்போதைய முதன்மை செயல் அதிகாரி (CEO) ஆவார்.இவர் 1970களின் பிற்பகுதி முதல் TCS நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவரது முயற்சியின் காரணமாக TCS நிறுவனம் உலகிலுள்ள மிகப்பெரிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களுள் ஒன்றாக முன்னேற்றமடைந்துள்ளது. மேலும் இந்நிறுவனம் 116.000 பேர் பணிபுரியும் நிறுவனமாகவும்இ 53 நாடுகளில் 151 கிளைகளைக் கொண்டதாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அதன் நிகர வருமானம் US$ 5.7 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது.

உலக பதிவுலகில் முதன் முறையாக....படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

Saturday, November 07, 2009

உலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்-02சில உலக நாடுகளின் விடுதலை நாட்கள். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். இந்த பதிவில் என்னை ஊக்கிவித்த அனைவர்களுக்கும் நன்றி.


செப்டம்பர் 1
உஸ்பெகிஸ்தான் - விடுதலை நாள் (1991)

செப்டம்பர் 3
கட்டார் - விடுதலை நாள் (1971)

செப்டம்பர் 6
சுவாசிலாந்து - விடுதலை நாள் (1968)

செப்டம்பர் 7
பிரேசில் - விடுதலை நாள் (1822)

செப்டம்பர் 8
மசடோனியக் குடியரசு - விடுதலை நாள் (1991)

செப்டம்பர் 9
தஜிகிஸ்தான் - விடுதலை நாள் (1991)

செப்டம்பர் 15
கொஸ்டா ரிக்கா - விடுதலை நாள் (1821)
எல் சல்வடோர் - விடுதலை நாள் (1821)
குவாத்தமாலா - விடுதலை நாள் (1821)
ஹொண்டுராஸ் - விடுதலை நாள் (1821)
நிக்கராகுவா - விடுதலை நாள் (1821)
செப்டம்பர் 16
மெக்சிக்கோ - விடுதலை நாள் (1810)
பப்புவா நியூ கினி - விடுதலை நாள் (1975)

செப்டம்பர் 18
சிலி - விடுதலை நாள் (1810)

செப்டம்பர் 19
சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் - விடுதலை நாள் (1983)

செப்டம்பர் 21
மோல்ட்டா - விடுதலை நாள் (1964)
பெலீஸ் - விடுதலை நாள் (1981)
ஆர்மேனியா - விடுதலை நாள் (1991)

செப்டம்பர் 22
பல்கேரியா - விடுதலை நாள் (1908)
மாலி - விடுதலை நாள் (1960)
செப்டம்பர் 24
கினி பிசாவு - விடுதலை நாள் (1973)

செப்டம்பர் 30
பொட்சுவானா - விடுதலை நாள் (1966)

அக்டோபர் 1
சைப்பிரஸ் - விடுதலை நாள் (1960)
நைஜீரியா - விடுதலை நாள் (1960)
துவாலு - விடுதலை நாள் (1978)

அக்டோபர் 02
கினி - விடுதலை நாள் (1958)

அக்டோபர் 04
லெசோத்தோ - விடுதலை நாள் (1966)

அக்டோபர் 05
போர்த்துக்கல் - குடியரசு நாள் (1910)

அக்டோபர் 08
குரொவேசியா - விடுதலை நாள்

அக்டோபர் 09
உகாண்டா - விடுதலை நாள் (1962)
எக்குவடோர் - கயாக்கில் விடுதலை நாள் (1820)

அக்டோபர் 12
எக்குவடோரியல் கினி - விடுதலை நாள் (1968)

அக்டோபர் 24
சாம்பியா - விடுதலை நாள் (1964)
நவம்பர் 01
அன்டிகுவா பர்புடா - விடுதலை நாள் (1981)

நவம்பர் 03
பனாமா - விடுதலை நாள் (1903)
டொமினிக்கா - விடுதலை நாள் (1978)

நவம்பர் 09
கம்போடியா - விடுதலை நாள் (1953)

நவம்பர் 09
கம்போடியா - விடுதலை நாள் (1953)
நவம்பர் 11
போலந்து - விடுதலை நாள் (1918)
அங்கோலா - விடுதலை நாள் (1975)

நவம்பர் 15
பாலஸ்தீனம் - விடுதலை நாள் (அறிவிப்பு: 1988)

நவம்பர் 18
லாத்வியா - விடுதலை நாள் (1918)

நவம்பர் 19
மாலி - விடுதலை நாள்

நவம்பர் 22
லெபனான் - விடுதலை நாள் (1943)

