Sunday, February 25, 2018

நம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்

  1. தாம்சன் மற்றும் ஃப்ரேசர் ஆறுகள் சங்கமிக்கும் இடம்(Lytton பிரிட்டிசு கொலம்பியா கனடா)
2. பச்சை மற்றும் கொலராடோ ஆறுகள்சங்கமிக்கும் இடம்  (கேன்யன்லாண்ட்ஸ் தேசிய பூங்கா, யூனியன், அமெரிக்கா) 

















Sunday, June 12, 2016

நன்னம்பிக்கை முனை cape of good hope



 1488 இல் ஆப்பிரிக்காவை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த பார்த்தலோமியோ டயஸ் என்ற போர்த்துக்கீச மாலுமி தனது கடல் பயணத்தில் ஒரு முனையில் புயலில் சிக்கியதால் அவரது இலக்கைத் தொடர முடியவில்லை. இதனால் அந்த இடத்துக்குப் "புயல் முனை' என்று பெயரிட்டனர். இந்தியாவை நோக்கிய பயணத்தை மேற்கொண்ட வாஸ்கொடகாமாவுக்கு இந்தப் 'புயல் முனை' தனது இலக்கை அடைவதற்கான புதிய நம்பிக்கையை கொடுத்ததன் காரணமாக இதற்கு நன்னம்பிக்கை முனை எனப் பெயரிட்டனர். அது இன்றும் அவ்வாறே அழைக்கப்படுகிறது.
நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) என்பது தென்னாபிரிக்காவின் தெற்குக் கரையோரமாகவுள்ள ஒரு கற்பாறைக் குடா (headland) ஆகும். 1488 இல் தூர கிழக்கு நாடுகளுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருப்பதற்கு இம்முனையைச் சுற்றி வருவது போர்த்துக்கீச மாலுமிகளுக்கு ஒரு தவிர்க்க முடியாத மைல்கல்லாக் இருந்தது. தெற்கு அத்திலாந்திக் பெருங்கடலின் ஒரு பெரும் முனையாக இது கருதப்படுகிறது


நன்னம்பிக்கை முனை (1888 வரைபடம்) நன்னம்பிக்கை முனையில் 1855 இல் வெளியிடப்பட்ட ஒரு முக்கோண அஞ்சற்தலை நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) என்பது தென்னாபிரிக்காவின் தெற்குக் கரையோரமாகவுள்ள ஒரு கற்பாறைக் குடா (headland) ஆகும். 1488 இல் தூர கிழக்கு நாடுகளுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருப்பதற்கு இம்முனையைச் சுற்றி வருவது போர்த்துக்கீச மாலுமிகளுக்கு ஒரு தவிர்க்க முடியாத மைல்கல்லாக் இருந்தது. தெற்கு அத்திலாந்திக் பெருங்கடலின் ஒரு பெரும் முனையாக இது கருதப்படுகிறது.

{ஐரோப்பா|ஐரோப்பியர்]]கள் இங்கு வருவதற்கு முன்னரே சீன, அராபிய, மற்றும் இந்திய மாலுமிகள் இம்முனைக்கு வந்து போயுள்ளதாகக் கருதப்படுகிறது. 1488 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரையப்பட உலகப் படங்கள் இதற்கு சான்றாகும்.

1488 இல் ஆப்பிரிக்காவை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த பார்த்தலோமியோ டயஸ் என்ற போர்த்துக்கீச மாலுமி தனது கடல் பயணத்தில் ஒரு முனையில் புயலில் சிக்கியதால் அவரது இலக்கைத் தொடர முடியவில்லை. இதனால் அந்த இடத்துக்குப் "புயல் முனை' என்று பெயரிட்டனர். இந்தியாவை நோக்கிய பயணத்தை மேற்கொண்ட வாஸ்கொடகாமாவுக்கு இந்தப் 'புயல் முனை' தனது இலக்கை அடைவதற்கான புதிய நம்பிக்கையை கொடுத்ததன் காரணமாக இதற்கு நன்னம்பிக்கை முனை எனப் பெயரிட்டனர். அது இன்றும் அவ்வாறே அழைக்கப்படுகிறது.