நவம்பர் 25
சுரிநாம் - விடுதலை நாள் (1975)

நவம்பர் 28
அல்பேனியா - விடுதலை நாள் 1912)
மவுரித்தேனியா - விடுதலை நாள் (1960)

நவம்பர் 30
பார்போடஸ் - விடுதலை நாள் (1966)

டிசம்பர் 1
போர்த்துக்கல் - விடுதலை நாள் மத்திய ஆபிரிக்கக் குடியரசு - விடுதலை நாள் (1958)

டிசம்பர் 06
பின்லாந்து - விடுதலை நாள் (1917)

டிசம்பர் 09
தான்சானியா - விடுதலை நாள் (1961)

டிசம்பர் 12
கென்யா - விடுதலை நாள் (1963)

டிசம்பர் 16
கசக்ஸ்தான் - விடுதலை நாள் (1991)

டிசம்பர் 19
கோவா - விடுதலை நாள்

டிசம்பர் 24
லிபியா - விடுதலை நாள் (1951)

உலக பதிவுலகில் முதன் முறையாக....படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

Thursday, November 05, 2009

உலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்-01உலக நாடுகளின் விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்-01

சில உலக நாடுகளின் விடுதலை நாட்கள். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். இந்த பதிவில் என்னை ஊக்கிவித்த அனைவர்களுக்கும் நன்றி.

மே 5-
டென்மார்க் - விடுதலை நாள் (1945)
எதியோப்பியா - விடுதலை நாள் (1941)
நெதர்லாந்து - விடுதலை நாள் (1945)

மே 15
பராகுவே - விடுதலை நாள் (1811).

மே 20
கிழக்குத் தீமோர் - விடுதலை நாள்

மே 24
எரித்திரியா: விடுதலை நாள் (1993)
மே 25
சாட் லைபீரியா மாலி மவ்ரித்தானியா நமீபியா சாம்பியா சிம்பாப்வே - ஆபிரிக்க விடுதலை நாள்
லெபனான் - விடுதலை நாள் (2000

ஜூன் 1
சமோவா - விடுதலை நாள் (1962)

ஜூன் 4
தொங்கா - விடுதலை நாள் (1970)

ஜூன் 5
சேஷெல்ஸ் - விடுதலை நாள்

ஜூன் 12
பிலிப்பீன்ஸ் - விடுதலை நாள்

ஜூன் 14
போக்லாந்துத் தீவுகள் - விடுதலை நாள்

ஜூன் 25
மொசாம்பிக் - விடுதலை நாள் (1975)

ஜூன் 26
சோமாலிலாந்து - விடுதலை நாள்
மடகஸ்கார் - விடுதலை நாள்

ஜூன் 29
செஷெல் - விடுதலை நாள் (1976)

ஜூன் 30
கொங்கோ - விடுதலை நாள் (1960)

ஜூலை 1
சோமாலியா - விடுதலை நாள் (1960)
ருவாண்டா - விடுதலை நாள் (1962)
புருண்டி - விடுதலை நாள் (1962)

ஜூலை 3
பெலரஸ் - விடுதலை நாள் (1944)

ஜூலை 4
ஐக்கிய அமெரிக்கா - விடுதலை நாள் (1776)

ஜூலை 5
வெனிசுவேலா - விடுதலை நாள் (1811)
அல்ஜீரியா - விடுதலை நாள் (1962)
கேப் வேர்ட் - விடுதலை நாள் (1975).
ஜூலை 6
மலாவி - விடுதலை நாள் (1964)
கொமொரோஸ் - விடுதலை நாள் (1975)

ஜூலை 7
சொலமன் தீவுகள் - விடுதலை நாள் (1978)

ஜூலை 9
ஆர்ஜென்டீனா - விடுதலை நாள் (1816)

ஜூலை 10
பஹாமாஸ் - விடுதலை நாள் (1973)

ஜூலை 12
கிரிபட்டி- விடுதலை நாள் (1979)

ஜூலை 19
நிக்கரகுவா - தேசிய விடுதலை நாள் (1979)

ஜூலை 20
கொலம்பியா - விடுதலை நாள் (1810)

ஜூலை 21
குவாம் - விடுதலை நாள் (1944)

ஜூலை 26
மாலைதீவு - விடுதலை நாள் (1965)
லைபீரியா - விடுதலை நாள் (1847)

ஜூலை 27
பெரு - விடுதலை நாள் (1821)

ஜூலை 30
வனுவாட்டு - விடுதலை நாள் (1980)
ஆகஸ்டு 3
நைஜர் - விடுதலை நாள் (1960)

ஆகஸ்டு 5
புர்கினா பாசோ - விடுதலை நாள் (1960)

ஆகஸ்டு 6
பொலீவியா - விடுதலை நாள் (1825)
ஜமெய்க்கா - விடுதலை நாள் (1962)

ஆகஸ்டு 9
சிங்கப்பூர் - விடுதலை நாள் (1965)

ஆகஸ்டு 10
எக்குவாடோர் - விடுதலை நாள் (1809)

ஆகஸ்டு 11
சாட் - விடுதலை நாள் (1960)

ஆகஸ்டு 14
பாகிஸ்தான் - விடுதலை நாள் (1947)
கொங்கோ - விடுதலை நாள் (1960)

ஆகஸ்டு 15
இந்தியா - விடுதலை நாள் (1947)
தென் கொரியா - விடுதலை நாள் (1948)
கொங்கோ - விடுதலை நாள் (1960)

ஆகஸ்டு 17
இந்தோனேசியா - விடுதலை நாள் (1945)
காபோன் - விடுதலை நாள் (1960)

ஆகஸ்டு 19
ஆப்கானிஸ்தான் - விடுதலை நாள் (1919)

ஆகஸ்டு 23
ருமேனியா - விடுதலை நாள் (1944)

ஆகஸ்டு 24
உக்ரேன் - விடுதலை நாள் (1991)

ஆகஸ்டு 25
உருகுவே - விடுதலை நாள் (1825)

கஸ்டு 27
மால்டோவா - விடுதலை நாள் (1991)


ஆகஸ்டு 31
மலேசியா - விடுதலை நாள் (1957)
திரினிடாட் டொபாகோ - விடுதலை நாள் (1962)
கிர்கிஸ்தான் - விடுதலை நாள் (1991)
தொடரும்...........

உலக பதிவுலகில் முதன் முறையாக....படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!

Tuesday, November 03, 2009

உலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்

சில விடுதலை நாட்கள். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். என்னை ஊக்கிவித்த அனைவர்களுக்கும் நன்றி.

விடுதலை நாள்:

ஜனவரி 1
கியூபா விடுதலை நாள் (1899)
ஹெயிட்டி விடுதலை நாள் (1804)
சூடான் விடுதலை நாள் (1956)
கமரூன் விடுதலை நாள் (1960)
செக் குடியரசு விடுதலை நாள் (1993)
சிலோவாக்கியா விடுதலை நாள் (1993)
தாய்வான் விடுதலை நாள் (1912)

ஜனவரி 4
பர்மா - விடுதலை நாள் (1948)

ஜனவரி 26
உகாண்டா - விடுதலை நாள்

ஜனவரி 31
நவூறு - விடுதலை நாள் (1968)

பெப்ரவரி 4
இலங்கை - விடுதலை நாள் (1948)

பெப்ரவரி 7
கிரனாடா - விடுதலை நாள் (1974)
பெப்ரவரி 11
பொஸ்னியா - விடுதலை நாள்
வத்திக்கான் நகரம் - விடுதலை நாள் (1922)

பெப்ரவரி 16
லித்துவேனியா - விடுதலை நாள் (1918)

பெப்ரவரி 22
சென் லூசியா - விடுதலை நாள் (1979)

பெப்ரவரி 23
புரூணை - விடுதலை நாள் (1984)

பெப்ரவரி 24
எஸ்தோனியா - விடுதலை நாள் (1918)

பெப்ரவரி 26
குவெய்த் - விடுதலை நாள் (1991)

மார்ச் 1
பொசுனியா எர்செகோவினா - விடுதலை நாள் (1992)
தென் கொரியா - விடுதலை நாள்

மார்ச் 3
பல்கேரியா - விடுதலை நாள் (1878)

மார்ச் 6
கானா - விடுதலை நாள் (1957)

மார்ச் 21
நமீபியா - விடுதலை நாள் (1990)

மார்ச் 25
கிரேக்கம் - விடுதலை நாள்

மார்ச் 26
வங்காள தேசம் - விடுதலை நாள் (1971)

மார்ச் 31
மால்ட்டா - விடுதலை நாள் (1979)

ஏப்ரல் 4
செனகல் - விடுதலை நாள்

ஏப்ரல் 16:
சிரியா - விடுதலை நாள் (1946)

ஏப்ரல் 18:
சிம்பாப்வே - விடுதலை நாள் (1980)

ஏப்ரல் 25
போர்த்துக்கல் - விடுதலை நாள் (1974)

ஏப்ரல் 27:
சியேரா லியோனி விடுதலை நாள் (1961)
டோகோ (1960) - விடுதலை நாள்(1960)

ஏப்ரல் 30:
வியட்நாம் - விடுதலை நாள் (1975)

உலக பதிவுலகில் முதன் முறையாக....படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!
Thursday, October 29, 2009

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-05

சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும்.