நன்றி  இணையம்

Thursday, June 09, 2016

350 மில்லியன் வருடங்களாக மறைந்து வாழ்ந்த உயிரினம் பிடிக்கப்பட்டது

கடலடியில் படத்தில் காட்டப்படும் புதியவகை மீன் இனம் இணங்காணப்பட்டது. சுமார் 2000-6500 அடி ஆழத்திற்கு இடப்பட்ட நிலையில் வாழும் மீன்கள் இவை என்பதால் இவற்றைப்பற்றி இதுவரை மனிதர்களுக்கு தெரியாதிருந்துள்ளது.


Knifenose Chimaera
ஆர்ட்டிக் சமுத்திரத்தில் படகொண்டில் மாட்டிக்கொண்ட இந்த மீனை ஆராய்ந்ததில் இவை சுமார் 350 மில்லியன் வருடங்களாக பூமியில் வாழ்வதாக ஊகிக்கப்படுகிறது.
(பூமியின் வயது 454 மில்லியன் வருடங்கள் என கணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.)
முதலில் “goblin shark -(கொப்லின் சுறா)” வகையின் ஒரு பிரிவு என கருதப்பட்டது. எனினும் மரபணு ஆய்வில், இது ஒரு புதுவகை மீன் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Goblin shark
கத்தி போன்ற கூரிய மூக்கை உடையவை இவை என்பதால் “Knifenose Chimaera” என பெயரிடப்பட்டுள்ளது.
இது Rhinochimaeridae எனும் வகையைச்சேர்ந்ததாக கருதுகிறார்கள். Rhinochimaeridae எனும் சொல், கிரேக்க மொழியில் “மூக்கு” மற்றும் “அரக்கன்” அனும் அர்த்தத்தை ஒன்றினைக்கும் சொல்லாகும்!
உலகின் அனைத்து சமுத்திரத்திலும் 2000-6500 அடி வரைக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த இன மீன்கள் பல இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள்.
 

Wednesday, January 08, 2014

தாவர உலகின் பிசாசு



இந்த மரத்தில் அப்படி என்ன அதிசயம் என்றுதானே கேட்கிறீர்கள்? உயரம் என்று எடுத்துக் கொண்டால் 16 முதல் 98 அடி வரை தான் இருக்கும். செக்வோவியா - ஆஸ்திரேலிய நாட்டு யூக்கலிப்டஸ் மரங்கள் 400 அடிவரை உயரமானவை. மரத்தின் குறுக்களவைக் (விட்டம்) கணக்கிட்டால் 23முதல் 36 அடிவரை உள்ளது. பாவோபாப்தான் வேறு எந்த மரமும் கிடையாது. அதற்கிணையாக மரத்தின் சுற்றளவு 154 அடி வரை உள்ளது. இந்தப் பார்வையில் பார்க்கும்போது பாவோபாப் மரங்கள்தான் உலகின் மிகப் பெரிய மரங்கள்.

பேரதிசயம் என்னவென்றால் அடிமரத்தின் உட்பகுதி மூங்கில்போல் வெற்றிடம் கொண்ட தாகவும் நீர் நிறைந்தும் இருக்கும். எவ்வளவு தண்ணீர் தெரியுமா? பெரியதோர் பாவோபாப் மரத்தின் கொள்ளளவு 1,20,000 லிட்டர்கள்! மேலும் கடும் கோடைக் காலத்தில் ஒரு சொட்டு நீர் கூட ஆவியாக வெளியேறாதவாறு பாதுகாப் பாக வைக்கப்பட்டிருக்கும். தண்ணீரில் வேறு பயனுள்ள சத்துக்களும் உண்டு. வறட்சிக் காலங் களில் மடகாஸ்கர் - ஆப்பிரிக்க நாட்டு ஏழை மக்கள் இதன் நீரைப் பருகிப் பயன்பெறுவர். மேல்மரம் காய்ந்துவிட்ட நிலையில் பல கிராமங் களில் அடிமரத்தை நீர்த்தேக்கத் தொட்டியாகப் பயன்படுத்துகின்றனர்.