மேரி க்யூரி (ஆங்கிலம் Marie Curie போலந்து மொழி:Maria Skłodowska-Curie நவம்பர் 7 1867 – ஜூலை 4 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். ரேடியம் பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். 1914இல் முதலாம் உலகப் போரின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளைப்பொருத்த உதவி செய்தார். 1934 ஜுலை 4 அன்று மேரி கியூரி மரணம் அடைந்தார். கியூரி இறந்து மூன்று மாதங்களின் பின் அவரின் மகளும் மருமகனும் கியூரியின் செயற்கை கதிர் வீச்சு பற்றிய கண்டு பிடிப்பை வெளியிட்டனர்.


மைக்கேல் பரடே (Michael Faraday செப்டெம்பர் 22 1791 – ஆகஸ்டு 25 1867)) பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல் மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். புவி மையக் கோட்பாட்டுக்கு மாறாக இவர் முன்வைத்த சூரிய மையக் கோட்பாடு மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக் கண்டுபிடிப்பே நவீன வானியலின் அடிப்படையாகும்.
பியேர் ஜூல்ஸ் சேசர் ஜான்சென் Pierre Jules César Janssen பெப்ரவரி 22 1824 – டிசம்பர் 23 1907) என்பவர் ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் ஆங்கிலேய அறிவியலாளர் ஜோசப் நோர்மன் லொக்கியர் என்பவருடன் இணைந்து ஹீலியம் வாயுவைக் கண்டுபிடித்தார்.
ரோலண்ட் ஹில் (Rowland Hill டிசம்பர் 3 1795 - ஆகஸ்ட் 27 1879) நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் வோசெஸ்டர்ஷயரிலுள்ள கிடெர்மின்ஸ்டெர் என்னுமிடத்தில் பிறந்தவர்.தொமஸ் அல்வா எடிசன் (பெப்ரவரி 11 1847 – அக்டோபர் 18 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபரும் ஆவார். இவர் பல முக்கியமான சாதனங்களை உருவாக்கினார். 'மென்லோ பூங்காவின் மந்திரவாதி' பெரும்படித் தயாரிப்புக் கொள்கையைக் கண்டு பிடிப்புக்களின் உருவாக்கத்துக்குப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1920களின் பிற்பகுதிகளில்இ தன்னுடைய மின்விளக்கு கண்டுபிடிப்பு. தனது பெயரில் சாதனை அளவான 1093 உரிமங்களைப் பதிவு செய்த எடிசன் பெரிமளவு கண்டு பிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். எடிசன் ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் Edison Trust எனப் பொதுவாக அறியப்பட்ட ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிமக் கம்பனியை Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.

வீரசிங்கம் துருவசங்கரி (செப்டம்பர் 5 1950 - டிசம்பர் 2 2006) இலங்கையைச் சேர்ந்த ஓர் அறிவியலாளரும் கண்டுபிடிப்பாளரும் மண் ஆராய்ச்சியாளரும் ஆவார். தொலைக்காட்டியாகவும் நுணுக்குக்காட்டியாகவும் பாவிக்கக்கூடிய கருவியொன்றை வடிவமைத்தார். அத்துடன் சூரிய அடுப்பு பனிக்கட்டி பனிமழை போன்றவற்றை அளக்கும் கருவிகளையும் கண்டுபிடித்தார்.


அலெசான்றோ வோல்ட்டா (1745-1827) என்பவர் மின் துறை என்று ஒரு துறை உண்டாவதற்கே வழிகோலிய முன்னோடி அறிவியல் அறிஞர்களில் ஒருவர். இவர் இத்தாலி நாட்டில் லொம்பார்டி என்னும் மாவட்டத்திலே உள்ள கோமோ என்னும் ஊரில் பிப்ரவரி 18 1745ல் பிறந்தார். 110 வோல்ட்டு மின் அழுத்தம் 230 வோல்ட்டு மின் அழுத்தம் என்பதில் உள்ள வோல்ட்டு என்னும் மின் அழுத்த அலகானது இவருடைய பங்களிப்பைப் பெருமை செய்யவும்இ நினைவு கூறவுமே அமைக்கப்பட்டது. இதனாலேயே மின் அழுத்தத்தை அளக்கும் கருவியை வோல்ட்டளவி(Voltmeter)என்று அழைக்கின்றோம். மின்னழுத்தத்தை வோல்ட்டழுத்தம் என்றும் குறிக்கப்பெறும்.


கார்ல் பென்ஸ் (நவம்பர் 25 1844 - ஏப்ரல் 4 1929) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு வாகனப்பொறியாளர் ஆவார். இவர் பெட்ரோலினால் இயங்கும் ஊர்தியைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர். இவர் 1886 இல் மூன்று சக்கர ஊர்தியைக் கண்டுபிடித்தார். இது முதலில் எரிவாயு எஞ்சினிலும் பின்னர் பெட்ரோலிலும் இயங்கியது.ஜோஹன் குட்டன்பேர்க் (1398 - 1468) அச்சியந்திரத்தைக் கண்டுபிடித்தவராவார். ஜெர்மனியரான குட்டன்பேர்க் 1447 இல் அச்சியந்திரத்தை அறிமுகம் செய்தார். அச்சியந்திரம் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கியமானதொரு கண்டுபிடிப்பாகும்.
சோரென் பீடர் லௌரிட்சு சோரென்சென் (ஜனவரி 9 1868 - பிப்ரவரி 12 1939) டென்மார்க்கில் உள்ள ஆவர்பியர்கு (Havrebjerg) என்னும் இடத்தில் பிறந்த புகழ்பெற்ற வேதியியலாளர். இவர் காடித்தன்மையை அளவிடும் ph (கரைசலின் ஐதரசன் அடர்த்தி) முறையின் கருத்துருவை முன்வைத்தவர். இவை தவிர 1907 இல் இவர் கண்டுபிடித்த சோரென்சென் ஃவோர்மோல் டைட்ரேசன் என்னும் முறைக்காகவும் இவர் புகழ் பெற்றார்.
மார்க்கோனி (ஏப்ரல் 25 1874 - ஜூலை 20 1937) வானொலியைக் கண்டு பிடித்தவர். 'வானொலியின் தந்தை' எனப்படுபவர். 1909 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை முயசட குநசனiயெனெ டீசயரn இடன் இணைந்து பெற்றார். 1937 இல் இவர் காலமான போது உலக வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின.ருடால்ப் ஹெல் ஒரு ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் 1901 டிசம்பர் 19 - ஆம் நாள் ஜெர்மனியின் பவேரியா நகரத்தில் பிறந்தார். இவர் தொலைநகல் சாதனத்திற்கு முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் என்னும் கருவியைக் கண்டுபிடித்தார்.


லூயிஸ் பிரெய்ல் (1809-1852 பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார்.வில்லியம் தாம்சன் (26 ஜூன் 1824 - 17 டிசம்பர் 1907) அவர்கள் அயர்லாந்தைச் சேர்ந்த கணிதமுறை இயற்பியல் அறிஞரும் பொறியியல் அறிஞரும் ஆவார். 19 ஆவது நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவருக்கு லார்டு கெல்வின் என பட்டம் சூட்டப்பட்டது. தனிமுழு வெப்பநிலை அளவீட்டு முறையை இவர் நினைவாக கெல்வின் வெப்ப அலகாகப் பயன்படுகின்றது.ஜெ.ஜெ. தாம்சன் என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 18 1856 - ஆகஸ்ட் 30 1940) எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார்.

Tuesday, October 27, 2009

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-04


சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும்.

கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் Christiaan Huygens ஏப்ரல் 14 1629 – ஜூலை 8 1695) ஒரு டச்சு கணிதவியலாளர் வானியலாளர் மற்றும் இயற்பியலாளர் ஆவார். 1655 ஆம் ஆண்டில் சனிக் கோளின் மிகப் பெரிய துணைக்கோளான டைட்டானைக் கண்டுபிடித்தார்.பேராசிரியர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் Christie Jeyaratnam Eliezer 1918 - மார்ச் 10 2001) பிரபல கணிதவியலாளரும் தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948 வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும். எலியேசர் அவர்கள் தனது தொடக்கக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பெற்று பின்னர் லண்டன் கேம்ப்றிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி (Phனு) பட்டம் பெற்றார்.