லத்தீன் மொழியில் இதை ஆடன்சோனியா என்று அழைக்கிறார்கள். இந்த மரத்தை மடகாஸ் கர் நாட்டில் முதன் முதலாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஆடன்சன் என்ற பெயர் கொண்ட விஞ் ஞானி கண்டறிந்து உலகிற்கு அறிமுகப்படுத்தி னார். அவரை கௌரவிக்கும் விதத்தில் இம் மரத்திற்கு லத்தீன் மொழியில் ஆடன்சோனியா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இம்மரத்தின் பல்வேறு பாகங்களின் பயன்கள்

இலைகள்: 
இவற்றைச் சமைத்துக் கீரை வகை யைப் போல் சாப்பிடலாம். ஆப்பிரிக்க நாடு களாகிய மலாவி, ஜிம்பாப்வே, சஹேல் நாடுகளில் இலை பச்சையாகவும், உலர வைக்கப்பட்ட இலை களைப் பொடி செய்தும் உணவாக உண்கின்றனர். நைஜீரியா நாட்டில் பாவோபாப் இலைகளை கூக்கா என்று குறிப்பிடுகிறார்கள். இலைகளி லிருந்து கூக்கா சூப் தயாரித்து சாப்பிடுகிறார்கள்.


பழம்: 
ஆரஞ்சுப் பழத்தைக் காட்டிலும் கூடு தலான அளவில் ‘சி’ வைட்டமின் நிறைந்தது பாவோபாப் பழம். கால்ஷியம் சத்து பசும்பாலைக் காட்டிலும் கூடுதல்.  புளிக்கும் பழம் என்று அழைக்கப்படும் இப்பழத் தின் விதை நீக்கிய சதைப் பகுதியை அப்படியே சாப்பிடலாம். சிலர் பழத்தின் சதைப் பகுதியைப் பாலிலோ கஞ்சியிலோ கலந்தும் சாப்பிடு கின்றனர். மலாவி நாட்டில் இப்பழத்திலிருந்து பழச்சாறு தயாரிக்கப்படுகிறது. இப்பழத்தை ஜிம் பாப்வே நாட்டின் மாவுயு என்று அழைக்கின்றனர். பழம் அப்படியே சாப்பிடப்படுகிறது. இப்பழத்தி லிருந்து மருந்தாகப் பயன்படும் களிம்பும் தயாரிக் கப்படுகிறது. பழத்தில் சர்க்கரை தூவி வண்ணம் (பெரும்பாலும் சிவப்பு) கொடுத்து இனிப்பு அல்லது புளிப்பு மிட்டாயாகவும் விற்கப்படுகிறது.

விதைகள்: 

 சூப்பை கெட்டியாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஊறவைக்கப்பட்ட விதைகளை வறுத்துச் சாப்பிடுகின்றனர். விதை களிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு சமை யலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மரத்திலிருந்து நார், வண்ணம் மற்றும் எரிபொருள் கிடைக் கின்றன. இதன் நார் மிகவும் கெட்டியானது.
 
 இதனை பலர் தாவர உலகின் பிசாசு என்று கூறி வந்திருக்கிறார்கள். பாவோபாப் மரங்கள் மிக உறுதியானவை, சட்டென்று இறக்காதவை. பிடுங்கி கீழே தரை மட்டமாகப் போட்டபின்னரும் நீட்ட வாக்கில் சில முறை இந்த மரங்கள் வளர்ந்திருக்கின்றன. மரங்களை வெட்டிச்சாய்த்த பின்னரும், இந்த மரத்தின் வேர்கள் மரத்தின் ஆணி வேரிலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவு வரை இருக்கும் இதன் வேர்கள் உயிரோடு பலவருடங்கள் இருப்பதை பார்த்திருக்கிறார்கள். இந்த மரங்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் உயிரோடு இருக்கும். மிக மெதுவாக வளர்கின்றன. சுமார் 5 மீட்டர் சுற்றளவுக்கு இந்த மரம் வளர்வதற்கு சுமார் ஆயிரம் வருடங்கள் ஆகும்.