எட்வர்ட் டெல்லர் (Edward Teller) ) (ஜனவரி 15 1908 – செப்டம்பர் 9 2003) ஹங்கேரியில் பிறந்த யூத இனத்தைச் சேர்ந்த ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவரே ஐதரசன் குண்டின் தந்தை என்று அறியப்படுகிறார்.
ஜோர்ஜ் ஈஸ்ற்மன் (ஜார்ஜ் ஈஸ்ட்மன்) ((George Eastman ஜூலை 12 1854 - மார்ச் 14 1932) ஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) கோடாக் கம்பனியின் ((Eastman Kodak Co நிறுவனரும் ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்தவரும் ஆவார். ஒளிப்படச்சுருளின் கண்டுபிடிப்பே புகைப்படக்கலையை சாதாரண மக்களும் பயன்படுத்த வழிவகை செய்தது. அதுவே அசையும் படங்களின் கண்டுபிடிப்புக்கும் அடிப்படையாக அமைந்தது.கிரிகோர் ஜோஹன் மெண்டல் Gregor Johann Mendel ஜூலை 20 1822 – ஜனவரி 6 1884) மரபியல் குறித்த அடிப்படை ஆராய்ச்சிப் பணிகளுக்காக அறியப்படும் ஆஸ்திரிய பாதிரியாராவார். இவர் மரபியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.ஐசாக் நியூட்டன் (டிசம்பர் 25 1642 - மார்ச் 20 1727) ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும் அறிவியலாளரும் தத்துவஞானியும் ஆவார். வெண்ணிற ஒளி பல நிற ஒளிகளின் சேர்க்கையென முதலில் விளக்கியவரும் இவரே 1687ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய Philosophiae Naturalis Principial Mathematica என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய இயக்க விதிகள் மூலம் (classical mechanics என்னும் துறைக்கு வித்திட்டார்.


ஜோசப் பிரீஸ்ட்லி (Joseph Priestley மார்ச் 13 1733 – பெப்ரவரி 8 1804) ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர். இவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஆக்ஸிஜனைக் (ஒட்சிசன் உயிர்வளி) கண்டுபித்தது மிகவும் புகழ் வாய்ந்தது. கார்பன்-டை-ஆக்சைடு (காபனீரொட்சைட்டு) பற்றிய இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை. ஆக்ஸிஜனை இவருக்கும் முன்னால் கார்ல் வில்ஹெல்ம் ஷீல் என்பார் கண்டுபிடித்தார் என்று தற்கால ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஹிப்போகிரட்டீஸ் கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் ஆவார். கி. மு. 460 முதல் கி. மு. 370 வரை வாழ்ந்த இவர் நோய்கள் பக்டீரியாக்கள் வைரஸ் மூலமே பரவுகிறது என்பதை முதன்முதலில் நிரூபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவத்துறையின் தந்தை என்று போற்றப்படுகிறார்.அமேடியோ அவகாதரோ ((Lorenzo Romano Amedeo Carlo Avogadro di Quaregna e di Cerreto ஆகஸ்ட் 9 1776 - ஜூலை 9 1856) இத்தாலியை சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். வளிமங்களின் மூலக்கூறு மற்றும் அவகாதரோவின் விதியைக் கண்டுபிடித்தமைக்காகவும் இவர் பெரிதும் அறியப்பட்டவர். இவரது நினைவாக ஒரு மூல் பொருளில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளின் எண்ணிக்கை (6.022142 x 1023) அவகாதரோவின் எண் அல்லது அவகாதரோ மாறிலி என அழைக்கப்படுகிறது.லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur டிசம்பர் 27 1822 – செப்டம்பர் 28 1895) ஒரு புகழ்பெற்ற பிரெஞ்சு நுண்ணுயிர் ஆய்வாளரும் வேதியியல் ஆய்வாளரும் ஆவார். இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுவது என்று நிறுவினார். இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார். பாலும் குடிக்கும் கள்ளும் எவ்வாறு கெட்டுப் போகாமல் இருப்பது என்பதற்காக இவர் முன்வைத்த முறை இன்று பாஸ்ச்சரைசேஷன் என்னும் பெயரில் பெருவழக்காக உள்ளது. இம்முறையில் பாலைச் சூடு செய்து நுண்ணுயிரிகளைக் கொல்வதால் பால் கெடாமல் இருக்கின்றது. நுண்ணியிரி இயலை நிறுவிய மூவருள் இவர் ஒருவராகக் கருதப்படுகின்றார். மற்றவர்கள் ஃபெர்டினாண்ட் கோன் (Ferdinand Cohn) அவர்களும் ராபர்ட் கோஃக் (Robert Koch).